search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐ.நா"

    • சிறை வன்முறை சம்பவத்தை பயன்படுத்திக்கொண்டு பெண்கள் சிறைகளுக்குள் புகுந்தவர்கள் பெண் கைதிளை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தனர்.
    • பாதிக்கப்பட்ட பெண் கைதி ஒருவர், தன்னை ஒரே சமயத்தில் 12 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்துள்ளார்.

    மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசின் மகாலா நகரில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. ஆண் கைதிகள் மட்டுமின்றி பெண் கைதிகளும் இந்த சிறையில் அடைக்கப்படுகிறார்கள். 3 ஆயிரம் பேர் அடைக்க வசதி உள்ள அந்த சிறையில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

    அளவுக்கு அதிகமானோர் அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் அங்கே உள்ள கைதிகள் இடையே மோதல் போக்கு, பாலியல் அத்துமீறல்கள் ஆகியவை அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சிறையில் வன்முறை ஏற்பட்டு கைதிகள் தப்பியோட முயன்றனர். இதனால் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 129 பேர் உயிரிழந்தனர். சிறை உடைப்பு முயற்சி குறித்து போலீசார் சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் சிறை வன்முறையின்போது பெண் கைதிகள் அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் ஆண் கைதிகள் அத்துமீறி நுழைந்த தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏராளமான பெண் கைதிகள், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

    சிறை வன்முறை சம்பவத்தை பயன்படுத்திக்கொண்டு பெண்கள் சிறைகளுக்குள் புகுந்தவர்கள் பெண் கைதிளை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த 348 பெண்களில் 268 பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். அதில் 17 பேர் 18-க்கு வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் ஆவர்.

    பாதிக்கப்பட்ட பெண் கைதி ஒருவர், தன்னை ஒரே சமயத்தில் 12 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்தான அதிர்ச்சி்கரமான அறிக்கையை ஐ.நா. அமைப்பு வெளியிட்டுள்ளது.

    காங்கோவில் சிறை வன்முறையின்போது 260 பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் நேற்று அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.
    • கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் காசா நகரம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் பலி

    பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் நாளுக்குக் நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 9 மாதங்களாக நடந்து வரும் போரில் சுமார் 37,834 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 86,858 படுகாயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் நேற்று அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த போரினால் அதிகம் பாதிப்புக்குள்ளானது பெண்களும் குழந்தைகளிலுமே ஆவர்.

     

    அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு, போர் நிறுத்த முன்மொழிவு என உலக நாடுகளும் ஐ.நா சபையும் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல வகையில் முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும் அது அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளது.

     

    அதை உறுதி செய்யும் வகையில் பாலஸ்தீன நகரங்களான காசா மற்றும் ரஃபாவில் உள்ள பொதுமக்களின் பலி எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ரஃபாவில் மக்கள் வசிக்கும் கூடாரங்கள் மீது இஸ்ரேல் பொழிந்த குண்டுமழையில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

     

    இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மற்றும் காசா நகரத்தின் பல்வேறு பகுதிகளின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்த முன்மொழிவை ஏற்படுத்தும் பணிகளில் எந்த முன்னேற்றமும்  ஏற்படவில்லை என ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் தயாராக உள்ள நிலையில் இஸ்ரேல் அதை மறுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

    • விளையாட்டுக்களால் மனித சமுதாயம் பல்வேறு வளர்ச்சிகளை அடைகிறது.
    • விளையாட்டுக்கள் மூலம் மனித குலம் அமைதி பெறுவதே ஐநா சபையின் நோக்கமாகும்

    வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 6 - ந்தேதி நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் உள்ள  மக்கள் வாழ்வில் விளையாட்டு நேர்மறையான பங்கை அங்கீகரிக்க இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

    இன்று 6 -ந்தேதி இந்த 2024- ம் ஆண்டிற்கான உலகளாவிய அமைதியான மற்றும் உள்ளடக்கிய சமூகங்களை மேம்படுத்துவதற்கான விளையாட்டு,  சர்வதேச தினமாக கடைபிடிக்கப்படுகிறது.




    2013 -ல் ஐக்கிய நாடுகள் (UN) பொதுச் சபையால் ஏப்ரல் 6 -ந் தேதி வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினமாக அறிவிக்கப்பட்டது. விளையாட்டுக்கள் மூலம் ஏற்படும் உடல் வலிமை, மனஅமைதியை ஐநா சபை அங்கீகரித்துள்ளது. இதன்காரணமாக தனிநபர் மற்றும் குழுக்களை ஒன்றிணைத்து, பல்வேறு விளையாட்டுக்களை மேம்படுத்தி வருகிறது.

    உலக அளவிலான விளையாட்டுகள், மற்றும் சிறு விளையாட்டுக்களில் ஆர்வமுடன் பங்கேற்கும் நபர்களால் விளையாட்டு போட்டிகள் மேம்படுத்தப்படுகிறது. விளையாட்டுக்களால் மனித சமுதாயம் பல்வேறு வளர்ச்சிகளை அடைகிறது.

    விளையாட்டுக்கள் மூலம் மனித குலம் எளிதில் அமைதி பெறுவதே ஐநா பொது சபையின் நோக்கமாகும்.



    இந்த விளையாட்டு பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக, ஏப்ரல் 6- ந்தேதியை ஐ.நா பொது சபை வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினமாக (IDSDP) அறிவித்து உள்ளது.

    இந்த தினத்தை உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டு உள்ளன.மனித சமுதாய வளர்ச்சிக்கு விளையாட்டின் பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைந்து வருகிறது. இந்த தினத்தில் விளையாட்டு மேம்பாட்டுக்காகவும் உலகம் முழுவதும் அமைதி பெற நாம் அனைவரும்  சபதமேற்போம்.

    ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில் ஒவ்வொரு 5 விநாடிகளுக்கும் ஒரு குழந்தை உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. #UnitedNation
    நியூயார்க்:

    ஐ.நாவின் குழந்தைகள் நிதியம், உலக சுகாதார நிறுவனம், ஐ.நா மக்கள் தொகை பிரிவு மற்றும் உலக வங்கி இணைந்து சமீபத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வின் அறிக்கை இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கை குறித்து பேசிய ஆய்வுக்குழுவின் தலைவர் லாரன்ஸ் சாண்டி, ஒவ்வொரு ஆண்டும் 15 வயதுக்கு உட்பட்ட 6.3 மில்லியன் குழந்தைகள், சரிசெய்யக்கூடிய சாதாரண காரணங்களினால் உயிரிழப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    1990-ஆண்டுக்கு பிறகு குழந்தைகள் இறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும், இருப்பினும் இன்றும் குழந்தைகளின் உயிரிழப்பு தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இன அடிப்படையில் குழந்தைகள் இறப்பு அமைவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

    ஆப்ரிக்காவில் உள்ள குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுவதாகவும், ஆசிய கண்டத்தில் இறக்கும் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் வீதம் ஆப்ரிக்காவில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், 2018-ல் இருந்து 2030-க்குள் 5 வயதுக்கும் குறைவான 56 மில்லியன் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் எனவும் அந்த ஆய்வுக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. மிகச்சாதாரண வழிமுறைகளான நல்ல உணவு, குடிநீர் மருத்துவம் போன்றவற்றால் இறப்பு விகிதத்தை கணிசமாக குறைக்க முடியும் எனவும் அறிக்கை தெரிவிக்கிறது.



    குணப்படுத்தக்கூடிய மலேரியா போன்ற நோய்களாலேயே 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிகம் அதிகம் உயிரிழப்பதாகவும் ஐ.நா குழு வேதனை தெரிவித்துள்ளது. 5 வயதுக்கு மேற்பட்ட 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் விபத்துக்களினாலும், நீரில் மூழ்குவதாலும் இறப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், அதிக அளவிலான நாடுகளில் கிராமப்புற பகுதிகளிலேயே குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாகவும், படிப்பறிவு அற்ற பெற்றோர்களினால் தங்கள் குழந்தைகளை முறையாக பேண முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கை தொடர்பாக பேசிய உலக வங்கியின் சுகாதாரம் மற்றும் மக்கள் தொகை இயக்குனர் டிம் எவான்ஸ், குணப்படுத்த முடியும் காரணங்களால் ஏற்படும் மரணங்களை தடுப்பதிலும், குழந்தைகள் நலத்தில் முதலீடு செய்வதிலுமே நாட்டின் வளர்ச்சிக்கு அஸ்திவாரம் போட முடியும் என குறிப்பிட்டுள்ளார். #UnitedNation
    ×