என் மலர்
நீங்கள் தேடியது "டெல்லி பல்கலைக்கழகம்"
- வெயிலை தணிக்கும் முயற்சியாக அவர் மாட்டு சாணத்தை பயன்படுத்துவது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.
- ஆறு அறைகளில் இதை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் லட்சுமிபாய் கல்லூரியின் முதல்வர் வெயிலின் தாக்கத்தை தணிக்க வகுப்பறையில் பசுவின் சாணம் கொண்டு பூசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கல்லூரி முதல்வர் பிரத்யுஷ் வத்சலா, ஊழியர்களுடன் வகுப்பறை சுவரில் மாட்டுச் சாணத்தை பூசுவது அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
மேலும் அந்த வீடியோவை கல்லூரியின் ஆசிரியர்கள் குழுவில் பகிர்ந்த வத்சலா சி பிளாக்கில் வகுப்பறைகளை குளிர்விக்கும் ஆராய்ச்சியின் ஒரு பகுதி இந்த முயற்சி என்று குறிப்பிட்டார். ஆனால் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் எதிர்மறை கருத்துக்களை குவித்து வருகிறது. வெயிலை தணிக்கும் முயற்சியாக அவர் மாட்டு சாணத்தை பயன்படுத்துவது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.
இதற்கிடையே இதுகுறித்து பேசிய வத்சலா, "இது சுற்றுச்சூழல் ஆய்வுகள் துறையால் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சியின் ஒரு பகுதி. இது வெப்பத்தை கட்டுப்படுத்துவதற்கான ஒரு முயற்சி.
ஆறு அறைகளில் இந்த பரிசோதனையை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இது வெறும் மாட்டு சாணம் அல்ல. மாட்டு சாணம், மண், சிவப்பு மணல், ஜிப்சம் பவுடர் மற்றும் முல்தானி மண் ஆகியவற்றைக் கலந்து இந்த பேஸ்ட் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதனுடன், அறையின் வெப்பநிலையை அளவிடுவதற்கான உபகரணங்களும் அங்கு நிறுவப்பட்டுள்ளன. எனவே இதுதொடர்பாக வதந்தி பரப்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
- மகாத்மா காந்தி குறித்த பாடம் 7-வது செமஸ்டருக்கு மாற்றப்பட்டு உள்ளது.
- கல்வியை காவிமயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
புதுடெல்லி:
டெல்லி பல்கலைக்கழக இளங்கலை (பி.ஏ.) அரசியல் அறிவியல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு 5-வது செமஸ்டரில் மகாத்மா காந்தி குறித்து ஒரு பாடம் உள்ளது. இதை ரத்து செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்கு பதிலாக சாவர்க்கர் குறித்த பாடத்தை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் மகாத்மா காந்தி குறித்த பாடம் 7-வது செமஸ்டருக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதனால் 3 ஆண்டு பட்டப்படிப்பை தேர்வு செய்யும் மாணவர்கள், காந்தி குறித்த பாடத்தை படிக்க இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இது தொடர்பாக டெல்லி பல்கலைக்கழகத்தின் கல்விக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பல்கலைக்கழக நிர்வாக கவுன்சில் இதற்கு ஒப்புதல் அளித்தால், இது அமல்படுத்தப்படும்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு ஒரு பிரிவு ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. கல்வியை காவிமயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
- நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார்.
- இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலக அங்கீகாரத்தைப் பெறுகின்றன.
டெல்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா நிறைவு விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டுள்ளார்.
பிரதமரின் வருகையையொட்டி, 1,000-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் மற்றும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக, பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார்.
பின்னர், டெல்லி பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட பிரதமர் மோடி மாணவர்கள் மத்தியில் உரையாற்றிானர்.
அப்போது அவர் பேசியதாவது:-
டெல்லி பல்கலைக்கழகம் வெறும் பல்கலைக்கழகம் அல்ல இயக்கம். உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா பெரும் பங்கைக் கொண்டிருந்தது. 100 ஆண்டு கால அடிமைத்தனம் அதன் கல்வி மையங்களை அழித்துவிட்டது. வளர்ச்சியை முடக்கியது.
சமீபத்திய ஆண்டுகளில் ஐஐடிகள், ஐஐஎம்கள், எய்ம்ஸ் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இந்தியப் பல்கலைக்கழகங்களின் உலகளாவிய அங்கீகாரம் இன்று அதிகரித்து வருகிறது. 2014ல், க்யூஎஸ் உலக பல்கலை தரவரிசையில், 12 இந்திய பல்கலைகள் மட்டுமே இருந்தன. தற்போது அது 45ஆக உயர்ந்துள்ளது.
கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்த, நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். 2014க்கு முன் இந்தியாவில் சுமார் 100 ஸ்டார்ட் அப்கள் இருந்தன. இன்று அந்த எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
- டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்க தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.
- டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்க தேர்தலின் வாக்குப் பதிவு செப். 22-ம் தேதி நடந்தது.
டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம் (டி.யு.எஸ்.யு.) தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை நிறைவுபெற்றது. இந்த தேர்தலில் தலைவர், செயலாளர் மற்றும் இணை செயலாளர் ஆகிய மூன்று பதவிகளை ஏ.பி.வி.பி. அமைப்பு வெற்றி பெற்றது. என்.எஸ்.யு.ஐ. அமைப்பை சேர்ந்தவர் துணை தலைவர் பதவியை வென்று இருக்கிறார்.
செப்டம்பர் 22-ம் தேதி நடைபெற்ற டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்க தேர்தலின் வாக்குப் பதிவில், டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 52 கல்லூரிகளில் பல்வேறு துறைகளில் கல்வி பயின்று வரும் மாணவர்கள் தங்களது வாக்கை செலுத்தினர்.

இந்த தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. தேர்தலில் தலைவர், துணை தலைவர், செயலாளர் மற்றும் இணை செயலாளர் என நான்கு பதவிகளுக்கான போட்டி நடைபெறும். பல்வேறு மாணவர் அமைப்பை சேர்ந்த 24 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர்.
இதில் அகில பாரதிய வித்யார்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.), அனைத்து இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு (ஏ.ஐ.எஸ்.ஏ.), இந்திய மாணவர்கள் சங்கம் (எஸ்.எஃப்.ஐ.) என பல்வேறு அமைப்புகளை சேர்ந்த வேட்பாளர்கள் தேர்தலில் களம் கண்டனர். டெல்லி மாணவர் சங்க தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.
- பிரதமர் மோடியின் கல்வித்தகுதி தொடர்பான சர்ச்சை தற்போது வரை நீடிக்கிறது.
- பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை மற்றவர்களுக்கு கொடுக்க முடியாது
பிரதமர் மோடியின் கல்வித்தகுதி தொடர்பாக சர்ச்சை எழுந்ததையடுத்து, இதுதொடர்பாக கடந்த 2016ம் ஆண்டு தகவல் ஆணைத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், விவரம் கேட்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து கெஜ்ரிவால் கேட்ட விவரங்களை வழங்கும்படி டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் குஜராத் பல்கலைக்கழகத்திற்கு தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பரில் டெல்லி பல்கலைக்கழகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், தகவல் ஆணையரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான துஷார் மேத்தா, "பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை நீதிமன்றத்தில் காட்டத் தயாராக உள்ளோம். ஆனால், மற்றவர்களுக்கு கொடுக்க முடியாது" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் டெல்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
முன்னதாக 2023 ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த அகமதாபாத் உயர் நீதிமன்றம், "பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு குறித்த விவரங்களை வழங்க வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. அத்துடன், பிரதமரின் பட்டப்படிப்பு விவரங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.