search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபோன்"

    • ஐபோன் 16 பிளஸ் மாடலை வாங்க அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
    • இந்த ஆண்டு சுமார் 48 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    ஆப்பிள் நிறுவனம் கடந்த வாரம் தனது முற்றிலும் புதிய ஐபோன் 16 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. அறிமுகத்தோடு புதிய ஐபோன் மாடல்களின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இதுவரை நடைபெற்றுள்ள முன்பதிவுகளின் படி ஐபோன் 16 பிளஸ் மாடலை வாங்க அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.

    ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலை வாங்குவதற்கான முன்பதிவுகள் குறைவாகவே இருந்துள்ளன. ஆப்பிள் நிறுவனம் ப்ரோ சீரிஸ் விற்பனை அதிகளவில் இருக்கும் என்ற கணிப்பில் அதிவேக டெலிவரி மற்றும் அதிக யூனிட்களை தயார் நிலையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

     


    இது குறித்து ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியூ வெளியிட்டுள்ள தகவல்களின் படி ஐபோன 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் மாடல்கள் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, அதிக யூனிட்கள் முன்பதிவாகி உள்ளன. முன்பதிவு துவங்கிய முதல் ஒருவார காலத்தில் ஐபோன் 16 வாங்க 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.

    பிளஸ் மாடல்களை வாங்க கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுமார் 48 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். புதிய ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் முதல் வாரத்தில் மட்டும் சுமார் 16 சதவீதம் யூனிட்கள் முன்பதிவு செய்யப்படுகின்றன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 12.7 சதவீதம் குறைவு ஆகும். 

    • ஐபோன் 17 சீரிஸ் விவரங்கள் தற்போதே வெளியாக துவங்கிவிட்டன.
    • ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

    ஆப்பிள் நிறுவனம் தனது முற்றிலும் புதிய ஐபோன் மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் பற்றி ஏற்கனவே ஏராளமான தகவல்கள் வெளியான நிலையில், அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஐபோன் 17 சீரிஸ் விவரங்கள் தற்போதே வெளியாக துவங்கிவிட்டன.

    அதன்படி ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியூ வெளியிட்டுள்ள தகவல்களில், ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. இது அடுத்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்யும் புதிய ஐபோன் சீரிசில் விலை உயர்ந்த மாடலாக இருக்கும்.

    புதிய ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலில் அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்படும் என்று கியூ தெரிவித்துள்ளார். இந்த சீரிசில் அதிகபட்சம் ரேம் கொண்ட ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    அடுத்த ஆண்டு அறிமுகமாகும் ஐபோன்கள், மிக மெல்லிய டிசைன் கொண்டிருக்கும். இந்த சீரிசில் ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் SE4 போன்ற மாடல்கள் இடம்பெற்று இருக்கும். இவற்றில் அனைத்து மாடல்களிலும் குறைந்தபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்படும். இத்துடன் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலில் வேப்பர் சாம்பர் கூலிங் சிஸ்டம் வழங்கப்படும் என்று கியூ தெரிவித்தார்.

    • ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர நிகழ்ச்சி அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற இருக்கிறது.
    • அப்போது ஐ-போன் 16, புதிய ஏர்பாட்ஸ் மாடல்கள் உள்ளி புதிய தயாரிப்புகளை வெளியிடும்.

    ஆப்பிள் நிறுவனம் ஆண்டுதோறும் பெரிய நிகழ்ச்சி நடத்தி அதில் தனது புதிய தயாரிப்புகள் குறித்த அறிவிப்பை வெளியிடும். அதுபோன்ற இந்த ஆண்டு நிகழ்ச்சி அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதில் ஐ-போன் 16, புதிய ஏர்பாட்ஸ் மாடல்கள் மற்றும் பல புதிய தயாரிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒவ்வொரு முறையும் புதிய மாடல்களை வெளியிடும்போது, பழைய மாடல்களின் தயாரிப்புகளை நிறுத்துவது வழக்கம். அந்த வகையில் ஐ-போன் 15 ப்ரோ மற்றும் ஐ-போன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றின் தயாரிப்பை நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐ-போன் 15 ப்ரோ மற்றும் ஐ-போன் ப்ரோமேக்ஸ் டைட்டானியம் பீச்சர் கொண்ட முதல் ஆப்பிள் ஐ-போன் ஆகும். இதன் டிஸ்பிளே 6.1 இன்ச் ஆகும். விரைவில் வெளியாக இருக்கும் ஐ-போன் 16 சீரிஸ் போன்களின் டிஸ்பிளே 6.7 இன்ச் ஆக இருக்க வாய்ப்புள்ளது.

    அதேபோல் ஐ-போன் 14 பிளஸ் தயாரிப்பையும் நிறுத்தலாம் எனத் தெரிகிறது. சீரிஸ் 9, அல்ட்ரா 2, எஸ்.இ. 2 வாட்ச்களின் தயாரிப்புகளையும் நிறுத்தலாம். ஏர்பாட்ஸ் 2 மற்றும் 3, ஐ-பேடு மினி 6 மற்றும் ஐ-பேடு 10 ஆகியவற்றின் தயாரிப்புகளையும் நிறுத்தலாம் எனத் தெரிகிறது.

    • அதிக குடும்ப பொறுப்புகள் கொண்டுள்ளதால் திருமணமான பெண்கள் தவிர்க்கப்படுகின்றனர்
    • பாக்ஸ்கான் தலைவர் யாங் லீயு கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்யும் தொழிலில் தாய்வானை சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்தியா முழுவதிலும் இந்நிறுவனத்தில் 48 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். இதில் 70 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். இந்நிலையில் திருமணமான பெண்களை வேலைக்கு எடுப்பதில் பாக்ஸ்கான் நிறுவனம் பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    அதிக குடும்ப பொறுப்புகள் கொண்டுள்ளதால் திருமணமான பெண்கள் தவிர்க்கப்படுகின்றனர் என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த சர்ச்சைக்கு மத்தியில் தற்போது, இந்தியாவில் பாக்ஸ்கான் நிறுவனத்தில் பெண்கள் முக்கிய பொறுப்புகளுக்கு வரவேண்டும், டிசைனிங் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பொறுப்புகளில் அவர்கள் அங்கம் வகிக்க வேண்டும்  என்று நிறுவனம் விரும்புவபதாக பாக்ஸ்கான் தலைவர் யாங் லீயு கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் புதிதாக வேலையில் சேர்ந்த பெண்களில் 25 சாத்வீதம் பேர் திருமணமான பெண்களே ஆவர் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

     

    சமீபத்தில் பாக்ஸ்கான் நிறுவனம் சார்பில் இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.706.50 கோடி மதிப்பில் ஸ்ரீபெரும்புதூர் வல்லம்-வடிகால் கிராமத்தில் பெண் பணியாளர்கள் தங்கும் சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டுள்ளது. 18,720 பெண் பணியாளர்கள் தங்கி பயன்பெறும் வகையில் கட்டப்பட்ட இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி திறந்து வைத்தார். இதில் பாக்ஸ்கான் தலைவர் யாங் லீயு கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

     

    • இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் மேலதிகமாக சுமார் 40 சதவீத வளர்ச்சியை மொபைல் போன் ஏற்றுமதி வணிகம் கண்டுள்ளது.
    • ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் ஐபோன்கள் ஏற்றுமதி முன்னிலையில் உள்ளது

    மொபைல் போன் ஏற்றுமதி வணிகம் 6.5 பில்லியன் டாலராக உயர்துள்ளதாக தழுவல் வெளியாகியுள்ளது.இந்தியாவின் மொபைல் போன் ஏற்றுமதி வணிகம் 6.5 பில்லியன் டாலராக உயர்துள்ளதாக தழுவல் வெளியாகியுள்ளது. இந்த நிதியாண்டில் முதல் பாதியில் [ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில்] இந்த வளர்ச்சியானது ஏற்பட்டுள்ளது. கடந்த 2023 நிதியாண்டின் தொடக்கத்தில் எட்டிய வளர்ச்சியை விட இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் மேலதிகமாக சுமார் 40 சதவீத வளர்ச்சியை மொபைல் போன் ஏற்றுமதி வணிகம் கண்டுள்ளது.

    இந்த வளர்ச்சியில் ஐபோன்களின் ஏற்றுமதியே முன்னிலையில் உள்ளது. ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் ஐபோன்கள் ஏற்றுமதி முன்னிலையில் உள்ளது. அதவாது, 6.5 பில்லியன் டாலரில் ஐபோன் ஏற்றுமதியின் பங்கு 70 சதவீதம் ஆகும். அதிலும் குறிப்பாக ஐபோன் 15 ஆன்லனில் அதிகம் விற்பனையான மாடலாக உள்ளது. இதற்கு முந்திய மாடல்களில் இருந்து அதிக அப்கிரேடுகளுடன் இவை தயாரிக்கடுவதே இந்த வளர்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

     

    • டாடா குழுமம் 125 மில்லியன் டாலருக்கு விஸ்ட்ரான் நிறுவனத்தை வாங்கியது.
    • ஐபோன் தயாரிப்பதற்கான 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது டாடா குழுமம்.

    டாடா எலாக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் உடன் இணைந்து இந்தியாவில் ஐபோன் தயாரிக்க இருக்கிறது. இதற்காக சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாயில் முதலீடு செய்துள்ளது டாடா குழுமம். தமிழ்நாட்டில் உள்ள ஓசூரில் தொழிற்சாலை தயாராகி வருகிறது.

    இந்த நிலையில் வருகிற நவம்பர் மாதத்தில் இருந்து செல்போன் உற்பத்தி இந்த தொழிற்சாலையில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    உதிரி பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இங்கு ஐபோன் உருவாக்கப்படும் (Assembly). இதற்காக 250 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 50 ஆயிரம் பேர் வேலைப் பார்க்கும் வகையில் வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. பெரும்பாலும் பெண்கள்தான் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் உற்பத்தியை இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கியது. பாக்ஸ்கான் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் ஐ-போன் செல்போன்களை உற்பத்தி (Assembly) செய்கிறது. பாக்ஸ்கான், விஸ்ட்ரான், பெகட்ரான் ஆகிய நிறுவனங்கள் ஐ-போன் தயாரித்து ஏற்றுமதி செய்கிறது. விஸ்ட்ரான் நிறுவனத்தை டாடா குழுமம் 125 மில்லியன் டாலருக்கு கடந்த வருடம் அக்டோபர் மாதம் கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • பூ விற்கும் தாய் ஒருவர் தனது மகனுக்கு ஐபோன் வாங்கி கொடுத்துள்ளார்.
    • இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    கோவிலுக்கு வெளியே பூ விற்கும் தாய் ஒருவர் தனது மகன் அடம்பிடித்ததால் அவருக்கு ஐபோன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.

    மொபைல்கடையில் ஐபோன் வாங்கிய மகன் மற்றும் அவரது தாயிடம் பேட்டி எடுத்துள்ளனர். அந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

    அந்த வீடியோவில் பேசிய அவரது அம்மா, "நான் ஒரு கோவிலுக்கு வெளியே பூ விற்கிறேன். என் மகன் தனக்கு ஐபோன் வேண்டும் என அடம்பிடித்து 3 நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை. மகன் சாப்பிடாமல் இருந்ததால் அவனுக்கு நான் ஐபோன் வாங்குவதற்கு பணம் கொடுத்தேன். அந்த பணத்தை சம்பாதித்து தனக்கு திருப்பி தருமாறு என் மகனிடம் நான் கூறியுள்ளேன்" என்று தெரிவித்தார்.

    இணையத்தில் இந்த வீடியோ வைரலான நிலையில், அந்த மகனின் செயலை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

    • மத்திய பட்ஜெட்டில் செல்போன் மற்றும் முக்கிய பாகங்களுக்கான சுங்க வரி 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
    • அப்போது பேசிய நிதி மந்திரி, இறக்குமதி வரியைக் குறைப்பது நுகர்வோருக்கு நன்மை பயக்கும் என கூறினார்.

    பாராளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமீபத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது மொபைல் போன்கள் மற்றும் அதன் முக்கிய பாகங்களின் அடிப்படை சுங்க வரியை 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டார்.

    அப்போது பேசிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இறக்குமதி வரியைக் குறைப்பது நுகர்வோருக்கு நன்மை பயக்கும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், ப்ரோ அல்லது ப்ரோ மேக்ஸ் மாடல் ஐபோன்களுக்கான விலையை ஆப்பிள் நிறுவனம் 3 முதல் 4 சதவீதம் வரை குறைத்துள்ளது. இதன்மூலம் குறைந்தது 5,000 முதல் 6,000 ரூபாய் வரை வாடிக்கையாளர்கள் சேமிக்க முடியும்.

    இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன் 13, ஐபோன் 14 மற்றும் ஐபோன் 15 ஆகியவற்றின் விலையில் 3,000 ரூபாய் குறைக்கப்படுகிறது.

    புதிய விலை விவரங்கள்:

    ஐபோன் 13 (128 ஜி.பி.) விலை ரூ. 53 ஆயிரத்து 900

    ஐபோன் 13 (256 ஜி.பி.) விலை ரூ. 63 ஆயிரத்து 900

    ஐபோன் 13 (512 ஜி.பி.) விலை ரூ. 83 ஆயிரத்து 900

    ஐபோன் 14 (128 ஜி.பி.) விலை ரூ. 63 ஆயிரத்து 900

    ஐபோன் 14 (256 ஜி.பி.) விலை ரூ. 73 ஆயிரத்து 900

    ஐபோன் 14 (512 ஜி.பி.) விலை ரூ. 93 ஆயிரத்து 900

    ஐபோன் 14 பிளஸ் (128 ஜி.பி.) விலை ரூ. 73 ஆயிரத்து 900

    ஐபோன் 14 பிளஸ் (256 ஜி.பி.) விலை ரூ. 83 ஆயிரத்து 900

    ஐபோன் 14 பிளஸ் (512 ஜி.பி.) விலை ரூ. 1 லட்சத்து 03 ஆயிரத்து 900

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் ஐபோன்களின் விலை அதன் முந்தைய விலையை விட ரூ. 6,000 குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவில 2023-24 நிதியாண்டில் 8 பில்லியன் டாலருக்கு ஐபோன் விற்பனை.
    • சீனாவில் 72.6 பில்லியன் டாலர் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இந்தியா 2023-2024 நிதியாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை சுமார் 8 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய பண மதிப்பில் 66,858.92 கோடி ரூபாய்) என ப்ளூம்பெர்க் தகவல் வெளியிட்டுள்ளது. முந்தைய நிதியாண்டில் 6 பில்லியன் டாலராக இருந்தது. தற்போது மூன்றில் ஒரு மடங்கு (சுமார் 33 சதவீதம்) அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஐ-போன் விற்பனையில் உலகின் ஐந்தாவது மிகப்பெரிய சந்தையாக இந்தியா உருவாகியுள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளை பின்னுக்குத் தள்ளியுளள்து.

    மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் டபுள் டிஜிட் வளர்ச்சி என டிம் குக் தெரிவித்திருந்தார். மேலும் இது எங்களுக்கு மிக மிகப்பெரிய மகிழ்ச்சி எனத் தெரிவித்திருந்தார்.

    உலகளவில் ஐ-போன் விற்பனை மூலம் 383 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ள ஆப்பிள் நிறுவனத்திற்கு 8 பில்லியன் டாலர் என்பது குறைவானதுதான். சீனாவில் 72.6 பில்லியன் டாலர் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் வளர்ச்சி முக்கியமானது எனக் கருதுகிறது.

    இந்தியாவுக்கு 9.2 மில்லியன் போன்களை ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பாக்ஸ்கான் நிறுவனம் உள்ளது.
    • உதிரிபாகங்களை கொண்டு ஐபோன் செல்போன்களை தயாரித்து வருகிறது.

    தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் பாக்ஸ்கான் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் உதிரி பாகங்களை கொண்டு ஐ-போன் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். உலகின் முன்னணி நிறுவனமாக உள்ளது.

    இந்த நிறுவனம் வேலைவாய்ப்பு தொடர்பாக விளம்பரம் செய்துள்ளது. அப்போது திருமணம் ஆன இரண்டு பெண்கள் வேலை கேட்டு நேரில் சென்றுள்ளனர். அப்போது கேட் அருகில் நின்ற அதிகாரிகள் திருமணம் ஆகிவிட்டதா? என்ற கேட்டுள்ளனர். அப்போது அந்த இரண்டு பெண்களும் திருமணம் ஆகிவிட்டதாக தெரிவித்துள்ளனர். அப்படி என்றால் இங்கு வேலை கிடையாது எனத் தெரிவித்துள்ளனர்.

    இது அந்த பெண்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இது தொடர்பான செய்தி மெல்லமெல்ல பரவியது. ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் இந்த செய்தியை மிகப்பெரிய அளவில் கட்டுரையாக எழுதி உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் திருமணம் செய்த பெண்களுக்கு வேலைகிடையாது என்ற பாகுபாடு கடைபிடிக்கப்படுவதாக விமர்சித்திருந்தனர்.

    இந்த சம்பவம் தற்போது சர்ச்சையாகியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்யும்படி கேட்டுள்ளது. மண்டல தலைமை தொழிலாளர் அலுவலக ஆணையரும் அறிக்கை தாக்கல் செய்ய கேட்டுக்கொண்டுள்ளது.

    திருமணமான பெண்களுக்கு வீட்டு பொறுப்பின் காரணமாக அடிக்கடி விடுமுறை எடுக்க வேண்டியிருக்கும் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வேலை மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதேவேளையில் ஐ-போன், பாக்ஸ்கான் நிறுவனங்கள் இதுபோன்ற நடைமுறை எங்கள் நிறுவனத்தில் இல்லை என இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

    சம ஊதியச் சட்டம் 1976-இன் பிரிவு 5 ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களை பணியமர்த்துவதில் எந்தவித பாகுபாடும் காட்டக்கூடாது என்று தெளிவாக குறிப்பிடுகிறது என்று தொழிலாளர் அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    • மத்தியில் பன்ச் ஹோல் டிசைன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
    • ஸ்மார்ட்போனின் விவரங்கள் பி.ஐ.எஸ். வலைதளத்தில் உள்ளது.

    ஒப்போ நிறுவனம் உருவாக்கி வரும் புதிய A சீரிஸ் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இத்துடன் வெளியான புகைப்படங்களில் இந்த ஸ்மார்ட்போன் ஐபோனில் உள்ளதை போன்ற கேமரா மாட்யுல் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

    அதன்படி புதிய ஒப்போ ஸ்மார்ட்போனில் ஐபோன் 12 மாடலில் உள்ளதை போன்ற கேமரா மாட்யுல்- இரண்டு சென்சார்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டு இருக்கிறது. இதை சுற்றி சதுரங்க வடிவம் கொண்ட கேமரா மாட்யுல் உள்ளது. கேமரா சென்சார்களின் அருகில் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்படுகிறது. தற்போதைய புகைப்படத்தின் படி இந்த ஸ்மார்ட்போன் நீல நிறத்தில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

     


    புதிய ஒப்போ ஸ்மார்ட்போனின் வலதுபுறத்தில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் வழங்கப்படுகிறது. கீழ்புறத்தில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட், மைக், 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் ஸ்பீக்கர் கிரில் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மா்ட்போன் ஃபிளாட் டிஸ்ப்ளே மற்றும் மத்தியில் பன்ச் ஹோல் டிசைன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

    அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் Full HD+ LCD ஸ்கிரீன் கொண்ட டிஸ்ப்ளே, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் பி.ஐ.எஸ். வலைதளத்திலும் இடம்பெற்று இருக்கிறது. அந்த வகையில், இந்தியாவிலும் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். 

    • எலான் மஸ்க் 'தப்பாட்டம்' படத்தின் காட்சி ஒன்றின் மூலம் உருவாக்கப்பட்ட மீம்ஸ் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
    • ஒரு தமிழ்ப் படத்தை வைத்து உருவாக்கிய மீம்ஸை எலாக் மஸ்க் உலக அளவில் பிரபலமாக்கிவிட்டார்.

    டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க், அவருக்குச் சொந்தமான எக்ஸ் தளத்தில் தமிழ்ப் படமான 'தப்பாட்டம்' படத்தின் காட்சி ஒன்றின் மூலம் உருவாக்கப்பட்ட மீம்ஸ் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

    ஒரு இளநீரை படத்தின் நாயகி ஸ்டிரா வைத்து குடிக்க, அந்த நாயகியின் வாயிலிருந்து ஒரு ஸ்டிராவை வைத்து நாயகன் குடிக்கும் ஒரு காட்சி அது.

    2017ம் ஆண்டு முஜிபூர் ரஹ்மான் இயக்கத்தில் துரை சுதாகர், டோனா ரொசாலியோ நடித்த படமான 'தப்பாட்டம்' படத்தின் அந்த ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பல மீம்ஸ்களாக பல முறை பரவியிருக்கிறது.

    "ஐபோன், ஆப்பிள், டேட்டா" ஆகியவற்றை மையமாக வைத்து யாரோ ஒருவர் உருவாக்கிய மீம்ஸ் ஒன்றை இன்று எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார்.

    ஒரு தமிழ்ப் படத்தை வைத்து உருவாக்கிய மீம்ஸை எலாக் மஸ்க் உலக அளவில் பிரபலமாக்கிவிட்டார்.

    இந்நிலையில், தப்பாட்டம் படத்தின் கதாநாயகன் துரை சுதாகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "சிறு முதலீட்டுடன் எடுக்கப்பட்ட என் படத்தை உலகளவில் பேமஸ் ஆக்கிய எலான் மஸ்க்கிற்கு ரொம்ப நன்றி. இது தமிழ் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம். எலான் மஸ்க்கிற்கு இந்த மீம் சென்று சேர உதவிய மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு எனது நன்றிகள்" என்று அவர் தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×