என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஐபிஎஸ்"
- 2 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் போலீசில் வேலை வாங்கி தருகிறேன் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
- ஐபிஎஸ் அதிகாரியாக நடித்த 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
பீகார் மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்த 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
மனோஜ் சிங் என்பவர் மித்லேஷ் மாஜி என்ற 18 வயது இளைஞரிடம் 2 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் போலீசில் வேலை வாங்கி தருகிறேன் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
இதனை உண்மை என நம்பிய இளைஞர் தனது தாய்மாமாவிடம் இருந்து ரூ.2 லட்சம் பணத்தை கடனாக வாங்கி மனோஜ் சிங்கிடம் கொடுத்துள்ளார்.
பின்னர் மனோஜ் சிங் அவரது உடல் அளவீடுகளை எடுத்து அடுத்த நாள் அவரை அழைத்து, ஐபிஎஸ் உடை, பேட்ஜ் மற்றும் துப்பாக்கியை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து ஐபிஎஸ் அதிகாரி ஆன மகிழ்ச்சியில் ஐபிஎஸ் சீருடையை அணிந்து கொண்டு இடுப்பில் துப்பாக்கியுடன் தாயை சந்தித்து ஆசி பெற சென்றுள்ளார். பின்னர் மீண்டும் மனோஜ் சிங்கை சந்தித்து மீதமுள்ள பணத்தை கொடுக்க அவர் புறப்பட்டுள்ளார். அப்போது அவரைப் பார்க்க கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ये बिहार है यहां कुछ भी संभव है! अब देखो जिसका हुलिया ही ठीक नहीं है वो भी बिना #UPSC के IPS officer बन गया !पता करो मनोज सिंह की #FakeIPS फैक्ट्री से ऐसे कितने और नमूने निकले हैं #hamster pic.twitter.com/QxlMJj501y
— ShivRaj Yadav (@shivaydv_) September 21, 2024
பின்னர் இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 'போலி ஐபிஎஸ் அதிகாரி'யை கைது செய்தனர். கைது செய்யப்படும்போது 'நான் ஒரு ஐபிஎஸ்' என்று அந்த இளைஞர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் அந்த இளைஞரிடம் இருந்து சீருடை மற்றும் துப்பாக்கியை கைப்பற்றிய போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தமிழகம் முழுக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்.
- 16 காவல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுக்க 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட 16 காவல் துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் மற்றும் பணியிடம் ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சிவில் சப்ளை டி.ஜி.பி. வன்னிய பெருமாள், ஊர்க்காவல்படை டி.ஜி.பி.-யாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக அபிஷேக் தீக்ஷித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி எஸ்.பி. ஆக சுரேஷ் குமார், கரூர் எஸ்.பி. ஆக பிரபாகர், நீலகிரி எஸ்.பி. ஆக சுந்தர வடிவேல் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ், சிப்காட் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டார்.
திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சென்னை மாநகர போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இதே போன்று கரூர் ஆட்சியர் பிரபுசங்கர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராகவும், செங்கல்பட்டு துணை ஆட்சியர் லட்சுமிபதி தூத்துக்குடி ஆட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
நகர்ப்புற வளர்ச்சி மேலாண்மை வாரிய இணை நிர்வாக இயக்குநர் தங்கவேல், கரூர் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி குளறுபடியால் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த தீபா சத்யன், டி.ஜி.பி. அலுவலக எஸ்.பி.யாக மாற்றப்பட்டு உள்ளார்.
- தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
- காஞ்சிபுரம் எஸ்பி சுதாகருக்கு, செங்கல்பட்டு எஸ்பி-யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
தமிழ் நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, விழுப்புரம் மாவட்ட டிஐஜியாக, சிபிசிஐடி டிஐஜி ஜியாவுல் ஹக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் எஸ்பி சுதாகருக்கு, செங்கல்பட்டு எஸ்பி-யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. கள்ளக்குறிச்சி எஸ்பி மோகன்ராஜ்-க்கு, விழுப்புரம் எஸ்பி-யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
- தனிநபர்கள் வழங்கும் விருதுகளை வாங்க கூடாது என கேரள தலைமை செயலாளர் வி.பி.ஜாய் உத்தரவிட்டுள்ளார்.
- உத்தரவை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவனந்தபுரம்:
அரசு துறைகளில் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளாக இருப்போருக்கு தனியார் அமைப்புகள் மற்றும் கிளப்புகள் பாராட்டி விருது வழங்கி கவுரவிப்பது பல மாநிலங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில் கேரளாவில் ஒரு கோவில் விழாவில் திறம்பட செயல்பட்டமைக்காக ஒரு தனியார் அமைப்பு கேரள ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாராட்டும், சிறப்பு விருதும் வழங்கியது.
இதற்கு கேரள காவல்துறை அதிகாரிகளில் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது சமூக வலைதளங்களிலும் வைரலானது.
இதையடுத்து கேரளாவில் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இனி தனியார் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் வழங்கும் விருதுகளை வாங்க கூடாது என கேரள தலைமை செயலாளர் வி.பி.ஜாய் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மாநில அரசின் முன் அனுமதி பெறாமல் எந்த ஒரு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் விருது வாங்க கூடாது. இந்த உத்தரவை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைமை செயலாளர் வி.பி.ஜாய் எச்சரித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்