என் மலர்
நீங்கள் தேடியது "நீட் தேர்வு"
- மாணவர்கள் தற்கொலை செய்வதை தடுத்து நிறுத்த தெலுங்கானாவில் அரசு சார்பில் உதவி செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- மனநல நிபுணரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்றுமுன்தினம் நடந்தது. 22 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். நீட் தேர்வு பயத்தால் தற்கொலைகளும் அதிகரித்து வருகிறது.
தெலுங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தைச் சேர்ந்த ஜங்கா பூஜா, 2023-ம் ஆண்டு முதன்முதலில் நீட் தேர்வு எழுதினார். அதில் தேர்ச்சி பெறவில்லை.
இதன் பிறகு, போட்டித் தேர்வுக்கு சிறப்பாகத் தயாராவதற்காக ஒரு பயிற்சி வகுப்பில் சேர்ந்தார். கடந்த 4-ந்தேதி ஜங்கா மீண்டும் தேர்வு எழுதினார்.
இருப்பினும், ஒரு முறை தேர்வில் தோல்வியடைந்ததால், அவருக்கு பயம் ஏற்பட்டது.
தேர்வு மையத்தில் இருந்து வீட்டிற்கு வந்த பிறகு தனது பதில்களை மறுபரிசீலனை செய்தார். இந்த முறையும் நல்ல மதிப்பெண் பெற முடியாது என்று நினைத்தார். இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
தெலுங்கானாவின் அடிலாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு நீட் தேர்வாளரான ராயி மனோஜ் குமார். இவர் நீட் தேர்வில் சிறப்பாகச் செயல்படாததால் மனமுடைந்தார்.
இவருடைய தந்தை ஆசிரியரியராக பணியாற்றி வருகிறார். தேர்வு எழுதிவிட்டு நேற்று வீடு திரும்பிய மனோஜ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவர்கள் தற்கொலை செய்வதை தடுத்து நிறுத்த தெலுங்கானாவில் அரசு சார்பில் உதவி செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு ஆலோசனை தேவைப்பட்டால் தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள மனநல நிபுணரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.
- நீட் தேர்வை சரியாக எழுதாததால் கொடுத்த வாக்கை என்னால் காப்பாற்ற முடியவில்லை.
- பெற்றோருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாததால் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு சென்று விட்டார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம்புதூர் கிராமத்தை சேர்ந்த தனபால்-சாவித்திரி தம்பதியரின் மகன் சங்கீர்த்தன். தனபால் விசைத்தறி தொழில் செய்து வரும் நிலையில் சங்கீர்த்தன் தனது பள்ளி படிப்பை அரசு பள்ளியில் முடித்துள்ளார்.
மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு கடந்த 2024ம் ஆண்டு நீட் நுழைவுத்தேர்வு எழுதினார். இதில் அவருக்கு 230 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்ததால் தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து நீட் நுழைவு தேர்வுக்காக ஆன்லைன் மூலம் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
நேற்று திருமுருகன் பூண்டியில் உள்ள மையத்தில் நீட் தேர்வை எழுதிவிட்டு வீடு திரும்பினார். பின்னர் வினாத்தாள்களை வைத்து இரவு முழுவதும் எவ்வளவு மதிப்பெண்கள் வரும் என சரிபார்த்து உள்ளார். ஆனால் அவருக்கு போதுமான மதிப்பெண் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால் பெற்றோருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாததால் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு சென்று விட்டார்.
அந்த கடிதத்தில், நீட் தேர்வை சரியாக எழுதாததால் கொடுத்த வாக்கை என்னால் காப்பாற்ற முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள். மருத்துவ படிப்புக்கான சீட்டோடு தான் நான் வீடு திரும்புவேன் என தனது பெற்றோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
இன்று காலை எழுந்து பார்த்த போது சங்கீர்த்தன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் தனது மகனை கண்டுபிடித்து தருமாறு பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். அதன்பேரில் போலீசார் சங்கீர்த்தன் எங்கு சென்றார் என்று விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
- தமிழ்நாட்டில் மட்டும் நீட் தேர்வில் இவ்வளவு கெடுபிடிகள் ஏன்?
- அனிதா இறந்தவுடன் நீட்டை ஒழிப்போம், ரகசியம் வைத்துள்ளோம் என சொன்ன தி.மு.க. இதுவரை என்ன செய்துள்ளது?
சென்னை:
நாடு முழுவதும் நேற்று மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் மாணவர்கள் கடும் சோதனைக்குட்பட்டே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதனால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நீட் தேர்வு நடைமுறைகள் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
* நீட் தேர்வு முறை குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.
* பயிற்சி மையங்கள் சம்பாதிக்கவே நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
* நீட் தேர்வை அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் நடத்தி கொண்டிருக்கிறது. நமது நாட்டினரால் நடத்த முடியாதா?
* ஒரு மாணவனை தேர்வு செய்யும் தேர்வு நடத்த முடியாதவர்களால் நாட்டிற்கான தலைவரை எப்படி தேர்ந்தெடுக்க முடியும்?
* நீட் தேர்வு எழுதுவதாலேயே தரமான மருத்துவர்கள் வருவார்கள் என்பது பைத்தியக்காரகத்தனமாது.
* நீட் தேர்வால் கிராம மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேறவில்லை.
* வசதி படைத்த மாணவன் மருத்துவன் ஆகலாம், கிராமப்புறங்களில் கஷ்டப்படும் ஒரு மாணவனுக்கு மருத்துவ கனவு வரக்கூடாதா?
* தமிழ்நாட்டில் மட்டும் நீட் தேர்வில் இவ்வளவு கெடுபிடிகள் ஏன்?
* வட இந்தியாவில் புத்தகத்தை திறந்து வைத்து நீட் தேர்வு எழுதுகின்றனர், மேற்பார்வையாளர் காவலுக்கு நிற்கின்றனர்.
* மூக்குத்தி மூலம் மாணவி எப்படி பிட் கொண்டு செல்ல முடியும்? பட்டன்கள் மூலம் மாணவர்கள் பிட் கொண்டு செல்ல முடியுமா?
* உள்ளாடைகளை கழட்டச் சொல்வதால் ஜவுளிக்கடையில் நீட் தேர்வுக்கு ஏற்ற ஆடை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சோதனை என்ற பெயரில் வதை செய்தால் மாணவர்கள் எப்படி தேர்வெழுதும் மனநிலைக்கு வருவர்.
* அனிதா இறந்தவுடன் நீட்டை ஒழிப்போம், ரகசியம் வைத்துள்ளோம் என சொன்ன தி.மு.க. இதுவரை என்ன செய்துள்ளது? என கேள்வி எழுப்பினார்.
- அப்போது மாணவரின் குடும்பத்தினர் அவர்களிடம் வினாத்தாளை காட்டச் சொன்னார்கள்.
- ஆனால் அவர்கள் மறுக்கவே, மாணவனின் குடும்பத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர்
இன்று நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து, 40 லட்சம் ரூபாய் மோசடி செய்ய முயன்றதாக ராஜஸ்தான் போலீஸ் மூன்று பேரை கைது செய்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் பால்வான் (27), முகேஷ் மீனா (40) மற்றும் ஹர்தாஸ் (38) என அடையாளம் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை, மூவரும் மாணவனையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் குருகிராமிற்கு அழைத்துச் சென்று பணத்தைக் கேட்டனர். அப்போது மாணவரின் குடும்பத்தினர் அவர்களிடம் வினாத்தாளை காட்டச் சொன்னார்கள்.
ஆனால் அவர்கள் மறுக்கவே, மாணவனின் குடும்பத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் நேற்று கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
- ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21,960 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
சென்னை:
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
இந்த தேர்வில் மாணவ-மாணவிகள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மேற்சொன்ன படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது. 2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி 5.20 மணி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வில் நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்பட31 மாவட்டங்களில் தேர்வு நடைபெறுகிறது. இந்த முறை தமிழ்நாட்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை எழுதுகின்றனர். சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21,960 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படுகிறது.
- நீட் தேர்வு தற்கொலைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்.
- மாணவ, மாணவியரின் உயிர்க்கொல்லியாக மாறியிருக்கும் நீட் தேர்வு மாணவ குலத்திற்கு எதிரானது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு இன்று நடைபெறும் நிலையில், அத்தேர்வில் வெற்றி பெற்றுவிட முடியுமா? என்ற அச்சத்தில் மேல்மருவத்தூரைச் சேர்ந்த கயல்விழி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாணவி கயல்விழியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
2017-ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வுக்கு முந்தைய மாதமும், நீட் தேர்வு முடிவு வெளியாவதையொட்டிய சில காலங்களும் தற்கொலைக் காலங்களாக மாறி விடுகின்றன. இந்தக் கொடுமையிலிருந்து நடப்பாண்டும் தப்பவில்லை. கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி திண்டிவனம் அருகே இந்துமதி, மார்ச் 28-ஆம் தேதி கிளாம்பாக்கம் தர்ஷினி, ஏப்ரல் 3-ஆம் தேதி எடப்பாடி பெரியமுத்தியம்பட்டி சத்யா, ஏப்ரல் 4-ஆம் தேதி புதுப்பாக்கம் சக்தி புகழ்வாணி, இன்று கயல்விழி என இரு மாதத்தில் 5 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால் மாணவ, மாணவியரின் தற்கொலைகள் தொடர்வதையும் தடுக்க முடியாது.
நீட் தேர்வு தற்கொலைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, புதிய சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியதுடன் கடமையை முடித்துக் கொண்டது. அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என மத்திய அரசு கூறிவிட்ட நிலையில் சட்டப்போராட்டம் நடத்துவோம் என்று வசனம் மட்டும் தான் தமிழக அரசு பேசுகிறது; நீட் தேர்விலிருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்கவில்லை.
நீட் தேர்வு நடத்தப்படுவது எதற்காக என்பதே தெரியாமல், அதை நடத்திக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. நீட் தேர்வால் மருத்துவக் கல்வியின் தரம் உயரவில்லை; நீட் தேர்வால் மருத்துவக் கல்வி வணிகமயமாவது குறையவில்லை; மாறாக, இந்த இரு சிக்கல்களும் மேலும் தீவிரமடைந்துள்ளன. இதை தெரிந்து கொண்டும் நீட் தேர்வை நடத்தியே தீருவோம் என மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது நியாயமல்ல.
மாணவ, மாணவியரின் உயிர்க்கொல்லியாக மாறியிருக்கும் நீட் தேர்வு மாணவ குலத்திற்கு எதிரானது. அதை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். மாநில அரசும் அதற்காக என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக, நீட் தேர்வு தோல்வி அச்சத்துக்கு தீர்வு தற்கொலை அல்ல என்பதை மாணவச் செல்வங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தற்கொலை எண்ணத்தைக் கைவிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 'நீட்' தேர்வு இன்று மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நேரடி முறையில் (பேப்பர்-பேனா) நடைபெறவுள்ளது.
- இந்த தேர்வில் நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.
2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நேரடி முறையில் (பேப்பர்-பேனா) நடைபெறவுள்ளது. இந்த தேர்வில் நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 17 வயது மாணவி நேற்று இரவு தந்து அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். .
கோட்டாவில் தனது பெற்றோருடன் வசித்து வந்த மாணவிஒரு பயிற்சி நிறுவனத்தில் நீட்-யுஜி தேர்வுக்குத் தயாராகி வந்தாள். இந்நிலையில், உரிய பாடங்களை படிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி தேர்வுக்கு முந்தைய நாள் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும்.
- சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21,960 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
சென்னை:
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் மாணவ-மாணவிகள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மேற்சொன்ன படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது.
அதன்படி 2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நேரடி முறையில் (பேப்பர்-பேனா) நடைபெறவுள்ளது. இந்த தேர்வில் நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்பட31 மாவட்டங்களில் தேர்வு நடைபெறுகிறது. இந்த முறை தமிழ்நாட்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை எழுத இருக்கின்றனர். சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21,960 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும். தேர்வு மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தேர்வுக்கான நுழைவுச்சீட்டில் (ஹால்டிக்கெட்டில்) தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. அந்தவகையில் தேர்வு மையத்துக்குள் காலை 11.30 மணி முதல் மாணவர்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பிற்பகல் 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும். அதன்பின் வருபவருக்கு எக்காரணம் கொண்டும் அனுமதி தரப்படாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுதவிர தேர்வுக்கு ஹால்டிக்கெட் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை கட்டாயம் கொண்டுவர வேண்டும். தேர்வர்கள் தங்கள் கையில் வெளிப்படையான தண்ணீர் பாட்டில் கொண்டு செல்லலாம். மேலும், ஹால்டிக்கெட்டில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து, தேர்வு முடிந்ததும் அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் அந்த மாணவரின் விடைத்தாள் திருத்தப்படாது.
வழக்கம்போல் தேர்வறையில் செல்போன், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டுச்செல்ல அனுமதியில்லை. முழுக்கை சட்டை, பெல்ட், தோடு, மூக்குத்தி ஆகியவை அணியக்கூடாது உள்ளிட்ட இதர வழிமுறைகளையும் மாணவ, மாணவிகள் தவறாது பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
- 2024-25 கல்வியாண்டுக்கான 14 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்து தேசிய மருத்துவ ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டது.
- நீட் தேர்வு எழுதிய 215 தேர்வர்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி:
2024-ம் ஆண்டு நீட் தேர்வில் முறைகேடு, ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்டவை நடைபெற்றது. சி.பி.ஐ., தேசிய தேர்வு முகமை இணைந்து நடத்திய விசாரணையில் இது தெரியவந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2024-25 கல்வியாண்டுக்கான 14 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்து தேசிய மருத்துவ ஆணையம் (என்.எம்.சி.) இன்று அதிரடியாக உத்தரவிட்டது. விதிமீறல்களுக்கு உடந்தையாக இருந்த 26 எம்.பி.பி.எஸ். மாணவர்கள் உடனடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மேலும் முறைகேடுகளில் ஈடுபட்ட 42 பேர் மறுதேர்வு எழுத 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு நீட் தேர்வு எழுதிய 215 தேர்வர்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
2025-26 கல்வியாண்டுக்கான நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் நாளை நடைபெறும் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
- மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது எனது கனவு.
- எனது பெற்றோர் மிகவும் உறுதுணையாக இருந்து வருகின்றனர்
கோவை:
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. வருகிற கல்வியாண்டுக்கான 'நீட்' தேர்வு நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேசிய தேர்வு முகமை செய்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் இந்த தேர்வு 14 மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வை கோவை சாய்பாபாகாலனியை சேர்ந்த திருநங்கை இந்திரஜா (வயது 22) உள்பட 6,994 பேர் எழுதுகிறார்கள். இந்திரஜா தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் நீட் தேர்வு எழுதும் முதல் திருநங்கை ஆவார்.
இதுகுறித்து திருநங்கை இந்திரஜா கூறும்போது, மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது எனது கனவு. கடந்த 2020-ம் ஆண்டு பிளஸ்-2 முடித்தேன். நான் கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வை எழுதினேன். அதில் 40 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றேன்.
இருந்தபோதிலும் எனக்கு மருத்துவ சீட்டுக்கான இடம் கிடைக்கவில்லை. இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுத உள்ளேன். இதில் எனக்கு 1.1 சதவீதம் இட ஒதுக்கீட்டின் படி மருத்துவ சீட்டு கிடைக்கும் என்று நம்புகிறேன். எனக்கு கோவை தடாகம் ரோடு அரசு தொழில்நுட்ப கல்லூரியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு உள்ளது. தேர்வை எதிர்கொள்ள தயாராகி வருகிறேன். எனது பெற்றோர் மிகவும் உறுதுணையாக இருந்து வருகின்றனர்
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னையில் மட்டும் 41 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
- கூடுதல் தகவல்களை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ், மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர 'நீட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டே மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
அந்த வகையில், 2025-26-ம் கல்வியாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற இருக்கிறது. தேர்வை, நாடு முழுவதும் 23 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுத இருக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் 1½ லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை உள்பட 31 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர், தென்காசி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்பட 7 மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
சென்னையில் மட்டும் 41 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. செல்போன் உள்பட மின்னணு சாதனங்களை தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக்கூடாது உள்ளிட்ட வழிமுறைகளை தேர்வர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்திருக்கிறது. மாணவர்கள், கூடுதல் தகவல்களை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
- தீர்ப்பு வந்தால் தான் எதையும் செய்ய முடியும்.
- 2 மாதங்களுக்கு முன்பு வரை நீங்கள் கூறும் போது 2031 வரை பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என கூறினீர்கள்.
சென்னை:
தமிழக சட்டசபையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், தமிழகத்திற்கு யார் ஆட்சியில் அதிக மருத்துவக் கல்லூரிகள் வந்தது என்ற விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய போக்குவரத்து துறை அமைச்சர், நீட் தேர்வில் நீங்கள் செய்த துரோகத்திற்கு தான் இந்த 11 மருத்துவக் கல்லூரியை ஒன்றிய அரசு அளித்தது என்றும், கணபதி ஐயர் பேக்கரி டீலிங் போல நீட் தேர்வை நீங்க வெச்சிக்கோங்க, நாங்க 11 மருத்துவக் கல்லூரி வெச்சிக்குறோம் என்றும் பேசினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில் தான். அதை தடுத்து நிறுத்த முயற்சி செய்தது அ.தி.மு.க. ஆட்சி என்று பேசினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சிவசங்கர், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு அனுமதி அளித்தது உங்களின் ஆட்சி தான். கலைஞர் இருக்கும் போது நீட் வரவில்லை. அம்மையார் இருக்கும் போது நீட் தேர்வு வரவில்லை என்று பதில் அளித்தார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும் போது, நீங்கள் 11 மருத்துவக் கல்லூரிகள் அறிவித்தீர்கள். ஆனால் அதனுடைய பணி 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை தான் நடந்து இருந்தது என்றார்.
தொடர்ந்து பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது, தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போதும் நீட் தேர்வு தமிழகத்திற்கு வரவில்லை. அம்மையார் இருக்கும் போது கூட வரவில்லை. யார் இருக்கும் போது கொண்டு வந்தது என்பது அனைவருக்கும் தெரியும் என்று பதில் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு சிக்கலை சரி செய்ய உங்களுக்கு (அ.தி.மு.க.)நல்ல வாய்ப்பு கிடைத்து உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்தால் தான் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருப்போம் இல்லை என்றால் கூட்டணியில் இருந்து விலகுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் நிபந்தனை விதிப்பாரா? என்று கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்று தருவோம் என்று வாக்குறுதி அளித்தது நீங்கள் என்று தெரிவித்தார்.
அது மட்டுமல்ல நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போட்டதே தி.மு.க. தான் என்று குற்றம் சாட்டினார். கடந்த தேர்தலின் போது நீட்டுக்கு விலக்கு வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது நீங்கள் என்றும் சாடினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாங்கள் ஏமாற்றி ஆட்சிக்கு வரவில்லை. வாக்குறுதி கொடுத்தது உண்மை தான், மத்தியில் எங்கள் கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் நீட் விலக்கு பெற்றிருப்போம்.
ஆனால் 2 மாதங்களுக்கு முன்பு வரை நீங்கள் கூறும் போது 2031 வரை பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என கூறினீர்கள். தற்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து உள்ளீர்கள், யாரை ஏமாற்ற இந்த நாடகம் என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருக்கிறது. தீர்ப்பு வந்தால் தான் எதையும் செய்ய முடியும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக எப்படி செயல்பட முடியும் என்றார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் விலக்கு கேட்டு நீங்கள் மத்திய அரசை மீண்டும் வலியுறுத்துவீர்களா? நிபந்தனை விதிப்பீர்களா என்று கேள்வி எழுப்பினார்.
இவ்வாறு சட்டசபையில் விவாதம் பரபரப்பாக நடந்தது.