என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூபாய்"

    • நாம் பட்ஜெட்டில் குறிப்பிட்ட ரூ என்பதை தமிழை பிடிக்காதவர்கள் பெரிய செய்தியாக்கிவிட்டனர்.
    • மத்திய நிதி அமைச்சரே பலமுறை ரூ என்ற குறியீட்டை பயன்படுத்தியுள்ளனர்.

    தமிழக பட்ஜெட்டில் ரூ என குறிப்பிடப்பட்டது பூதாகரமாக வெடித்தது ஏன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-

    மொழிக் கொள்கையில் நாம் எந்தளவுக்கு உறுதியுடன் உள்ளோம் என்பதை காட்டவே ரூ என்ற எழுத்தை பெரிதாக வைத்தோம்.

    நாம் பட்ஜெட்டில் குறிப்பிட்ட ரூ என்பதை தமிழை பிடிக்காதவர்கள் பெரிய செய்தியாக்கிவிட்டனர்.

    மத்திய நிதி அமைச்சரே பலமுறை ரூ என்ற குறியீட்டை பயன்படுத்தியுள்ளனர். கல்வி நிதி கேட்ட போதெல்லாம் பதில் பேசாத மத்திய நிதியமைச்சர் ரூ என்று மாற்றப்பட்டதை பற்றி பேசுகிறார்.

    ஆங்கிலத்தில் கூட Rs என்றே பயன்படுத்துகின்றனர். அதெல்லாம் பிரச்சனையாக தெரியாதவர்களுக்கு ரூ மட்டும் பிரச்சனையாக உள்ளது" என்றார்.

    தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை குறித்து ஆங்கில நாளேடுகளில் வௌியான செய்திகளை சுட்டிக்காடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்தோடு கூறினார்.

    அப்போது அவர்," தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை அனைத்து ஆங்கில நாளேடுகளும் பாராட்டியுள்ளன" என்றார்.

    • சம்பளத்தை ஜூன் 20 ஆம் தேதி தருவதாக கூறி அன்சாரி தட்டிக்கழித்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • 1,250 ரூபாய்காக நடந்த இந்த கொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மகாராஷ்டிர மாநிலம் மும்பை மாநகரில் வேலை செய்ததற்கான சம்பளத்தைத் தர மறுத்த முதலாளியை தொழிலாளி ஒருவர் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவி மும்பை நகரின் கலம்போலி பகுதியில் பர்வேஸ் அன்சாரி என்பவரிடம் வேலை பார்த்து வந்த தொழிலாளி ஒருவர் நேற்று முன் தினம் [ஜூன் 14] வெள்ளிக்கிழமையன்று தனது சம்பளமாக 1,250 ரூபாயை தரும்படி அன்சாரியிடம் கேட்டுள்ளார்.

     

     

    ஆனால் சம்பளத்தை ஜூன் 20 ஆம் தேதி தருவதாக கூறி அன்சாரி தட்டிக்கழித்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த தொழிலாளி அன்சாரியை குத்திக் கொலை செய்துள்ளார். மேலும் அருகில் நின்றிருந்த அன்சாரியின் நண்பரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து அவர் தப்பியோடியுள்ளார்.

     

    இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கொலையாளியான தொழிலாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். 1,250 ரூபாய்காக நடந்த இந்த கொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவு சரிந்துள்ளது.
    • இதுகுறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என பிரியங்கா காந்தி கூறினார்.

    புதுடெல்லி:

    அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவு சரிந்து வருகிறது.

    ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 86.04 என உள்ளது. அமெரிக்க டாலர் வலுவாக இருப்பதும், இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து அந்நிய முதலீடுகள் வெளியேறுவதால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதற்கு காரணம் என வல்லுனர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யும், பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு மிக குறைந்த அளவை எட்டியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக ஒரு டாலரின் மதிப்பு 86.4 ரூபாயாக மாறியுள்ளது.

    மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது டாலரின் மதிப்பு 58-59 ரூபாயாக இருந்த போது ரூபாயின் மதிப்பை ஒன்றிய அரசின் கவுரவத்துடன் இணைத்து மோடி பேசினார். தனக்கு எல்லாம் தெரியும். எந்த ஒரு நாட்டின் கரன்சியும் இப்படி விழமுடியாது என்று மோடி பேசினார். இன்று அவரே பிரதமராக உள்ளார். ரூபாயின் மதிப்பு சரிவில் அனைத்து சாதனைகளும் முறியடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து நாட்டு மக்களுக்கு அவர் பதிலளிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், மோடி பேசிய பழைய வீடியோ ஒன்றை பதிவிட்டு ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார். #Rupee #RupeeAllTimeLow
    புதுடெல்லி:

    இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு 70.06 ஆக கடுமையாக சரிந்தது. ரஷியாவிடம் இருந்து ஏவுகணை வாங்கும் துருக்கிக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடையை விதித்தது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தப் போவதில்லை என்றும் அமெரிக்காவிற்கு துருக்கி பதிலளித்துள்ளது. 

    அமெரிக்காவின் அடுத்தடுத்த நடவடிக்கையின் காரணமாக துருக்கியில் நிலவி வரும் ஸ்திரமற்ற நிலை இந்திய ரூபாயின் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என தெரிவிக்கப்படுகிறது.

    இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்துக்கொண்டே வரும் விவகாரத்தில் மத்திய அரசு விமர்சனங்களை எதிர்க்கொண்டு வருகிறது. சமீப காலமாக பா.ஜ.க மற்றும் பிரதமர் மோடியின் மீது கடுமையான தாக்குதல்களை முன்னெடுக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இப்பிரச்சனையையும் கையில் எடுத்துள்ளார். 

    2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததற்கு, அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசை மோடி தாக்கி பேசிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “ வரலாறு காணாத அளவுக்கு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டு இருக்கிறது. இது சுப்ரீம் லீடர் (பிரதமர் நரேந்திர மோடி) மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் ஆகும். ரூபாய் மதிப்பு ஏன் சரிகிறது என்பது குறித்து அவர் நடத்திய பொருளாதார வகுப்பை இத்துடன் இணைக்கப்பட்டு உள்ள வீடியோவில் கவனியுங்கள்” என பதிவிட்டுள்ளார். 



    வீடியோவில் அப்போதைய காங்கிரஸ் அரசை விமர்சனம் செய்யும் பிரதமர் மோடி, ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே செல்கிறது, டாலரின் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது. இதுதொடர்ந்தால் இந்தியா உலக வரைப்படத்தில் இருந்தே தெரியாமல் போய்விடும் என கூறுகிறார். 

    மேலும், அதிக ஊழல் இருப்பதன் காரணமாகவே ரூபாய் மதிப்பு சரிந்து வருவதாக அப்போது மோடி பேசியதும் வீடியோவில் உள்ளது.

    ×