என் மலர்
நீங்கள் தேடியது "ரூபாய் மதிப்பு வீழ்ச்சி"
- நேற்று 1 டாலரின் மதிப்பு ₹85.18 ஆக இருந்தது
- அந்நியச் செலாவணி கையிருப்பு ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் திங்களன்று (டிசம்பர் 23) 85.12 ஆக சரிந்தது. தொடர்ந்து நேற்று [செய்வ்வாய்கிழமை] 1 டாலரின் மதிப்பு ₹85.18ஆக இருந்த நிலையில், இன்று [புதன்கிழமை] மேலும் சரிந்து ₹85.41ஆக உள்ளது. தொடர்ச்சியாக 6வது முறையாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாயின் மதிப்பை வீழ்ச்சியடையச் செய்து வருகிறது. அமெரிக்கக் கடன் பத்திரங்கள் அதிகரிப்பு மற்றும் இறக்குமதியாளர்களிடமிருந்து வலுவான டாலர் தேவை ஆகியவை இந்த வீழ்ச்சிக்குக் காரணம்.
மேலும் மாத இறுதியில் டாலரின் தேவை அதிகரித்தது மற்றும் அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் இறக்குமதி வரி பற்றிய அச்சமும் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. எதிர்காலத்தில் நிலையான ரூபாய் மதிப்பு சரிவு தொடரலாம் என்று வர்த்தகர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
- ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்ததற்கு கண்டனம் தெரிவித்து மதுரை எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
- இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மதுரை
மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2013-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, பிரதமர் மன்மோகன் சிங்கின் வயதை (80) நோக்கி போகிறது" என்று பா.ஜ.க. கிண்டல் செய்தது.
நீங்கள் ஆட்சிக்கு வந்தபோது ரூபாய் மதிப்பு (58). அதாவது பிரதமர் மோடியின் வயதை விட (64) குறைவாகத்தான் இருந்தது. இன்றைக்கு, டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு, பிரதமரின் அண்ணன் சோம்பாய் மோடியின் வயதை (80) தொடும் நிலையில் உள்ளது.
நீங்கள் இந்திய பொருளாதாரம் வளரும் என்று சொன்னது, டாலர் வளர்ச்சியைத்தானா?"என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வருகிறது. நேற்று சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு 1 டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.72.91 ஆனது. வர்த்தக போர் அச்சம், வங்கிகள், இறக்குமதியாளர்கள் குறிப்பாக எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இடையே அமெரிக்க டாலருக்கு ஏற்பட்டு உள்ள தொடர் கிராக்கி ஆகியவற்றின் காரணமாக ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்து வருகிறது என்று கூறப்படுகிறது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றி மத்திய நிதி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் நேற்று டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டு உள்ளார். அதில் அவர், “ரூபாய் நியாயமற்ற அளவுக்கு சரிந்து போய்விடாமல் தடுப்பதை உறுதி செய்வதற்கு மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் எல்லாவற்றையும் செய்யும்” என்று குறிப்பிட்டு உள்ளார். #SubhashChandraGarg #IndianRupee #RupeeValue
புதுடெல்லி:
சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.71 ஆக உள்ளது.
இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு ‘கிடு கிடு’ வென உயர்ந்து வருகிறது. தங்கம் விலையும் அதிகரித்துள்ளது. அதைதொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளது.
எனவே பணமதிப்பு வீழ்ச்சியை தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி 2017-2018 நடப்பு ஆண்டில் 8.46 டன் தங்கத்தை விலைக்கு வாங்கி இருப்பு வைத்துள்ளது.

ரிசர்வ் வங்கி இது குறித்து சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், ஜூன் 30-ந் தேதி நிலவரப்படி 566.23 டன் தங்கம் இருப்பு உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இதே கால கட்டத்தில் 557.77 டன் தங்கம் மட்டுமே இருப்பில் இருந்தது.
9 ஆண்டுகளுக்கு பிறகு ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் போது சர்வதேச நிதி ஆணையத்திடம் இருந்து 200 டன் தங்கத்தை விலைக்கு வாங்கியது. #RBI #Gold

The Indian #Rupee just gave the Supreme Leader, a vote of NO confidence, crashing to a historic low. Listen to the Supreme Leader's master class on economics in this video, where he explains why the Rupee is tanking. pic.twitter.com/E8O5u9kb23
— Rahul Gandhi (@RahulGandhi) August 14, 2018
