என் மலர்
முகப்பு » slug 185038
நீங்கள் தேடியது "திருக்கழுகுன்றம்"
திருக்கழுகுன்றம் அருகே பாலாற்று பகுதியில் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுகுன்றத்தை அடுத்த வள்ளிபுரம் ஆனூர் பாலாற்று பகுதியில் இன்று வாலிபரும், இளம்பெண்ணும் பிணமாக கிடைந்தனர். அருகில் விஷபாட்டில் கிடந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருக்கழுகுன்றம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் இரண்டு பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அவர்கள் காதல் ஜோடியான திருக்கழுகுன்றத்தை அடுத்த எலுமிச்சம்பட்டு பகுதியை சேர்ந்த பிரதீப்ராஜ் (19), சவுமியா (17) என்பது தெரிந்தது.
இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்தனர். அவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.
இந்தநிலையில் பிரதீப்ராஜும், சவுமியாவும் பாலாற்று பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. பிரதீப்ராஜ் பேண்ட் மியூசிக்கராவார். சவுமியா பிளஸ்-2 முடித்துள்ளார். இதுகுறித்து திருக்கழுகுன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

×
X