என் மலர்
நீங்கள் தேடியது "நடிகர் விக்ரம்"
- திரையரங்கில் ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.
- ரியலிஸ்டிக் மற்றும் மாஸ் இரண்டையும் கலந்து புதிதாக எடுத்துள்ளார்.
ஈரோடு:
நடிகர் விக்ரம் நடித்த வீர தீர சூரன் படம் திரையரங்கில் திரையிடப்பட்டு உள்ளது. இதையொட்டி நடிகர் விக்ரம், படத்தின் இயக்குனர் அருண்குமார் ஆகியோர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று திரையரங்கில் ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள திரையரங்கில் வீர தீர சூரன் படம் திரையிடப்பட்டிருந்தது. இதையொட்டி நேற்று மாலை நடிகர் விக்ரம், இயக்குனர் அருண்குமார் திரையரங்கிற்கு வந்து ரசிகர்களை சந்தித்து பேசினர்.

பின்னர் நடிகர் விக்ரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திரையரங்கில் வீர தீர சூரன் படத்தின் காட்சிகள் அதிகப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து இடங்களில் மக்களின் ஆதரவு இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் உள்ளது. இதற்கு தான் படம் எடுத்தோம்.
வீர தீர சூரன் படத்தின் பகுதி ஒன்று விரைவில் வரும். இயக்குனர் ரியலிஸ்டிக் மற்றும் மாஸ் இரண்டையும் கலந்து புதிதாக எடுத்துள்ளார். ரசிகர்களுக்காக எடுத்த இந்த படம் இந்தளவிற்கு மக்களிடையே சென்றடைந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுடன் நடிகர் விக்ரம் உரையாடினார்.இதில், ரசிகர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி என்றார். இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் ஈத் முபாரக் தெரிவித்து படம் எப்படி இருந்தது எனக்கேட்டார்.
ரசிகர்கள் "ஐ லவ் யூ" எனக் கூறியதற்கு, விக்ரமும் "ஐ லவ் யூ" என்றார். தொடர்ந்து தனக்கு வழங்கப்பட்ட பூங்கொத்தில் இருந்து ஒரு பூவை எடுத்து ரசிகருக்கு கொடுத்து மகிழ்ந்தார்.
அப்போது கூட்டத்தில் ஒரு ரசிகர் நடிகர் விக்ரமனை நோக்கி உங்களைப் போன்று வயசாகாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்து பேசிய விக்ரம், வயதாவது நல்லது தான்.
வயசாகாமல் இருக்க சனிக்கிழமை தோறும் கழுதை பால் குடிக்க வேண்டும் என நகைச்சுவையாக பதில் அளித்தார். இதைக்கேட்டு ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து சாமி, அந்நியன் பட வசனத்தை ரசிகர்களிடம் பேசி விக்ரம் அங்கிருந்து கிளம்பி சென்றார்.
- இரணியல் மேலத்தெருவில் ஒரு பேக்கரி கடையில் மிட்டாய் போடும் தொழில் செய்து வந்தார்.
- பாலு நேற்று மாலை வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
இரணியல்:
நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் தெப்பக்குளம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் பாலு (வயது 46). நடிகர் விக்ரம் ரசிகர்கள் மன்ற மாவட்ட செயலாளராக இருந்தவர். இரணியல் மேலத்தெருவில் ஒரு பேக்கரி கடையில் மிட்டாய் போடும் தொழில் செய்து வந்தார். பாலு நேற்று மாலை வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவர் வில்லுக்குறி தாண்டி தோட்டியோட்டில் வந்தபோது பின்னால் வேகமாக வந்த லாரி, இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் மோட்டார் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்ட பாலு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் பலியானார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பாலுவின் மனைவி துர்காதேவி கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரியை அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகள் மூலம் தேடி வருகின்றனர்.
- நடிகர் விக்ரமின் மேலாளர் யுவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு.
- கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் நிதியுதவி.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மிகப்பெரிய சம்பவமாக மாறி இருக்கிறது. அதிலும் முண்டக்கை பகுதி மிகப்பெரிய அழிவை சந்தித்து இருக்கிறது.
அங்கிருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதனால் அந்த இடத்தில் வீடுகள் தடமே இல்லாமல் காட்சி அளிக்கிறது. அனைத்து இடங்களும் மண்ணாலும், மரங்கள் மற்றும் பாறைகளாலும் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.
கேரள நிலச்சரிவில் சிக்கி இதுவரை 200 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நடிகர் விக்ரம், நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சத்தை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து நடிகர் விக்ரமின் மேலாளர் யுவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 200 பேர் இறந்தனர், 197 பேர் காயமடைந்தனர் மற்றும் பலர் காணவில்லை என்ற சோகமான செய்தியால் வேதனையடைந்தேன். நடிகர் விக்ரம் இன்று கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு (sic) ரூ.20 லட்சத்தை நன்கொடையாக அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- விக்ரம் கதாபாத்திரம் அரவிந்த்சாமிக்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.
- மணி சாருடன் பணியாற்ற வேண்டும் என்பது எனக்கு கனவாக இருந்தது.
மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, மனிஷா கொய்ராலா, நாசர் உள்ளிட்டோர் நடித்த பாம்பே படம் கடந்த 1995-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
அந்த படத்தில் ஹீரோவாக நடிக்க முதலில் தேர்வானாவர் நடிகர் விக்ரம்தான். படப்பிடிப்பில் கலந்து கொண்டு சில காட்சிகளிலும் நடித்திருக்கிறார்.

அந்த சமயத்தில் அவர் நடித்து வந்த விக்ரமனின் புதிய மன்னர்கள் படத்திற்காக தாடி வளர்த்திருந்திருக்கிறார் விக்ரம். மணிரத்னமோ தாடியையும், மீசையையும் ஷேவ் செய்யச் சொன்னாராம். அது மட்டும் முடியாது சார் என்று கூறி படத்தில் இருந்து விலகிவிட்டாராம் விக்ரம்.
இறுதியில் அந்த கதாபாத்திரம் அரவிந்த்சாமிக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

மணி சாருடன் பணியாற்ற வேண்டும் என்பது எனக்கு கனவாக இருந்தது. அந்த படத்தை இழந்த பிறகு 2 மாதங்கள் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் படத்தை இழந்ததை நினைத்து அழுவேன். அதன்பிறகு மணிரத்தினம் சார் படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று சபதம் போட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

முதலில் பம்பாய் படத்தில் நடிக்க முடியாமல் போனாலும், மணிரத்னத்துடன் பணிபுரியும் விக்ரமின் கனவு இறுதியில் நனவாகியது. அவர் மணிரத்னம் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளியான ராவணன் திரைப்படத்தில் ராவணனாக நடித்தார். பொன்னியின் செல்வன்: I மற்றும் II-ல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் விக்ரம் சிறந்த நடிகருக்காக பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
- கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடிகர் விக்ரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். தனது நடிப்பாற்றல் மூலமாகத் தமிழ் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றவர். சேது, விண்ணுக்கும் மண்ணுக்கும், சாமி, பிதாமகன், ஐ போன்ற வெற்றிப் படங்களில் நடித்த விக்ரம், சிறந்த நடிகருக்காக பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
தற்போது "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் "பொன்னியின் செல்வன்-1" திரைப்படத்தில் விக்ரம் 'ஆதித்ய கரிகாலன்' என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் விக்ரமுக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடிகர் விக்ரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அப்போது அவர் வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தகக்து.