search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெங்களூர்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பேருந்து இருக்கைகளில் ஆண்கள் அமர்ந்து சென்றால் அபராதம் வசூலிப்பது வழக்கம்.
    • அரசு போக்குவரத்து ஊழியர்கள் நடத்திய சோதனையில் சுமார் 170 ஆண்கள் பயணம் செய்தது தெரியவந்துள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஓடும் நகரப்பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்காக தனியாக இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ள பெண்களுக்கான இருக்கையில் ஆண்கள் அமர்ந்து சென்றால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில், பெங்களூருவில் போக்குவரத்து கழக ஊழியர்கள், நடத்திய சோதனையில் 170 ஆண்கள் பல்வேறு நகர பேருந்துகளில் பெண்களுக்கான இருக்கையில் அமர்ந்து பயணம் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பயணிகளிடம் இருந்து ரூ.17 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பி.எம்.டி.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    பூஜைகள் செய்து கடவுளை வர வைக்கிறேன் என பணிப்பெண் கூறிய கதையையில் மயங்கி தங்க நகைகளை கொடுத்து ஏமாந்த தம்பதிக்கு, ஒன்னரை ஆண்டுகளாக ஏமாந்துள்ளோம் என்பது பின்னர்தான் தெரியவந்துள்ளது.
    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலம் கோரமங்களா நகரத்தில் பிளாஸ்டிக் உற்பத்தி ஆலை நடத்தி வருபவர் ஜெயந்த். இவரது வீட்டில் எடுபிடி வேலை செய்து வருபவர் ரேஷ்மா. சில நாட்களுக்கு முன்னர், ஜெயந்திடம் சென்று தானும், தனது கணவரும் பூஜைகள் செய்து கடவுளை வர வைக்கிறோம் என கூறி கதை கட்டியுள்ளார்.

    மேலும், ‘நீங்கள் வீட்டில் இருக்க கூடாது. சில தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வேண்டும்’ என நிபந்தனைகள் விதித்துள்ளார்.
    ரேஷ்மாவின் பொய்யில் மயங்கிய ஜெயந்த் மற்றும் மனைவி, நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு சில நகைகளையும் கொடுத்துவிட்டு வெளியூர் சென்றனர்.

    சில நாட்கள் கழித்து வீடு திரும்பிய அவர்கள், லாக்கரை திறந்து பார்த்ததில் அதிர்ச்சி அடைந்தனர். ரூ.4 கோடி மதிப்பிலான வைர, தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், பொருட்கள் காணாமல் போயிருந்தன. இதனை அடுத்து, அவர்கள் உடனே போலீசில் புகாரளித்தனர்.

    புகாரை அடுத்து விசாரணை நடத்திய போலீசார் ரேஷ்மா மற்றும் அவரது கணவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதனை அடுத்து நடந்த விசாரணையில் ஜெயந்த் மட்டுமல்ல போலீசாரே தலை சுற்றும் அளவுக்கு தகவல்கள் வெளியாகியுள்ளது.

    கடந்த ஒன்னரை ஆண்டுகளாக ரேஷ்மா, ஜெயந்தின் வீட்டில் சிறிது சிறிதாக திருடி வந்துள்ளார். திருடப்பட்ட பணம் மற்றும் நகையில் கார், பைக் மற்றும் குத்தகைக்கு அடுக்குமாடி குடியிருப்பு என சகலமும் வாங்கி குவித்துள்ளனர். இதனை அடுத்து, மேற்கண்ட பொருட்களை கைப்பற்றிய போலீசார் மேலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
    தனது சகோதரனை போல யாரும் இறந்துவிடக்கூடாது என கருதி எமதர்மன் வேடமிட்டு, சிக்னல்களில் நின்று கொண்டு ஹெல்மட் அணியாமல் வருபவர்களை எச்சரித்து வருகிறார் வீரேஷ் முட்டினாமாத்.
    பெங்களூர்:

    பெங்களூரை சேர்ந்த மேடை நாடக கலைஞரான வீரேஷ் முட்டினாமாத் பல டிவி சீரியல்களில் நடித்துள்ளார். ஆனால், தற்போது நாடகங்களில் நடிப்பதை விட்டுவிட்டு சாலைகளில் அவர் தனது பணியை செய்து வருகிறார். பெங்களூரில் இருக்கும் முக்கிய சிக்னல்களில் எமதர்மன் வேடத்தில் நிற்கும் வீரேஷை நீங்கள் பார்க்கலாம்.

    ஹெல்மெட் அணியாதவர்கள், சாலை விதிகளை மீறி வருபவர்களை பிடித்து அவர் எச்சரிக்கை விடுத்து வருகிறார். போலீசார்தான் வீரேஷை பணியமர்த்தியுள்ளதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், நிஜம் வேறு. கடந்த மாதம் வீரேஷின் மூத்த சகோதரர் சாலை விபத்தில் பலியானார்.

    ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற அவர் விபத்துக்குள்ளாகி, இரண்டு நாட்கள் கோமாவில் இருந்து பின்னர் உயிரிழந்தார். ஹெல்மெட் அணிந்திருந்தால் அவர் உயிர் பிழைத்திருப்பார் என டாக்டர்கள் வீரேஷிடம் கூறியுள்ளனர். இதனை அடுத்து, தனது சகோதரர் விபத்துக்குள்ளான சாலையில் சில நாட்களாக வீரேஷ் சுற்றி வந்துள்ளார்.



    அப்போது, பலர் ஹெல்மெட் அணியாமலும், சாலை விதிகளை மதிக்காமலும் சென்று வந்ததை பார்த்து வேதனை அடைந்த வீரேஷ், தன்னால் முடிந்த அளவு விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்துள்ளார். தனக்கு தெரிந்த மேடை நாடகத்தில் வேஷம் கட்டும் திறமையை வைத்தே அந்த பணியை வீரேஷ் செய்து வருகிறார்.

    ‘ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வருபவர்களை நான் எச்சரிக்கும் போது பலர் என் மீது கோபப்படுவார்கள். அவர்களிடம் பொறுமையாக எனது சகோதரனுக்கு நடந்த நிலையை கூறுவேன். அதில் ஒருவராவது திருந்தி ஹெல்மெட் அணிவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது’ என வீரேஷ் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
    ×