என் மலர்
நீங்கள் தேடியது "பிலிப்பைன்ஸ்"
- பிலிப்பைன்ஸ் நாட்டி டெல் சுர் மாகாணத்தில் ஹினதுவான் உள்ளது.
- இந்த நிலநடுக்கம் பூமியில் இருந்து 13 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டது.
பிலிப்பைன்சில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.9 ஆக பதிவாகி இருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டின் சூரிகாவோ டெல் சுர் மாகாணத்தில் உள்ள ஹினதுவானில் தான் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது பூமியில் இருந்து 13 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்பு மற்றும் பொருள் சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டதை அமெரிக்க நிலநடுக்கவியல் துறை உறுதிப்படுத்தி இருக்கிறது.
- பிலிப்பைன்ஸ் மீன்பிடி படகுகள் மீது சீன கடற்படையினர் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர்.
- சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மணிலா:
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தென்சீனக் கடல் பகுதி முழுமைக்கும் சீனா உரிமை கொண்டாடுகிறது. அதேசமயம் பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான் உள்ளிட்ட நாடுகளும் அந்த பகுதிகளுக்கு உரிமை கோருகின்றன. எனவே அந்த நாடுகளுக்கும், சீனாவுக்கும் இடையே அவ்வப்போது அங்கு மோதல் ஏற்படுகிறது. குறிப்பாக அங்கு செல்லும் பிலிப்பைன்ஸ் மீன்பிடி படகுகள் மீது சீன கடற்படையினர் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர்.
இந்த விவகாரத்தில் பிலிப்பைன்சுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களமிறங்கியது. எனவே சர்ச்சைக்குரிய அந்த பகுதியில் பிலிப்பைன்சுடன் இணைந்து அமெரிக்கா கூட்டுப்போர் பயிற்சியை நடத்துகிறது.
இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் இரு நாடுகளும் நேற்று மீண்டும் கூட்டுப்போர் பயிற்சியை தொடங்கின. இதில் அமெரிக்காவின் பி.1-பி குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் எப்.ஏ-50 போர் விமானங்கள் போன்றவை ஈடுபடுத்தப்பட்டதாக பிலிப்பைன்ஸ் விமானப்படை செய்தித்தொடர்பாளர் மரியா கான்சுலோ தெரிவித்துள்ளார்.
- 3 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
- 2-வது மாடியில் வசித்து வந்தவர்களில் 2 பேரும், 3 மாடியவில் வசித்து வந்தவர்களில் 6 பேரும் உயிரிழந்தனர்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் புறநகர் பகுதியான குயிசன் நகரில் உள்ள சான் இசிட்ரோ கலாஸ் கிராமத்தில் இன்று அதிகாலை 3 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பயங்கர தீ விபத்தில் முதல் தளத்தில் வசித்து வந்த 2 பேரும், 2-வது தளத்தில் வசித்து வந்த 6 பேரும் தீயில் சிக்கி உயிரிழந்தனர். தீ விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். கோடைக்காலம் தொடங்குவை முன்னிட்டு மார்ச் மாதம் அரசு தீ விபத்தை தடுப்பது குறித்து வழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. மார்ச் மாதம் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தாதது, அதிக மக்கள் கூட்டம், ஒழுங்கற்ற கட்டட வடிவமைப்பு ஆகியவை அடிக்கடி தீ விபத்து ஏற்பட காரணம் எனக் கூறப்படுகிறது.
குயிசனில் கடந்த 1996-ம் ஆண்டு இரவு விடுதியில் நடைபெற்ற தீ விபத்தில் 162 பேர் உயிரிழந்தனர். பள்ளி இறுதித் தேர்வு முடிவடைந்ததையொட்டி ஏராளமான மாணவர்கள் விடுதிக்கு சென்றிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். இந்த விபத்து பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட தீ விபத்துகளில் மிகவும் கொடூரமான தீ விபத்தாக கருதப்படுகிறது.
- சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
- மணிலாவின் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்டே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
2016-22 காலகட்டத்தில் பிலிப்பைன்ஸ் அதிபராக இருந்த ரோட்ரிகோ டுட்டெர்டே, நாட்டில் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் ஆயிரக்கணக்கானோரை கொன்று மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து ரோட்ரிகோ டுட்டெர்டே, மணிலாவின் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று (செவ்வாய்க்கிழமை) பிலிப்பைன்ஸ் காவல்துறையால் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
- ரெயிலில் இருந்து விழுந்து பலியான பிலிப்பைன்ஸ் பெண்ணின் உடல் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
- ரெச்சல்லா ஆனிமரி உடல் விமானம் மூலம் அவரது சொந்த நாட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
சேலம்:
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ரெச்சல்லா ஆனிமரி (வயது 35).
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நண்பரான கேரளாவை சேர்ந்த டாக்டர் ஹரிஷ் என்பவருடன் பெங்களூருவில் இருந்து எர்ணாகுளம் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். அப்போது சேலம் மாவட்டம் காருவள்ளி பகுதியில் வந்த போது ரெயிலில் இருந்து விழுந்து ரெச்சல்லா ஆனிமரி பலியானார்.
இதையடுத்து அவருடைய உடலை தர்மபுரி ரெயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரெச்சல்லா ஆனிமரி இறந்த விவரம் குறித்து தூதரகம் வழியாக அவருடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருடைய சகோதரி நோரா சேலம் வருவதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர் இந்தியா வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டது.
இதனால் இந்தியாவில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரகம் வழியாக தொண்டு நிறுவனம் மூலம் ரெச்சல்லா ஆனிமரி உடலை அனுப்பி வைக்கக் கோரி உறவினர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் பிலிப்பைன்ஸ் நாட்டு தூதரகம் மும்பையில் செயல்பட்டு வரும் ஜான் பிண்டோ என்னும் தொண்டு நிறுவனம் மூலம் ரெச்சல்லா ஆனிமரி உடலை சொந்த நாட்டுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் அதுதொடர்பான கடிதத்தை சேலம் ரெயில்வே போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று ரெச்சல்லா ஆனிமரியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் பிற்பகலில் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து விமானம் மூலம் அவரது சொந்த நாட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.