என் மலர்
நீங்கள் தேடியது "பிரேசில்"
- தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சி.
- படுகாயமடைந்தவர்கள் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தெற்கு பிரேசிலில் உள்ள போர்டோ அலெக்ரே நகரில் பயன்பாடு இல்லாமல், வீடு இல்லாதோருக்கு முகாமாக செயல்பட்டு வந்த ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தீ விபத்து இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்டுள்ளது. தீயில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், தீ விபத்துக்கான காரணத்தை விசாரிக்கவும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர்.
இதுகுறித்து, மாநில ஆளுநர் எடுவார்டோ லைட், ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேயர் செபாஸ்டியாவோ மெலோ தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், "தீ விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
- வெள்ளப்பெருக்கால் அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன.
- சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த வெள்ளப்பெருக்கால் அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன.
இன்று காலை முதல் மழை தொடர்ந்து பெய்து வருவதால், வெள்ளம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மேலும் வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டு ஏற்கனவே 37 பேர் உயிரிழந்த நிலையில், 66 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 101 பேர் காணவில்லை என கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதற்கிடையே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக அர்ஜென்டினா மற்றும் உருகுவே நாட்டின் எல்லையில் அமைந்துள்ள பல நகரங்களுக்கு அங்கு அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மேலும், உள்ளூர் நகராட்சியின் அறிக்கையின்படி, 1.4 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரத்தின் வழியாக ஓடும் குய்பா நதி, 1941 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பேரழிவின்போது வரலாற்று உச்சமாக 4.76 மீட்டர் இருந்தது. இது, 5.3 மீட்டர் என்ற புதிய உச்ச அளவை எட்டியது.
- என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு விபத்து.
- விபத்தில் விமானி உள்பட 2 பேர் பலி.
பிரேசில்:
தெற்கு பிரேசிலின் சான்டா கட்டரினா மாகாணம் வால்டரேஸ் நகரில் இருந்து மினாஸ் கிரேஸ் மாகாணம் புளோரினோபொலிஸ் நகருக்கு சிறிய ரக விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இடபோ நகர் அருகே நடுவானில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது அதன் என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதனிடையே கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை விமானிகள் உடனடியாக இழந்தனர். இதனால் நடுவானில் இருந்து கீழே தரையில் விழுந்து அந்த விமானம் நொறுங்கியது. இந்த விபத்தில் விமானி உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
- பிரேசில் வீரர்கள் 695 முறை பந்தை பாஸ் செய்தனர்.
- 9 முறை கார்னர் வாய்ப்பு கிடைத்தது.
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் பிரேசில் தனது முதல் ஆட்டத்தில் இந்திய நேரப்படி இன்று காலை கோஸ்டா ரிகா அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் போட்டி டிராவில் முடிவடைந்தது.
பிரேசில் அணி டார்கெட்டை நோக்கி மூன்று முறை முயற்சித்தது. ஆனால் மூன்று முறையும் அதிர்ஷ்டம் கைக்கூடவில்லை. கோஸ்டா ரிகா ஒருமுறை கூட டார்கெட் நோக்கி பந்தை அடிக்கவில்லை.
பிரேசில் வீரர்கள் 695 முறை பந்தை பாஸ் செய்தனர். கோஸ்டா ரிகா வீரர்கள் 249 முறைதான் பந்தை பாஸ் செய்தனர். பிரேசில் ஒரு மஞசள் அட்டையும், கோஸ்டா ரிகா 2 முறை மஞ்சள் அட்டையும் பெற்றது. பிரேசில் அணிக்கு 9 முறை கார்னர் வாய்ப்பு கிடைத்தது. கோஸ்டா ரிகாவுக்கு ஒருமுறைதான் கார்னர் வாய்ப்பு கிடைத்தது.
மற்றொரு ஆட்டத்தில் கொலம்பியா- பராகுவே அணிகள் மோதின. இதில் கொலம்பியா 2-1 என வெற்றி பெற்றது. 32-வது நிமிடத்தில் கொலம்பியா வீரர் டேனியல் முனோஸ் கோல் அடித்தார். 42-வது நிமிடத்தில் ஜெஃப்பர்சன் லெர்மா கோல் அடிக்க முதல் பாதி நேர ஆட்டத்தில் கொலம்பியா 2-0 ன முன்னிலை பெற்றிருந்தது.
2-வது பாதி நேர ஆட்டத்தில் பாராகுவே வீரர் ஜூலியோ என்சிசோ 69-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதனால் கொலம்பியா 2-1 என வெற்றி பெற்றது.
- முதல் ஆட்டத்தில் கோல் எதுவுமின்றி கோஸ்டாரிகாவுடன் டிரா செய்து இருந்தது.
- 2 தோல்வியுடன் பராகுவே வெளியேறியது.
லாஸ் வேகாஸ்:
கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
இன்று காலை நடந்த 'டி' பிரிவு ஆட்டத்தில் பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தியது. பிரேசில் அணிக்காக வின்சியஸ் 2 கோலும், சவியோ, லுகாஸ் பகுடோ தலா ஒரு கோலும் அடித்தனர். பிரேசில் பெற்ற முதல் வெற்றியாகும். முதல் ஆட்டத்தில் கோல் எதுவுமின்றி கோஸ்டாரிகாவுடன் டிரா செய்து இருந்தது.
மற்றொரு போட்டியில் கொலம்பியா 3-0 என்ற கணக்கில் கோஸ்டாரிகாவை தோற்கடித்தது. 2 வெற்றியுடன் அந்த அணி கால் இறுதிக்கு தகுதி பெற்றது. 2 தோல்வியுடன் பராகுவே வெளியேறியது.
- விமானம் விழுந்த வேகத்தில் வெடித்துச் சிதறியதால் அப்பகுதியே தீப் பிழம்பாக மாறியது.
- விமானம் விபத்துக்குள்ளான பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது
பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்திலிருந்து 61 பயணிகளுடன் புறப்பட விமானமானது நேற்று [வெள்ளிக்கிழமை] மதியம் வின்ஹெடோ நகருக்கு அருகே வந்தபோது விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்து பயங்கர விபத்துக்குள்ளானது. 2283 என்ற அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து செங்குத்தாக இறங்கி அப்பகுதியில் உள்ள வீடுகளின் மேல் விழுந்து வெடித்துச் சிதறியது.
விமானம் விழுந்த வேகத்தில் வெடித்துச் சிதறியதால் அப்பகுதியே தீப் பிழம்பாக மாறியது. விமானத்தில் பயணித்த 57 பயணிகளும் 4 பணியாளர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து நடந்த இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படை தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது. இந்த விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா,ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தற்போது விபத்து குறித்து விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.
விபத்து தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், விமானம் நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுகிறது. பின்னர் வின்ஹெடோ நகரில் உள்ள வீடுகளின் மீது தலைகீழாகக் கவிழ்ந்து விழுகிறது. இதில் சில நொடிகளில் விமானத்தின் ஒரு பெரிய பகுதியில் தீப்பிடித்து எரிகிறது. பின்னர் விமானத்திலிருந்து பெரிய கரும்புகை வானத்தை நோக்கி வெளியேறுவது பதிவாகியுள்ளது.
- நீதிபதி மொரேஸ் மறைமுக எச்சரிக்கை விடுத்ததாக தகவல்.
- எக்ஸ் வலைதள பக்கம் பிரேசிலில் செயல்பாட்டிலேயே இருக்கும்.
எக்ஸ் சமூக வலை தளத்தை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே பிரேசிலில் எக்ஸ் வலைதளத்தில் முன்னாள் அதிபர் ஜெயிர் பொல்சினேரோவுக்கு ஆதரவான தீவிர வலதுசாரி கருத்துக்கள், வெறுப்புணர்வு கருத்துக்கள், போலி செய்திகளை நீக்கும்படி எக்ஸ் நிறுவனத்திற்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அலெக்சான்டிரி டி மொரேஸ் உத்தரவிட்டார்.
சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்கி தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். இல்லையென்றால் பிரேசிலில் செயல்பட்டு வரும் எக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் சட்ட நிபுணர் கைது செய்யப்படுவார் என்று நீதிபதி மொரேஸ் மறைமுக எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் பிரேசிலில் உள்ள எக்ஸ் தள அலுவலகத்தை மூடுவதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, பிரேசிலில் அலுவலகத்தை மூடுவதற்கான முடிவு கடினமானது. ஆனால் நீதிபதியின் ரகசிய தணிக்கை மற்றும் தனிப்பட்ட தகவல் பரிமாற்ற கோரிக்கைகளுக்கு நாங்கள் ஒப்புக்கொண்டிருந்தால், நாங்கள் விளக்கங்களை அளிக்க முடியாமல் போய் விடும் என்றார்.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பிறப்பித்த உத்தரவையடுத்து பிரேசிலில் செயல்பாடுகளை எக்ஸ் நிறுவனம் நிறுத்தி உள்ளது. அலுவலகம் மூடப்பட்டாலும் தொடர்ந்து எக்ஸ் வலைதள பக்கம் பிரேசிலில் செயல்பாட்டிலேயே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- எக்ஸ் அலுவலகத்தை மொத்தமாக மூடி ஊழியர்களை அதிரடியாக நீக்கினார் எலான் மஸ்க்.
- அலுவலகம் மூடப்பட்டாலும் பிரேசிலில் எக்ஸ் சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்
பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரை வாங்கி எக்ஸ் என பெயர் மாற்றிய உலகப் பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் அதில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். பெரிய அளவில் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து தளத்தில் பாலிசிகளில் பல திருத்தங்களை மேற்கொண்டார். உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைதளமாக எக்ஸ் திகழ்ந்து வரும் நிலையில் 24 மணி நேரத்துக்குள் பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள எக்ஸ் அலுவலகத்தை மொத்தமாக மூடி ஊழியர்களை அதிரடியாக நீக்கினார் எலான் மஸ்க். அலுவலகம் மூடப்பட்டாலும் பிரேசிலில் எக்ஸ் சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கை விசாரித்து வரும் பிரேசில் உச்ச நீதிமன்றம், பிரேசில் நாட்டில் X தளத்திற்கான சட்ட விவகார பிரதிநிதியை அடுத்த 24 மணி நேரத்தில் நியமிக்க வேண்டும் என்றும், தவறினால் பிரேசிலில் எக்ஸ் தளம் முடக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
- பிரேசில் நாட்டில் எக்ஸ் தளத்திற்கு தற்காலிக தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
- பிரேசில் நாட்டில் எக்ஸ் ஆப்பை 2.2 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்
பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரை வாங்கி எக்ஸ் என பெயர் மாற்றிய உலகப் பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் அதில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். பெரிய அளவில் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து தளத்தில் பாலிசிகளில் பல திருத்தங்களை மேற்கொண்டார்.
சமீபத்தில் பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள எக்ஸ் அலுவலகத்தை மொத்தமாக மூடி ஊழியர்களை அதிரடியாக நீக்கினார் எலான் மஸ்க். அலுவலகம் மூடப்பட்டாலும் பிரேசிலில் எக்ஸ் சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கை விசாரித்து வரும் பிரேசில் உச்ச நீதிமன்றம், பிரேசில் நாட்டில் X தளத்திற்கான சட்ட விவகார பிரதிநிதியை அடுத்த 24 மணி நேரத்தில் நியமிக்க வேண்டும் என்றும், தவறினால் பிரேசிலில் எக்ஸ் தளம் முடக்கப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
பிரேசில் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை ஏற்க முடியாது என்று எலான் மஸ்க் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதனையடுத்து, பிரேசில் நாட்டில் எக்ஸ் தளத்திற்கு தற்காலிக தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 24 மணிநேரத்திற்குள் எக்ஸ் தளத்தை பிரேசில் நாட்டிலிருந்து முடக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு தேசிய தகவல் தொடர்பு நிறுவனத்திற்கு நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் உத்தரவிட்டார்.
மேலும், கூகுள், ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் எக்ஸ் ஆப்பை தடுக்கும் தொழில்நுட்பத் தடைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் VPN போன்றவற்றை பயன்படுத்தி எக்ஸ் ஆப்பை பிரேசில் மக்கள் பயன்படுத்தினால் 8,874 டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,44,000) அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் தெரிவித்தார்.
பிரேசில் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில், "சுதந்திரமான பேச்சு என்பது ஜனநாயகத்தின் அடித்தளம். பிரேசிலில் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு போலி நீதிபதி அதை அரசியல் நோக்கங்களுக்காக அழித்து வருகிறார்" என்று பதிவிட்டுள்ளார்.
பிரேசில் நாட்டில் எக்ஸ் ஆப்பை 2.2 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 19 வயதிலேயே பயிற்சியின் மூலம் தேர்ந்த பாடி பில்டருக்கான உடல் வாகுவை கொண்டிருப்பதைக் கண்டு அனைவரும் ஆச்சர்யப்பட்டனர்
- பிரேசிலில் நடந்த பல்வேறு பாடி பில்டிங் போட்டிகளில் பங்கேற்று பிரபலமானார்
பிரேசிலை சேர்ந்த 19 வயது பாடி பில்டர் மத்தேயூஸ் பாவ்லக் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்த வளர்ந்து வரும் பாடி பில்டிங் நட்சத்திரமான இருந்து வந்த மத்தேயூஸ் பாவ்லக் [Matheus Pavlak] 19 வயதிலேயே பயிற்சியின் மூலம் தேர்ந்த பாடி பில்டருக்கான உடல் வாகுவை கொண்டிருப்பதைக் கண்டு அனைவரும் ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருந்தனர். 5 வருடங்களுக்கு முன்னர் நடந்த உடல் பருமன் கொண்டவர்கள் எடையை குறைக்கும் போட்டியில் பங்கெடுத்த மத்தேயூஸ் அதிலிருந்த்து தனது பாடி பில்டிங் ஆர்வத்தை பெற்றார்.

பிரேசிலில் நடந்த பல்வேறு பாடி பில்டிங் போட்டிகளில் பங்கேற்று புகழை சம்பாதித்த மத்தேயூஸ் பிரேசிலின் சாண்டா காத்ரீனா மாகாணத்தில் உள்ள தனது வீட்டில் வைத்து கடந்த ஞாயிறு மதியம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். மத்தேயூசின் மரணம், உடலை அசாதாரணமாக மாற்ற பாடி பில்டிங் பயிற்சியில் பயன்படுத்தப்படும் அனபாலிக் ஸ்டெராய்ட்களின் [ஊக்கமருந்துகளின்] பாதுகாப்புத் தன்மை மீதான சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மத்தேயூசும் இவ்வளவு இளம்வயதில் அவரின் அசாதாரண உடல்வாகைப் பெற இதுபோன்ற ஸ்டெராய்ட்களை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
- தடையை நீக்க வேண்டுமானால், 5.2 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
- அபாரதத் தொகை செலுத்தியுள்ள எலான் மஸ்க் மாபெரும் தவறு ஒன்றை செய்துள்ளார்.
சமீபத்தில் பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள எக்ஸ் அலுவலகத்தை மொத்தமாக மூடி ஊழியர்களை அதிரடியாக நீக்கினார் எலான் மஸ்க். அலுவலகம் மூடப்பட்டாலும் பிரேசிலில் எக்ஸ் சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
பிரேசில் தேர்தலின்போது எக்ஸ் தளத்தில் முடக்கப்பட்டிருந்த பல்வேறு கணக்குகள் அனுமதியின்றி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததாகவும் எக்ஸ் நிறுவனம் மீது குற்றச்சாட்டு இருந்துவந்த நிலையில் கட்டுப்பாடுகள் இன்றி எக்ஸ் தளம் செயல்பட்டு வருவதாகவும் பிரேசிலில் எக்ஸ் தளத்திற்கான பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்றும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் இதற்கு மஸ்க் மறுப்பு தெரிவித்த நிலையில் பிரேசிலில் எக்ஸ் தளத்துக்குத் தடைவிதித்து நீதிபதி அலெக்சாண்டிரே டிமொரேஸ் உத்தரவிட்டார். மேலும், இந்த தடையை நீக்க வேண்டுமானால், 5.2 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த உத்தரவுப்படி தற்போது அபாரதத் தொகை செலுத்தியுள்ள எலான் மஸ்க் மாபெரும் தவறு ஒன்றை செய்துள்ளார். அதாவது, தவறான வங்கிக்கணக்குக்கு அந்த அபராத தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பிரேசிலில் எக்ஸ் தளத்தின் மீதான தடையை நீக்குவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எக்ஸ் தளம் அபார பணத்தைத் தவறாக அனுப்பியதை உறுதி செய்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதி அலெக்சாண்டிரே டிமொரேஸ், மீண்டும் அந்த பணத்தை எக்ஸ் தளத்தின் கணக்கிற்குத் திருப்பி செலுத்த உத்தரவிட்டுள்ளார்.
- எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்ததால் பிரேசிலில் எக்ஸ் தளம் மொத்தமாக தடை செய்யப்பட்டது.
- அபாரதத் தொகையை தவறான வங்கிக்கணக்குக்கு எலான் மஸ்க் செலுத்தியதால் விவகாரம் இன்னும் சிக்கலானது
பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள எக்ஸ் அலுவலகத்தை மொத்தமாக மூடி ஊழியர்களை அதிரடியாக நீக்கினார் எலான் மஸ்க். முன்னதாக அதிபர் தேர்தலின்போது முடக்கப்பட்ட எக்ஸ் தளங்கள் சட்டவிரோதமாக மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததாகவும் எக்ஸ் தளம் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக அந்நாட்டில் நடந்த உச்சநீதிமன்ற விசாரணையில் பிரேசிலில் எக்ஸ் தளத்திற்கான பிரதிநிதியை நியமிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் இதற்கு எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்ததால் பிரேசிலில் எக்ஸ் தளம் மொத்தமாக தடை செய்யப்பட்டது.

மேலும் இந்த தடையை நீக்க வேண்டுமானால், 5.2 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் அந்த அபாரதத் தொகையை தவறான வங்கிக்கணக்குக்கு எலான் மஸ்க் செலுத்தியதால் விவகாரம் இன்னும் சிக்கலானது.
தவறாக அனுப்பப்பட்ட தொகையை மீண்டும் எலான் மஸ்க்குக்கே அனுப்பி வைக்கும்படி பிரேசில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த இடியாப்ப சிக்கல் தற்போது ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரஸ், X தளம் பிரேசிலில் மீண்டும் செயல்படத் தேவையான அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த 24 மணி நேரத்துக்குள் எக்ஸ் சேவைகளை பிரேசில் மீட்டெடுக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.