என் மலர்
நீங்கள் தேடியது "காவிரி மேலாண்மை ஆணையம்"
- கர்நாடக அரசின் முயற்சி உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறுவதாகும்.
- புதிய திட்டங்களை பரிசீலிப்பது காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணி கிடையாது.
கர்நாடகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட அம்மாநில அரசின் முயற்சிக்கு, தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறி உள்ளதாவது: மேகதாது அணை திட்டத்தை கொண்டு வரும் கர்நாடக அரசின் முயற்சி உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறுவதாகும். மேகதாது அணை விவகாரத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடியும் வரை காவிரி மேலாண்மை ஆணையம் ஆலோசனை உள்ளிட்ட எதையும் செய்ய முடியாது.
புதிய திட்டங்களுக்கான அனுமதி போன்றவற்றை பரிசீலிப்பது காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணி கிடையாது. காவிரி விவகாரத்தில் தீர்ப்பு செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதே காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணியாகும். கர்நாடக அரசு அனுமதியின்றி செயல்படுத்தும் நீர் திட்டங்களை தடுக்க காவிரி மேலாண்மை ஆணையம் தவறிவிட்டது. இவ்வாறு அந்த மனுவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 20-வது கூட்டம் டெல்லியில் இன்று காலை தொடங்கியது.
- கோடைக்கால நீர் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
புதுடெல்லி:
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 20-வது கூட்டம் டெல்லியில் இன்று காலை தொடங்கியது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் ஆலோசனை நடந்தது.
தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இது தவிர கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அரசு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
கோடைக்கால நீர் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
பருவமழை மற்றும் பாசன ஆண்டு விரைவில் தொடங்க உள்ள நிலையில் காவிரியில் மழைஅளவு, நீர் வரத்து, நீர் இருப்பு, தரவுகள் பற்றி மற்ற அம்சங்கள் குறித்தும், முன்னேற்பாடுகள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
- காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கூட்டம் வருகிற ஜூன் 16-ஆம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கிறது.
- தமிழக விவசாயிகளின் எதிர்கால நலனில் அக்கறையோடு தமிழக அரசு செயல்பட வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கூட்டம் வருகிற ஜூன் 16-ஆம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் தமிழக விவசாயிகள் நலன் சார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டும். காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கூட்டத்தில் காவிரிப்படுகையில் கர்நாடகா அரசு சார்பில் மேகதாது அணை கட்டுவது சம்பந்தமாக எந்த பேச்சுவார்த்தையும் கூடாது. மேகதாது அணை கட்டினால் தமிழக டெல்டா பகுதிகள் பாலைவனமாக ஆகிவிடும். ஆகவே மேகதாது விவகாரத்தில் சட்டரீதியாக, நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டத்தில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள விகிதாச்சாரப்படி தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய தண்ணீரை முறையாக அளிக்க கர்நாடக அரசிற்கு அறிவுறுத்த வேண்டும். காவிரி தண்ணீர் என்பது தமிழக மக்களின் உயிர் நீர், அவற்றை அளிப்பதில் எந்தவித விதிமீறலும் இருக்கக்கூடாது.
தமிழக அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டத்தில் தமிழகத்திற்கு கிடைக்கக்கூடிய உரிமைகளை பெற்றுத்தர முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழக விவசாயிகளின் எதிர்கால நலனில் அக்கறையோடு தமிழக அரசு செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழ்நாட்டிற்கு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும்.
- இன்றைய நிலவரப்படி வெறும் 1.65 டி.எம்.சி. அடி நீர் மட்டுமே தமிழ்நாட்டிற்கு கர்நாடகத்தால் திறந்துவிடப்பட்டு இருக்கிறது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை, சட்டப் போராட்டத்தின் மூலம் மத்திய அரசிதழில் வெளியிடச் செய்த பெருமைக்குரியவர் அம்மா. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படியும், தமிழ்நாட்டிற்கு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும். ஆனால், இதனைத் தர கர்நாடக அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.
ஜூன் மாதத்தில் 9.19 டி.எம்.சி. அடி நீரை கர்நாடகம் திறந்து வேண்டுமென்ற நிலையில், இன்றைய நிலவரப்படி வெறும் 1.65 டி.எம்.சி. அடி நீர் மட்டுமே தமிழ்நாட்டிற்கு கர்நாடகத்தால் திறந்துவிடப்பட்டு இருக்கிறது.
அண்மையில் காவேரி மேலாண்மை ஆணையக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில், இந்த மாதத்திற்கான ஒதுக்கீட்டை உடனடியாக அளிக்க கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டுமென்றும் தமிழ்நாடு சார்பில் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், கர்நாடகத்தின் சார்பில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்போது நீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தி.மு.க. காங்கிரஸ் கட்சியுடன் நெருங்கிய உறவை வைத்திருப்பதால் முதலமைச்சர், கர்நாடக முதல்-மந்திரியுடன் பேசி, தேவையான அழுத்தத்தை கொடுத்து, ஜூன் மாதத்திற்கு அளிக்க வேண்டிய நீரினை உடனடியாக தமிழ்நாட்டிற்கு திறந்துவிடவும், ஒவ்வொரு மாதமும் உரிய நீரை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஜூன், ஜூலை மாதத்துக்கு காவிரியில் திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடகா முறைப்படி தரவில்லை.
- கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்.
புதுடெல்லி:
கர்நாடகாவுடன் காவிரி பிரச்சினை, தென்பெண்ணை ஆறு பிரச்சினை, கேரளாவுடன் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை என தமிழகத்தின் நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வே எட்டப்படாமல் சென்று கொண்டிருக்கின்றன.
காவிரியில் கர்நாடகம் நீர் திறப்பதை காவிரி மேலாண்மை ஆணையம் உறுதி செய்திருந்தாலும், மாதந்தோறும் வழங்கும் தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடுவதில்லை.
அது மட்டுமின்றி, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதை தடுக்கும் நோக்கில் மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது.
மேகதாது அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கூறி இருந்தார். ஆனாலும் அதற்கான நடவடிக்கைகளில் கர்நாடகம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் கர்நாடகா துணை முதல்-மந்திரி சிவக்குமார் அண்மையில் கூறுகையில் கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்துக்கும், மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கும் நேற்று முன்தினம் ஒருகடிதம் எழுதி இருந்தார்.
அதில் ஜூன், ஜூலை மாதத்துக்கு காவிரியில் திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடகா முறைப்படி தரவில்லை. ஜூன் மாதத்திற்கு 9.19 டி.எம்.சி.யும், ஜூலை மாதத்திற்கு 34 டி.எம்.சி. தண்ணீரும் வழங்கப்பட வேண்டும். இதை தமிழகத்திற்கு திறந்துவிட கர்நாடக அரசை அறிவுறுத்த வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகனும், கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனாவும் டெல்லியில் இன்று மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து முறையிட்டனர்.
சுப்ரீம் கோர்ட்டு காவிரி ஆணைய உத்தரவுபடி காவிரியில் முறைப்படி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தினார்கள்.
கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். அங்கு அணை கட்ட எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது என்றும் வலியுறுத்தினார்கள்.
இது தொடர்பான கோரிக்கை மனுவையும் மத்திய மந்திரியிடம் அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
- கர்நாடக அணைகளில் இன்று காலை நிலவரப்படி 55 டி.எம்.சி.க்கும் கூடுதலான தண்ணீர் உள்ளது.
- காவிரி நீர் பெற அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? என்பதை தமிழக அரசு ஆராய வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, ஜூலை 22-ம் நாள் வரை 33.31 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால், 4 டி.எம்.சி.க்கும் குறைவான தண்ணீரையே கர்நாடகம் திறந்து விட்டிருக்கிறது. அதனால், இன்று வரை சுமார் 30 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு பாக்கி வைத்திருக்கிறது.
கர்நாடக அணைகளில் இன்று காலை நிலவரப்படி 55 டி.எம்.சி.க்கும் கூடுதலான தண்ணீர் உள்ளது. அதுமட்டுமின்றி, கர்நாடக அணைகளுக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்திருக்கிறது. 20-ந் தேதி நிலவரப்படி கர்நாடக அணைகளுக்கு வினாடிக்கு 12,000 கன அடி மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை நீர்வரத்து வினாடிக்கு 27,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக அணைகளின் நீர் இருப்பும், நீர்வரத்தும் திருப்தியளிக்கும் நிலையில் இருந்தாலும், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு முன்வரவில்லை. கர்நாடக அணைகளில் மிகக்குறைந்த அளவிலேயே தண்ணீர் உள்ளது.
அதனால், கர்நாடகத்தின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து முடிவெடுப்போம் என்று கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்க முடியாது என்பதைத் தான் அவர் அவ்வாறு கூறியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்க கர்நாடகம் முன்வரவில்லை; மத்திய அரசிடம் முறையிட்டும், அதனால் பயன் இல்லை;
இடர்ப்பாட்டுக் கால நீர்ப்பகிர்வு முறையை நடைமுறைப்படுத்தும்படி கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தயாராக இல்லை. இத்தகைய சூழலில், காவிரி நீர் பெற அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? என்பதை தமிழக அரசு ஆராய வேண்டும்.
கடந்த காலங்களில் இத்தகைய சூழலில் உச்சநீதி மன்றத்தை அணுகியே தமிழகம் தனக்கான நீதியை வென்றெடுத்துள்ளது. அதேபோல், இப்போதும் கருகும் குறுவை பயிர்களைக் காப்பாற்றுவதற்காக கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு ஆணையிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கைத் தொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய தண்ணீரை முறைப்படி வழங்கவில்லை.
- 22-வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 11-ம் தேதி டெல்லியில் நடக்கிறது.
புதுடெல்லி:
காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டதில் இருந்து இதுவரை 21 கூட்டங்கள் நடந்துள்ளன.
இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் வரும் 11-ம் தேதி டெல்லியில் நடக்கிறது. ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான அழைப்பு அவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு முறைப்படி வழங்காததால், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்று, மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்தார். தமிழ்நாடு முதலமைச்சரின் கடிதத்தையும் அளித்தார்.
இதனால் கர்நாடக அரசுக்கு அழுத்தம் தரப்பட்டது. அதன்பேரில் தண்ணீர் திறந்து விடுவதாக கர்நாடக துணை முதல் மந்திரி சிவகுமார் தெரிவித்தார். இதற்கிடையே மழையும் பெய்ததால் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனாலும் முழுமையான அளவில் தண்ணீர் வரவில்லை.
11-ம் தேதி நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அதிகாரிகள் கோரிக்கையை வலியுறுத்த உள்ளனர்.
- காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று டெல்லியில் நடக்கிறது.
- இந்த ஆணையம் அமைக்கப்பட்டது முதல் இதுவரை 21 கூட்டம் நடந்துள்ளது.
புதுடெல்லி:
காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டதில் இருந்து இதுவரை 21 கூட்டங்கள் நடந்துள்ளன.
இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடக்கிறது. ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.
தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு முறைப்படி வழங்காததால், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்று, மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்தார். தமிழ்நாடு முதலமைச்சரின் கடிதத்தையும் அளித்தார். இதனால் கர்நாடக அரசுக்கு அழுத்தம் தரப்பட்டது. அதன்பேரில் தண்ணீர் திறந்து விடுவதாக கர்நாடக துணை முதல் மந்திரி சிவகுமார் தெரிவித்தார். இதற்கிடையே மழையும் பெய்ததால் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனாலும் முழுமையான அளவில் தண்ணீர் வரவில்லை.
இன்று நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அதிகாரிகள் கோரிக்கையை வலியுறுத்த உள்ளனர்.
- காவிரி நீரை திறந்து விடாததால் காவிரி மேலாண்மை ஆணையத்தை கூட்ட தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்திருந்தது.
- உடனே காவிரியில் தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்
சென்னை:
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் டெல்லியில் இன்று மதியம் கூடுகிறது.
தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் தரவேண்டிய காவிரி நீரை திறந்து விடாததால் காவிரி மேலாண்மை ஆணையத்தை கூட்ட தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்திருந்தது.
அதன் அடிப்படையில் இந்த கூட்டம் கூட்டப்பட்டு உள்ளது.
காவிரி மேலாண்மை ஆணைய சேர்மன் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
இதில் தமிழ்நாட்டின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா காவிரி தொழில்நுட்ப குழுத் தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இன்றைய கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடகா அரசு முறைப்படி வழங்காததால், உடனே காவிரியில் தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் வலியுறுத்த உள்ளனர்.
கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இந்த மாதம் வரை தமிழகத்திற்கு 40 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா திறந்து விடாமல் பாக்கி வைத்துள்ளது. அதுகுறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
- தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு முழுமையான அளவில் தண்ணீர் திறக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
- தண்ணீர் திறப்பது தொடர்பான தமிழ்நாடு அரசின் கோரிக்கைய கர்நாடக அரசு ஏற்கவில்லை.
புதுடெல்லி:
காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் 22-வது கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அப்போது, தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு முழுமையான அளவில் தண்ணீர் திறக்கவில்லை என்றும் காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர். தமிழகத்திற்கு 9ம் தேதிவரை 37.9 டிஎம்சி தண்ணீர் கர்நாடக அரசு தரவேண்டும் என்றும், இந்த தண்ணீரை திறந்துவிட உத்தரவிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
ஆனால் இந்த கோரிக்கைய கர்நாடக அரசு ஏற்கவில்லை. இதனால் தமிழக அதிகாரிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இத்தகவலை தமிழக நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா கூறி உள்ளார்.
- தமிழகத்திற்கு 9ம் தேதிவரை 37.9 டிஎம்சி தண்ணீர் கர்நாடக அரசு தரவேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்தது.
- தண்ணீர் திறப்பது தொடர்பான தமிழ்நாடு அரசின் கோரிக்கைய கர்நாடக அரசு ஏற்கவில்லை.
புதுடெல்லி:
காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் 22-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. அப்போது, தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு முழுமையான அளவில் தண்ணீர் திறக்கவில்லை என்றும் காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர். தமிழகத்திற்கு 9ம் தேதிவரை 37.9 டிஎம்சி தண்ணீர் கர்நாடக அரசு தரவேண்டும் என்றும், இந்த தண்ணீரை திறந்துவிட உத்தரவிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
ஆனால் இந்த கோரிக்கையை கர்நாடக அரசு ஏற்கவில்லை. இதனால் தமிழக அதிகாரிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த கூட்டத்தின் முடிவில் தமிழகத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டது. தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
- கேரளா, குடகு மாவட்டத்தில் மிக குறைந்த அளவே மழை பெய்து உள்ளது
- கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை.
காவிரி நீர் பிரச்சினை விசுவரூபம் எடுத்துள்ள நிலையில் கர்நாடக முதல்-மந்திரி சித்தரா மையா இன்று பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கேரளா, குடகு மாவட்டத்தில் மிக குறைந்த அளவே மழை பெய்து உள்ளது. இதனால் காவிரியில் நீர்வரத்து குறைந்ததால் கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை. இதன் காரணமாக காவிரியில் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.