என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குறுஞ்செய்தி"
- சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்.
- கடலோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் நிவாரண முகாமில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று அதிகாலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மிச்சாங் புயலாக உருவானது.
சென்னைக்கு தென்கிழக்கே 290 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள மிச்சாங் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.
மிச்சாங் புயல் நெருங்கி வருவதன் எதிரொலியாக சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் எதிரொலியால், பொது மக்கள் யாரும் புயல் கரையை கடக்கும் வரை கடற்கரை பகுதிக்கோ, தேவை இல்லாமல் வெளியேவோ செல்ல வேண்டாம் என சென்னை காவல்துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில், மிச்சாங் புயல் தொடர்பாக குறுஞ்செய்தி மூலமாக பொது மக்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மேலாண்ணை துறை இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, அந்த குறுஞ்செய்தியில், " மிச்சாங் புயலால் கனமழையுடன் 60- 70 கி.மீ., பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். கடலோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் நிவாரண முகாமில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
பொது மக்கள் தேவை இல்லாமல் வெளியே வரவேண்டாம். மரங்கள், மின்கம்பங்கள் சாலைகள் பாதிக்கும்- தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கவும்" என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை குறுஞ்செய்தியாக அனுப்பியுள்ளது.
- ஆதார் எண்ணை உள்ளீடு செய்து தங்களின் விண்ணப்பத்தின் நிலையினை தெரிந்து கொள்ளலாம்.
- ரூ.1000-ஐ தங்களின் விருப்பப்படி வங்கியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம்.
கடலூர்:
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணையின்படி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு ரூ.1000 அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டையிலுள்ள மகளிர்கள், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நிலை குறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உதவி மைய எண் 1100-ல் தொடர்பு கொண்டுதெரிந்து கொள்ளலாம். அனைத்து இ-சேவை மையங்களிலும் தங்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். கலைஞர் மகளிர் உரிமை திட்ட இணைய முகவரியான kmut.tn.gov.in/login.html யில் பொதுமக்கள் உள்நுழைவு என்ற மெனுவை தேர்வு செய்து அதில் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து தங்களின் விண்ணப்பத்தின் நிலையினை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகம், அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் இத்திட்டத்திற்கென பிரத்யேகமாக செயல்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமை திட்ட உதவி மையத்தினை அணுகி விண்ணப்ப த்தின் நிலையினை தெரிந்துகொள்ளலாம். மேலும், இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய விரும்பினால் குறுஞ்செய்தி பெறப்பட்ட 30 நாட்களுக்குள் அனைத்து இ-சேவை மையங்களிலும் கட்டணமின்றி வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். இ-சேவை மையத்தில் மேல்முறையீடு செய்வதற்கு எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. மேலும், வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட தொகை ரூ.1000-ஐ தங்களின் விருப்பப்படி வங்கியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். இந்த தொகை குறிப்பிட்ட நாட்களுக்குள் எடுத்துக் கொள்ளாவிடில் வங்கியிலிருந்து மீண்டும் எடுத்துக் கொள்வார்கள் என அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- மின்சார வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும்.
- www.tnebltd.gov.in வழியாக மின்கட்டணம் செலுத்தி மக்கள் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
திருப்பூர் :
திருப்பூர் மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் சா.முத்துவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது :- திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் மின் கட்டணம் செலுத்தாததால் மின் துண்டிப்பு செய்யப்படும் என குறுஞ்செய்தி மூலம் தகவல் கொடுத்து அதன் மூலம் டிஜிட்டல் பணபரிமாற்றம் (மொபைல் டிரேன்ஸ்லேசன்) செய்யுமாறு கூறப்படும் போலியான தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவுவதை கண்டு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அவ்வாறான போலியான தகவல்கள் தங்களது செல்போனுக்கு கிடைக்கப்பெற்றால் தங்களது 10 இலக்க மின் இணைப்பு எண் மற்றும் நிலுவையில் உள்ள மின் கட்டணம் போன்ற தகவல்கள் அருகில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும்.
மேலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணையதளம் www.tnebltd.gov.in வழியாக மின்கட்டணம் செலுத்தி மக்கள் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்