என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேல்முருகன்"

    • செருப்பை கழற்றியும், சவுக்கால் அடித்துக்கொண்டும் அற்ப அரசியல் செய்கிறார் அண்ணாமலை.
    • நியாயமாக தமிழக மக்கள்தான் அண்ணாமலையை சாட்டையால் அடிக்க வேண்டும்.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தினார். வீட்டு வாசலில் சாட்டையால் சட்டை அணியாத உடலில் தனக்கு தானே அடித்துக் கொண்டார்.

    இதுதொடர்பாக காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:

    * அண்ணாமலை சவுக்கால் அடித்துக்கொண்டதை பார்த்தேன். மீண்டும் அவர் பயிற்சி எடுக்க வேண்டும்.

    * செருப்பை கழற்றியும், சவுக்கால் அடித்துக்கொண்டும் அற்ப அரசியல் செய்கிறார் அண்ணாமலை.

    * அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை விவகாரத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.

    * அண்ணாமலை லண்டனில் சென்று படித்தாரா? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியதாவது:

    * அண்ணாமலையின் போராட்டம் நகைப்புக்குரியதாக மாறி விட்டது.

    * பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஜனநாயக ரீதியாக அண்ணாமலை போராடி இருக்கலாம்.

    * சட்ட ரீதியான போராட்டத்தையும் அண்ணாலை முன்னெடுத்து இருக்கலாம்.

    * தன்னை வருத்திக்கொள்ளும் அண்ணாமலையின் போராட்டம் நகைப்புக்குரியதாக மாறி விட்டது என்று கூறினார்.

    மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியதாவது:

    * தமிழக மக்கள் தான் அண்ணாமலையை சாட்டையால் அடித்திருக்க வேண்டும்.

    * மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற்று தர அண்ணாமலை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

    * உண்மையான பிரச்சனையை மடைமாற்றும் வேலையை செய்கிறார் அண்ணாமலை.

    * நியாயமாக தமிழக மக்கள்தான் அண்ணாமலையை சாட்டையால் அடிக்க வேண்டும் என்று கூறினார்.

    • சட்டசபையில் தி.மு.க.வினர் அரைவேக்காட்டுதனமாக கூச்சலிடுகின்றனர்.
    • தி.மு.க.வினரின் செயலை சபாநாயகர் தடுத்து நிறுத்த வேண்டும்.

    சென்னை:

    தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    சட்டசபையில் தி.மு.க.வினர் அரைவேக்காட்டுதனமாக கூச்சலிடுகின்றனர்.

    என்ன பேச போகிறேன் என்பதே தெரியாமல் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூச்சலிடுவதாக குற்றம்சாட்டிய அவர், தி.மு.க.வினரின் செயலை சபாநாயகர் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    • ஜிஎஸ்டியில் ஒத்துழைப்பு தரமாட்டோம். சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்காது என அறிவியுங்கள்.
    • என் மண்ணுக்கும் என் மக்களுக்கும் செய்கின்ற துரோகம்.. ஒக்கி புயல் வந்தால் பணம் இல்லை... வர்தா புயல் வந்தால் பணம் இல்லை...

    திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மும்மொழி கொள்கையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது வேல்முருகன் பேசியதாவது:-

    இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சருக்கு ஒரேயொரு வேண்டுகோளை முன் வைக்கிறேன்.

    அது,

    சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கிறோம். சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கிறோம்.

    எதையும் பற்றி கவலைக்கொள்ளாமல் நம்மை தூசு என்று நினைக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு சரியான சவுக்கடி கொடுக்க வேண்டும் எனச்சொன்னார். இதை சரியான களமாக மாற்றுங்கள். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கமாட்டோம்.

    அனைத்து சுங்கச்சாவடிகளில் உங்க தலைமையிலான தொண்டர்களும், மக்களும் வரிக்கொடா இயக்கத்தை அறிவியுங்கள். அனைத்து தலைவர்கள் சுங்கச்சாவடிகளில் சுங்கம் தர மறுப்போம் என வரிக்கொடா இயக்கத்தை தொடங்குவார்கள்.

    2-வது ஜிஎஸ்டி. ஜிஎஸ்டியில் ஒத்துழைப்பு தரமாட்டோம். சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்காது என அறிவியுங்கள். அதானியின் துறைமுகங்களுக்கு துணை நிற்கமாட்மோம் என சொல்லுங்கள். பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் ஒத்துழைப்பு தரமாட்டோம். எனச் சொல்லுங்கள். மோடி உங்களுடைய காலடியில் மண்டியிடுகிறாரா? இல்லையா? என்பதை நான் பார்க்கிறேன் என்பதுதான்.

    தமிழனின் மான உணர்ச்சி, இன உணர்ச்சி, சுயமரியாதையில், தன்மானத்தில் கை வைத்துக்கொண்டே இருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு என்பதால் எவ்வளவோ பணிந்து போகிறீர்கள். எவ்வளவோ தீர்மானம் நிறைவேற்றி அனுப்புகிறோம். ஒன்றிற்கும் மரியாதை கிடையாது. கிழித்து குப்பையில் வீசுகிறார்கள்.

    பாரளுமன்றத்தில் தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி, ஆ.ராசா, டி.ஆர். பாலு உள்ளிட்ட எம்.பி.க்கள்., மோடி அரசு, சங்கபரிவார் கும்பல்கள் நாட்டிற்கு செய்யும் அட்டூழியங்களை பாராளுமன்றத்தில் கிழித்து தொங்கவிடுகிறார்கள்.

    தமிழக வரலாற்றிலேயே கலைஞருக்குப் பிறகு தளபதி தலைமையில் உள்ள 40 எம்.பி.க்கள் நாட்டையே திரும்பி பார்க்க வைக்கக் கூடியவர்கள். நம்ம ஆட்கள் கேட்கும் கேள்விகள் ஒன்றிற்கு கூட சங்கி கும்பலால் பதில் சொல்ல முடியவில்லை.

    நிர்மலா சீதாராமன் கதறுகிறார். அவருக்கு கோபம்தான் வருகிறது. தயிர் சாதம் சாப்பிடுகிற உனக்கே கோபம் வருகிறது என்றால்?, நல்லி எழும்பு சாம்பிடுகிற எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்?.

    என் மண்ணுக்கும் என் மக்களுக்கும் செய்கின்ற துரோகம்.. ஒக்கி புயல் வந்தால் பணம் இல்லை... வர்தா புயல் வந்தால் பணம் இல்லை... தானே புயல் வந்தால் பணம் இல்லை. இயற்கை பேரிடர் பாதிப்பு ஏற்பட்டால் பணம் இல்லை... குரங்கணி தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற விமானப்படை ஹெலிகாப்டர் கேட்டால், 6 மணிக்குப் பிறகு ஹெலிகாப்டருக்கு கண் தெரியாது என்றகிறார்கள். அப்படி என்றால் ராணுவத்தில் என்னத்திற்கு ஹெலிகாப்டர்.

    நான் அதிகமாக பேசினா.. தளபதி சட்டமன்றத்தில் அழைத்து ஏன் இப்படி பேசினிங்க என கேட்பார். அதனால் ஆத்திரம் பொங்குது... கோபம் வருது... நாளைக்கு என்எல்சி-யில் வைக்கிறேன் கச்சேரி.

    இவ்வாறு வேல்முருகன் தெரிவித்தார்.

    • எங்கள் மண்ணுக்கும் மக்களுக்கும் செய்யும் துரோகத்தை பார்க்கும்போது எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்.
    • 'ஆணுக்கு பெண்ணிங்கே இளைப்பில்லை' என பெண் உரிமைகளை பறைசாற்றிய பாரதி மண்.

    தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் மும்மொழி கொள்கையை எதிர்த்து நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,

    எதையும் பற்றி கவலைக்கொள்ளாமல் நம்மை தூசு என்று நினைக்கும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு சரியான சவுக்கடி கொடுக்க வேண்டும். இதை சரியான களமாக மாற்ற வேண்டும். வரி கொடா இயக்கம் தொடங்குவோம். சுங்கக் கட்டணத்தைத் தவிர்ப்போம். ஜி.எஸ்.டி கொடுக்க மாட்டோம் என முடிவு எடுப்போம். மத்திய அரசு திட்டங்கள் அனைத்தையும் முடக்குவோம் என முடிவு எடுங்கள். மோடி நம் முன் மண்டியிடுவார்.

    நம்முடைய ஆட்கள் கேட்கிற கேள்விகள் ஒன்றுக்கு கூட பா.ஜ.க.வினரால் பதில் சொல்ல முடியவில்லை.. நிர்மலா சீதாராமன் கதறுகிறார். தயிர் சாதம் சாப்பிடும் நிர்மலா சீதாராமனுக்கே இவ்வளவு கோபம் வருகிறது என்றால், நல்லி எலும்பு சாப்பிடும் எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும். எங்கள் மண்ணுக்கும் மக்களுக்கும் செய்யும் துரோகத்தை பார்க்கும்போது எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்." என ஆவேசமாக பேசியிருந்தார்.

    இந்நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பற்றி பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    'ஆணுக்கு பெண்ணிங்கே இளைப்பில்லை' என பெண் உரிமைகளை பறைசாற்றிய பாரதி மண்ணில், பெண் அமைச்சர் அடக்கமாக இருக்க வேண்டும் என மூத்த பெண் தலைவர் மீது தொடர்ந்து சொல்லெறியும் உங்களின் ஆணாதிக்க மனப்போக்கு ஆபத்தானது என்று தெரிவித்துள்ளார்.

    • சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிறுவனத்தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. பங்கேற்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.
    • முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.ரவிராஜ், மாநில துணை பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால், வர்த்தக பிரிவு இரா.சிவக்குமார் உள்பட முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்று பேசுகிறார்கள்.

    சென்னை:

    சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வருகிற 16-ந்தேதி (செவ்வாய்) மாவட்டம் தோறும் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிறுவனத்தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. பங்கேற்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.ரவிராஜ், மாநில துணை பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால், வர்த்தக பிரிவு இரா.சிவக்குமார் உள்பட முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்று பேசுகிறார்கள்.

    இந்த ஆர்ப்பாட்டம் குறித்து மாநில துணை பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ.வேணு கோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வகுப்புவாரி பிரதிநிதித்துவம், விகிதாச்சார உரிமை, இடஒதுக்கீடு என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் சமூக நீதி தான் ஜனநாயகத்தின் ஆணி வேர். இந்த சமூகநீதியை நிலை நிறுத்த சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவை என்பதை தமிழக வாழ்வுரிமை கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இதை உடனே செயல்படுத்தக்கோரி வருகிற 16-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறுகிறது.

    சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார். நான் உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். எனவே இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் திரளாக பங்கேற்க அழைப்பு விடுக்கிறோம்.

    இவ்வாறு சத்ரியன் து.வெ.வேணுகோபால் அறிக்கையில் கூறி உள்ளார்.

    பசுமை வழிச்சாலைக்கு விவசாயிகள் ஆதரவு என முதல்வர் எடப்பாடி கூறியிருப்பது, முழு சோற்றில் யானையை மறைப்பது போல் இருப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
    நாகர்கோவில்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்தது. தமிழக வாழ்வுரிமை கட்சியினரும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்தினர். இதில் உளுந்தூர் பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்டது தொடர்பாக வேல்முருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதுபோல நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதாகவும் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் போலீசார் அவரை கைது செய்து சென்னை ஜெயிலில் அடைத்தனர்.

    ஜெயிலில் இருந்த வேல்முருகனுக்கு கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன்படி அவர் நாகர்கோவிலில் தங்கி கோட்டார் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டது.

    இதையடுத்து வேல்முருகன் நாகர்கோவில் வந்தார். கோட்டார் போலீஸ் நிலையத்தில் இன்று காலை ஆஜராகி கையெழுத்திட்டார். அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எங்கள் கட்சியினர் 11 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகள் மூலம் அவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அப்போது எனக்கு அந்த சம்பவத்தில் தொடர்பு இல்லை என்று கூறப்பட்டது.

    அதன்பிறகு 4 நாட்களுக்கு பிறகு என்னை கைது செய்தனர். தூத்துக்குடி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வந்த என்னை விமான நிலையத்தில் தடுத்து கைது செய்தனர். மத்திய அரசின் அழுத்தம் காரணமாக என்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நான் துவண்டுவிட மாட்டேன். பொதுமக்களுக்காக என்னுடைய போராட்டம் தொடரும்.

    நான் ஜெயிலில் இருந்த போது திண்டுக்கல்லில் நடந்த டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தின் போது வாகனம் ஒன்று எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஜெயிலில் இருந்த என் மீது வழக்கு போடப்பட்டது. இதுதொடர்பாக கோர்ட்டு என்னை கைது செய்ய தடை விதித்துள்ளது.

    தமிழகத்தில் போராட்டம் நடத்தும் பாரதிராஜா, சீமான், டைரக்டர் கவுதமன் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது ஏற்புடையது அல்ல.

    சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு பொதுமக்கள், விவசாயிகள் ஆதரவு தெரிவிப்பதாக முதல்-அமைச்சர் கூறி உள்ளார். அங்கு 99.99 சதவீதம் மக்கள் இத்திட்டத்தை எதிர்க்கிறார்கள். சோற்றில் முழு பூசணிக்காயை மறைப்பதாகத்தான் கூறுவார்கள். ஆனால் முதல்-அமைச்சர் முழு யானையையே சோற்றில் மறைக்கிறார்.

    இப்போது முதல்-அமைச்சராக இருப்பதால் போலீஸ் பாதுகாப்புடன் சேலம் வருகிறார். பதவி இழந்தால் இவர் மக்களை சந்திக்க வர வேண்டும். தேர்தல் வரும் போதும் மக்களிடம்தான் வர வேண்டும். அப்போது மக்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்பது தெரிய வரும்.

    கவர்னர் அவரது அதிகாரத்தை மீறி ஆய்வு நடத்தி வருகிறார். இதை தடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் தைரியமானவர்கள். எத்தகைய சவால்களையும் சந்திக்கும் மன வலிமை கொண்டவர்கள். கவர்னரின் மிரட்டலையும் அவர்கள் எதிர்கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள த.வா.க தலைவர் வேல்முருகன் மீது நெய்வேலி காவல்நிலையத்தில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #VelMurugan
    சென்னை:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த மாதம் 1-ந்தேதி உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடி தாக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கடந்த 26-ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இரண்டு நாட்கள் சிறையில் உண்ணாவிரதம் இருந்ததன் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். சிறுநீரக கோளாறும் இருப்பதால் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியதால் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் வேல்முருகன் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 124ஏ,153, 153ஏ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதனை அடுத்து, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அவரை போலீசார் கைது செய்தனர்.
    சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட த.வா.க தலைவர் வேல்முருகன், சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில் இன்று உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    சென்னை:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த மாதம் 1-ந்தேதி உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடி தாக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று முன்தினம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் வேல்முருகன் நேற்று காலை புழல் சிறையில் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு உண்மை நிலையை கண்டு அறிய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக இந்த உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

    தொடர்ந்து சாப்பிட மறுத்த வேல்முருகன் இன்று 2-வது நாளாக புழல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்தார். தனது கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் தொடரும் என அவர் அறிவித்திருந்த நிலையில், திடீரென அவர் உடல்நலக்குறைவுக்கு உள்ளானார்.

    இதனை அடுத்து, அவரை போலீசார் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 
    ×