search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ட்ரோன்கள்"

    • ஹரியானாவில் போராடும் விவசாயிகளை, ட்ரோன்களை பயன்படுத்தி பாஜக அரசு தாக்கியுள்ளது
    • நாளை ட்ரோன்கள் நம்மீதும் குண்டுகளை வீச தயாராக உள்ளன.

    ஹரியானாவில் போராடும் விவசாயிகளை, ட்ரோன்களை பயன்படுத்தி பாஜக அரசு தாக்கியுள்ளது. நாளை ட்ரோன்கள் நம்மீதும் குண்டுகளை வீச தயாராக உள்ளன. நம்மை நாம் காக்க இன்று விவசாயிகளுக்காக குரல் எழுப்புவோம் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தன்னுடைய X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "ஹரியானாவில் போராடும் விவசாயிகளை, ட்ரோன்களை பயன்படுத்தி பாஜக அரசு தாக்கியுள்ளது நாடு ஒரு இருண்ட பாதையை நோக்கி நகர்வதை குறிக்கிறது. நவீன விவசாயம் உள்ளிட்ட பணிகளுக்காக பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் இப்போது விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீச பயன்படுகின்றன. பாஜக அரசு விவசாயிகளை நாட்டின் எதிரிகள் போல கையாளுகிறது. விவசாயிகளிடம் நேரடியாக பேச தைரியம் இல்லாத தலைவர்கள் ட்ரோன்களை ஏவுகின்றனர்.

    இது போராடும் விவசாயிகளின் பிரச்சினை மட்டுமல்லாமல் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலாகும். ட்ரோன்களில் கேமிராக்களை பொருத்தி போராடுபவர்களை அடையாளம் கண்டு பழிவாங்குவது ஜனநாயக நாட்டிற்கு ஏற்புடையது அல்ல.

    அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் உயிர்நாடி. ட்ரோன்கள் அதை அடக்கக்கூடாது இந்த அடிப்படை உரிமையை நாம் பாதுகாக்க வேண்டும்.

    இது விவசாயிகளைப் பற்றியது மட்டுமல்ல. இது நம் அனைவரையும் பற்றியது. நாளை ட்ரோன்கள் நம்மீதும் குண்டுகளை வீச தயாராக உள்ளன. நம்மை நாம் காக்க இன்று விவசாயிகளுக்காக குரல் எழுப்புவோம். இந்தியாவின் ஜனநாயகத்தை உயிர்த்தெழ செய்வோம்" என்று தெரிவித்துள்ளார்

    • ட்ரோன்கள் மூலம் பூச்சி மருந்து தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் ட்ரோன்கள் மூலம் (ஆளில்லா விமானங்கள்) பூச்சி மருந்து தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு பருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் சுப்பிரமணியன் பருத்தி விவசாயத்தில் ட்ரோன்கள் மூலம் பூச்சி மருந்து தெளிப்பது, நானோ யூரியா தெளிப்பது, ஆள் பற்றாக்குறையை சமாளிப்பது போன்ற பயன்பாடுகள் குறித்து விளக்கி கூறினார்.

    முகாமில் வேப்பந்தட்டை வேளாண்மை உதவி இயக்குனர் பச்சியம்மாள், தனியார் உர நிறுவன அலுவலர்கள் ராஜசேகர், பரஞ்சோதி உள்பட பலர் கலந்து கொண்டு வேப்பந்தட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பருத்தி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். முடிவில் பேராசிரியர் சக்திவேல் நன்றி கூறினார்.

    ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பாக விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ய முதலுதவி பெட்டியை விபத்து நடைபெற்ற கொண்டு செல்லும் வகையில் ட்ரோனை மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். #designdrone #accidentspots
    சென்னை:

    சென்னையை சேர்ந்த பொறியியல் மாணவர்கள் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவும் வகையில் புதிய ரக ட்ரோன்களை வடிவமைத்து சாதனை படைத்துள்ளனர்.

    பொதுவாக ஆம்புலன்ஸ்கள் விபத்து நடந்த இடத்திற்கு செல்வதற்கு 13-15 நிமிடங்கள் ஆகும். சரியான முதலுதவி வழங்கப்பட்டால் காயமடைந்தவர்களின் உயிரை காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், அவசர நேரத்தில் முதலுதவி வழங்க தெரியாமல் யாரும் முயற்சி செய்ய மாட்டார்கள்.

    இந்நிலையில், மாணவர்கள் வடிவமைத்த ட்ரோன்கள் முதலுதவி உபகரணங்கள் அடங்கிய பெட்டிகளை விபத்து நடந்த இடத்திற்கு கொண்டு செல்லும். மேலும், அதிலுள்ள திரை மூலம் முதலுதவு செய்யும் முறைகளை வீடியோ பார்த்து கற்றுக்கொள்ளலாம். பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வீடியோவை தேர்ந்தெடுத்து கற்றுக்கொள்ளலாம்.

    இதன் மூலம் விபத்தில் சிக்கியவர்கள் பலரின் உயிரை காப்பாற்ற முடியும். இது 8 கிலோ எடை கொண்ட மருந்துகளை தூக்கி செல்லும். மற்றும் 70 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை ரிமோட் மூலம் இயக்கலாம் என மாணவர்கள் தெரிவித்தனர். #designdrone #accidentspots

    ×