search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிசோரம்"

    • மிசோரமில் உள்ள அய்ஸ்வால் மாவட்டத்தில் பெய்த அதி கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.
    • தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவினால் மாநிலத்தின் பிற நகரங்களிலிருந்து அம்மாவட்டம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது

    வங்கக் கடலில் உருவாகி மேற்கு வங்கம் மற்றும் வங்க தேச எல்லையில் நேற்று முன் தினம் (மே 26) கரையைக் கடந்த ரீமால் புயலால் தெலங்கானா தொடங்கி வட கிழக்கு மாநிலங்கள் வரை பலத்த சேதங்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

    வடகிழக்கு மாநிலமான மிசோரமில் உள்ள அய்ஸ்வால் மாவட்டத்தில் பெய்த அதி கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியிருந்தது.

    இந்நிலையில் அங்குள்ள கல் குவாரி இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில்10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவினால் மாநிலத்தின் பிற நகரங்களிலிருந்து அம்மாவட்டம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

    புயலின் தாக்கத்தால் சாலையோர மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தது. மின் கம்பங்கள் சாய்ந்து மின்சார வயர்கள் அறுந்து மழை நீரில் விழுந்து பொதுமக்களுக்கு அபாயகரமாக மாறியுள்ளது. இந்த புயல் காரணமாக மேற்கு வங்கத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 




     


    • மிசோரமில் இனக்குழுக்களுக்கும் ராணுவத்திற்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது.
    • ராணுவ வீரர்கள் சரணடைந்து வருவதால், மிசோரமில் தஞ்சம் அடைகிறார்கள்.

    மியான்மரில் அந்நாட்டு ராணுவத்திற்கும், ஆயுதமேந்திய இனக்குழுவினருக்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது. ஒரு சில நகரங்களில் இனக்குழுக்கள் ஒன்றாக இணைந்து ராணுவத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி சண்டையிட்டு வருகின்றன.

    இதனால் ராணுவம் இனக்குழுக்களை எதிர்த்து போரிட முடியவில்லை. அவர்களிடம் சரணடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான மியான்மர் ராணுவ வீரர்கள் உயிருக்கு பயந்து இந்தியாவிற்கு ஒடி வருகின்றனர். எல்லையில் உள்ள மிசோரம் மாநிலத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    அவர்களை அடிக்கடி வெளியேற்றும் முயற்சிகளை மிசோரம் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் தற்போது அதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுமார் 600-க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்தியாவின் மிசோரம் மாநிலத்திற்குள் வந்துள்ளனர்.

    இதனால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து மிசோரம் அரசு கவலை அடைந்துள்ளது. இதனால் அவர்களை உடனடியாக மாநிலத்தில் இருந்து மியான்மருக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

    வடகிழக்கு கவுன்சில் கூட்டம் ஷில்லாங்கில் நடைபெற்றது. அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் மிசோரம் முதல்வர் லால்துஹொமா விவரமாக எடுத்துக் கூறியதாக தெரிகிறது.

    அப்போது, உடனடியாக மியான்மர் ராணுவ வீரர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமித் ஷாவிடம் லால்துஹோமா வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து லால்துஹோமா கூறுகையில் "மியான்மரில் இருந்து மக்கள் தஞ்சம் கேட்டு எங்கள் மாநிலத்திற்கு வருகிறார்கள். அவர்களுக்கு நாங்கள் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்து வருகிறோம். முன்னதாக இங்கு வந்து அடைக்கலம் கேட்டு தங்கியிருந்த ராணுவ வீரர்களை நாங்கள் விமாங்கள் மூலம் அங்கு திருப்பி அனுப்பி வைத்தோம். சுமார் 450 வீரர்களை அனுப்பி வைத்துள்ளோம்" என்றார்.

    • மிசோ தேசிய முன்னணி கட்சி 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
    • சோரம் மக்கள் இயக்க கட்சி தலைவர் லால்டுஹோமா அம்மாநில முதல்வர் ஆனார்.

    மிசோரம் சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 7-ம் தேதி ஒரேகட்டமாக நடந்தது. 40 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த திங்கட்கிழமை எண்ணப்பட்டது. இதில் சோரம் மக்கள் இயக்கம் கட்சி 27 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

    இதையடுத்து, மிசோ தேசிய முன்னணி கட்சி 10 தொகுதிகளையும், பா.ஜ.க. 2 தொகுதிகளையும், காங்கிரஸ் ஒரு தொகுதியையும் கைப்பற்றியது. ஆட்சியமைக்க பெரும்பான்மை பெற்றதை அடுத்து சோரம் மக்கள் இயக்க கட்சி தலைவர் லால்டுஹோமா அம்மாநில முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.



    இவருடன் 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். மிசோரம் மாநிலத்தின் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சோரம்தங்காவும் கலந்து கொண்டிருந்தார். 

    • 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு.
    • வாக்குப்பதிவு எண்ணிக்கை டிசம்பர் 3-ந்தேதி நடைப்பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து, கடந்த நவம்பர் 7ம் தேதி முதல் 30ம் தேதி வரை தேர்தல் நடைபெற்றது.

    அதன்படி, மிசோரம் மாநிலத்தில் கடந்த 7-ந் தேதியும் மத்திய பிரதேசத்தில் 17-ந் தேதியும், ராஜஸ்தானில் 25-ந் தேதியும், தெலுங்கானாவில் 30-ந் தேதியும் தேர்தல் நடைபெற்றது. சத்தீஸ்கரில் 2 கட்டங்களாக 7 மற்றும் 14-ந்தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

    5 மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை டிசம்பர் 3-ந்தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், மிசோரம் மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மட்டும் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    டிசம்பர் 3ம் தேதி நடைபெற இருந்த மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கை 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அறிவித்துள்ளது.

    மிசோரம் மாநிலத்தில் தனியார் பேருந்து மலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #aizawlaccident
    அய்சால்:

    மிசோரம் மாநிலம் தலைநகரான அய்சாலில் இருந்து 32 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சியாகா நகருக்கு சென்று கொண்டிருந்தது. நேற்று இரவு அய்சால் நகரிலிருந்து 135 கி.மீ. தொலைவில் உள்ள பங்ஸ்வால் கிராமத்திற்கு அருகில் செல்லும் போது சாலை ஈரமாக இருந்ததால் டிரைவர் பேருந்தின் கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் பேருந்து மலையில் இருந்து கீழே உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த 20 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2 பேரின் நிலைமை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    விபத்திற்கான சரியான காரணம் தெரியவில்லை. மோசமான வானிலையால் விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மிசோரம் மாநிலம் உள்துறை மந்திரி ஆர். லால்சிர்லியானா விபத்தில் இறந்தவர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். #aizawlaccident

    ×