என் மலர்
நீங்கள் தேடியது "மத்திய நிதி அமைச்சகம்"
- இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வரிப்பகிர்வு நிதியாக ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 122 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து உள்ளது.
- தமிழ்நாட்டுக்கு ரூ.5 ஆயிரத்து 797 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வரிப்பகிர்வு நிதியாக ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 122 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து உள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு ரூ.5 ஆயிரத்து 797 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.
- 2024-25-ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் வரை, புதிய வரி விதிப்பு முறையில் இருந்து விலகும் வாய்ப்பு வரி செலுத்துவோருக்கு உள்ளது.
- புதிய வரி விதிப்பு முறையில் வரி விகிதங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைவாக உள்ளன.
புதுடெல்லி:
மத்திய நிதி அமைச்சகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
புதிய வரி விதிப்பு முறை தொடர்பாக சில சமூக ஊடகத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவது கவனத்துக்கு வந்துள்ளது. உண்மையில் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய வரி விதிப்பு முறையில் புதிதாக எந்த மாற்றமும் இல்லை.
தங்களுக்கு பழைய வரி விதிப்பு முறை பயனளிக்குமா அல்லது புதிய வரி விதிப்பு முறை பயனளிக்குமா? என்பதை சிந்தித்து இரண்டில் ஏதேனும் ஒரு முறையை வரி செலுத்துவோர் தேர்வு செய்யலாம்.
2024-25-ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் வரை, புதிய வரி விதிப்பு முறையில் இருந்து விலகும் வாய்ப்பு வரி செலுத்துவோருக்கு உள்ளது. வணிக வருமானம் எதுவும் இல்லாத தகுதியான நபர்கள், ஒவ்வொரு நிதியாண்டிலும் தங்களுக்கு உகந்த வரி விதிப்பு முறையை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். இதன் மூலம் ஒரு நிதியாண்டில் புதிய வரி விதிப்பு முறையையும், மற்றொரு நிதியாண்டில் பழைய வரி விதிப்பு முறையையும் வரி செலுத்துவோர் தேர்வு செய்ய முடியும்.
புதிய வரி விதிப்பு முறையில் வரி விகிதங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைவாக உள்ளன. எனினும் ஊதியத்தில் இருந்து நிலையாக பிடித்தம் செய்யப்படும் ரூ.50,000 குடும்ப ஓய்வூதியத்தில் இருந்து நிலையாக பிடித்தம் செய்யப்படும். ரூ.15,000-ஐ தவிர பழைய வரி விதிப்பு முறையில் உள்ள பிற வரி விலக்குகள் மற்றும் பிடித்தங்களின் பலன்கள் புதிய வரி விதிப்பு முறையில் இல்லை.
புதிய வரி விதிப்பு முறையின்படி, ஆண்டுதோறும் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் வருமானம் ஈட்டுவோர் தங்கள் வருமானத்தில் 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆஸ்திரேலியா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் தடை செய்துள்ளன.
- சாம் ஆல்ட்மேன் இந்தியா வருகை தந்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளார்.
உலக அளவில் அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
அமெரிக்க நிறுவனமான ஓபன் ஏஐ உருவாக்கிய சாட்ஜிபிடி, கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ, மெட்டா ஏஐ, கார்க் ஏஐ ஆகியவற்றுடன் தற்போது சீனாவின் டீப்சீக் ஏஐ புதிதாக அறிமுகமாகியுள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது சாட்ஜிபிடி, டீப் சீக் உள்ளிட்ட ஏஐ தொழில்நுட்பங்களை அலுவலக பயன்பாட்டுக்கு உபயோகிக்க வேண்டாம் என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் தங்களது ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளது.
இவற்றால் அரசின் பாதுகாக்கப்பட்ட தரவுகள், ஆவணங்கள் ஆகியவற்றின் ரகசியத்தன்மை சீர்குலையும் அபாயம் உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் இதுபோன்ற பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி டீப்சீக் பயன்பாட்டை தடை செய்துள்ளன.
இதற்கிடையே சாட்ஜிபிடி உடைய தாய் நிறுவனமான ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் இந்தியா வருகை தந்துள்ள நிலையில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
- இந்திய அரசாங்கத்துடன் இணைந்து $750 மில்லியன் (ரூ. 6,498 கோடி) பட்ஜெட்டில் 7 திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது
- USAID-யிடமிருந்து இதுவரை இந்தியா ரூ. 825 கோடி (97 மில்லியன் டாலர்) நிதி பெற்றுள்ளது.
இந்தியாவில் தேர்தல் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க USAID அமைப்பு மூலம் 2012 முதல் வழங்கி வருவதாகக் கூறப்படும் 21 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.182 கோடி) நிதியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது.
இந்தியாவிடம் நிறைய பணம் உள்ளது என்றும் யாரையோ தேர்தலில் வெற்றி பெற வைக்க முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் முயற்சி செய்துள்ளதாகவும் அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஒன்றையொன்று விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் USAID அமைப்பிடம் பெற்ற நிதி குறித்து மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, 2023-24 நிதியாண்டில், அமெரிக்க நிறுவனமான USAID, இந்திய அரசாங்கத்துடன் இணைந்து 750 மில்லியன் டாலர் (ரூ. 6,498 கோடி) பட்ஜெட்டில் 7 திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்கள் எதுவும் தேர்தல்கள் அல்லது வாக்கு சதவீத அதிகரிப்புடன் தொடர்புடையவை அல்ல என்றும் நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

ரூ. 6,498 கோடி (750 மில்லியன் டாலர்) மதிப்பீட்டில் விவசாயம்-உணவுப் பாதுகாப்புத் திட்டங்கள், குடிநீர்-சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பேரிடர் மேலாண்மை-சுகாதாரம், நிலையான காடுகள்-காலநிலை திட்டங்கள் மற்றும் புதுமை(innovation) திட்டங்களுக்காக USAID-யிடமிருந்து இதுவரை இந்தியா ரூ. 825 கோடி (97 மில்லியன் டாலர்) நிதி பெற்றுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் தேர்தல் மற்றும் வாக்கு சதவீதத்துக்கு இந்தியா நிதி பெற்றதாக குறிப்பிட்ட டிரம்ப் உடைய கூற்றை மத்திய அரசு நிராகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.
- கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் ரூ.600 கோடி பரிவர்த்தனை.
- யுபிஐ சேவை நிறுவனங்கள் மற்ற வழிகள் மூலம் செலவுகளை ஈட்டிக் கொள்ள அறிவுறுத்தல்.
வங்கிகளின் டெபிட் மற்றும் கிரிடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ பரிவர்த்தனை சேவை, தற்போது மிகவும் பிரபலமடைந்துள்ளது. குறிப்பாக பெட்டி கடைகள் உள்பட சிறு வியாபாரிகளிடமும் கூட பொதுமக்கள் ஆன்ட்ராய்டு மொபைல் மூலம் யுபிஐ முறையில் பண பரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 600 கோடி ரூபாய் பரிவர்த்தனை நடைபெற்றது.
இந்நிலையில் ஆன் லைன் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் யுபிஐ சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தகவல் பரவியது. யுபிஐ மூலமான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி, பங்குதாரர்களிடம் கருத்து கோர உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், யுபிஐ பண பரிவர்த்தனை சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. யுபிஐ சேவையை வழங்கும் நிறுவனங்கள் மற்ற வழிகள் மூலம் செலவுகளை ஈட்டிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் யுபிஐ பண பரிவர்த்தனை சேவை தொடர்பான குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் அமல்படுத்தியது. அன்று முதல் மார்ச் 2018-ம் ஆண்டு வரை அரசுக்கு ஜி.எஸ்.டி. மூலமாக ரூ.7.41 லட்சம் கோடி வருவாய் கிடைத்து உள்ளது.
இந்நிலையில் மே மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.94 ஆயிரத்து 16 கோடி கிடைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதில் மத்திய அரசின் வரி வருவாய் ரூ.15 ஆயிரத்து 866 கோடியும், மாநில அரசின் வரி வருவாய் ரூ.21 ஆயிரத்து 691 கோடியும், மாநிலங்களுக்கு இடையேயான வரி வருவாய் ரூ.49 ஆயிரத்து 120 கோடியும், செஸ் வருவாய் ரூ.7 ஆயிரத்து 339 கோடியும் அடங்கும்.
இது கடந்த மாதத்தை விட அதிகம். ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.89 ஆயிரத்து 885 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #GST #Tamilnews