search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிபிஎஸ்இ"

    • சிபிஎஸ்இ பிரிவு ஏ தேர்வில் இந்திக்கு 300க்கு 30 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • இது இந்தியாவின் அலுவல் மொழி விதிகளுக்கு முரணானது.

    சிபிஎஸ்இ பிரிவு ஏ தேர்வில் இந்திக்கு 300க்கு 30 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பி பிரிவு தேர்வில் ஹிந்திக்கு 300க்கு 15 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் அலுவல் மொழி விதிகளுக்கு எதிரானது. இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிரான அநீதி மீண்டும் தொடங்கியுள்ளது என்று சு. வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதானுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், "சிபிஎஸ்இ 08.03.2024 அன்று வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி பிரிவு ஏ,பி,சி பணியிடங்கள் 118 க்கான நியமனத் தேர்வுகள் நடைபெற உள்ளன.

    அதில் இந்தி மொழி தேர்வும் இடம் பெற்றுள்ளது. அதனால் இந்தி பேசாத மாநிலங்களை சார்ந்த தேர்வர்கள் குறைந்தபட்சம் 10% முதற்கட்ட தேர்விலேயே இழந்து இரண்டாம் கட்ட தேர்வுக்கு அடியெடுத்து வைக்கும் வாய்ப்பை பறி கொடுப்பார்கள்.

    பிரிவு ஏ உதவி செயலாளர் (நிர்வாகம்) பதவிகளுக்கான முதற்கட்ட தேர்வில் மொத்த மதிப்பெண்கள் 300 இல் இந்தி மொழி தேர்வுக்கு 30 மதிப்பெண்கள்.

    பிரிவு பி இளநிலைப் பொறியாளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 300 இல் இந்தி மொழி தேர்வுக்கு 15 மதிப்பெண்கள். பிரிவு பி இளநிலை மொழிபெயர்ப்பாளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 300 இல் இந்தி மற்றும் ஆங்கில மொழி தேர்வுக்கு 200 மதிப்பெண்கள்.

    பிரிவு சி கணக்காளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 300 இல் இந்தி & ஆங்கில மொழித் தேர்வுக்கு 40 மதிப்பெண்கள். பிரிவு சி இளநிலை கணக்காளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 240 இல் இந்தி மற்றும் ஆங்கில மொழி மற்றும் இலக்கியம் தொடர்பான தேர்வுக்கு 40 மதிப்பெண்கள்.

    இது இந்தியாவின் மொழி பன்மைத்துவத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட அலுவல் மொழி விதிகளுக்கு முரணானது.

    இந்தி பேசாத மாநில தேர்வர்களுக்கு அநீதி இழைக்கிற மற்றும் சம தள ஆடுகளத்தை மறுக்கிற தேர்வு முறைமையை மாற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி மார்ச் 13-ம் தேதி வரை நடந்தது.
    • நாடு முழுவதும் தேர்வெழுதிய மாணவர்களில் 93.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    புதுடெல்லி:

    மத்திய கல்வி பாட வாரியம் (சி.பி.எஸ்.இ.) பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி தொடங்கி மார்ச் 13-ம் தேதி வரை நடைபெற்றது.

    இந்த தேர்வை நாடு முழுவதும் 25,724 பள்ளி மாணவ-மாணவிகள் 7,603 மையங்களில் எழுதினார்கள். 22 லட்சத்து 38 ஆயிரத்து 827 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.

    சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. இதில் 20 லட்சத்து 95 ஆயிரத்து 467 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 93.60 சதவீதமாகும்.

    கடந்த ஆண்டை விட 0.48 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

    அகில இந்திய அளவில் சென்னை மண்டலம் தேர்ச்சி விகிதத்தில் 3-வது இடத்தில் உள்ளது. திருவனந்தபுரம் 99.75 சதவீதம் பெற்று முதலிடமும், விஜயவாடா 99.60 சதவீதத்துடன் 2-வது இடமும், சென்னை 99.30 சதவீதத்துடன் 3-வது இடமும் பெற்றுள்ளது.

    • நாடுமுழுவதும் தேர்வெழுதிய மாணவர்களில் 87.99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • cbse.gov.in, cbscresults.nic.in ஆகிய இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிபிஎஸ்இ நடத்திய 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்த ஒரு அறிவிப்பு இன்றி இன்று தேர்வு முடிவுகள் வெளியானது.

    இதை cbse.gov.in, cbscresults.nic.in ஆகிய இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிபிஎஸ்இ பொது தேர்வு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெற்றது. இதில் 16,21,224 மாணவர்கள் தேர்வெழுதினர். இதில் 14,26,420 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

    நாடுமுழுவதும் தேர்வெழுதிய மாணவர்களில் 87.99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக பட்சமாக திருவனந்தபுரத்தில் 99.91 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலத்தில் 98.47 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் பெங்களூர் மண்டலத்தில் 96.95 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி ஆகி உள்ளனர்.

    • 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு அரசு விளக்கம் தர வேண்டும்.
    • மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியிடாமல் தேர்ச்சி பெற்றவர் பட்டியலை மட்டும் வெளியிட்டு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை அரசு 3 ஆண்டாக ஜி.எஸ்.டி. உட்பட வரிகள் மூலம் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது மிகவும் வேதனையாக உள்ளது. வீதிகள் தோறும் ரெஸ்டோ பார்களை திறப்பது சமுதாய சீரழிவை உண்டாக்குகிறது. போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

    காவல்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். போதைப் பொருட்களை தடுக்க சிறப்பு காவல்பிரிவு அமைக்க வேண்டும்.

    12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு அரசு விளக்கம் தர வேண்டும்.

    சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தால் அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் தடுமாற்றம் அடைகின்றனர். இதனால் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைகிறது. இதற்கு கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுவையில் பணிபுரியும் யூ.டி.சி.க்களுக்கு பதவி உயர்வு வழங்க உதவியாளர் பணிக்கு துறை சார்ந்த தேர்வு நடத்தப்பட்டது. இதன் மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியிடாமல் தேர்ச்சி பெற்றவர் பட்டியலை மட்டும் வெளியிட்டு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

    10 ஆண்டுக்கு மேல் அனுபவம் உள்ளவர்கள் தேர்ச்சி பெறவில்லை. எனவே மதிப்பெண் பட்டியல், விடைத்தாளர் வெளியிட்டு தரவரிசை பட்டியல் வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் சி.பி.ஐ. வசம் புகார் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 2 வாரத்துக்கு முன்பே பாடபுத்தகம் வாங்கும் நடவடிக்கையை கல்வித்துறை மேற்கொண்டது.
    • இன்று திறக்கப்படும் அரசு பள்ளிகள் வருகிற 30-ந் தேதி வரை இயங்கும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரில் நடப்பு கல்வியாண்டு முதல் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமலாகிறது.

    கடந்த 23-ந் தேதியுடன் முழு ஆண்டு தேர்வு முடிந்து, சி.பி.எஸ்.இ. வழிகாட்டுதலின்படி இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. 2 வாரத்துக்கு முன்பே பாடபுத்தகம் வாங்கும் நடவடிக்கையை கல்வித்துறை மேற்கொண்டது.

    இதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பெங்களூருவில் இருந்து என்.சி.ஆர்.டி. பாடபுத்தகம் வாங்கப்பட்டது. இந்த பாடபுத்தகங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் வாகனம் மூலம் தங்கள் பள்ளிகளுக்கு எடுத்துச் சென்று வருகின்றனர். மிக குறைவாகவும், ஒரு சில பாடங்களுக்கு பாடபுத்தகம் வராமலும் உள்ளது. 3,4,6-ம் வகுப்புகளுக்கு ஒரு பாடங்களுக்கு கூட புத்தகங்கள் வரவில்லை.

    இவற்றையும் உடனடியாக வாங்கி பள்ளி மாணவர்களுக்கு வழங்க கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது. இன்று திறக்கப்படும் அரசு பள்ளிகள் வருகிற 30-ந் தேதி வரை இயங்கும். மே 1-ந் தேதி முதல் ஜூன் 2-ந் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் 3-ந் தேதிமுதல் மீண்டும் பள்ளிகள் திறந்து செயல்படும்.

    • தகவலை சி.பி.எஸ்.இ. பள்ளிகளிடம் மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.
    • புதிய பாடத் திட்டம் மற்றும் பாடநூல்களைப் பின்பற்றுமாறு சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    சி.பி.எஸ்.இ 3 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் மற்றும் பாட நூல்களைத் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அவை விரைவில் வெளிடப்படும் என்றும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்திடம் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்டி) தெரிவித்து உள்ளது. இந்தத் தகவலை சி.பி.எஸ்.இ. பள்ளிகளிடம் மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சி.பி.எஸ்.இ.இயக்குனர் ஜோசப் இமானுவேல் தெரிவித்ததாவது:-

    கடந்த ஆண்டு வரை என்.சி.இ.ஆர்.டி. வெளியிட்ட பாடநூல்களுக்குப் பதிலாக 3 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு என்.சி.இ.ஆர்.டி. வெளியிட உள்ள புதிய பாடத் திட்டம் மற்றும் பாடநூல்களைப் பின்பற்றுமாறு சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சி.பி.எஸ்.இ.பள்ளிகளில் வேறு எந்த வகுப்புக்கும் ஏப்ரல் 1 முதல் தொடங்கும் புதிய கல்வியாண்டில் பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களில் மாற்றம் இருக்காது என்று தெரிவித்தார்.

    • அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்துமா? என்பதை சோதனை முயற்சி தீர்மானிக்கும்.
    • 9 முதல் 10-ம் வகுப்புக்கு கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு பரிசோதனை முறையில் அனுமதி.

    9 முதல் 12-ம் வகுப்பு தேர்வின்போது மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதிக்கும் வகையில் ஓபிசி (Open Book Examinations) திட்டத்தை சிபிஎஸ்இ அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியானது. தற்போது இந்த செய்தியை ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு இயக்குனர் ராம சர்மா உறுதிப்படுத்தியுள்ளார்.

    "இந்த தகவல் சரியானதுதான். இந்த முடிவு 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஆட்சிக்குழு கூட்டத்தின்போது எடுக்கப்பட்டது. சோதனை பயிற்சி விரைவில் தொடங்கப்படும். முழு விவரம் சிபிஎஸ்இ இணைய தளத்தின் curriculum committee minutes என்பதில் தெரிந்து கொள்ளலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

    வருகிற நவம்பர் மாதம் சோதனை அடிப்படையில் தேர்வு நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 9 முதல் 10-ம் வகுப்புக்கு கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கும், 11 முதல் 12-ம் வகுப்புகளுகளுக்கு உயிரியல், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட பள்ளிகளில் பரிசோதனை முயற்சி அடிப்படையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இது அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்துமா? என்பதை சோதனை முயற்சி தீர்மானிக்கும்.

    பாடப்புத்தகம், படிப்பு தொடர்பான பொருட்கள் அல்லது குறிப்புகள் அடங்கியவை தேர்வு மையத்திற்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்படும். புத்தகம் இல்லாமல் தேர்வு எழுதுவதை விட, புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதுவது எளிதாக இருக்காது எனக் கூறப்படுகிறது.

    இது மாணவர்களின் நினைவாற்றலை பகுப்பாய்வு செய்யாது. அதேவேளையில் ஒரு விஷயத்தைப் பற்றிய அவர்களின் புரிதல் மற்றும் கருத்துகளை பகுப்பாய்வு செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்வை, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் 39 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதுகின்றனர்.
    • சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி வருகிற ஏப்ரல் 2-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    நாடு முழுவதும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. தேர்வை, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் 39 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதுகின்றனர்.

    சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி வருகிற ஏப்ரல் 2-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    தேர்வின்போது மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சி.பி.எஸ்.இ. தேர்வு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு நாளை முதல் ஏப்ரல் 2ம் தேதி நடைபெறுகிறது.
    • 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு நாளை முதல் மார்ச் 13ம் தேதி நடைபெறுகிறது.

    சிபிஎஸ்இ 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை முதல் தொடங்குகிறது.

    காலை 10.30 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு மதியம் 1.30 மணிக்கு நிறைவடைய உள்ளது

    12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு நாளை முதல் ஏப்ரல் 2ம் தேதியும், 10 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு நாளை முதல் மார்ச் 13ம் தேதியும் நிறைவடைய உள்ளது.

    பொதுத்தேர்வு சுமூகமாகவும், நியாயமாகவும் நடைபெற வாரியம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • எக்ஸ் தளத்தில் ஒருவர் புத்தகத்தில் உள்ள பாடத்தினை புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
    • இந்த யுகத்தில் இதை ஏற்றுக்கொண்டு பாடத்திட்டத்தில் இது போன்ற தலைப்புகளை சேர்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

    புதுடெல்லி:

    மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு பாட புத்தகத்தில் டேட்டிங் மற்றும் ரிலேசன்ஷிப் குறித்த பாடங்கள் இடம்பெற்றிருப்பது இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதில் டேட்டிங் மற்றும் உறவுகள், பேய், கேட்பிஷிங், சைபர்புல்லிங் போன்ற அத்தியாயங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த புத்தகம் சிறந்த நட்பு போன்ற தலைப்புகளை உள்ளடக்கி உள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் ஒருவர் புத்தகத்தில் உள்ள பாடத்தினை புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

    அதில், இளம் வயது என்பது உணர்ச்சிகளால் நம் மனதையும், இதயத்தையும் அடிக்கடி குழப்பும் பருவம். இப்படியான பருவத்தில் மாணவர்களுக்கு வெவ்வேறு டேட்டிங் விதிமுறைகள் குறித்த வழிகாட்டுதலை வழங்கி இருப்பது வரவேற்கத்தக்கது என கூறி உள்ளார்.

    மற்றொரு பயனர், காலம் மாறிக்கொண்டிருக்கிறது, இப்போதெல்லாம் மக்கள் மிக இளம் வயதில் இருந்தே டேட்டிங் செய்ய தொடங்குகிறார்கள். இந்த யுகத்தில் இதை ஏற்றுக்கொண்டு பாடத்திட்டத்தில் இது போன்ற தலைப்புகளை சேர்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

    இந்த சிக்கலான இயக்கவியலை புரிந்துகொள்ள குழந்தைகளுக்கு உதவுவது நம் நாட்களில் டேட்டிங் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை விட மிகவும் சிறந்தது என பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், இது நேர்மையாக பெரியது. இந்திய கல்வி முறையின் உண்மையான வளர்ச்சியை அனைவரும் பார்க்க விரும்புகிறார்கள் என பதிவிட்டுள்ளார்.

    இதுபோன்று நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், புத்தகத்தில் இடம்பெற்ற இந்த தலைப்பு விவாத பொருளாக மாறி உள்ளது.

    • எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு பிப்ரவரி 15-ம் தேதி பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது.
    • 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பிப்ரவரி 15-ந்தேதி முதல் ஏப்ரல் 2-ம் தேதி வரை நடக்க உள்ளது..

    புதுடெல்லி:

    சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு எப்போது என்ற எதிர்பார்ப்பு அந்த தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் இருந்து வந்தது.

    அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், சி.பி.எஸ்.இ. நிர்வாகம் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில், பிளஸ்-2 மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதி ஏப்ரல் 2-ம் தேதி வரை தேர்வு நடக்க உள்ளது.

    10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி முதல் மார்ச் மாதம் 13-ம் தேதி வரையும் தேர்வு நடைபெற உள்ளது.

    • மாணவர்களுக்கு இனி பொதுத் தோ்வு முடிவில் மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்படும்.
    • பிப்ரவரி 15-ந் தேதி பொதுத் தோ்வுகள் தொடங்க உள்ள நிலையில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    புதுடெல்லி:

    மாணவா்களிடையே தேவையற்ற போட்டி மனப்பான்மையைத் தவிா்க்கும் வகையில், தோ்வில் முதலிடம் பிடித்த மாணவா் என்பது போன்ற தனிப்பட்ட மாணவா்களின் பட்டியலை வெளியிடுவதை சி.பி.எஸ்.இ. ஏற்கெனவே நிறுத்திவிட்டது. அதன் தொடா்ச்சியாக, தற்போது ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதம், தரவரிசை போன்ற விவரங்கள் வெளியீட்டையும் நிறுத்த சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து சி.பி.எஸ்.இ. தோ்வுக் கட்டுப்பாட்டாளா் சன்யம் பரத்வாஜ் கூறியதாவது:-

    10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி பொதுத் தோ்வு முடிவில் மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்படும். மாணவா் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண் விவரம், ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதம், தரவரிசை, அனைத்துப் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்கள் பட்டியல் போன்ற விவரங்கள் வெளியிடப்படாது.

    எனவே, உயா் கல்வி நிறுவனங்கள் அல்லது வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் சி.பி.எஸ்.இ. மாணவா்களின் பாட மதிப்பெண்களின் அடிப்படையில், அவா்கள் பெற்ற மொத்த மதிப்பெண்ணையும், மதிப்பெண் சதவீதத்தையும் கணக்கிட்டுக்கொள்ள வேண்டும்' என்றாா்.

    சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத் தோ்வுகள் வரும் 2024, பிப்ரவரி 15-ந் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    ×