என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொழும்பு"

    • பராமரிப்பாளர்கள் யானைகளை வழிக்கு கொண்டுவர வாலை பிடித்து இழுத்தால் அவை பயந்துள்ளது என்று கூறப்படுகிறது.
    • மக்கள் அலறியடித்து பயந்து சிதறிய இந்த சம்பவதின் வீடியோ இணையதளத்தில் பரவி வைரழகை வருகிறது

    இலங்கை தலைநகர் கொழும்பு -வுக்கு தெற்கே 280 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கதிர்காமம் பகுதியில் நேற்று நடந்த இந்து மத கோவில் நிகழ்ச்சியில் யானைகள் அழைத்துவரப்பட்டன.  இரவு கொண்டாட்டங்களின்போது திடீரென பாகனின் கட்டுப்பாட்டை இழந்த யானைகள் அச்சத்தில் பிளிறியதால் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தினர்

    இதனால் ஏற்பட்ட நெரிசலில் 12 பேர் காயமடைந்துள்ளனர். சிவப்பு, நீல ஆடைகளுடன் அலங்கரிக்கப்பட்டு நிகழ்ச்சிக்கு அழைத்து  அழைத்துவரப்பட்ட  யானைகள் மணி இசையாலும், பராமரிப்பாளர்கள் அதை வழிக்கு கொண்டுவர வாலை பிடித்து இழுத்தாலும் யானை பயந்துள்ளது என்று கூறப்படுகிறது.

    மக்கள் அலறியடித்து பயந்து சிதறிய இந்த சம்பவதின் வீடியோ இணையதளத்தில் பரவி வைரழகை வருகிறது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். யானை துன்புறுத்தப்பட்டதற்கு விலங்குகள் நல ஆர்வர்களிடமிருந்து கண்டங்கள் குவிந்து வருகிறது.

    • டிராவல் கம்பெனி மூலம் 3.56 லட்ச ரூபாய் கொடுத்து இந்த சுற்றுலாவை அவர் ஏற்பாடு செய்துள்ளார்.
    • இதில், தங்குமிடம், போக்குவரத்து, ஊர் சுற்றி பார்த்தல், பயண காப்பீடு அனைத்தும் அடங்கும்.

    யோகேஷ் சைகல் என்பவர் தனது மனைவி, மகன், மகள் மற்றும் மாமனாருடன் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

    தாமஸ் குக் என்ற டிராவல் கம்பெனி மூலம் 3.56 லட்ச ரூபாய் கொடுத்து இந்த சுற்றுலாவை அவர் ஏற்பாடு செய்துள்ளார். இதில், தங்குமிடம், போக்குவரத்து, ஊர் சுற்றி பார்த்தல், பயண காப்பீடு அனைத்தும் அடங்கும்.

    இலங்கைக்கு சுற்றுலா சென்ற அவரின் குடும்பம் கொழும்புவில் காரில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரியில் மோதியுள்ளது. அந்த விபத்தில் சைகலின் மனைவி, மகன், மாமனார் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த சைகல் மற்றும் அவரது மகள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தனர்.

    சைகலின் சுற்றுலா பயணம் தாமஸ் குக் என்ற டிராவல் கம்பெனி புக் செய்யப்பட்டிருந்தாலும், அவரின் இலங்கை சுற்றுலாவை ரெட் ஆப்பிள் டிராவல் கம்பெனி தான் கவனித்து கொண்டது.

    இந்த விபத்திற்கு பிறகு டிராவல் கம்பெனிகளின் அலட்சியத்தால் எனது குடும்பத்தை இழந்து விட்டேன் என்று டெல்லி நுகர்வோர் ஆணையத்திடம் யோகேஷ் சைகல் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் முடிவில் தாமஸ் குக் மற்றும் ரெட் ஆப்பிள் டிராவல் கம்பெனிகள் சேர்ந்து 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்று நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    • கொழும்பு துறைமுக முனைய அபிவிருத்தி திட்டம் சிறப்பாக முன்னேறி வருகிறது.
    • அமெரிக்க டாலர்களை கடனாக பெறும் முடிவை திரும்பப் பெற்றுள்ளோம்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் பிரபல தொழில் அதிபர் அதானி, சூரிய ஒளி மின்சாரம் தொடர்பான திட்டங்களை அரசு அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்து பெற்றதாகவும், அந்தத் திட்டங்களுக்காக அமெரிக்காவில் முதலீடுகளை திரட்டியதாகவும், அமெரிக்க கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவருக்கு பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.

    இதனால் அதானி நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்தது. இவ்விவகாரத்தால் அதானி குழுமத்துடனான ஒப்பந்தங்களை கென்யா அரசு ரத்து செய்தது.

    இதற்கிடையே இலங்கை கொழும்பு துறைமுகத்தின் மேற்கு சர்வதேச முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை அதானி குழுமத்தின் அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் நிறுவனம் பெற்றிருந்தது.

    இத்திட்டம் அதானி நிறுவனம், இலங்கை துறைமுக ஆணையம், ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ஆகியவவை இணைந்து செயல்படுத்துகின்றன.

    இதற்காக அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதி கழகத்துடன் 553 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.4692 கோடி) கடன் பெற ஒப்பந்தம் மேற்கொள்ள முடிவு செய்தது.

    இதற்கிடையே அதானி மீதான குற்றச்சாட்டை அடுத்து அவரது நிறுவனத்துக்கு கடன் வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்வதாக அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதி கழகம் தெரிவித்து இருந்தது.


    இந்த நிலையில் அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கழகத்துடனான கடன் ஒப்பந்தத்தை திரும்ப பெறுவதாக அதானி நிறுவனம் அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக அதானி குழுமம் தரப்பில் கூறும் போது, அமெரிக்க நிறுவனமான, அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதி கழகத்தில் இருந்து, 553 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக பெறும் முடிவை திரும்பப் பெற்றுள்ளோம்.

    கொழும்பு துறைமுக திட்டத்திற்கு எங்கள் நிறுவனத்தின் உள் திரட்டல்கள் மற்றும் மூலதன மேலாண்மை திட்டத்தின் மூலம் நிதியளிக்கப்படும். இலங்கையில் கொழும்பு துறைமுக முனைய அபிவிருத்தி திட்டம் சிறப்பாக முன்னேறி வருகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அத்திட்டம் செயல்படத் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.

    இந்த திட்டத்திற்கு 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கழகம் கடந்த ஆண்டு நவம்பரில் கடனை வழங்க ஒப்புக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கொழும்புக்கு இன்று புறப்பட்ட விமானம் ஓடுதள விளக்கில் மோதி விபத்துக்குள்ளானதில் விமானத்தின் சக்கரம் பலத்த சேதமடைந்தது. #SrilankanAirlines
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சியிலிருந்து இலங்கை கொழும்புக்கு 227 பயணிகளுடன் இன்று மாலை ஸ்ரீலங்கன் ஏர்லைன் விமானம் கிளம்பியது. ஓடுதளத்தில் இருந்து விமானம் மேலே எழும்பும் போது விமானத்தின் சக்கரம் ஓடுதளத்தின் எல்லையில் இருக்கும் விளக்கில் பயங்கரமாக மோதியது.

    இதனை அடுத்து, விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டது. பயணிகள் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். சிறிது நேரத்திற்கு ஓடுதளம் மூடப்பட்டு, பின்னர் நிலைமை சீரானதும் திறக்கப்பட்டது. இந்த விபத்தில் விமானத்தின் சக்கரம் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
    ×