என் மலர்
நீங்கள் தேடியது "தாலிபான்"
- அனுமதியின்றி டிரோன் கேமரா உதவியுடன் அவர் படம் பிடித்தார்
- அமெரிக்க அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே சமாதான தூதுவராக செயல்படும் கத்தார் செயல்பட்டது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 இல் அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அதிகாரத்துக்கு வந்த பின்னர் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இதற்கிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமெரிக்கப் பெண் பாயே ஹால் என்பவரை தலிபான்கள் சிறைபிடித்தனர்.
ஆப்கனிஸ்தான் வந்த அவர் அனுமதியின்றி டிரோன் கேமரா உதவியுடன் அவர் படம் பிடித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை விடுவிப்பதற்கு அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது.
இதற்கிடையே அமெரிக்க அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே சமாதான தூதுவராக செயல்படும் கத்தார் நாட்டின் முயற்சியால் பாயே ஹால் விடுவிக்கப்பட்டார். அவர் காபூலில் உள்ள கத்தார் தூதரகத்தில் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

- மகளிர் அமைச்சகம் அறநெறி அமைச்சகமாக மாற்றப்பட்டது.
- பெண்கள் பொது இடங்களில் சத்தமாகப் பேசவும், பாடவும் தடை விதிக்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டில் இருந்து ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தாலிபான் ஆட்சியில் இஸ்லாம் மதத்தின் ஷரியத் சட்டத்தின் பெயரால் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் நடமாடுவது, பண்டிகை கொண்டாட்டங்கள், ஆண்கள் சவரம் செய்வதுவரை அனைத்துக்கும் தனித்தனி விதிகள் உள்ளன.
குறிப்பாக பெண்களுக்கு உடை சுதந்திரம், கல்வி, சமூக வாழ்க்கை என அனைத்தும் மறுக்கப்பட்ட அவலமான சூழலே அங்கு நிலவுகிறது. 2021 அதிகாரத்துக்கு வந்த பின்னர் தலைநகர் காபூலில் உள்ள மகளிர் அமைச்சகம் அறநெறி அமைச்சகமாக மாற்றப்பட்டது. இதன் மேற்பார்வையிலேயே மேற்கூறிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த அறநெறி அமைச்சகம் தற்போது புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது.
அதாவது, உயிர் கொண்டு அசையும் எந்த ஒன்றின் புகைப்படங்களையும் செய்தி ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாலிபான் சட்டப்பிரிவு 17 இன் படி உயிருள்ளவற்றின் [living beings] புகைப்படஙகள் ஊடகங்களில் காட்டப்படுவது தடை செய்யப்படுகிறது.

இந்த புதிய விதியை ஆப்கனிஸ்தானின் பல்வேறு இடங்களில் தாலிபான் கட்டுப்பாட்டு ஊடகங்கள் செயல்படுத்த தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மனிதர்களின் புகைப்படங்களை வெளியிடாமல் செய்தி ஊடகம் எவ்வாறு செயல்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ள நிலையில் இந்த புதிய விதியை தீவிரமாக கடைபிடிக்க செய்தியாளர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக சமீபத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி பெண்கள் தங்களின் முகத்தை வெளியே காட்டவும், பொது இடங்களில் சத்தமாகப் பேசவும், பாடவும் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- தீய சக்திகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் மையங்கள் தாக்கப்பட்ட்டன
- 19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் அதிகாரிகளால் வரையப்பட்ட எல்லைக் கோடான டுராண்ட் கோட்டை ஆப்கானிஸ்தான் நீண்ட காலமாக நிராகரித்து வருகிறது.
ஆப்கானிஸ்தான் கிழக்கு பாக்டிகா மாகாணத்தில் உள்ள பயிற்சி நிலையத்தை குறிவைத்து செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்ட பாகிஸ்தான் இராணுவ நடவடிக்கைக்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் வந்துள்ளன.
தாலிபான் ஆட்சி நடக்கும் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானி தலிபான் என்ற கிளர்ச்சி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு தங்கள் நாட்டின்மீது பயங்கரவாத தாக்குதல் நடத்துவதாகவும், இது பயங்கரவாத அமைப்பு என பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது. இந்த அமைப்பைக் குறிவைத்து அவ்வப்போது பாகிஸ்தான் தாக்குதல் நடத்திவருகிறது.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் கடந்த [செவ்வாய்க்கிழமை] வான்வழி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தென்கிழக்கு எல்லையோரம் அமைந்துள்ள ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் உள்ள 7 கிராமங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பெண்கள் குழந்தைகள் உட்பட 46 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் பல்வேறு இடங்கள் மீது ஆப்கனிஸ்தான் தாலிபான் ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது. தலிபான் படைகள் பாகிஸ்தானில் பல இடங்களை குறிவைத்து தாக்கியதில் 19 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று தகவல் வெளியாகி உள்ளது,

ஆப்கானிஸ்தான் தென்கிழக்கு பகுதிகள் மீது தாக்குதல்களை ஏற்பாடு செய்த தீய சக்திகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் மையங்கள் மற்றும் மறைவிடங்களில் உள்ளிட்ட பல நிலைகள் முதல் எல்லை அனுமான கொடு வரை பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது என தாலிபான் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் தளம் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கை பாகிஸ்தானைக் குறிப்பிடுகிறதா என்று கேட்கப்பட்டபோது, ஆப்கானிஸ்தான் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் எனயதுல்லா கோவராஸ்மி, ஆப்கானிஸ்தான் அந்த நிலப்பரப்பை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார்.
19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் அதிகாரிகளால் வரையப்பட்ட எல்லைக் கோடான டுராண்ட் கோட்டை ஆப்கானிஸ்தான் நீண்ட காலமாக நிராகரித்து வருகிறது. இந்த எல்லைக்கோடு ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு மலை மற்றும் அரசு ஆதிக்கம் இல்லாத பழங்குடிப் பகுதி வழியாக செல்கிறது.
- நாட்டில் பெண் குழந்தைகள் ஆறாம் வகுப்புக்கு மேல் கல்வி கற்க தாலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
- ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்டின் விதிகளின்படி ஒளிபரப்பப்படும்
ஆப்கனிஸ்தானில் 'ரேடியோ பேகம்' என்ற பெண்கள் வானொலி கடந்த மார்ச் 2021 இல் சர்வதேச மகளிர் தினத்தன்று தொடங்கப்பட்டது.
இது முழுக்க முழுக்க ஆப்கானிய பெண்களால் இயங்கும் ஒரு வானொலி ஆகும். இதன்மூலம் ஏழாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான ஆப்கானிய பள்ளி பாடத்திட்டத்தை உள்ளடக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் இதன் இணை சேவையாக பேகம் டிவி என்ற சாட்டிலைட் தொலைக்காட்சியும் இயங்கி வந்தது.
ஐந்து மாதங்களுக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆப்கனிஸ்தானில் இருந்து வெளியேறியது. இதைத்தொடர்ந்து அங்கு தாலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர். மத அடிப்படைவாதத்துடன் செயல்படும் தாலிபான்கள் பெண்களுக்கான பல்வேறு உரிமைகளை முடக்கினர். நாட்டில் பெண்கள் குழந்தைகள் ஆறாம் வகுப்புக்கு மேல் கல்வி கற்க தாலிபான்கள் தடை விதித்தனர்.

'ரேடியோ பேகம்' தடை செய்யப்பட்டது. இந்த தடையை நீக்கும்படி பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் ரேடியோ பேகம் மீதான தடையை தாலிபான் அரசு நீக்கியுள்ளது.
தாலிபானின் தகவல் மற்றும் கலாச்சார அமைச்சகம் நேற்று (சனிக்கிழமை) இரவு வெளியிட்ட அறிக்கையில், 'ரேடியோ பேகம்' செயல்பாடுகளை மீண்டும் தொடங்க அனுமதி கோரி பல முறை கோரிக்கைகள் வந்தன.
பத்திரிகை கொள்கைகள் மற்றும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்டின் விதிகளின்படி ஒளிபரப்பப்படும் என்றும், எதிர்காலத்தில் எந்த மீறல்களையும் செய்யாது என்றும் அந்த நிலையம் உறுதி அளித்துள்ளதை அடுத்து தடை தளர்த்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கொள்கைகள் மற்றும் விதிகள் என்ன என்பது குறித்து அமைச்சகம் தெளிவுபடுத்தவில்லை. இது தொடர்பாக ரேடியோ பேகம் நிலையமும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.