என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உமர் அப்துல்லா"

    • இந்தியா மீது பாகிஸ்தான் நடத்தும் தாக்குதல்களுக்கு இந்தியா பதில் தாக்குதல் மட்டுமே நடத்தி வருகிறது.
    • அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நாடுகள் நிதி கொடுத்து உதவக்கூடாது.

    பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் நிதி அளிக்க இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பாகிஸ்தானுக்கு புதிய கடன்கள் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தில் நடந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி ரூ.8,542 கோடியை பாகிஸ்தானுக்கு கடனாக வழங்க சர்வதேச நாணய நிதியம் முடிவு செய்துள்ளது.

    இந்த நிலையில், பாகிஸ்தானிற்கு நிதியுதவி வழங்கும் சர்வதேச நாடுகள், சர்வதேச நாணய நிதியத்திற்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:-

    இந்தியா மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு நிதியுதவி செய்தால் போர் பதற்றம் எப்படி குறையும்? இந்தியா மீது பாகிஸ்தான் நடத்தும் தாக்குதல்களுக்கு இந்தியா பதில் தாக்குதல் மட்டுமே நடத்தி வருகிறது. இந்தியாவின் அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நாடுகள் நிதி கொடுத்து உதவக்கூடாது என்று கூறியுள்ளார். 

    • ஜம்மு நகரம் மற்றும் பிற பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் நேற்றிரவு நடத்திய டிரோன் தாக்குதல் தோல்வி அடைந்தது.
    • எல்லையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் கேட்டறிகிறார்.

    இந்தியா- பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் இருநாடுகளும் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகின்றன. ஜம்மு நகரம் மற்றும் பிற பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் நேற்றிரவு நடத்திய டிரோன் தாக்குதல் தோல்வி அடைந்தது.

    எல்லையில் போர் சூழல் நிலவி வரும் நிலையில், ஜம்மு- காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஜம்மு செல்கிறார். எல்லையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் கேட்டறிகிறார். 

    • பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
    • ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு

    காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் 9 இலக்குகள் மீது இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இரவு முழுவதும் துல்லியமாக தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியது.

    ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக பேசிய ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, "நாம் யாரும் போரை விரும்பவில்லை. காஷ்மீர் நிலைமை மீண்டும் மேம்பட வேண்டும் என்று தான் நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அதற்கு முதலில் நமது அண்டை நாடு (பாகிஸ்தான்) தங்கள் துப்பாக்கிகளை கீழே போட வேண்டும்" என்று தெரிவித்தார். 

    • காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்.
    • பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை பற்றி ஆலோசித்தனர்.

    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லி வந்துள்ள ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா, பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது.

    அப்போது, பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை, வரும் நாட்களில் எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

    பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இரு தலைவர்களும் சந்திப்பது இது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • மக்கள் நம்முடன் இருக்கும்போது பயங்கரவாதம் முடிவுக்கு வரும்.
    • பயங்கரவாதத்திற்கு எதிரான மக்களின் கோபத்தை கருத்தில் கொண்டு, நாம் சரியான நடவடிக்கைகளை எடுத்தால் இது அதன் முடிவுக்கு ஆரம்பம்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு நாடும் முழுவரும் இருந்து கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

    ஸ்ரீநகரின் ஜாமியா மசூதி வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன் முதல் முறையாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பயங்கரவாதத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்தை வலுப்படுத்துவோம் என ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக உமர்அப்துல்லா கூறியதாவது:-

    மக்கள் நம்முடன் இருக்கும்போது பயங்கரவாதம் முடிவுக்கு வரும். பயங்கரவாதத்திற்கு எதிரான மக்களின் கோபத்தை கருத்தில் கொண்டு, நாம் சரியான நடவடிக்கைகளை எடுத்தால் இது அதன் முடிவுக்கு ஆரம்பம்.

    மக்களை அந்நியப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் நாம் எடுக்கக்கூடாது. துப்பாக்கியால் பயங்கரவாதத்தை நாம் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் மக்கள் நம்முடன் இருந்தால் தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியும். அந்த நேரம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்

    ஜம்மு-காஷ்மீர் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத மற்றும் தன்னிச்சையான போராட்டங்களை நடைபெற்று வருகிறது. ஸ்ரீநகரின் ஜாமியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன் முதல்முறையாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

    அதன் அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். இந்த மாற்றத்தை வலுப்படுத்த முயற்சிப்போம்.

    இவ்வாறு உமர் அப்துல்லா கூறினார்.

    • பாகிஸ்தான் கருத்துக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை.
    • என்ன நடந்ததோ அது துரதிருஷ்டவசமானது. இது நடந்திருக்கக் கூடாது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியது. பாகிஸ்தான் உடனான அனைத்து உறவுகளையும் துண்டித்தது.

    குறிப்பாக இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை நாளைக்குள் வெளியேற காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இந்தியா எங்கள் மீது பழி போடுகிறது. நாங்கள் நடுநிலையான விசாரணையில் பங்கேற்க தயார் என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்திருந்தார்.

    இது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா கூறியதாவது:-

    முதலில் பஹல்காமில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பதை கூட அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த தாக்குதலுக்குப் பின்னால் இந்தியா இருப்பதாக பாகிஸ்தான் கூறியது. எங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களுக்கு இப்போது அதைப்பற்றி எதுவும் சொல்வது கடினம். அவர்களின் கருத்துக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை. என்ன நடந்ததோ அது துரதிருஷ்டவசமானது. இது நடந்திருக்கக் கூடாது.

    இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்த்ளளார்.

    • பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
    • உமர் அப்துல்லா தலைமையில் இன்று மாலை சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் அருகே உள்ளது பைசாரன் பள்ளத்தாக்கு. அடர்ந்த பைன் மரக் காடுகள் மற்றும் மலைகளால் சூழப்பட்ட இந்த இடம் மினி ஸ்விட்சர்லாந்து என்று அழைக்கப்படுகிறது. பஹல்காம் மற்றும் பைசாரன் ஜம்மு-காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத்தலமாகும்.

    இந்த பகுதியில் நேற்று திடீரென சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் ஒவ்வொருவரின் பெயரை கேட்டு, தாக்குதல் நடத்தியுள்ளனர். கொலை செய்யப்பட்ட அனைவரும் ஆண்கள் எனக் கூறப்படுகிறது.

    2019ஆம் ஆண்டு புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்குப் பிறகு மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.

    ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா மூலம் அதிக அளவில் வருவாய் கிடைக்கிறது. பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறைதான் முதுகெலும்பாக உள்ளது. தற்போது கோடைக்காலம் என்பதால் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் செல்வார்கள். இந்த நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதல், சுற்றுலாத்துறை கேள்விக்குறியதாக்கியுள்ளது.

    இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இன்று மாலை சிறப்பு அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    பயங்கரவாத தாக்குதல் குறித்தும், இதனால் சுற்றுலாத்துறையில் ஏற்படும் பாதிப்பு குறித்தும் தீவிரமாக ஆலோசனை நடத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    • சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு 6 மாதங்கள் முடிவடைந்துள்ளன.
    • அமித் ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலம் வந்திருந்தபோது, அவருடன் தனிப்பட்ட முறையில் சிறந்த ஆலோசனை மேற்கொண்டேன்.

    ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வராக இருக்கும் உமர் அப்துல்லா சரியான நேரம் வந்துவிட்டது, மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்படும் என நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக உமர் அப்துல்லா கூறியதாவது:-

    சரியான நேரம் வந்துவிட்டதாக நாங்கள் நினைக்கிறோம். சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு 6 மாதங்கள் முடிவடைந்துள்ளன. அமித் ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலம் வந்திருந்தபோது, அவருடன் தனிப்பட்ட முறையில் சிறந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றேன். ஜம்மு-காஷ்மீர் விரைவில் மாநில அந்தஸ்து பெறும் என்ற நம்பிக்கை இன்னும் எனக்கு உள்ளது.

    இவ்வாறு அப்துல்லா தெரிவித்தார்.

    • ஜம்மு-காஷ்மீரில் வக்பு திருத்த சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் எனச் சொல்லியிருக்க வேண்டும்.
    • அதுபோன்று ஏதும் நடக்கவில்லை. நான் இன்று அவமானமாக உணர்கிறேன்.

    ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வக்பு திருத்த சட்டம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் ஒத்திவைப்பு தீர்மானம் சபாநாயரால் நிராகரிக்கப்பட்டது. இதனால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. அவை ஒத்திவைக்கப்படடது.

    இதற்கிடையில் பாஜக-வின் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டத்தில், உமர் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சி அரசு அடிபணிந்து விட்டது என ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக மெகபூபா முஃப்தி கூறியதாவது:-

    முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு மாநிலமான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முஸ்லிம் முதல்வர் (உமர் அப்துல்லா) வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக குரல் கொடுத்திருக்கனும். அல்லது குறைந்தபட்சமாக ஜம்மு-காஷ்மீரில் இந்த சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் எனச் சொல்லியிருக்க வேண்டும்.

    வக்பு மசோதா மீதான தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்தது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. வக்பு மசோதாவை உறுதியாக எதிர்த்த தமிழ்நாட்டிடம் இருந்து தேசிய மாநாடு கட்சி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். வலுவான மெஜாரிட்டி பெற்ற போதிலும், முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக-வின் திட்டத்திற்கு முற்றிலுமாக அடிபணிந்ததாக தெரிகிறது.

    ஜம்மு-காஷ்மீர் மட்டும்தான் முஸ்லிம் அதிகமாக வாழும் மாநிலம். மக்களை மையமாகக் கொண்ட அரசாங்கமாகக் கூறப்படும் ஒரு அரசாங்கத்திற்கு இந்த முக்கியமான பிரச்சினையை விவாதிக்கக் கூட தைரியம் இல்லை என்பது கவலையளிக்கிறது.

    நாட்டில் உள்ள முஸ்லிம் மக்கள் முஸ்லிம் முதல்வர், நாட்டில் அதிக அளவில் வாழும் முஸ்லிம் மாநிலம் இந்த சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பும் அல்லது ஜம்மு-காஷ்மீரில் இந்த சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என சொல்லும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், அதுபோன்று ஏதும் நடக்கவில்லை. நான் இன்று அவமானமாக உணர்கிறேன்.

    இவ்வாறு மெகபூபா முஃப்தி தெரிவித்தார்.

    • புதிய அரசு வரும்போது மக்கள் அவர்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்படும் என நினைத்தார்கள்.
    • உங்களுக்கு வாக்களித்த மக்கள் பிரச்சினைகளை கூட பேச பயப்படுகிறீர்கள்.

    ஜம்மு-காஷ்மீரில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சிக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையில் அதிகாரிகளை மாற்றம் செய்வதில் யாருக்கு அதிகாரம் என்பதில்தான் கவனம் செலுத்தப்படுகிறது. உண்மையான பிரச்சினையில் எடுக்கக்கூடிய நிலை குறித்து கவனம் செலுத்துவதில்லை என மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக மெகபூபா முஃபதி கூறியதாவது:-

    புதிய அரசு வரும்போது (சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின் நடைபெற்ற சட்டசபை தேர்தல்) மக்கள் அவர்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்படும் என நினைத்தார்கள். துரதிருஷ்டவசமாக 6 மாதங்களாக ஜெயிலில் வாடும் இளைஞர்கள், நம்முடைய வேலைவாய்ப்பு பறிப்பு, தினக்கூலிகளின் பிரச்சினை, வேலைவாய்ப்பின்மை பற்றி பேசப்படவில்லை. அரசாங்கம் எல்லாவற்றிலும் கோழைத்தன்மையை காட்டியுள்ளது.

    ஆட்சிக்கு வந்தபோது மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை என்றார்கள். டெல்லியுடன் யாரும் மோதலை விரும்பவில்லை. ஆனால் நீங்கள் ஏற்கனவே சரணடைந்து விட்டீர்கள். உங்களுக்கு வாக்களித்த மக்கள் பிரச்சினைகளை கூட பேச பயப்படுகிறீர்கள்.

    இவ்வாறு மெகபூபா முஃப்தி குற்றம்சாட்டினார்.

    • யூனியன் பிரதேசம் என மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். இதனால் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது.
    • பாராளுமன்றத்தில் நம்முடைய மாநில அந்தஸ்தை திரும்பப்பெறும் வரை, நாம் தொடர்ந்து யூனியன் பிரதேசமாகத்தான் இருப்போம்.

    ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) சட்டம் 2017, திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அப்போது ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் என குறிப்பிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    மக்கள் மாநாட்டு கட்சி உறுப்பினர் சஜாத் கானி லோன், இந்த மசோதாவை நிறைவேற்றியது, சட்டமன்றத்தால் ஜம்மு-காஷ்மீரை யூனியன் பிரதேசம் என அங்கீகரிப்பதாகிவிடும் விமர்சித்தார்.

    இதற்கு பதில் அளித்து முதல்வர் உமர் அப்துல்லா கூறியதாவது:-

    யூனியன் பிரதேசம் என மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். இதனால் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது. துரதிருஷ்டவசமாக, பாராளுமன்றத்தில் நம்முடைய மாநில அந்தஸ்தை திரும்பப்பெறும் வரை, நாம் தொடர்ந்து யூனியன் பிரதேசமாகத்தான் இருப்போம். எனவே, இதை அரசியலாக்க வேண்டாம்.

    ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் பெற வேண்டும். Inshallah, அதை மீட்டெடுப்போம். யூனியன் பிரதேசம் என்ற வார்த்தையை நீக்குவது நம்முடைய யதார்த்தத்தை மாற்றாது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் யூனியன் பிரதேசம்தான். இந்த அரசாங்கம் யூனியன் பிரதேசமாக ஆட்சி செய்கிறது.

    இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    • காஷ்மீரில் சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
    • காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து திரும்ப கிடைக்கும்வரை தேர்தல்களில் போட்டி இல்லை என்று உமர் அப்துல்லா அறிவிப்பு.

    ஸ்ரீநகர் :

    காஷ்மீரில் சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதை முன்னிட்டு சட்டசபை தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை தேசிய மாநாட்டுக்கட்சி நியமித்து வருகிறது.

    இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கட்சித்தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான பரூக் அப்துல்லா, பொறுப்பாளர் நியமனம் குறித்து அவர்களிடம் விளக்கினார்.

    அப்போது அவர் கூறுகையில், 'காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து திரும்ப கிடைக்கும்வரை தேர்தல்களில் போட்டியிடமாட்டேன் என உமர் அப்துல்லா ஏற்கனவே கூறிவிட்டார்' என்று தெரிவித்தார்.

    முன்னாள் முதல்-மந்திரியும், கட்சியின் துணைத்தலைவருமான உமர் அப்துல்லா இந்த முடிவை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அதை அவரது தந்தையும், கட்சித்தலைவருமான பரூக் அப்துல்லாவும் உறுதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    சட்டசபை தேர்தலுக்காக தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம், தேர்தலில் வேறு கட்சிகளுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லையா? என செய்தியாளர்கள் கேட்டனர்.

    அதற்கு, 'தேர்தலுக்கு இன்னும் போதுமான நேரம் இருப்பதால், அதுகுறித்து பின்னர் முடிவு செய்யப்படும்' என்று பதிலளித்தார்.

    ×