என் மலர்
நீங்கள் தேடியது "முசிறி"
- திருச்சி மாவட்டம் தா.பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
- கொலையாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில் கோபிநாத்தின் தாய் செல்வி கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தா.பேட்டை சேந்தமங்கலம் அம்பாய் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி செல்வி. இந்த தம்பதியரின் மகன் கோபிநாத் (வயது 26). டிப்ளமோ பட்டதாரி.
தாயும் மகனும் வேலம்பட்டியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர். நேற்று இரவு வழக்கம்போல் கோபிநாத் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றார்.
வீட்டில் புழுக்கம் அதிகமாக இருந்ததால் வீட்டின் முன்பு திறந்த வெளியில் கட்டில் போட்டு தூங்கி உள்ளார். தாய் வீட்டுக்குள் படுத்து உறங்கினார்.
நள்ளிரவு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் கோபிநாத் உடலின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தினர். இதில் தீ உடல் முழுவதும் பரவி, உடல் கருகி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
இது எதுவும் தெரியாமல் அவரது தாயார் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்பட்டது. இன்று காலை எழுந்து பார்த்தபோது, மகன் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடப்பது கண்டு அலறி துடித்துள்ளார்.
பின்னர் இது குறித்து தாப்பேட்டை போலீசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த துணை போலீஸ் அதிகாரி சுரேஷ்குமார், தா.பேட்டை இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.
பின்னர், மோப்ப நாய் உதவியுடன் விசாரணை தொடங்கப்பட்டது. அது சம்பவ இடத்தை மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் சென்று நின்றுவிட்டது. கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? எதுவும் உடனடியாக தெரியவில்லை.
இது குறித்து தாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இந்த கொலை சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கொலையாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில் கோபிநாத்தின் தாய் செல்வி கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது, தாயின் எதிர்ப்பையும் மீறி சொத்தை விற்பதற்காக கோபிநாத் ரூ.9 லட்சம் முன்பணம் வாங்கியுள்ளார்.
பிறகு, தாயிடம் பணத்தை தராமல் தானே வைத்துக் கொண்டு குடிபோதையில் கோபிநாத் திளைத்து வந்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த தாய் செல்வி கோடாலியால் கழுத்தை வெட்டி பின்னர் டீசல் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
- திறந்த வெளியில் கட்டில் போட்டு தூங்கி உள்ளார்.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை.
முசிறி:
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தா.பேட்டை சேந்தமங்கலம் அம்பாய் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி செல்வி. இந்த தம்பதியரின் மகன் கோபிநாத் (வயது 26). டிப்ளமோ பட்டதாரி.
தாயும் மகனும் வேலம்பட்டியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர். நேற்று இரவு வழக்கம்போல் கோபிநாத் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றார்.
வீட்டில் புழுக்கம் அதிகமாக இருந்ததால் வீட்டின் முன்பு திறந்த வெளியில் கட்டில் போட்டு தூங்கி உள்ளார். தாய் வீட்டுக்குள் படுத்து உறங்கினார்.
நள்ளிரவு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் கோபிநாத் உடலின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தினர். இதில் தீ உடல் முழுவதும் பரவி, உடல் கருகி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
இது எதுவும் தெரியாமல் அவரது தாயார் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இன்று காலை எழுந்து பார்த்தபோது, மகன் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடப்பது கண்டு அலறி துடித்தார்.
பின்னர் இது குறித்து தாப்பேட்டை போலீசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.தகவல் அறிந்த துணை போலீஸ் பிரண்டு சுரேஷ்குமார், தா.பேட்டை இன்ஸ்பெ க்டர் அனந்த பத்மநாபன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி மற்றும் போலீ சார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.
பின்னர் மோப்பநாய் உதவியுடன் விசாரணை தொடங்கப்பட்டது. அது சம்பவ இடத்தை மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் சென்று நின்று விட்டது. கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? எதுவும் உடனடியாக தெரியவில்லை.
இது குறித்து தாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடந்து வருகிறார்கள்.
வீட்டிற்கு வெளியே கட்டிலில் படுத்து தூங்கிய பட்டதாரி வாலிபர் உயிருடன் எரித்து கொலை செய்யப் பட்ட சம்பவம் தா.பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பாலச்சந்திரன் அரிவாளால் கீதாவை சரமாரியாக வெட்டினார்.
- கொலை நடந்த பகுதியில் பாதுகப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
முசிறி:
திருச்சி மாவட்டம் முசிறி அந்தரப்பட்டி குடோன் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி கீதா(வயது46). முருகேசன் வளையல் வியாபாரம் செய்து வருகிறார். கீதா கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வசித்து வந்தார்.
இந்த நிலையில் கீதாவுக்கும் முசிறியை அடுத்த வாழவந்தியை சேர்ந்த பாலசந்திரன்(64) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. பாலச்சந்திரன் அடிக்கடி கீதாவை சந்தித்து தனிமையில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை பாலச்சந்திரன் வழக்கம்போல கீதாவின் வீட்டுக்கு வந்தார். அங்கு கீதாமட்டும் தனியாக இருந்தார். அப்போது கீதாவுக்கும், பாலசந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த பாலச்சந்திரன் அரிவாளால் கீதாவை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கீதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்தார். பின்னர் அங்கிருந்து ஆவேசமாக பாலச்சந்திரன் வாழ்வந்திக்கு சென்றார்.
அங்கு தனது வீட்டு அருகே வசித்த ரமேஷ்(55) என்பவர் அங்குள்ள டீக்கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். இவர் வாழவந்தி தி.மு.க. கிளை செயலாளராக இருந்தார். திடீரென ரமேசையும் பாலச்சந்திரன் அரிவாளால் வெட்டினார்.
தலை மற்றும் கைகால்காளில் வெட்டுக்காயம் அடைந்த ரமேஷ் உயிருக்கு போராடிக் கண்டிருந்தார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும் சிகிச்சை பலனளிக்காமல் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். அடுத்தடுத்த கொலைகளால் அந்த பகுதியில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. கொலையாளி பலச்சந்திரன் ஜம்பு நாதபுரம் காவல் நிலையத்தில் அரிவாளுடன் சென்று போலீசாரிடம் நடந்த விவரத்தை கூறி சரண் அடைந்தார்.
இதை தொடர்ந்து பாலச்சந்திரனிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். கள்ளக்காதலியை கொலை செய்த சம்பவத்துக்கும் ரமேஷ் கொலைக்கும் வேறு வேறு காரணங்கள் இருப்பதாக போலீசாரிடம் பாலச்சந்திரன் கூறியுள்ளார். எனினும் கள்ளக்காதல் விவகாரத்தில் 2 பேர் கொலை செய்யப்பட்டார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மேலும் கொலை செய்யப்பட்ட ரமேசுக்கும் பாலசந்திரனுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இதன்காரணமாக அவரை பாலசந்திரன் கொலை செய்ததாக தெரிகிறது. கள்ளக்காதலி கீதாவை கொலை செய்ததற்கான காரணம் என்ன என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முசிறி பகுதியில் இன்று அதிகாலை நடந்த இந்த இரட்டைக்கொலை சம்பவம் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கொலை நடந்த பகுதியில் பாதுகப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
- முசிறி சார்பு நீதிமன்றத்தை மாவட்டம் முதன்மை நீதிபதி ஆய்வு செய்தார்
- விரைவில் திறப்பதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருச்சி:
திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி பாபு முசிறிக்கு வருகை புரிந்து, சார்பு நீதிமன்றம் அமைவதற்கு, வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பழைய குற்றவியல் நீதிமன்ற கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், பொதுப்பணித்துறையினர்க்கு கட்டிடங்களை புனாரமைப்பு செய்து விரைவில் திறப்பதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆய்வின் போது மாவட்ட உரிமையியல் நீதிபதி பாக்கியராஜ், குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி ஜெயசந்திரன், வழக்கறிஞர் சங்க தலைவர் பாஸ்கரன், அரசு வழக்கறிஞர் சப்தரிஷி, மூத்த வழக்கறிஞர் செங்குட்டுவன், வழக்கறிஞர்கள் ராஜன், பத்ம ராஜன், ரெங்கராஜன், விமல் ராஜ், ராஜசேகரன் வட்டாட்சியர் சண்முகப்பிரியா மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் இருந்தனர்.