என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜஸ்தான் ராயல்ஸ்"

    • சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
    • காயம் காரணமாக எஞ்சிய தொடரில் இருந்து சந்தீப் சர்மா விலகினார்.

    புதுடெல்லி:

    18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 57 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.

    இந்த லீக் ஆட்டங்களின் முடிவில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.

    மேலும் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.

    இதற்கிடையே, நடப்பு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த சந்தீப் சர்மா கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சிய தொடரில் இருந்து வெளியேறினார்.

    இந்நிலையில், சந்தீப் சர்மாவுக்கு பதிலாக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நன்ரே பர்கரை ரூ.3½ கோடிக்கு ராஜஸ்தான் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக ஆடிய பர்கர் 6 ஆட்டங்களில் 5 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

    • சிஎஸ்கே-ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று தொடங்குகிறது.
    • ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என சி.எஸ்.கே. நிர்வாகம் அறிவித்துள்ளது.

    சென்னை:

    நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 12-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    சேப்பாக்கத்தில் நடக்கும் 7-வது ஆட்டம் இதுவாகும். இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று தொடங்குகிறது.

    இன்று காலை 10.15 மணியில் இருந்து www.chennaisuperkings.com என்ற இணைய தளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4,000, ரூ.7,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது.

    ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்ற 12 போட்டிகளில் 3 வெற்றி, 9 தோல்வி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

    • மொயீன் அலி ஓவரில் தொடர்ந்து 5 சிக்சர்களை பராக் பார்க்கவிட்டார்.
    • ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து 6 பந்துகளை சிக்சருக்கு விளாசி பார்க் புதிய சாதனை படைத்துள்ளார்.

    18-வது ஐ.பி.எல். ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடந்த 53-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 206 ரன்கள் எடுத்தது.

    அடுத்து ஆடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா திரில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 95 ரன் எடுத்தார்.

    இந்தப் போட்டியில் ராஜஸ்தான் பேட்டிங் செய்தபோது ஆட்டத்தின் 13-வது ஓவரை மொயீன் அலி வீசினார். அந்த ஓவரின் 2வது பந்தில் இருந்து ஓவரை முழுமையாக எதிர்கொண்ட ரியான் பராக் தொடர்ந்து 5 சிக்சர்களை அடித்து அமர்க்களம் செய்தார். மேலும் அடுத்த ஓவரில் தான் சந்தித்த முதல் பந்தில் பராக் சிக்சர் அடித்தார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து 6 பந்துகளை சிக்சருக்கு விளாசி பார்க் புதிய சாதனை படைத்துள்ளார்.

    இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு எக்ஸ் பக்கத்தில் ரியான் பராக் பதிவிட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

    பராக் அந்த பதிவில், "ஐபிஎல் தொடரில் ஒருநாள் என்னால் ஒரே ஓவரில் 4 சிக்சர் அடிக்க முடியும் என்று என்னுடைய உள்மனது சொல்கிறது" என்று பதிவிட்டிருந்தார்.

    2023 ஆம் ஆண்டு பராக்கின் இந்த பதிவை பார்த்து நெட்டிசன்கள் கிண்டலடித்தனர். ஆனால் தற்போது இப்போது ஒரே ஓவரில் 5 சிக்சரும் தொடர்ந்து 6 பந்துகளில் 6 சிக்சரும் அடித்து தன்னை கிண்டலடித்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

    • 53-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் அணிகள் மோதின.
    • 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா திரில் வெற்றி பெற்றது.

    கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 53-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் அணிகள் மோதின

    இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்களை குவித்தது. பின்னர் 207 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் அடித்தது. இதன்மூலம் 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா திரில் வெற்றி பெற்றது.

    இப்போட்டி கடைசி பந்து வரை மிக சுவாரசியமாக சென்றதால் இந்த சீசனின் சிறந்த போட்டி இது தான் என்று நெட்டிசன்கள் இணையத்தில் மீம்களை பறக்கவிட்டனர்.

    இந்நிலையில், இதுதாண்டா சினிமா (ABSOLUTE CINEMA) என்ற பிரபல மீமை ரகானே புகைப்படத்துடன் கொல்கத்தா அணி பகிர்ந்துள்ளது. இந்த மீம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

    • ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • அந்த அணியின் கேப்டன் ரியான் பராக் அதிகபட்சமாக 95 ரன் எடுத்தார்.

    கொல்கத்தா:

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை 54 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.

    கொல்கத்தாவில் நேற்று நடந்த 53-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 206 ரன்கள் எடுத்தது.

    அடுத்து ஆடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா திரில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 95 ரன் எடுத்தார்.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் ராஜஸ்தான் பேட்டிங் செய்தபோது ஆட்டத்தின் 13-வது ஓவரை மொயீன் அலி வீசினார். அந்த ஓவரின் 2வது பந்தில் இருந்து ஓவரை முழுமையாக எதிர்கொண்ட ரியான் பராக் தொடர்ந்து 5 சிக்சர்களை அடித்து அமர்க்களம் செய்தார். இதன்மூலம் அவர் சாதனை பட்டியல் ஒன்றிலும் இடம் பிடித்துள்ளார். அதாவது, ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரியான் பராக் இணைந்துள்ளார்.

    ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில், ராகுல் தெவாட்டியா, ரவீந்திர ஜடேஜா, ரிங்கு சிங் ஆகியோரும் அடங்குவர்.

    • வெற்றி பெற கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது
    • 207 என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கில் களமிறங்கியது.

    கொல்கத்தாவில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் 53-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் இன்று மதியம் தொடங்கியது.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது. கொல்கத்தாவின் தொடக்க வீரராக சுனில் நரேன் 11 ரன்னிலும், அடுத்து வந்த ரஹானே 30 ரன்னிலும் அவுட் ஆகினர். மற்றொரு தொடக்க வீரர் குர்பாஸ் 35 ரன்னில் அவுட் ஆனார்.

    தொடர்ந்து இறங்கிய ரகுவன்ஷி மற்றும் ரசல் ஜோடி அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தது. ரகுவன்ஷி 44 ரன்னில் அவுட் ஆனார். பின் ரிங்கு சிங் களம் இறங்கினார். மறுபுறம் அதிரடியாக ஆடி சிக்சர்கள் விளாசிய ரசல் 22 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார்.

     இறுதியில்  கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்களை குவித்தது. 207 என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கில் களமிறங்கியது.

    கடைசி வரை மூச்சைப் பிடித்து ஆடிய ராஜஸ்தான் அணி வெற்றி பெற கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்த ராஜஸ்தான் 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் தோல்வியைத் தழுவியது.

    • ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
    • ராஜஸ்தான் அணி 3 வெற்றி, 8 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது.

    கொல்கத்தாவில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் 53-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் இன்று மதியம் தொடங்கியது.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    கொல்கத்தாவின் தொடக்க வீரராக சுனில் நரேன் 11 ரன்னிலும், அடுத்து வந்த ரஹானே 30 ரன்னிலும் அவுட் ஆகினர். ,மற்றொரு தொடக்க வீரர் குர்பாஸ் 35 ரன்னில் அவுட் ஆனார்.

    தொடர்ந்து இறங்கிய ரகுவன்ஷி மற்றும் ரசல் ஜோடி அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தது. ரகுவன்ஷி 44 ரன்னில் அவுட் ஆனார். பின் ரிங்கு சிங் களம் இறங்கினார். மறுபுறம் அதிரடியாக ஆடி சிக்சர்கள் விளாசிய ரசல் 22 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார்.

    இறுதியில்  கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்களை குவித்துள்ளது. எனவே 207 என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கில் களமிறங்குகிறது.

    இதுவரை 10 ஆட்டங்களில் ஆடியுள்ள கொல்கத்தா அணி 4 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என 9 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் அணி 3 வெற்றி, 8 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது.  

    • 53-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
    • ராஜஸ்தான் அணி 3 வெற்றி, 8 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது.

    கொல்கத்தாவில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் 53-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் இன்று மதியம் தொடங்கியது.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதனால் ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச உள்ளது.

    இதுவரை 10 ஆட்டங்களில் ஆடியுள்ள கொல்கத்தா அணி 4 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என 9 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் அணி 3 வெற்றி, 8 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது.  

    • ராஜஸ்தான் அணி 3 வெற்றி, 8 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது.
    • இன்றைய ஆட்டத்தில் வாகை சூடினால், பஞ்சாப் 'பிளே-ஆப்' வாய்ப்பை வெகுவாக நெருங்கி விடும்.

    10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஐ.பி.எல். தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

    கொல்கத்தாவில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் 53-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

    நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் செயல்பாடு இந்த சீசனில் சீராக இல்லை. வெற்றி, தோல்வியை மாறி மாறி சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை 10 ஆட்டங்களில் ஆடியுள்ள அந்த அணி 4 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என 9 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது. கடைசியாக ஆடிய டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 204 ரன்கள் குவித்து அதன் மூலம் 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. அதே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்தில் களம் காணுவார்கள். கொல்கத்தா அணி 'பிளே-ஆப்' சுற்றுக்கு சிக்கலின்றி தகுதி பெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். குறைந்தது மூன்று ஆட்டங்களிலாவது வென்றால் வாய்ப்பில் நீடிக்கலாம். ரகுவன்ஷி, கேப்டன் ரஹானே, சுனில் நரின் பேட்டிங்கில் ஓரளவு நன்றாக ஆடுகிறார்கள். ஆனால் துணை கேப்டன் வெங்கடேஷ் அய்யரின் பேட்டிங் மெச்சும்படி இல்லை. கடைசியாக களம் இறங்கிய 3 ஆட்டங்களில் 7, 14, 7 ரன் வீதமே எடுத்துள்ளார். மிடில் வரிசையில் அவர் பேட்டிங்கை வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும். அத்துடன் சொந்த ஊரில் முடிவு கிடைத்த 4 ஆட்டங்களில் 3-ல் தோற்றுள்ள கொல்கத்தா அணி இந்த முறை உள்ளூர் சூழலை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    ராஜஸ்தான் அணி 3 வெற்றி, 8 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது. அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டதால் இனி நெருக்கடியின்றி விளையாடுவார்கள். ஏற்கனவே லீக்கில் 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் அடைந்த தோல்விக்கும் பழிதீர்க்க முயற்சிப்பார்கள். குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் 35 பந்தில் சதம் விளாசிய 14 வயது 'இளம் புயல்' வைபவ் சூர்யவன்ஷி மீதமுள்ள ஆட்டங்களிலும் ரன்வேட்டை நடத்துவாரா? என ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

    பஞ்சாப் - லக்னோ அணிகள்

    ஐ.பி.எல். தொடரின் 54-வது ஆட்டத்தில் தரம்சாலாவில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    பஞ்சாப் கிங்ஸ் அணி 13 புள்ளிகளுடன் (6 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை) 4-வது இடம் வகிக்கிறது. முந்தைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிராக 191 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து அசத்திய பஞ்சாப் அணி அந்த வெற்றிப்பயணத்தை தொடரும் வேட்கையுடன் ஆயத்தமாகிறார்கள். தொடக்க ஆட்டக்காரர்கள் பிரியான்ஷ் ஆர்யா (22 சிக்சருடன் 346 ரன்), பிரப்சிம்ரன் சிங் (3 அரைசதத்துடன் 346 ரன்) தான் பஞ்சாப் அணியின் பேட்டிங் முதுகெலும்பாக விளங்குகிறார்கள். இவர்கள் 'பவர்-பிளே' வரை தாக்குப்பிடித்து விட்டாலே பஞ்சாப் மெகா ஸ்கோரை குவித்து விடும். மிடில் வரிசைக்கான வேலையை கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், நேஹல் வதேரா, ஷசாங் சிங், ஜோஷ் இங்லிஸ் பார்த்துக் கொள்கிறார்கள். பந்து வீச்சில் அர்ஷ்தீப்சிங், மார்கோ யான்சென், யுஸ்வேந்திர சாஹல் வலு சேர்க்கிறார்கள். இன்றைய ஆட்டத்தில் வாகை சூடினால், பஞ்சாப் 'பிளே-ஆப்' வாய்ப்பை வெகுவாக நெருங்கி விடும்.

     

    முதல் 6 ஆட்டங்களில் 4-ல் வெற்றி கண்ட லக்னோ அணி அடுத்த 4 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றிப் பெற்றது. டெல்லி, மும்பைக்கு எதிரான கடைசி இரு ஆட்டங்களில் சொதப்பலான பேட்டிங்கால் தோல்வியை தழுவியது. மார்க்ரம் (335 ரன்), மிட்செல் மார்ஷ் (378 ரன்), நிகோலஸ் பூரன் (404 ரன்) ஆகியோரைத் தான் அந்த அணி மலை போல் நம்பி இருக்கிறது. இவர்கள் சோடை போனால் அதன் பிறகு பெரும்பாலும் திண்டாடி விடுகிறது. ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட கேப்டன் ரிஷப் பண்ட் (10 ஆட்டத்தில் 110 ரன்) பார்மின்றி தடுமாறுவதும் அந்த அணியின் சறுக்கலுக்கு முக்கியம் காரணமாகும். இனி ஒவ்வொரு மோதலும் வாழ்வா-சாவா? கட்டத்தில் ஆட வேண்டி இருக்கும். இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த லக்னோ, அதற்கு பதிலடி கொடுக்கவும் இது சரியான சந்தர்ப்பமாகும்.

    மலைவாசஸ்தலமான இமாசலபிரதேசம் மாநிலம் தரம்சாலாவில் இந்த சீசனில் நடக்கும் முதல் ஆட்டம் இது என்பதால் இங்குள்ள ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. கடந்த ஆண்டு தரம்சாலாவில் நடந்த ஒரு ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 241 ரன்கள் குவித்தது நினைவு கூரத்தக்கது.

    • புதிய வீரர்கள் வரும்போதெல்லாம் அவர்கள் ஸ்டார் கிடையாது. அவர்கள் ஸ்டாராக உருவாகுகிறார்கள்.
    • கடந்த வருடம், எங்களிடம் இருந்த வீரர்கள் அணியில் நுழைந்தபோது ஸ்டார்களாக இல்லை.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மெகா ஏலத்தில் ஏராளமான இளம் வீரர்களை ஏலம் எடுத்தது. இதில் 14 வயதான வைபவ் சூர்வன்ஷியும் ஒருவர். இவர் 35 பந்தில் சதம் விளாசி சாதனைப் படைத்துள்ளார்.

    இந்த வருடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்றைய மும்பைக்கு எதிரான போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது 11 போட்டிகளில் 3-ல் மட்டும் வெற்றி பெற்று அதிகாரப்பூர்வமாக பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழந்துள்ளது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜோஸ் பட்லர், டிரென்ட் போல்ட் போன்ற சூப்பர் ஸ்டார்களை மெகா ஏலத்தில் எடுக்காததுதான் தோல்விக்கு காரணம் என்ற விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் நாங்கள் சூப்பர் ஸ்டார்களை வாங்க மாட்டோம். இளம் வீரர்களிடம் இருந்து சூப்பர் ஸ்டார்களை உருவாக்குவோம் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பீல்டிங் கோச் திஷாந்த் யாக்னிக் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக திஷாந்த் யாக்னிக் கூறியதாவது:-

    ஸ்டார் (வீரர்கள்) பற்றி நீங்கள் கேட்டது சிறப்பான கேள்வி. புதிய வீரர்கள் வரும்போதெல்லாம் அவர்கள் ஸ்டார் கிடையாது. அவர்கள் ஸ்டாராக உருவாகுகிறார்கள்.

    கடந்த வருடம், எங்களிடம் இருந்த வீரர்கள் அணியில் நுழைந்தபோது ஸ்டார்களாக இல்லை. ஆனால் அவர்கள் ஸ்டார்களாக மாறினர். இப்போது நாங்கள் அணியில் சேர்த்த வீரர்களை, நாங்கள் ஸ்டார்களாக மாற்றுவோம். நாங்கள் சூப்பர் ஸ்டார்களை வாங்கமாட்டோம். சூப்பர் ஸ்டார்களை உருவாக்குவோம். இதுதான எங்களுடைய வாசகம்.

    வைபவ் சூர்யவன்ஷியை பார்க்கும்போது, குஜராத் அணிக்கெதிராக அவரை பேட்டிங்கை பார்த்து எல்லோரும் மகிழ்ச்சியடைந்தனர். ஒட்டுமொத்த ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்தனர். நேரம் வரும்போது, எங்கள் வீரர்கள் ஸ்டாராக மாறுவார்கள். நாங்கள் இதை நம்புகிறோம்.

    இவ்வாறு திஷாந்த் யாக்னிக் தெரிவித்துள்ளார்.

    • தாம் எதிர்கொண்ட முதல் பந்தலையே ஐபிஎல் தொடரில் சிக்சர் அடித்திருக்கிறார்.
    • தற்போது அதிரடி வீரர் என்ற பெயரை வாங்கி விட்டதால், அந்த பெயரை காப்பாற்ற வேண்டும் என்று அவர் நினைக்கக் கூடாது.

    மும்பை:

    நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தோல்வியடைந்ததன் மூலம் நடப்பு தொடரில் இருந்து வெளியேறியது.

    இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வைபவ், டக் அவுட்டில் வெளியேறினார். 14 வயது ஆன வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் அணிக்கு எதிராக 35 பந்துகளின் சதம் விளாசி உலக அளவில் பிரபலமானார். இவருக்கு கிரிக்கெட் வீரர்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனால் வைபோவை ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில் வைபவை ரொம்ப தூக்கி கொண்டாடி அவருக்கு தேவையில்லாத அழுத்தத்தை கொடுக்க வேண்டாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    வைபவ் ஏலத்திற்குள் நுழைந்த போது அவர் தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இளையருக்கான டெஸ்ட் போட்டியில் நல்ல வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவே அவர் சதம் அடித்திருந்தார். அதுவும் 13 வயதில் இந்த ரெக்கார்டு அவர் நிகழ்த்தி இருந்தார். அவருடைய திறமை என்னவென்று நம் அனைவருக்கும் புரிந்து இருக்கும்.

    அதே சமயம் வைபோவை தேவையில்லாமல் ஒரே நாளில் தூக்கி ரொம்ப கொண்டாடக்கூடாது. மேலும் அவர் இளம் வயது என்பதால் தன்னுடைய விளையாட்டை மென்மேலும் அவர் வளர்த்துக் கொள்வார் என்று நினைக்கின்றேன். அதுவும் இல்லாமல் ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவானுடன் அமர்ந்து இன்னிங்சை எப்படி கட்டமைப்பது என்பதை அவர் கற்றுக் கொள்வார்.

    இதன் மூலம் அவர் மென்மேலும் சிறந்த வீரராக மாற வாய்ப்பு இருக்கிறது. தாம் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஐபிஎல் தொடரில் சிக்சர் அடித்திருக்கிறார். தற்போது அதிரடி வீரர் என்ற பெயரை வாங்கி விட்டதால், தொடர்ந்து அனைத்துப் போட்டிகளிலும் அந்த பெயரை காப்பாற்ற வேண்டும் என்று அவர் நினைக்கக் கூடாது.

    இதன் மூலம் அனுபவம் வாய்ந்த பவுலர்கள் இந்த வீரர் சிக்ஸர் அடிக்கத்தான் முயற்சி செய்வார். எனவே நாம் அதற்கு தகுந்த மாதிரி பந்து வீசி அவருடைய விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கத் தொடங்கியுள்ளார்கள். இதனால் வைபவ், தனது பேட்டிங் குறித்து கவலைப்பட தொடங்கி விடுவார்.

    என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

    • பவர் பிளேவில் நாங்கள் அதிக அளவு விக்கெட்டுகளை இழந்து விட்டோம்.
    • நாங்கள் தொடக்கத்தில் நன்றாக விளையாடினாலும், நடுவரிசையில் சொதப்பி விடுகின்றோம்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் - மும்பை அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் நாங்கள் பல விஷயங்களில் தவறு செய்து விட்டோம் என தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் கருத்து தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    முதலில் மும்பை அணிக்கு நான் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். மும்பை வீரர்கள் சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். எங்களுடைய பேட்டிங்கை பொறுத்த வரை இன்றைய நாள் எங்களுக்கான நாள் கிடையாது. 190 -200 ரன்கள் என்பது இந்த ஆடுகளத்தில் எளிதாக சேஸ் செய்யக்கூடிய இலக்கு தான்.

    நாங்கள் சில விஷயங்களை கொஞ்சம் மாற்றி செய்திருக்க வேண்டும். நாங்கள் தொடக்கத்தில் நன்றாக விளையாடினாலும், நடுவரிசையில் சொதப்பி விடுகின்றோம். நானும் துருவ்வும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும்.

    ஆனால் பவர் பிளேவில் நாங்கள் அதிக அளவு விக்கெட்டுகளை இழந்து விட்டோம். நாங்கள் பல விஷயங்களில் தவறு செய்து விட்டோம். எனவே தவறில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அணியின் வளர்ச்சிக்காக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசிக்க முடிவு எடுத்து இருக்கின்றோம். இந்த சீசனில் பல போட்டிகளில் அருகே வந்து தோல்வியை தழுவி இருக்கின்றோம்.

    என்று ரியான் பராக் கூறினார்.

    ×