search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 222245"

    • கோவில்பட்டி தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகும்.
    • கோவில்பட்டி நகரில் சுமார் 1½ லட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் உள்ளனர்.

    கோவில்பட்டி:

    தமிழ்நாடு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற கோவில்பட்டி நகர தலைவர் எம்.மைக்கேல் அமலதாஸ் செய்தியாளரிடம் கூறிய தாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி வளர்ந்து வரும் மிகப் பெரிய நகரமாகும். கோவில்பட்டி நகரில் 36 வார்டுகள் உள்ளன. தொழிற்சாலைகள் மற்றும் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும்.

    கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட மூப்பன்பட்டி, இலுப்பையூரணி, பூசாரிபட்டி, வடக்கு, தெற்கு திட்டக்குளம் மற்றும் மேற்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பாண்ட வர்மங்கலம், மந்திதோப்பு, தோணுகால்,

    சாலைப்புதூர், ஆவல்நத்தம், அய்யனேரி, வெங்கடாசலபுரம், புளி யங்குளம், பாறைப்பட்டி, கிருஷ்ணா நகர், சுபா நகர், கணேஷ் நகர், ராஜகோபால் நகர், பல்லக்கு ரோடு, சண்முக சிகாமணி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் கோவில்பட்டியை சுற்றி சுமார் 30 கிராமங்களில் இருந்தும் தினசரி பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள், வியாபாரிகள், மாணவ, மாணவிகள் கோவில்பட்டி நகருக்குள் வந்து செல்கின்றனர்.

    இதனால் அவ்வபோது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்துக்களால் உயிர் பலியும் ஏற்படுகிறது. கோவில்பட்டி நகரில் சுமார் 1½ லட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் உள்ளனர். இங்கு டி.எஸ்.பி அலுவலகம், கிழக்கு, மேற்கு போலீஸ் நிலையம், போக்குவரத்து பிரிவு மகளிர் போலீஸ் நிலையம், மதுவிலக்கு என பல போலீஸ் நிலையங்கள் உள்ளன. அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் பொது மக்களின் நலன் காத்திடவும், விபத்து மற்றும் குற்றசெயல்களை தடுத்திடும் வகையிலும் போலீசாரின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.

    பெருகி வரும் வாகன போக்குவரத்தை கணக்கில் கொண்டு போக்குவரத்து காவல் ஆய்வாளரை உடன டியாக நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புற்றுக்கோவிலில் தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளுக்கான சிறப்பு வித்யா ஹோமம் நடைபெற்றது.
    • கோடிசக்தி விநாயகருக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் வித்யா ஹோமம் நடைபெற்றது. அரசு தேர்வு, மத்திய இடைநிலை கல்விவாரிய தேர்வு சி.பி.எஸ்.இ., எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 மற்றும் நீட் தேர்வு, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளுக்கான சிறப்பு வித்யா ஹோமம் நடைபெற்றது. இதனையொட்டி காலையில் சங்கல்பம் கணபதி பூஜை, ஸ்தபன கும்பகலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், ருத்ர ஜபம் வருண ஜபம், ஹயக்கிரிவர் ஹோமம், சரஸ்வதி ஹோமம், பூர்ணாகுதி தீபாராதணை நடைபெற்றது.

    பிறகு கோடிசக்தி விநாயகருக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்து வைத்தார். இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை உமா சேதுராஜ், கயல்விழி காந்தி ஆகியோர் செய்தனர்.

    • அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் மாசி முதல் ஞாயிறு அன்னதான பூஜை நடைபெற்றது.
    • கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் பிரசித்தி பெற்ற அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் மாசி முதல் ஞாயிறு அன்னதான பூஜை நடைபெற்றது

    அதை தொடர்ந்து காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜையும், 7 மணிக்கு அம்பாள், உற்சவ அம்பாள், குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான மஞ்சள், மா பொடி, திரவியம், பால், தேன், சந்தனம், பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் செய்தார். இதில் சுப்பாராஜ் சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஆறுமுகம், மகாராஜா, மாரிஸ்வரன், கதிர்காம சுப்பிரமணியன், விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, இசக்கிமுத்து, மாரித்தாய், செல்வராணி, ஜோதிலட்சுமி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அம்மா பூமாதேவி ஆலய குழுவினர் செய்திருந்தனர்.

    • புற்றுக்கோவிலில் மகா சனி பிரதோஷ விழா சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • சங்கரலிங்க சுவாமிக்கு 18 வகையான அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் மகா சனி பிரதோஷ விழா சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மகா சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால சிறப்பு பூஜை நடைபெற்றது.

    பிரதோஷ வழிபாடு சுபமங்களம் தரும், சனிக்கிழமைகளில் வரும் மகா பிரதோஷம் அதாவது சனி பிரதோஷ வழிபாட்டினால் பதவி, புகழ் போன்றவற்றை தருவதோடு, மாயைகளில் மாட்டிக்கொண்டு அலைக்கழியாத நிலையையும் அளிக்கும்.சகல தோஷமும் போக்கி சந்தோஷம் அளிக்கும் பிரதோஷ வழிபாடு சிறப்புடையது என்று ஆன்றோர்களின் ஜதீக வாக்காகும்.

    இதனை முன்னிட்டு மாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபண கும்பகலச பூஜை ருத்திர ஜெபம், வருணஜெபம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சங்கரலிங்க சுவாமி, நந்தியம் பெருமாளுக்கு மஞ்சள் பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தனர்.

    இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • கோவில்பட்டி புற்றுக்கோவிலில் தைப்பூச சிறப்புப் பூஜை நடைபெற்றது.
    • வள்ளி, தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு 18 வகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக்கோவிலில் தைப்பூச சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலை 10 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து வள்ளி, தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். இதில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    • கயத்தாறு- கடம்பூர் சாலையில் அமைந்துள்ள கண்டி கதிர்காம மூர்த்தி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே கயத்தாறு- கடம்பூர் சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கண்டி கதிர்காம மூர்த்தி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 7 மணிக்கு புண்யாவாசனம், கணபதி பூஜை, சங்கல்பம், ஸபர்ஸாகுதி, மூலமந்திர ஜெபம், யாகசாலை பூஜைகளும், பூர்ணகுதி நடைபெற்றது. பின்னர் கும்ப குடம் புறப்பட்டு கோபுரம் மற்றும் கண்டி கதிர்காம மூர்த்தி கதிர்வேலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து 10 மணிக்கு மூலவருக்கு மஞ்சள், மா, பொடி, திரவியம், பால், தேன், விபூதி சந்தனம், கும்பாபி ஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை பூமாதேவி ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் தலைமையில் வெங்கடேசன் பூஜைகளை செய்தார். இதில் குத்தாலிங்கம், திரவியம், கண்டி கதிர்காம மூர்த்தி, சுவாமிநாதன், சங்கரநாராயணன், மாரிஸ்வரன், காந்திமதி, மாரித்தாய், செல்வராணி, சங்கரி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீ கண்டி கதிர்காம மூர்த்தி கோவில் குழுவினர் செய்திருந்தனர்.

    • கூட்டுறவு நகர வங்கியில் போலி நகைகள் மூலம் ரூ.15 லட்சம் வரை கடன் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • நகைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது ரோட்டில் கூட்டுறவு நகர வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.15 லட்சம் வரை கடன் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 3-ந் தேதி கூட்டுறவு சங்கத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கூட்டுறவு சங்க தலைவர் ரமேஷ் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    ஆனால் 3 மாதங்களுக்கு மேலாகியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

    இந்நிலையில் கூட்டுறவு நகர வங்கி ஊழியர்கள் சிலர் போலி நகைக்கான பணத்தை செலுத்தி திருப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

    போலி நகைகள் வைத்து உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களை காப்பாற்ற நினைக்கும் மேலாண்மை இயக்குநர் அகிலா மற்றும் அதிகரிகளை கண்டித்து வங்கியின் நிர்வாக இயக்குனராக உள்ள ராஜேந்திரன் என்பவர் திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.

    • கோவில்பட்டியில் விழிப்புணர்வு கைப்பந்து போட்டி நடந்தது.
    • வெற்றி பெற்ற அணிகளுக்கு கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் கிழக்கு காவல் நிலையம் சார்பில், போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கைப்பந்து போட்டி நடந்தது. கோவில்பட்டி தனியார் கலைக் கல்லூரி வளாகத்தில் நடந்த இப்போட்டியில், எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி ஏ.பி.சி. அணிகள், வாரியர்ஸ் கைப்பந்து கழகம், காவல்துறை அணி, இலுப்பையூரணி தாமஸ் நகர் அணி ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டன. போட்டியின் தொடக்கமாக போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    இறுதி போட்டியில், வாரியர்ஸ் கைப்பந்து கழக அணியும், எஸ்.எஸ்.டி.எம். பி அணியும் மோதின. இதில் 15 - 13, 15 - 7 என்ற செட் கணக்கில் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது. 2-வது இடத்தை எஸ்.எஸ்.டி.எம். 'பி' அணியும், 3-வது இடத்தை காவல்துறை அணியும் பெற்றன.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் கோப்பைகளை வழங்கி பாராட்டினார். இதில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாதவராஜா, தர்மராஜ், ரவீந்திரன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
    • கன்னிப்பெண்கள், சுமங்கலி பெண்கள் ஆலய வளாகத்தில் திருவிளக்கு பூஜை செய்தனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் தை முதல் செவ்வாய் காட்சி திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது.

    மாலை 6 மணிக்கு மேல் ஆலய வளாகத்தில் கன்னிப்பெண்கள், சுமங்கலி பெண்கள் திருவிளக்கு பூஜை செய்தார்கள். சங்கரேஸ்வரி, சுப்பாராஜ் தொடங்கி வைத்தார்கள். பூஜைகளை விளக்கு பூஜை குழுவினர் பத்மாவதி தலைமையில், லட்சுமணன் சுவாமி ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் செய்தார். இதில் மீனாட்சி, இசக்கிமுத்து, மாரித்தாய், சண்முகத்தாய், செல்வராணி, ஜோதிலட்சுமி, சந்திரா மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முடிவில் அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலய காட்சி குழுவினர் செய்தனர்.

    • எம்.ஜி.ஆரின் சிலைக்கு ஓ.பி.எஸ். அணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் வினோபாஜி தொடங்கி வைத்தார்.

    கோவில்பட்டி:

    எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு, கோவில்பட்டி புதுரோட்டில் உள்ள அவரது சிலைக்கு ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர் வினோபாஜி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மார்க்கெட் அருகே பண்ணைத் தோட்டம் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியையும் அவர் தொடங்கி வைத்தார்.

    இதில் இளைஞர் அணி இணைச் செயலாளர் கருப்பூர் சீனி, கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, நகர செயலாளர் வெள்ளத்துரை, மத்திய ஒன்றிய செயலாளர் கண்ணன், கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜ், நகர செயலாளர் பிரபாகரன், கடம்பூர் நகர செயலாளர் மருதுபாண்டி, புதூர் ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், எட்டயபுரம் நகர செயலாளர் முத்து முருகன், பொதுக்குழு உறுப்பினர் வருமூர்த்தி, மாவட்ட இணைச்செயலாளர் ஜெயசீலன், மாவட்ட துணை செயலாளர் நடராஜன், இளைஞர் அணி செயலாளர் தியாகராஜன், நிர்வாகிகள் பாலமுருகன், செந்தில் முருகன், மலை மாரியப்பன், கந்தசாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கோவில்பட்டியில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மங்கையர்களுக்கு திருமாங்கல்ய பொருள்கள் வழங்கப்பட்டது.
    • பொறியாளர் தவமணி பெண்களுக்கு திருமாங்கல்ய பொருள்கள் மற்றும் சேலைகளை வழங்கினார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் தமிழ்நாடுடாக்டர் சிவந்தி ஆதித்தனார்நற்பணி மன்றம் சார்பில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மங்கையர்களுக்கு திருமாங்கல்ய பொருள்கள் வழங்கப்பட்டது.

    கோவில்பட்டி வேலாயுதபுரம் அன்னை ஸ்ரீ பத்ரகாளி காளியம்மன் கோவில் முன்புநடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மன்றத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மன்ற இணைச் செயலாளர்கள் விஜயலட்சுமி, துர்கேஷ், நளினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் மன்ற உறுப்பினரும் நகர கூட்டுறவு வங்கி இயக்குனருமான லவராஜா குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். மன்ற நிர்வாகி மகாலட்சுமி வரவேற்று பேசினார். சக்கரை பொங்கலை சண்முகசுந்தரம் பக்தர்களுக்கு வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற துணைத் தலைவரும், நகர்மன்ற உறுப்பினருமான பொறியாளர் தவமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அனைத்து பெண்களுக்கும் திருமாங்கல்ய பொருள்கள் மற்றும் சேலைகளை வழங்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் நாகராஜன், திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்கள் குழு தலைவர் கன்னியம்மாள், லதா மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
    • சாலை விதிகளை பொருட்படுத்தாமல் செல்வதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் பேசினார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் இணைந்து, கோவில்பட்டி பாரத ஸ்டேட் வங்கி முன்பு சாலைப் பாதுகாப்பு வார விழா நடந்தது. இதில் கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன், பஸ், ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களில் சென்றோருக்கு, சாலை பாதுகாப்பு விதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    மேலும், வாகனங்களுக்கு முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கரை ஓட்டினார். பின்னர் வாகன ஓட்டிகள் அனைவரும் சாலை பாதுகாப்பு விதிகளை மதிக்க வேண்டும். சாலை பாதுகாப்பு விதிகளை பொருட்படுத்தாமல் செல்வதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்து விளக்கிப் பேசினார். விழாவில் மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாத் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவன தலைவர் தேன்ராஜா, நிர்வாக குழு உறுப்பினர்கள் ராம சுப்ரமணியன், முத்து மாரியப்பன், மேற்பார்வை யாளர் மாடசாமி, கோவில்பட்டி ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் மற்றும் பயிற்சியாளர்கள், வாகன விற்பனை நிலைய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×