என் மலர்
நீங்கள் தேடியது "பாடல்"
- தெலுங்கானா அரசு சார்பில் டெல்லி குடியரசு தின விழாவில், 7 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- நேரம் கிடைக்கும் போதெல்லாம், ராமாயணம், பகவத் கீதை குறித்து நாட்டு பாடல்களை பாடி அசத்தி வருகிறார்.
டெல்லி குடியரசு விழா அணிவகுப்பில், ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் அம்மாநிலத்தின் பெருமையை விளக்கும் வகையில் வாகன ஊர்வலம் நடைபெறும்.
இந்த முறை தெலுங்கானா அரசு சார்பில் டெல்லி குடியரசு தின விழாவில், 7 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதில், கடந்த 22 ஆண்டுகளாக ஐதராபாத் மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளராக பணியாற்றும் நாராயணம்மா என்பவரும் கலந்துகொள்கிறார்.
ரங்காரெட்டி மாவட்டம், யாச்சாரம் பகுதியை சேர்ந்த இவர் கடந்த 22 ஆண்டுகளில் நாள் தவறாமல் பணியாற்றி வருவதுடன், கூடுதல் நேரம் ஒதுக்கி துப்புரவு தொழிலை அக்கறையுடன் செய்து வருகிறார்.
மேலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம், ராமாயணம், பகவத் கீதை குறித்து நாட்டு பாடல்களை பாடி அசத்தி வருகிறார். இதற்காக நாராயணம்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதேபோன்று, சூர்யாபேட்டை மாவட்டம், கோதாடா பகுதியை சேர்ந்தவர் நாகலட்சுமி. பட்டதாரியான இவர் தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஒரு ஆட்டோவில், கூண்டு போல் ஏற்பாடு செய்யப்பட்ட மொபைல் கழிப்பறையை இணைத்து ரெயில் நிலையம், பஸ் நிலையம், மார்க்கெட், சினிமா அரங்குகள் போன்ற மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் நிறுத்தி வைப்பார். இது பெண்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடியதாகும்.
இதை யார் வேண்டுமானாலும் இலவசமாக உபயோகிக்கலாம். இதுபோன்ற சேவையை நாகலட்சுமி தவறாமல் செய்து வருகிறார்.
சிறப்பாக செயலாற்றி வரும் சைலஜா, அனிதா ராணி, சுரேகா, ரமாதேவி, லட்சுமி ஆகிய 5 பெண் ஊராட்சி மன்ற தலைவிகளையும் தெலுங்கானா அரசு தேர்வு செய்துள்ளது.
- கதாநாயகனாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார்.
- படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை'.
இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார்.

மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். விஹவ்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், காதலர் தினத்தை ஒட்டி, ஏழு கடல் ஏழு மலை படத்தின் முதல் சிங்கிளான "மறுபடி நீ" பாடலை படக்குழு வெளியிட்டது.
- பெண் போலீஸ் சசிகலாவின் போதைக்கு எதிரான இந்த முயற்சிக்கு நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் கூறி வருகின்றனர்.
- போதை இல்லா வாழ்க்கை படுஜோருங்க. இது போதை இல்லா தமிழகம் என்று கூறுங்க..
ஆவடி:
ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரியும் சசிகலா, போதைப் பொருளுக்கு எதிராக தான் எழுதிய பாடல் ஒன்றை அவரே அழகாக பாடி, அதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெண் போலீஸ் சசிகலாவின் போதைக்கு எதிரான இந்த முயற்சிக்கு நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் கூறி வருகின்றனர்.
பெண் போலீஸ் எழுதி பாடிய பாடலின் ஒரு சில வரிகள் வருமாறு:
உனக்கும் வேணா, எனக்கும் வேணாம் போதை தானுங்க... ஒன்னா சேர்ந்து ஓரம் கட்ட சேர்ந்து பாடுங்க.
போதையில்லா மேடையிலே நடனம் ஆடுங்க.. வாழ்க்கை ஒரு வீணையப்பா பார்த்து வாசிங்க.
கஞ்சாவத்தான் நஞ்சாகத்தான் எண்ணிப்பாருங்க...
கஞ்சா போதையைத்தான் கைவிடனும் தம்பி.. குடும்பம் இருக்குதுப்பா உங்களைத்தான் நம்பி..
போதை இல்லா வாழ்க்கை படுஜோருங்க. இது போதை இல்லா தமிழகம் என்று கூறுங்க..
- இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.
- இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இயக்குனர் பிஜோய் நம்பியார் இயக்கி விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் "போர்" திரைப்படத்தின் 2வது பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
தமிழில் டேவிட், சோலோ உள்ளிட்ட திரைப்படங்கள், நவரசா, ஸ்வீட் காரம் காபி போன்ற பிரபல வெப் சீரீஸ்களை இயக்கியவர் இயக்குனர் பிஜோய் நம்பியார்.
இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

தமிழ் மாட்டு இல்லாமல், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், தமிழ் மற்றும் இந்தியில் உருவாகி இருக்கும் "போர்" படம் வரும் மார்ச் 1ம் தேதி திரைக்கு வருகிறது. இந்தியில் "டாங்கே" என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தில் தமிழில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர்
இந்த படத்தின் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில், போர் படத்தின் 2வது பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. "நண்பகல் நேரம்" என்ற இந்த பாடல் வைரலாகி வருகிறது.
- பன்னாட்டு வணிக துறை சார்பில் 3 நாள் கருத்தரங்கு நிகழ்ச்சி குளோபிஸ் என்ற பெயரில் நடந்தது.
- ஜப்பான் நாட்டு ரெட்ரோ நிறுவனத்தின் முன்னாள் பொது மேலாளர் கோபுகி சேன் பங்கேற்றார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு வணிக துறை சார்பில் 3 நாள் கருத்தரங்கு நிகழ்ச்சி குளோபிஸ் என்ற பெயரில் நடந்தது.
இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக ஜப்பான் நாட்டு ரெட்ரோ நிறுவனத்தின் முன்னாள் பொது மேலாளர் கோபுகி சேன் பங்கேற்றார்.
ஜப்பான்-இந்தியா நாடுகளின் வர்த்தக சூழல் தொடர்பாக வல்லுநர்களுடன் ஆங்கிலத்தில் அவர் கலந்துரையாடினார்.
இந்த கலந்துரையாடலின் முடிவில் பேசிய அவர் தமிழ் எனக்கு பிடித்த மொழி.எனக்கு நன்றாகவே தமிழ் தெரியும். தமிழ் சினிமா பாடலும் பாடுவேன் என்று குறிப்பிட்டார்.
அதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படத்தில் இருந்து ஒருவன் ஒருவன் முதலாளி... உலகில் மற்றவன் தொழிலாளி... விதியை நினைப்பவன் ஏமாளி, அதை வென்று முடிப்பவன் அறிவாளி என்று முழு பாடலையும் அவர் பாடினார்.
இதனால் அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது.
அவர் பாடிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
அத்துடன் தனக்கு தமிழ் படங்கள் பிடிக்கும், அதிலும் ரஜினி படங்கள் அதிகம் பிடிக்கும் என்று குறிப்பிட்ட கோபுகி சேன் தமிழ் திரைப்படங்களில் தான் ரசித்து பல விஷயங்களை பகிர்ந்தார்.
- பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வதோடு கட்டிடக் கலையின் நுட்பங்களையும் பார்த்து பிரமிப்புடன் செல்கின்றனர்.
- கருவறையை நோக்கி ருக்மணி, தேவசேனாபதி ஆகியோர் சிவபுராணம் பாடியப்படி வந்தனர்.
தஞ்சாவூர்:
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வதோடு கட்டிடக் கலையின் நுட்பங்களையும் பார்த்து பிரமிப்புடன் செல்கின்றனர்.
இந்நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த சிறுமி ருக்மணி (வயது 12), அவரது 6 வயது சகோதரர் தேவசேனாபதி ஆகிய இருவரும் தஞ்சையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து பின்னர் பெரிய கோவிலுக்கு சென்றனர். அங்கு பெருவுடையாரை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அந்த நேரத்தில் கருவறையை நோக்கி ருக்மணி, தேவசேனாபதி ஆகியோர் சிவபுராணம் பாடியப்படி வந்தனர்.
பின்னர் பக்தர்களை கடந்து கருவறை முன்பு நின்று கொண்டு மனம் உருகி நமச்சிவாய வாழ்க.. நாதந்தாழ் வாழ்க... என மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணத்தை வெண்கல குரலில் சரியான ஏற்ற இறக்கத்துடன் ஒரு சேர தூய தமிழில் பாடினர். இதனை பெருவுடையார் தரிசனத்துக்காக கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த சிறு வயதில் பக்தியுடன் இப்படி ஒரு பாடலா என மெய்மறந்து ரசித்ததோடு குழந்தைகள் இருவரையும் மனதார பாராட்டினர்.
குழந்தைகளின் இந்த பக்தி செயல் ஆன்மீக அன்பர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையில் அமைந்திருந்தது என்றால் அது மிகையல்ல.
- பாடல் வெளியாகி சில நாட்களில் பட்டித் தொட்டி எங்கும் எதிரொலித்தது. இப்பாடலுக்கான யு ட்யூப் வீடியோ இதுவரைக்கும் 449 மில்லியன் வியூஸ்களையும், 4.8 மில்லியன் லைக்ஸ்களை வாங்கியுள்ளது.
- இந்த பாடலின் மூலம் எனக்கு இதுவரைக்கும் எந்த ஒரு பைசா வருமானமும் கிடைக்கவில்லை
எஞ்சாய் எஞ்சாமி எனும் பாடல் மார்ட் 7 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு வெளியானது.இந்த பாட்டை பாடியவர் 'அறிவு' மற்றும் 'தீ'. பாடகி தீ- க்கு இதுவே முதல் பாடல் ஆகும். சந்தோஷ் நாராயணன் தான் இப்பாடலிற்க்கு இசையமைத்தார்.
இப்பாடல் மாஜா என்னும் ம்யூசிக் லேபல் தயாரித்தது.
பாடல் வெளியாகி சில நாட்களில் பட்டித் தொட்டி எங்கும் எதிரொலித்தது. இப்பாடலுக்கான யு ட்யூப் வீடியோ இதுவரைக்கும் 449 மில்லியன் வியூஸ்களையும், 4.8 மில்லியன் லைக்ஸ்களை வாங்கியுள்ளது.

இந்தப் பாடல் தமிழ் பாடலை உலகளவிற்க்கு கொண்டு புகழ் வர செய்தது. இந்த பாடல் வெளியாகி 3 ஆண்டு முடிவடைந்த நிலையில் .அதன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ட்விட்டரில் ஒரு வீடியோ பதிவினை பதிவிட்டுள்ளார் அதில் அவர் "இந்த பாடலின் மூலம் எனக்கு இதுவரைக்கும் எந்த ஒரு பைசா வருமானமும் கிடைக்கவில்லை , இந்த பாடலுக்கான வருமானம் எல்லாம் அந்த பாடல் தயார் செய்த ம்யூசிக் தயாரிப்பாளர்களுக்கே செல்கிறது . நான் இது வரைக்கும் எந்த வலைதளங்களிலும் இதை பற்றி பேசியதில்லை. இதை பற்றி இப்பொழுது பேச தோன்றியது அதனால் கூறுகிறேன் . இப்பதிவினை முடிந்த அளவுக்கு அனைவருக்க்கும் பகிர செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தனி இசைக் கலைஞர்களுக்கு கூடுதல் வெளிப்படை தன்மையாக இயங்கும் தளங்கள் தேவை அதனால் நான் ஒரு ம்யூசிக் ஸ்டூடியோ ஒன்று தொடங்குவேன் .
தனி இசைக் கலைஞர்கள் இதனால் கவலை பட வேண்டாம் உங்களை வந்து சேர வேண்டியது கண்டிப்பாக வந்து சேரும்" என்று அவரின் ஆதங்கத்தை அதில் பதிவிட்டுள்ளார்.
- ஏ.ஆர். ரகுமானின் 'சிங்கப் பெண்ணே' பாடல் வரிகள் என்னை ரொம்பவும் கவர்ந்தது
- இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இணையத்தில் கவிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னையில் மகளிர் தின விழாவையொட்டி சிறந்த மகளிருக்கான விருது வழங்கு நிகழ்ச்சி நடந்தது. இதில் இந்திய மகளிர் கபடி பயிற்சியாளர் கவிதா செல்வராஜுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கவிதா பேசியதாவது :-
கடந்த 2013-ஆம் ஆண்டு கபடி போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் உள்ளிட்ட பல பதக்கங்கள் பெற்றேன். மேலும் புகழின் உச்சியில் இருக்கும் போது திருமணம் செய்து கொண்டதால் கபடி விளையாட்டை தொடராமல் விட்டு விட்டேன். தொலைக்காட்சியில் கூட விளையாட்டை
பார்க்க மாட்டேன்., எல்லாவற்றையும் மறந்து இருந்தேன். 2019- ல் வெளிவந்த 'பிகில்' படத்தை ஒரு தியேட்டரில் பார்த்த போது ஏ.ஆர். ரகுமானின் 'சிங்கப் பெண்ணே' பாடல் வரிகள் என்னை ரொம்பவும் கவர்ந்தது.
அந்த பாடல் வரிகள் எனக்கு மேலும் ஊக்கத்தை அளித்தது. மீண்டும் கபடி விளையாட்டுக்கு சென்று சாதிக்க வேண்டும்., எனது திறமைகளை கபடி உலகில் பயன்படுத்த வேண்டும் என முடிவு செய்தேன்.
அதனை எனது கணவர், மாமியாரிடம் சொன்னேன். அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். அதன்பின் இந்திய மகளிர் கபடி பயிற்சியாளர் பதவி கிடைத்தது. அதன் மூலம் மகளிர் கபடி குழுவினருக்கு பயிற்சியளித்து வருகிறேன்.
எனது பயிற்சி மூலம் மகளிர் கபடி குழுவுக்கு பல பரிசுகள் கிடைத்தன. இதற்கு காரணம் 'சிங்கப்பெண்ணே' பாடல் தான். அந்த பாடல் எனக்கு ஒரு முன் உதாரணமாக அமைந்தது. இந்த பாடலை கொடுத்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு மிக்க நன்றி. இந்த தகவல் ஏ.ஆர் ரகுமானை சென்றடைய வேண்டும் என்று கூறினார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. அதனை பார்த்தஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இணையத்தில் கவிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் 'உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி கவிதா.. நீங்கள் உயர்வடைந்து கொண்டே இருங்கள் என அவர் பதிலளித்து உள்ளார்.
Thank you for your kind words Kavitha ..keep rising?????? https://t.co/G1s5xu86RO
— A.R.Rahman (@arrahman) March 11, 2024
- சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதை நாட்டு.. நாட்டு... பாடல் பெற்றிருந்தது.
- இந்தியாவுக்கு மீண்டும் பெருமை சேர்ப்பது போல் அமைந்திருந்தது
ஆஸ்கார் விருதுகள் -2024 வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ' 'ஆர்ஆர்ஆர் ' படத்தின் பாடல் இந்த விழாவை அலங்கரித்தது.
பிரபல நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் இணைந்து நடனம் ஆடும் நாட்டு.. நாட்டு... பாடல் ஒளிபரப்பாகி ஆஸ்கார் விழாவை சிறப்பித்தது. ஏற்கனவே 2023- ம் ஆண்டில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதை நாட்டு.. நாட்டு... பாடல் பெற்றிருந்தது.
இதன் மூலம் இந்திய பாடலுக்கு பெருமை கிடைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த ஆண்டும் ஆஸ்கார் விழாவில் இந்த பாடல் காட்சிகள் திரையில் காட்டப்பட்டது இந்தியாவுக்கு மீண்டும் பெருமை சேர்ப்பது போல் அமைந்திருந்தது.
தற்போது இது தொடர்பான 'வீடியோ 'எக்ஸ்' இணையத்தில் வைரலாகி வருகிறது.
- புதிய இசையமைப்பாளர் ஷங்கர் இப்படத்திற்கு இசையமைக்க FDFS என்ற நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.
- . இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெற்றி மாறன் வெளியிட்டார்
அறிமுக இயக்குனர் பாஸ்கல், வெப்பம் குளிர் மழை படத்தை இயக்குகிறார். புதிய இசையமைப்பாளர் ஷங்கர் இப்படத்திற்கு இசையமைக்க FDFS என்ற நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெற்றி மாறன் வெளியிட்ட நிலையில்.
இப்பொழுது அப்படத்தின் முதல் பாடலான 'டமக்கு டமக்கா' வெளியாகியுள்ளது. சூப்பர் சிங்கர் புகழ் ஸ்ரீநிஷா ஜெயசீலன் இப்பாடலை பாடியுள்ளார்.
அறிமுக நடிகர்களான திரவ் மற்றும் இஸ்மத் பானு இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். எம்.எஸ். பாஸ்கர் இப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. டமக்கு டமக்கா பாடல் நல்ல ஃபீல் குட் பாடலாக அமைந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படத்தின் காட்சி முன்னோட்டத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்
- மார்ச் 29ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
அறிமுக இயக்குனர் பாஸ்கல், வெப்பம் குளிர் மழை படத்தை இயக்குகியுள்ளார். புதிய இசையமைப்பாளர் சங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். FDFS நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெற்றி மாறன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டார்.
இந்த படத்தில், திரவ் மற்றும் இஸ்மத் பானு ஆகியோர் நடிகர்களாக அறிமுகமாகின்றனர். எம்.எஸ். பாஸ்கர் இப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின், டிரெயிலர் சென்ற வாரம் வெளியானது. மார்ச் 29ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் படத்தின் காட்சி முன்னோட்டத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஊர் பெரியவர் தோற்றத்தில் நடித்திருக்கும், எம்.எஸ் பாஸ்கர் மிகவும் நகைச்சுவையாக நடித்து இருக்கிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரகனி, நாசர் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்
- ஷங்கருடன் இணைந்து இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.
நடிகர் ராம் சரண் தெலுங்கு சினிமாவில் நட்சத்திர நடிகர் . இவர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான RRR படத்தில் நடித்தார். RRR படம் மிகப் பெரிய படமாக அமைந்தது. அந்த படத்தில் வரும் 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருதை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் கேம் சேஞ்சர் படத்தில் நடித்துள்ளார். அரசியல் அதிரடி திரில்லர் படமாக இது உருவாகியுள்ளது. இயக்குனர் ஷங்கர் தெலுங்கு மொழியில் இயக்கும் முதல் படம் இதுவே. ஷங்கருடன் இணைந்து இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.
கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரகனி, நாசர் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் ராம்சரண் இரு வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமன் இசையமைக்க திரு ஒளிப்பதிவு மேற்கொள்ள தில் ராஜு இப்படத்தை தயாரித்துள்ளார்.
இந்நிலையில் கேம் சேஞ்சர் படத்தின் முதல் பாடலான ஜரகண்டி பாடல் நாளை காலை 9 மணிக்கு வெளியாகவுள்ளது. எக்ஸ் பக்கத்தில் #ஜரகண்டி என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.