search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முருங்கை"

    • வேளாண்மை துறையில் பதிவு செய்து அரசு சலுகைகள் பெற்று, மானியத்தின் மூலம் சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயம் நடக்கிறது.
    • தற்போது கமிஷன் கடைகளில் ஒரு கிலோ எடையுள்ள முருங்கைக்காய் ரூ.25 முதல் 28 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதிக்கு உட்பட்ட பரமன்குறிச்சி, மெஞ்ஞான புரம், செட்டியாபத்து, தண்டுபத்து, சீர்காட்சி, வெள்ளாளன்விளை, லட்சுமிபுரம், நங்கைமொழி உட்பட 18 ஊராட்சி மன்ற பகுதிகளிலும், அதுவும் செம்மணல் மற்றும் வண்டல் மண் நிறைந்தபகுதிகளில் முருங்கை மற்றும் தென்னை பயிரிடுவதில் விவசாயிகள் முழு கவனம் செலுத்தி வருகின்றனர். வேளாண்மை துறையில் பதிவு செய்து அரசு சலுகைகள் பெற்று, மானியத்தின் மூலம் சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயம் நடக்கிறது.

    தற்போது கமிஷன் கடைகளில் ஒரு கிலோ எடையுள்ள முருங்கைக்காய் ரூ.25 முதல் 28 வரையிலும், தேங்காய் ஒரு கிலோ ரூ.26-க்கும் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் அதிக அக்கறை எடுத்து தீவிரமாக பயிரிட்டு வருகின்றனர்.

    • கிருஷ்ணராயபுரத்தில் முருங்கை சீசன் துவங்கியது
    • ஒரு கிலோ முருங்கை 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படு கிறது

    கரூர்:

    கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பகுதியில் முருகைக்காய் சீசன் தொடங்கியுள்ளது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பழைய ஜெயங்கொண்டம், புதுப்பட்டி, லட்சுமணம்பட்டி, பாப் பக்காப்பட்டி, மலையாண்டிப்பட்டி, கோரக்குத்தி, மணவாசி, சிவாயம், ஆகிய இடங்களில் விவசாயிகள் பரவ லாக, முருங்கைக்காய் சாகுபடி செய்துள்ளனர். தற்போது முருங்கை செடிகளில் பூக்கள் பூத்து வருகிறது.இதில் முருங்கை பிஞ்சுகள் அதிகமாக காய்க்க தொடங்கியுள்ளன.

    நன்கு தரமாக வளர்ச்சியடைந்த முருங்கைக் காய்கள் அறுவடை செய்யப்பட்டு, கரூர், தோகைமலை, குளித்தலை, முசிறி ஆகிய இடங்களில் செயல்படும் காய்கறி மார்க்கெட்டுகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. தற்போது சீசன் துவக்கம், வரத்து அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோ முருங்கை 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படு கிறது. வரும் வாரங்களில் முருங்கை விலை உயரும் என விவசாயிகள் எதிர் பார்த்துள்ளனர்.





    • முருங்கையில் கால்சியம், இரும்பு சத்து, வைட்டமீன்கள் நிறைந்து காணப்படுகிறது.
    • மண் வளத்தால் தனி ருசி ஏற்படுகிறது.

    மூலனூர் :

    தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் மூலனூர் குட்டை முருங்கைகாய்க்கு இந்த ஆண்டு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியு ள்ளது. இதற்கு மூலனூர் முருங்கை விவசாயிகள் வரவேற்பு தெரிவித்து ள்ளனர்.

    ஒரு தமிழ் சினிமாவில் நடிகர் பாக்கியராஜ் முருங்கைகாய் சாப்பிடுவ தால் என்ன விதமான பலன்கள் ஏற்படும் என்பதை பற்றி ருசிகரமான காட்சி ஒன்றை வைத்திருப்பார். அது மட்டுமல்ல முருங்கையில் கால்சியம், இரும்பு சத்து, வைட்டமீன்கள் நிறைந்து காணப்படுகிறது. இதைத்தவிர மலச்சிக்கல், வயிற்றுப்புண், கண் தொடர்பான நோய்கள், சிறுநீரகத்தை பலப்படுத்து வது என பயன் தரும் மருத்துவ தன்மை கொண்டது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில்:- திருப்பூர் மாவட்டத்தில் மூலனூர், வெள்ளகோவில், முத்தூர், காங்கேயம் ஆகிய வட்டார பகுதிகளில் அதிக அளவில் முருங்கைக்காய் விளைவிக்கப்படுகிறது. அதில் மூலனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. முருங்கைக்கு ஏற்ற மண் வளம், குறைவான நீர், மிக குறைவான பராமரிப்பு செலவு ஆகிய காரணத்தால் விவசாயிகளால் விருப்பத்து டன் சாகுபடி செய்யப்படு கிறது. ஆண்டில் பத்து மாதங்கள் மகசூல் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டு இதன் சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது.

    மேலும் மூலனூர் முருங்கைக்கு ருசி அதிகம் என்பதால் பொதுமக்கள் மத்தியில் நுகர்வு அதிகம் உள்ளது. வெள்ளகோவிலில் வாரத்தில் ஞாயிற்றுக்கிழ மைகளில் நடைபெறும் முருங்கைக்காய் சந்தைக்கு மூலனூர் விவசாயிகளால் டன் கணக்கில் விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

    வெளியில் இருந்து வரும் மொத்த வியாபாரிகள், முருங்கைக்காய்களை விவசாயிகளிடமிருந்து வாங்கி சென்னை, திருச்சி, கோவை, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். மேலும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- திருச்சி, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களிலும் அதிக அளவில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது என்றாலும் மூலனூர் பகுதியில் சாகுபடி செய்யும் குட்டை ரக முருங்கைக்கே ருசி அதிகம். எங்கள் பகுதி மண் வளத்தால் தனி ருசி ஏற்படுகிறது. .அதனால் தான் மக்களால் விரும்பி வாங்கி செல்கிறார்கள். இந்திய அளவில் மூலனூர் முருங்கை க்கு கிராக்கி அதிகம். இந்த நிலையில் தமிழக அரசு புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கை எடுத்திருப்பது மகிழ்ச்சிய ளிக்கிறது. இதனால் உற்பத்தியும் லாபமும் அதிகரிக்க வாய்ப்பு ள்ளது. தமிழக அரசுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    • வரத்து குறைவால் முருங்கை விலை உயர்ந்துள்ளது.
    • கிலோ ரூ.90 க்கு விற்பனையாகின்றது.

    கரூர்:

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் ஈசநத்தம், ஆலமரத் துப்பட்டி, சாந்தப்பாடி, கோவிலூர், நாகம் பள்ளி, வெஞ்சமாங்கூடலூர் உள்ளிட்ட 20 ஊராட்சிகளில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் முருங்கை பயிரிடப்படுகின்றது.இப்பகுதி முருங்கை காய் திரட்சியாகவும், சுவையாகவும் இருக்கும் என்பதால் தமிழகத்தில் மட்டுமல்லாமல், கேரளா, மற்றும் பெங்களூரு, பூனே, மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களிலும் அரவக்குறிச்சி பகுதி முருங்கை காயிக்கு தனி மவுசு உள்ளது. ஆகையால் அரவக்கு றிச்சி, மலைக்கோவிலூர், ஈசநத்தம் இந்திரா நகர், பள்ளப்பட்டி பழனி சாலை உள்ளிட்ட மொத்த கொள் முதல் மையங்களிலிருந்து, முருங்கை மொத்த வியா பாரிகள் வாங்கி மற்ற இடங்களுக்கு அனுப்பு வைப்பார்கள். இந்நிலையில் கடந்த மாதங்களில் முருங்கை மரங்களில் பூக் கள் பூத்துக் குழுங்கியது. தற்போது மழையினால் பூ உதிர்தல் உள்ளிட்ட காரணங்களால் அறு வடை இல்லாமல் உள் ளது. இதனால் தற்போது விவசாயிகளிடமிருந்து முருங்காய் மொத்த வியாபாரிகளுக்கு வரத்து குறைவாக உள்ளது. இதனால் சென்ற மாதங்களில் முருங்கை கிலோ ரூ.40 முதல் ரூ.60 வரை இருந்தது. தற்போது கிலோ ரூ.90 க்கு விற்பனையாகின்றது. சில்லரை விற்பனையில் ஒரு காய் ரூ.5க்கு விற்பனையாகின்றன.

    • ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.20 க்கும், மரம் முருங்கை ரூ.15 க்கும், கரும்புமுருங்கை ரூ.30 க்கும் கொள்முதல் செய்தனர்.
    • 45 விவசாயிகள் 5 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது, இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    நேற்று 45 விவசாயிகள் 5 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ .20 க்கும், மரம் முருங்கை ரூ.15 க்கும், கரும்புமுருங்கை ரூ.30க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று கொள்முதல் செய்த முருங்கைக்காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர் ஆகிய பகுதியில் உள்ள ஹோட்டல் மற்றும் மார்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்ததாக வெள்ளகோவிலைச் சேர்ந்த முருங்கைக்காய் வியாபாரி எம்.பி.முருகேசன் கூறினார்.

    ×