என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223336"

    • பிரெட்டில் சுவையான சூப்பரான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று சில்லி பிரெட் செய்து உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களை அசத்துங்கள்.

    தேவையான பொருட்கள்:

    பிரெட் ஸ்லைஸ் - 10,

    தக்காளி சாஸ் - ஒரு தேக்கரண்டி,

    சிவப்பு கேசரி கலர் - சிறிதளவு,

    கொத்தமல்லி இலை - அரை கட்டு,

    எலுமிச்சை ஜுஸ் - சிறிதளவு,

    கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி,

    வெங்காயம் - 2

    தக்காளி - 2

    கீறிய பச்சை மிளகாய் - 3,

    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி,

    நெய் - ஒரு தேக்கரண்டி,

    எண்ணெய் - தேவையான அளவு,

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பிரெட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    வாணலியில் நெய் விட்டு பிரெட் துண்டுகளை வறுத்துக் கொள்ளவேண்டும்.

    அதே வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கிய பின் தக்காளி போட்டு வதக்கவும்.

    தக்காளி வதங்கிய பின்னர் தக்காளி சாஸ், சிவப்பு கேசரி கலர், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் போட்டு வதக்கவும்.

    மசாலா பச்சை வாசனை போனவுடன் வறுத்து வைத்துள்ள பிரெட் துண்டுகள், உப்பு போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.

    பரிமாறும் முன் கொத்தமல்லி இலை, எலுமிச்சை ஜுஸ், சிறிது வெங்காயம் சேர்த்து பரிமாறவும்.

    இப்போது சுவையான, காரமான குழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பிரெட் தயார்.

    • வித்தியாசமான சுவையான இந்த தோசை அனைவருக்கும் பிடிக்கும்.
    • இதற்கு தொட்டுக்கொள்ள சைடிஷ் தேவையில்லை.

    தேவையான பொருட்கள்

    தோசை மாவு - 1 கப்

    இட்லி பொடி - தேவைக்கேற்ப

    நெய் - விருப்பத்திற்கேற்ப

    செய்முறை

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெலிதாக ஊற்றி சுற்றி நெய் விடவும்.

    பின்னர் அதன் மேல் இட்லி பொடியை பரவலாக தூவி தோசை மொறு மொறு என்று வந்ததும் இரண்டாக மடித்து எடுத்து பரிமாறவும்.

    இந்த தோசையை திருப்பி போடக்கூடாது.

    இப்போது அருமையான மொறு மொறு நெய் பொடி தோசை ரெடி.

    • பீனட் பட்டரை கடையில் வாங்குவதை விட வீட்டிலேயே ஈசியாக செய்யலாம்..
    • பிரெட்டில் ஜாம் தடவி சாப்பிட்ட பழக்கம் போய் இன்று பீனட் பட்டர் தான் பலருடைய சாய்ஸ்.

    தேவையான பொருட்கள் :

    வறுத்த வேர்க்கடலை - 2 கப்

    கடலை அல்லது ரைஸ் ப்ராண்ட் எண்ணெய் - 6 டீஸ்பூன்

    உப்பு - 1 சிட்டிகை

    தேன் - 2 டீஸ்பூன்

    செய்முறை :

    வறுத்த வேர்க்கடலையாக இருந்தாலும் அதன் தோலை நீக்கிவிடுங்கள். முழு காய்ந்த கடலை இருந்தாலும் அதை உரித்து கடாயில் போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுத்துக்கொள்ளுங்கள்.

    பின் அதன் தோலை நீக்கிவிட்டு வைத்துக்கொள்ளுங்கள்.

    வறுத்த வேர்கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

    வேர்க்கடலை கொஞ்சம் மசிந்ததும் அதனுடன் எண்ணெய் சேர்த்து மீண்டும் நன்றாக அரைக்கவும்.

    அடுத்து அதில் தேன், உப்பு சேர்த்து மீண்டும் மைய அரையுங்கள்.

    அவ்வளவுதான் பீனட் பட்டர் தயார்.

    இதை ஒரு காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

    • இந்த வருட தீபாவளிக்கு வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்ய நினைத்தால், சீப்பு சீடை செய்யுங்கள்.
    • இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    அரிசி மாவு - 2 கப்

    உளுத்தம் மாவு - அரை கப்

    கடலை மாவு - அரை கப்

    கெட்டியான தேங்காய் பால் - அரை கப்

    வெண்ணெய் - 2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    சுடுநீர் - தேவையான அளவு

    செய்முறை

    ஒரு பௌலில் அரிசி மாவு, உளுத்தம் மாவு மற்றும் கடலை மாவு சேர்த்து, அத்துடன் உப்பு, வெண்ணெய் சேர்த்து கையால் பிசைய வேண்டும்.

    பின்னர் அதில் தேங்காய் பாலை வெதுவெதுப்பாக சூடேற்றி கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். தேங்காய் பால் போதாமல் இருந்தால், சுடுநீரை கொஞ்சம் ஊற்றி பிசைந்து கொள்ளலாம்.

    பின்பு முறுக்கு அச்சை எடுத்துக் கொண்டு, தட்டையாக சீப்பு போன்று இருக்கும் அச்சை எடுத்து பொருத்தி, பின் அதில் மாவை வைத்து, ஒரு தட்டில் நேராக ஒரு கோடு போன்று பிழிய வேண்டும். பின் கத்தியால் சிறு துண்டுகளாக வெட்டி, பின் அதனை உருட்டிக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ளதைப் போட்டு பொரித்து எடுத்தால், சீப்பு சீடை ரெடி.

    • கறிவேப்பிலையில் அதிக அளவில் இரும்பு சத்து போலிக் ஆசிட் நிறைந்து இருக்கிறது.
    • நம் உணவில் அதிகமான கறிவேப்பிலையை எடுத்துக் கொள்வது நல்லது.

    தேவையான பொருட்கள்:

    கறிவேப்பில்லை - ஒரு கப்

    உளுத்தம் பருப்பு - இரண்டு டீஸ்பூன்

    கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்

    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

    உப்பு - தேவைகேற்ப

    பச்சை மிளகாய் - இரண்டு

    புளி - சிறிதளவு

    தாளிக்க:

    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

    கடுகு - கால் டீஸ்பூன்

    உடைத்த உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன்

    கறிவேப்பில்லை - சிறிதளவு

    செய்முறை:

    கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பில்லை போட்டு லேசாக வறுத்து எடுக்கவும்.

    பிறகு, அதே கடாயில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

    மிக்சியில் வறுத்த பொருட்களை போட்டு அதனுடன் புளி, உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உடைத்த உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பில்லை போட்டு தாளித்து அதில் கொட்டி பரிமாறவும்.

    இப்போது சத்தான கறிவேப்பிலை சட்னி ரெடி.

    • இதற்கு தொட்டுகொள்ள எதுவும் தேவையில்லை.
    • குழந்தைகளுக்கு இந்த ரெசிபி மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருள்கள்

    சுத்திகரிக்கப்பட்ட மாவு - 3 கப்

    சர்க்கரை - 1 தேக்கரண்டி

    பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி

    வெண்ணெய் - 5 ஸ்பூன்

    பால் - 1 கப்

    உப்பு

    ஸ்டப்பிங்கிற்கு

    பன்னீர் - 200 கிராம்

    பச்சை மிளகாய் - 4

    கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி

    கொத்தமல்லி தலை - 2 டீஸ்பூன்

    மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி

    சாட் மசாலா - 2 தேக்கரண்டி

    வெங்காயம் - 1

    செய்முறை

    பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மாவு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கலந்து தனியே வைக்கவும்.

    இப்போது ஒரு பால் ஜாடியில் பால், வெண்ணெய், சர்க்கரை, மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

    தனியே எடுத்து வைத்துள்ள மாவு கலவையில், இந்த பால் கலவையை ஊற்றி நன்கு பிசையவும். மாவு மிகவும் மென்மையாக வரும் வரை பிசையவும். பிறகு, பிசைந்தது வைத்த மாவை மென்மையான மெல்லிய ஈர துணி கொண்டு 40 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

    ஒரு பெரிய கிண்ணத்தில் பிசைந்து வைத்த பன்னீர், வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு, கரம் மசாலா தூள், மிளகாய்த்தூள், மற்றும் சாட் மசாலாவை சேர்த்து நன்கு கலக்கி அதை தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்பொழுது பன்னீர் குல்ச்சாவிற்கு தேவையான ஸ்டப்பிங் தயாராக உள்ளது.

    ஒரு உருண்டை மாவை எடுத்து சற்று தடியாக தேய்க்க வேண்டும். இப்போது செய்து வைத்துள்ள ஸ்டப்பிங் பொருள்களை வட்டத்தின் நடுவில் வைத்து மாவை மூட வேண்டும்.

    பிறகு, ஸ்டப்பிங் செய்துள்ள மாவை தேய்த்து வட்ட வட்டமாக மாற்றவும். இதில் மிக கவனமாக செயல்பட வேண்டும். ஏனெனில் ஸ்டப்பிங் செய்துள்ள பொருள்கள் வெளியே பிதுங்கி வராமல் கவனமாக தேய்க்க வேண்டும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து செய்து வைத்த குல்ச்சாவை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபுறம் வேக வைத்து எடுக்கவும்.

    அடுப்பில் இருந்து குல்ச்சாவை எடுத்த பின்னர் அதன் மீது சிறிய வெண்ணெய் தடவ வேண்டும்.

    இப்பொழுது சுவையான பன்னீர் குல்ச்சா தயார்.

    • குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும்.
    • இன்று கேழ்வரகில் பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருள்கள்:

    கேழ்வரகு மாவு - 1/2 கப்,

    கோதுமை மாவு - 1/2 கப்,

    ஓமம் - சிறிதளவு,

    எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி,

    லேசாக சூடு படுத்திய தண்ணீர் - 1/2 கப்,

    உப்பு - தேவையான அளவு,

    ண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கேழ்வரகு மாவு,கோதுமை மாவு, ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய், உப்பு, ஓமம் சேர்த்து நன்றாக கலந்து அதில் சிறிது சிறிதாக லேசாக சூடு படுத்திய தண்ணீரை ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    அரை மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு தடவை பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரிக்கட்டையில் வைத்து வட்டமாக தேய்த்து வைக்கவும்.

    அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து தேய்த்து வைத்த பூரிகளை ஒவ்வொன்றாக போட்டு இருபுறமும் பொன்னிறமானவுடன் எடுத்து விடவும்.

    இப்போது சுவையான கேழ்வரகு பூரி ரெடி.

    • டீ, காபியுடன் சாப்பிட அருமையான ஸ்நாக்ஸ் இது.
    • குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு - 5

    கேரட் - 1

    கோஸ் - 50 கிராம்

    குடைமிளகாய் - 1

    சீஸ் - 1 கப் துருவியது

    பச்சை மிளகாய் - 2

    பூண்டு விழுது - அரை ஸ்பூன்

    மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

    பிரெட் - 12 துண்டுகள்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    ப.மிளகாய், கோஸ், குடைமிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, துருவிய கேரட், பொடியாக நறுக்கிய கோஸ்,குடைமிளகாய் போட்டு அதனுடன் துருவிய சீஸ், பூண்டு விழுது சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

    பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், மிளகு தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

    பிரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கிவிட்டு, அதனை நீரில் நனைத்து, பிழிந்து விட்டு ஒரு தட்டில் வைத்து, அதன் நடுவே உருளைக்கிழங்கு கலவையை வைத்து, பந்து போன்று உருட்டிக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, நன்றாக காய்ந்ததும், அதில் உருட்டி வைத்துள்ள உருண்டையை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

    இப்போது சுவையான சீஸ் வெஜிடபிள் போண்டா தயார்.

    • குழந்தைகளுக்கு இட்லி பிடிக்காது.
    • இட்லியை கபாப் போல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்

    மினி இட்லி - பத்து

    வெங்காயம் - ஒன்று

    தயிர் - இரண்டு டேபிள் ஸ்பூன்

    மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்

    தனியா தூள் - கால் டீஸ்பூன்

    கரம் மசாலா - கால் டீஸ்பூன்

    சர்க்கரை - கால் டீஸ்பூன்

    உப்பு - ஒரு சிட்டிகை

    இடித்த பூண்டு - இரண்டு பல்

    எண்ணெய் - தேவையான அளவு

    குடை மிளகாய் - ஒன்று

    கபாப் ஸ்டிக் - இரண்டு

    செய்முறை

    குடைமிளகாய், வெங்காயத்தை வட்டமாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் தயிர், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, இடித்த பூண்டு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.பிறகு, அதில் இட்லி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    பின், தவாவில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி காய்ந்ததும் கபாப் ஸ்டிக் எடுத்து அதில் குடை மிளகாய் ஒரு துண்டு, இட்லி இரண்டு, வெங்காயம் ஒன்று, இட்லி இரண்டு, குடை மிளகாய் ஒன்று என்ற வரிசையில் ஒவ்வொன்றாக சொருவி தவாவில் வைத்து சிறு தீயில் வைத்து வேக விடவும்.

    ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான இட்லி கபாப் ரெடி.

    • சிறுதானியங்களை அடிக்கடி சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
    • சிறுதானியங்களில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    தினை அரிசி - ஒரு கப்

    தேங்காய் - அரை மூடி (துருவி பால் எடுக்கவும்)

    வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

    தண்ணீர் - ஒரு கப்

    பச்சைப் பட்டாணி - அரை கப்

    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

    பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்)

    எண்ணெய் - 4 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க:

    பட்டை - 2

    சோம்பு - கால் டீஸ்பூன்

    பிரியாணி இலை - ஒன்று

    ஏலக்காய் - ஒன்று

    செய்முறை:

    தினை அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

    குக்கரில் எண்ணெய்விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளிக்கவும்.

    அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, ஒரு கப் தேங்காய்ப்பால், தண்ணீர், உப்பு, தினை அரிசி சேர்த்து ஒரு கொதிவிடவும்.

    பிறகு, குக்கரை மூடி, ஒரு விசில்விட்டு இறக்கவும்.

    இப்போது சூப்பரான தினை - தேங்காய்ப்பால் புலாவ் ரெடி.

    • இந்த ஸ்நாக்ஸ் ஒரு வாரம் வைத்திருந்து சாப்பிடலாம்.
    • கடையில் வாங்க வேண்டாம். வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    கேழ்வரகு மாவு - 1 கப்

    வெங்காயம் - 1

    பொட்டுக்கடலை மாவு - 2 தேக்கரண்டி

    ப. மிளகாய் - 3

    பெருங்காயம் தூள் - 1 சிட்டிகை

    கறிவேப்பிலை - ஒரு கொத்து

    உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * ப.மிளகாய், வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு அதனுடன் உப்பு, பெருங்காய தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    * பின்பு அதில் கேழ்வரகு மாவு, பொட்டுக்கடலை மாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, மாவு கெட்டியாகும் பதத்திற்கு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.

    * அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கலந்து வைத்துள்ள ராகி மாவை உதிரி உதிரியாக போட்டு பொரித்து எடுத்தால் சுவையான ராகி பக்கோடா தயார்.

    * இவற்றை அனைவருக்கும் சுடசுட பரிமாறவும்.

    • பச்சை மிளகாய் காரம்தான் என்றாலும் அதன் நன்மைகள் எண்ணற்றது.
    • தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ள இது அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    பச்சை மிளகாய் - 20

    சின்ன வெங்காயம் - 50 கிராம்

    உளுந்து - 2 டீஸ்பூன்

    பூண்டு - 10

    புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

    சமையல் எண்ணெய் - 2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :

    கடுகு, கறிவேப்பிலை

    செய்முறை :

    சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை நன்றாக கழுவி வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

    பின் சின்ன வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கியபின் இறக்குவதற்கு முன் புளி சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

    அனைத்தையும் ஆற வைத்து மிக்சியில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து கொள்ளவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த சட்னியில் கொட்டவும்.

    அவ்வளவுதான் சூப்பரான காரசாரமான பச்சை மிளகாய் சட்னி தயார்.

    ×