என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குலசேகரம்"

    • 13-வது வார்டு பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி தனியார் மதுபான பார் திறக்க முயற்சி நடக்கிறது.
    • இது குறித்து மாவட்ட கலெக்டர், வட்டாட்சியர் ஆகியோருக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே பொன்மனை பரவூர் பகுதியில் தனியார் மதுபான பாருக்கான கட்டுமான பணி நடைபெற்று வந்தது.

    இதையடுத்து பொன் மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் பொன்மனை சந்திப்பில் நேற்று மாலை நடைபெற்றது. போராட்டத்தில் உறுப்பினர் ஜாஸ்மினி, பெண்கள், குழந்தைகள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ் ஜான் போஸ்கோ, அ.தி.மு.க. மோகன்குமார், கம்யூனிஸ்டு பிரசாத், தி.மு.க. சேம் பெனட் சதீஷ், நாம் தமிழர் கட்சி சீலன், சமூக ஆர்வலர் சர்வேஸ்வரி உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரதிநிதிகள் தனியார் மதுபான பார் திறப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் பேசினார்கள். இந்த போராட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வர்கள் கலந்து கொள்ள வில்லை.

    இது குறித்து பொன்மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின் கூறுகையில், பொன்மனை பேரூராட் சிக்குட்பட்ட 13-வது வார்டு பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி தனியார் மதுபான பார் திறக்க முயற்சி நடக்கிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர், வட்டாட்சியர் ஆகியோருக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளப்படவில்லை.

    இதனால் பொதுமக்களுடன் அனைத்து கட்சியினர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டோம். தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு உடனே தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் தொடர்ந்து அப்பகுதியில் மதுபான கடை திறக்க முயற்சி செய்தால் பொது மக்களுடன் சேர்ந்து மிக பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என கூறினார்.

    போராட்டத்தின் முடிவில் வார்டு உறுப்பினர் சாந்தி நன்றியுரை கூறினார்.

    • தொழில் நஷ்டத்தால் விபரீத முடிவு
    • மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே உள்ள நாகக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 50). இவர் சொந்தமாக இரும்புக்கடை நடத்தி வருகிறார்.

    இவருக்கு கரோலின் மலர் என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். மூத்த மகள் வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். 2-வது மகள் பி.டி.எஸ். படித்து வருகிறார். சுமார் 6 மாத காலமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் சுரேஷ்குமார் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

    நேற்று இரவு அவர் வீட்டின் முன் பகுதியில் இருந்து பெட்ரோல் எடுத்து உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு மனைவியும் அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்தனர். அவர்கள் சுரேஷ்குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை சுரேஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி கரோலின் மலர் கொடுத்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுரேஷ்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    • மின்கம்பமும் சாய்ந்ததால் மக்கள் அச்சம்
    • பொதுப்பணித்துறையினர் துரித நடவடிக்கை எடுத்து உடனே அந்த பகுதியை சீர்செய்ய வேண்டும்

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே காவஸ்தலம் சந்திப்பில் இருந்து மணலிவிளை செல்லும் ரோடு பகுதியானது பட்டணங்கால்வாய் சானல் கரையோரம் பகுதியாகும்.

    இந்த சானல் இரண்டு பகுதிகளிலும் ஏராளமான வீடுகள் உள்ளது தினமும் இந்த பகுதி வழியாக கார், மோட்டார் சைக்கிள் வாகனம் அதிகம் செல்கிறது. அந்த பகுதியில் தனியார் பள்ளிகூடங்கள் அமைந்துள்ளது. பள்ளி வேன்கள் இந்த பகுதியாக தான் செல்கிறது. நேற்று மாவட்டம் முழுவதும் தொடர் மழை பெய்து வந்தது. குலசேகரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வந்தது.

    இதனால் சானல் கரை யோரம் இருந்த பகுதிகள் மிக மோசமாக இருந்தது. காவஸ்தலம் சந்திப்பில் இருந்து செல்லும் ரோடு நேற்று பெய்த மழையில் சானலின் கரையோர பகுதி இடிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதி யில் விரிசல் ஏற்பட்டது அந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    அதன் அருகில் மின்சாரத் துறைக்கு சொந்தமான மின்கம்பமும் சரிந்து நிற்கிறது. எனவே பொதுப் பணித்துறையினர் துரித நடவடிக்கை எடுத்து உடனே அந்த பகுதியை சீர்செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    • வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
    • இருசக்கர வாகனத்தில் வரும் வாலிபர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துகளும் ஏற்படுகிறது.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் - மார்த்தாண்டம் சாலை மாநில நெடுஞ்சாலைக்கு சொந்தமானது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சாலையைதான் பயன்படுத்துகிறார்கள். அந்த பகுதியில் தனியார் பள்ளிகூடங்கள், அரசு நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகின்றன.

    புத்தன்கடை அருகே தனியார் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் கடந்த சில மாதங்களில் சாலையில் இரண்டு பகுதிகளிலும் மழைநீர் செல்லும் கால்வாய் ஆக்கிரமித்து தடுப்பு சுவர் கட்டியிருந்தார்கள். இதனால் தண்ணீர் வெளியே செல்லமுடியாமல் சாலையில் தேங்கியது. இதனால் அந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்ல மிகவும் சிரமப்பட்டன.

    மழைகாலங்களில் தண்ணீர் வெளியேறாமல் சாலையில் தேங்கியது.இதை கண்டித்து அரசியல் கட்சியினர் மீன்பிடி, வாழை நடும் போராட்டங்கள் நடத்தினர். உடனே நெடுஞ்சாலைதுறையினர் ஒருவாகனத்தில் கொஞ்சம் மண்கொட்டி தற்காலிகமாக சரிசெய்தனர்.

    சாலையின் ஒரு பகுதி அருவிக்கரை ஊராட்சிக்கும், மறுபகுதி திருவட்டார் பேரூராட்சிக்கும் சொந்த மானது. உடனே அரசு அதிகா ரிகள் வந்து பார்வையிட்டு ஆக்கிரமித்து கட்டப்பட்ட தடுப்பு சுவர்களை இடித்து அகற்றினார்கள். அதன் பிறகு சாலையில் தேங்கிய தண்ணீர் வெளி யேற்றப்பட்டது.

    ஆனால் மழையில் சேதமடைந்த சாலையை சரிசெய்யாமல் நெடுஞ்சா லை துறையினர் இருந்தனர். இதனால் வாகனங்கள் செல்லமுடியாமல் சிரமப் பட்டன. தற்போது தினமும் மழை பெய்து வருவதால் அந்த பகுதியில் தண்ணீர் வெளியே செல்லாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

    இரவு நேரங்களில் இந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் வரும் வாலிபர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துகளும் ஏற்படுகிறது.நேற்று மாலையில் பெய்த கனமழை யால் அந்த பகுதி முழுவதும் தண்ணீர் சாலையில் தேங்கி யது . இதனால் பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றன. இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் அந்த பகுதி வழியாக செல்லமுடியாமல் அவதிபட்டார்கள்.

    எனவே மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு பெரும் விபத்துக்கள் நடைபெறும் முன் இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீர்செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • போலீசார் சி.சி.டி.வி. கேமராக்களை தீவிரமாக ஆய்வு செய்து விசாரித்து வந்தனர்.
    • ஒரே நாளில் 2 இடங்களில் திருடியது ஒரே கும்பல் என்று தெரியவந்தது.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே கல்லடி மாமூடு பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வீட்டில் முன்நின்ற மரியசெல்வி என்ற பெண்மணியிடம் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் மின்னல் வேகத்தில் கழுத்தில் இருந்த செயினை பறித்து சென்றார்கள். உடனே குலசேகரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை தீவிரமாக ஆய்வு செய்து விசாரித்து வந்தனர்.

    அன்று மாலையில் நித்திரைவிளை பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து செயினை பைக்கில் வந்த வாலிபர்கள் திருடி சென்றார்கள். ஒரே நாளில் 2 இடங்களில் திருடியது ஒரே கும்பல் என்று தெரியவந்தது.

    இவர்களை பிடிக்க உதவி ஆய்வாளர் அருளப்பன் தலைமையில் 5 போலீசார்களை மாவட்ட எஸ்.பி. தனிப்படை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்த நிலையில் நேற்று மாலை குலசேகரம் பகுதியில் சந்தேகம் படும்படி ஒரு வாலிபர் சுற்றுவது குலசேகரம் போலீசுக்கு தெரியவந்தது.

    உடனே குலசேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தனிப்படை உதவி ஆய்வாளர் அருளப்பன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சுற்றிவளைத்துபிடித்து விசாரணை செய்ததில் கேரளா மாநிலம் கருமன் விளை பாறசாலை பகுதியை சேர்ந்த மணிஷ் (வயது 24) என்பது தெரியவந்தது.

    மேலும் அவரிடம் விசாரணை செய்ததில் இவரும் இவரது நண்பர் யாசிர் 2 பேரும் சேர்ந்து பல்வேறு பகுதிகளில் திருடியது தெரியவந்தது.

    இவர்கள் மீது குலசேகரம், நித்திரவிளை, கோட்டார் போன்ற பல்வேறு காவல்நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. இவரிடம் இருந்து ரூ.2000 பறிமுதல் செய்யப்பட்டது. திருடப்பட்ட நகைகள் அனைத்தும் யாசிரிடம் உள்ளது என்று கூறினர். யாசிரை போலீசார் தேடி வருகிறார்கள். அவர் பிடிபட்டால்தான் திருட்டு நகைகள் அனைத்தும் மீட்க முடியும்.

    • மோட்டார் சைக்கிள் வாங்கித் தராததால் விபரீத முடிவு
    • வீடு கட்டிய கடன் இருப்பதால் சில மாதங்கள் கழித்து வாங்கி தருவதாக தந்தை கூறியதால் மனமுடைந்தார்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே உள்ள கொல்லாறை கைதக்கல் காலணியை சேர்ந்த வர் செல்வன். இவரது இளைய மகன் சஜின் (வயது 20). இவர் பிளஸ்-2 படித்துவிட்டு வெல்டிங் தொழில் செய்து வந்தார்.

    இவர் தனது தந்தையிடம் புதியதாக ரூ.2 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் வாங்கி தர கேட்டு உள்ளார். வீடு கட்டிய கடன் இருப்பதால் சில மாதங்கள் கழித்து வாங்கி தருவதாக தந்தை செல்வன் கூறி உள்ளார். இதனால் சஜின் மனமுடைந்தார்.

    நேற்று செல்வம் தனது மனைவி மற்றும் மூத்தமகனுடன் புதிய வீட்டில் தங்கி உள்ளார்.சஜின் பழைய வீட்டில் தூங்க சென்றார்.

    இன்று காலையில் செல்வன், அவருக்கு காப்பி கொடுப்பதற்கு சென்றார். அப்போது கதவு பூட்டப்பட்டு கிடந்தது. கதவை தட்டிய போதும் சஜின் திறக்கவில்லை.

    இதனை தொடர்ந்து ஜன்னல் வழியாக பார்த்த போது படுக்கை அறையில் வீட்டின் உத்திரத்தில் தூக்குபோட்டு சஜின் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து குலசேகரம் போலீசாருக்கு செல்வன் தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து சஜின் உடலைக் கைப்பற்றி குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • குலசேகரம் இன்ஸ்பெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
    • இந்த ஓட்டமானது திற்பரப்பு பகுதியில் இருந்து தொடங்கி குலசேகரம் அரசு மருத்துவமனை வரை நடைபெற்றது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் இன்றைய சமுதாயத்தில் போதை பொருட்களுக்கு அடிமை யாகும் மாணவர்கள், இளைஞர்கள் அதன் அழிவை உணர்ந்து அதில் இருந்து விடுபட உறுதிமொழி ஏற்று குலசேகரத்தில் செயல்ப டும் நற்பணி மன்றம் சார்பாக நடத்திய மாரத்தான் விழிப்புணர்வு போட்டியில் நேபாள நாட்டிற்குச் சென்று சிலம்பு விளையாடி தங்கம், வெள்ளி பதக்கங்கள் பெற்ற விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

    இந்த போட்டியானது திற்பரப்பு பகுதியில் இருந்து 6000 மீட்டர் தூரத்திற்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஓட்டத்தை குல சேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் டாக்டர் நெல்சன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த ஓட்டமானது திற்பரப்பு பகுதியில் இருந்து தொடங்கி குலசேகரம் அரசு மருத்துவமனை வரை நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் போதைப் பொருள்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் 65 வயதான மூதாட்டி பள்ளி மாணவ- மாணவிகளோடு கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களை மகிழ் வித்தது குறிப்பிடத்தக்கது.

    மேலும் இந்த மூதாட் டியை கவுரவிக்கும் விதமாக ஊக்க தொகையும், கேடயமும் வழங்கப்பட்டது. மூதாட்டி இந்த மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றது அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் மன நலம் குன்றிய மாணவர் ஒருவர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. அந்தமாணவனை கவுரவிக்கும் விதமாக ஊக்கத்தொகையும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

    • இன்று காலையில் யாரும் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
    • அதிவேகமாக கல், மண், எம் சான்ட், என் சான்ட் ஏற்றி வரும் கனரக வாகனங்களை போலிசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே புலியிறங்கி பகுதியில் இன்று அதிகாலை கனரக வாகனம் ஒன்று எம்.சான்ட் ஏற்றிக்கொண்டு அதிவேக மாக நாகர்கோவிலில் இருந்து குலசேகரம் வழியாக மார்த்தாண்டம் நோக்கி செல்லும்போது புலியிறங்கி பகுதியில் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து வீட்டின் காம்பவுண்ட் சுவரில் மோதி நின்றது. எப்போதும் பரபரப்பாக மக்கள் சென்றுகொண்டு இருப்பார்கள். இன்று காலை யில் யாரும் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன்தான் இந்த பகுதியில் சொகுசு கார் மோதியதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். எனவே அதிவேகமாக கல், மண், எம் சான்ட், என் சான்ட் ஏற்றி வரும் கனரக வாகனங்களை போலிசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    • பொதுவாக வடகிழக்கு பருவ மழை ஓய்ந்த பின்னர் நவம்பர் மாதம் 2 வது வாரம் மற்றும் டிசம்பர் மாதங்கள் ரப்பர் பால் சீசன் ஆகும்
    • தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீ லினை செய்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும்

    கன்னியாகுமரி:

    அரசு ரப்பர் கழகத் தொழிலாளர்களின் 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை 3 ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ந் தேதி தொழிலாளர் துறை, வனத்துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை ஆகிய 3 துறை அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது தினசரி ரூ.40 ஊதிய உயர்வு வழங்குவதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஊதிய உயர்வு ஒப்பந்தமாக மாற்றப்படாமலும், ஊதிய உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் 3 அமைச்சர்கள் முன்னி லையில் ஒப்பு கொள் ளப்பட்ட ரூ.40 ஊதிய உயர்வு கேட்டு தொழிலாளர்கள் கடந்த 7-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

    இந்தப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் நோக்கில் தினந்தோறும் தொழிலாளர்கள் ரப்பர் கழக கோட்ட மேலாளர்கள் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்நிலையில் 18-வது நாளாக நேற்று வேலை நிறத்தம் நடைபெற்ற நிலையில், கோதையாறு, சிற்றாறு, மணலோடை மற்றும் கீரிப்பாறை கோட்ட மேலாளர்கள் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் காத்திருப்புப் போராட் டங்கள் நடைபெற்றன.

    பொதுவாக வடகிழக்கு பருவ மழை ஓய்ந்த பின்னர் நவம்பர் மாதம் 2 வது வாரம் மற்றும் டிசம்பர் மாதங்களில் ரப்பர் பால் சீசன் என்ற நிலையில், தற்போது நடைபெற்று வரும் வேலை நிறுத்தம் காரணமாக ரப்பர் கழகத்திற்கு தினம்தோறும் தமிழக அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருவ தாக கூறப்படுகிறது. இதைப் போன்று தொழிலா ளர்களுக்கு ஊதிய இழப்பும் ஏற்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் தினமும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தீவரமாக நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். எனவே தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீ லினை செய்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும்

    இந்நிலையில் கால வரையற்ற வேலை நிறுத் தித்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு ஆதர வாக கன்னியாகுமரி மாவட்ட சி.ஐ.டி.யூ. தோட்ட தொழிலாளர் சங்கத்தினர் குலசேகரம் அரசமூடு சந்திப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட் டத்தில் சங்க பொதுச் செயலாளர் வல்சகுமார், தலைவர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • குலசேகரம் போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை
    • சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் மணியங்குழி அன்பு நகர் பகுதியைச் சேர்ந்தவர் தேவதாஸ் (வயது 63), தொழிலாளி. இவரது மனைவி சுசிலா. தேவதாஸ் கேரளாவில் வேலை பார்த்து வந்தார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ஊருக்கு வந்திருந்தார். கடந்த 24-ந்தேதி வீட்டில் இருந்து நண்பர்களை பார்த்து வருவதாக கூறிவிட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் 26-ந்தேதி மாலையில் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். வெளியே சென்று இருந்த அவரது மனைவி சுசிலா வீட்டிற்கு வந்த போது தேவதாஸ் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே 108 ஆம்புலன்ஸ் மூலமாக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்றார். அப்போது தேவதாஸ் தன்னை சிலர் தாக்கியதாக மனைவியிடம் கூறினார்.

    இதுகுறித்து குலசேகரம் போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    இந்த நிலையில் ஆஸ்பத்தி ரியில் சிகிச்சையில் இருந்த தேவதாஸ் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற் றப்பட்டுள்ளது. சுசிலா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு உள்ளனர்.தேவ தாசை தாக்கியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தேவதாஸ் கடந்த 24-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற பிறகு அதே பகுதியை சேர்ந்த சிலருடன் சேர்ந்து மது அருந்தியது தெரியவந்துள்ளது.

    மதுபோதையில் ஏற் பட்ட தகராறில் அவரை தாக்கினார்களா? என்பது குறித்து விசாரணை நடத் தப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.

    போலீசார் அதிரடி நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக குலசேகரம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் குலசேகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் குலசேகரம் அரசுமூடு பகுதியில் வாகன சோதனை யில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அதி வேகமாக சொகுசு கார் வந்தது. உடனே போலீசார் காரை தடுத்து நிறுத்தினார்கள். அவர்கள் காரை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.

    இதனைத்தொடர்ந்து காரை சோதனை செய்த போது மூட்டை மூட்டையாக 2 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர்.

    தொடர்ந்து கார் டிரைவரிடம்நடத்திய விசாரணையில் அவர் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த அஜித் (வயது 23) என்பதும், அந்த பகுதியில் உள்ளவர்களிடம் குறைந்த விலை கொடுத்து ரேசன் அரசி வாங்கி கார் மூலம் கேரளாவுக்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    இது குறித்து உடனே உணவு பாதுகாப்பு தடுப் பு பிரிவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மக்கள் சுமார் 6 முதல் 10 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
    • மண் அகற்றப்பட்ட இடத்தில் இருந்து ரோடு மட்டம் வரை தரமான ஜல்லிகள் போட வேண்டும்.

    கன்னியாகுமரி:

    குலசேகரத்தில் உள்ள நாகக்கோடு சந்திப்பில் இருந்து திருவரம்பு வரை உள்ள சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை மூலமாக ரூ.3.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சாலை பணிகள் தொடங்கின.

    இதற்காக திருவரம்பு பகுதியில் சாலையை அகலப்படுத்த சுமார் 2½ அடி ஆழத்தில் ரோட்டோரம் மண் அப்புறப்படுத்தப்பட்டது. மண் அகற்றப்பட்ட இடத்தில் இருந்து ரோடு மட்டம் வரை தரமான ஜல்லிகள் போட வேண்டும்.

    ஆனால் அதனை செய்யாமல் ஜல்லிக்கு பதிலாக குறைந்த கழிவுகள் நிறைந்த பாறைப்பொடிகள் கொண்டு வந்து சாலையில் குவித்துள்ளனர்.

    இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொது மக்களும், இளைஞர்களும் ஆத்திரமடைந்து மோசமான பாறைப்பொடியை இங்கே ஏன் கொட்டுகிறீர்கள்? தரமான ஜல்லியை தான் முதலில் போட வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.இது தொடர்பாக நெடுஞ்சாலை த்துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டும் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து நெடுஞ் சாலைதுறை அதிகாரிகள், கழிவு கலந்த பாறைப்பொடிகளை உடனே அப்புறப் படுத்தச் சொன்னதாக தெரிகிறது. இதையடுத்து ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பாறைப் பொடிகள் டெம்போவில் ஏற்றி அப்புறப்படுத்தப்பட்டன.

    ஏற்கனவே இந்த சாலை பணியால் திருவரம்பு முதல் நாகக்கோடு வழி யாக சென்று வரும் பஸ்கள் மாற்று பாதையில் இயங்கி வருகிறது. இதனால் பள்ளி குழந்தைகள், மாணவ-மாணவியர், மருத்துவமனைக்கு செல்லும் வயதானவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் நபர்களுக்கு மிகவும் சிரம மான நிலை ஏற்படுகிறது.

    போக்குவரத்து மாற்று பாதையில் இயக்கப்படு வதால் சுற்று வட்டார மக்கள் சுமார் 6 முதல் 10 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே நெடுஞ்சாலைத் துறையினர் போதிய அதிகாரி கள் மற்றும் அலுவலர்கள் முன்னிலையில் சாலைப் பணியை தரமாக விரைந்து முடித்து போக்குவரத்து வசதி மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×