என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ராஜாக்கமங்கலம்"
- நீரோடி முதல் ராஜாக்கமங்கலம் வரை மீனவர்களின் படகுகள் ஆய்வு செய்யும் பணி நேற்று நடைபெற்றது.
- இது ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களான நீரோடி முதல் ராஜாக்கமங்கலம் வரை மீனவர்களின் படகுகள் ஆய்வு செய்யும் பணி நேற்று நடைபெற்றது. இதற்காக மீனவர்கள் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தங்களுடைய படகுகளை கரையோரத்தில் நிறுத்தி வைத்து சரி செய்யும் பணிகள் மற்றும் வண்ணம் தீட்டுவது போன்ற பணி களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று நீரோடி முதல் ராஜாக்கமங்க லம் வரை உள்ள மீனவ கிராமங்களில் ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது.
இந்த ஆய்வில் மீனவருடைய படகுகள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா, கட லுக்கு செல்லக்கூடிய அளவுக்கு தரமான முறையில் படகு உள்ளதா, காப்பீடு செய்யப்பட்டுள்ளதா இது போன்ற எல்லா விதமான ஆவணங்களை சரிசெய் பார்த்து அவர்கள் அதற்கான ஒப்புதல் செய்கின்றனர்.
இது ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்த ஆய்வில் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ள படங்களுக்கு மட்டும் தான் 100 லிட்டர் மண்எண்ணை மானியத்தில் வழங்கப்படு கிறது. கடலுக்கு சென்ற பிறகு ஏதாவது நேரிட்டால் அவர்களுக்கான உதவித்தொகைகள் வழங்குவது போன்றவற்றிற்கு இது ஒரு முக்கியமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
- 3 பெண்கள் கைது
- நீதிபதி அவர்களை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
கன்னியாகுமரி:
ராஜாக்கமங்கலம் அருகே எள்ளுவிளையை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்.
இவர் அனந்த நாடார்குடி பகுதியில் வசித்து வருகிறார் அவரது பக்கத்து வீட்டில் புத்தளத்தை சேர்ந்த அய்யாவு என்பவர் குடும்பத்துடன் வசித்து வரு கிறார். இரு வீட்டருக்கும் அடிக்கடி தகராறு நடந்து வருகிறது. சம்பவத்தன்று தமிழ்ச்செல்வன் வீட்டுக்கும் அய்யாவு வீட்டிற்கும் தகராறு நடந்தது. இது தொடர்பாக தமிழ்செல்வனின் மனைவி ஜாக்குலின் ராஜாக்கமங்க லம் போலீசார் புகார் கொடுத்தார்.
இந்த புகார் மனுவின் மீது விசாரணை நடத்துவது வதற்காக ராஜாக்கமங்கலம் எஸ்.ஐ. ஜார்ஜ் பிரேம்லால் மற்றும் தலைமை காவலர் சுதாகர் ஆகியோர் ஆனந்தநாடார் குடிக்கு சென்று அய்யாவு வீட்டில் விசாரணை நடத்தினர். அப்போது அய்யாவு மகன் பார்த்தசாரதி என்பவரை போலீஸ் நிலையம் செல்ல வருமாறு போலீசார் அழைத்துள்ளனர். இந்த நேரத்தில் அய்யாவு அவரது மகன் பார்த்தசாரதி மற்றும் அவரது மனைவி கலா மற்றும் சரண்யா, சந்தியா ஆகியோர் போலீசார் மீது தாக்குதல் நடத்தி அவரது சட்டையும் கிழித்தனர். இதில் போலீஸ் ஏட்டு சுதா கர் காயம் அடைந்து உள்ளார்.
இச்சம்பவம் குறித்து உடனடியாக ராஜாக்க மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ராஜாக்கமங்கலம் போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் அவர்களை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச் சைக்காக ஏட்டு சுதாக ரனை சேர்த்தனர். அந்த நேரத்தில் அய்யாவும் மற்றும் அவரது மகன் பார்த்தசாரதி ஆகியோர் வீட்டின் பின்பக்கமாக தப்பி சென்று விட்டனர். இதனால் போலீசார் அவர் களை கைது செய்ய முடிய வில்லை.
பின்னர் நேற்று கலா மற்றும் அவரது மகள்கள் சரண்யா, சந்தியா ஆகி யோரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர்களை நாகர் கோவில் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். நீதிபதி அவர் களை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
- மின்பாதைகளுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் வெட்டி அப்புறப்படுத்தப்படுகிறது.
- பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மின் வினியோக செயற்பொறியாளர் ஜவகர் முத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகர்கோவில் வல்லன்குமாரன்விளை, தடிக்காரன்கோணம், வடசேரி மற்றும் ஆசாரிபள்ளம் ஆகிய உபமின் நிலையத்தில் வருகிற 15-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் நாகர்கோவில், பெருவிளை, சுங்கான்கடை வடசேரி, கிருஷ்ணன்கோவில், எம்.எஸ்.ரோடு, கோர்ட் ரோடு, கே.பி. ரோடு, பால்பண்ணை, நேசமணி நகர், ஆசாரிபள்ளம், தோப்பூர், வேம்பனூர், அனந்தன் நகர், பார்வதிபுரம், பூதப்பாண்டி, இறச்சகுளம், ராஜாக்கமங்கலம், கணபதிபுரம், ஆலங்கோட்டை, சூரப்பள்ளம், பேயோடு, பிள்ளையார்விளை, காரவிளை, வைராகுடி, திட்டுவிளை, சீதப்பால், தோவாளை, நாவல்காடு, வெள்ளமடம், பருத்திவிளை, எறும்புக்காடு, பழவிளை, அனந்த நாடார்குடி ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இந்த நேரத்தில் மின்பாதைகளுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் வெட்டி அப்புறப்படுத்தப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் 22 பேர் மீது வழக்கு
- சந்திரனை தாக்கிய போலீசாரை கைது செய்ய வலியுறுத்தல்
கன்னியாகுமரி:
ராஜாக்கமங்கலம் அருகே எள்ளுவிளை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது 67). விவசாயியான இவர் தனது மாடுகளை அருகில் உள்ள தென்னந்தோப்பில் மேய்த்து வருவது வழக்கம். இதில் சிலரது தென்னை மரக்கன்றுகளை மாடுகள் கடித்து சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதனை யடுத்து தோட்டக்காரர்கள் ஈத்தாமொழி பூமி பாதுகாப்பு சங்கத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் பூமி பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் சந்திரனுக்கு அபராதம் விதித்துள்ளனர். இதனை செலுத்திய சந்திர னை பின்னர் போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து சந்திரன் ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சந்திரனை தாக்கிய போலீசாரை கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியினர் கட்சி நிர்வாகி திருமாவேந்தன் தலைமையில், மாநில துணை செயலாளர் அல்காலித் உள்பட நிர்வாகிகள் ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி டி.எஸ்.பி. ராஜா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் விடுதலை சிறுத்தை கட்சியினர் 2 பெண்கள் உட்பட 22 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலை 7 மணியளவில் விடுவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.
- அதிகாரிகள் நடவடிக்கை
- கார் யாருடையது என்பது குறித்து விசாரணை
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படு வதை தடுக்க வருவாய் துறை அதிகாரிகள் பல் வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் கள்.
மாவட்ட எல்லை பகுதி களில் தீவிர கண்காணிப்பு பணியில் நடந்து வருகிறது. தக்கலை வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமார் தலைமையிலான குழுவினர் மண்டைக்காடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த கேரள பதிவு எண் கொண்ட சொகுசு காரை தடுத்து நிறுத்தினார்கள். டிரைவர் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். அதிகாரிகள் காரை சோதனை செய்த போது அதில் சாக்கு மூட்டை களில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
காரில் இருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் காரை யும் பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை காப்புக் காடு கிட்டங்கியில் ஒப்ப டைத்தனர். பறிமுதல் செய் யப்பட்ட கார் யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
முதல் கட்ட விசார ணையில் ரேஷன் அரிசி குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்திச் சென்றது தெரிய வந்துள் ளது. ரேசன்அரிசி கடத்தல் வழக்கில் யார்? யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து அதிகாரிகள் விசா ரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
ராஜாக்கமங்கலம் துறை கடற்கரை கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் பின்னால் தென்னந்தோப்பில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப் பட்டுள்ளதாக ராஜாக்க மங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடி யாக போலீசார் அந்த இடத் துக்கு விரைந்து சென்ற னர். அங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட சாக்கு மூட்டைகளில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவை சுமார் 2 டன் எடை இருக்கலாம் என தெரிகிறது. அவற்றை கைப்பற்றி போலீ சார் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.
இது குறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் கள் அரிசி மூடைகளை கோணத்தில் உள்ள அரிசி குடோனுக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் விசாரணையில் மின் கசிவால் வீடு தீப்பிடித்து இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
- பொதுமக்கள் அவசரம் அவசரமாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்
கன்னியாகுமாரி:
ராஜாக்கமங்கலம் துறை சகாய மாதா தெருவை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 44). இவர் தன்னுடைய வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று காலை இவர் குடும்பத்துடன் தனது உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுவிட்டார். நண்பகல் 1 மணியளவில் அவரது வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதை பார்த்த பொதுமக்கள் அவசரம் அவசரமாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதில் வீட்டிலிருந்த சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின.
பின்னர் சசிகுமார் வந்த பிறகு எரிந்த வீட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் ராஜாக்கமங்கலம் போலீசுக்கு தகவல் கொடுத்தார் தகவலின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். போலீசார் விசாரணையில் மின் கசிவால் வீடு தீப்பிடித்து இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
- முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
- மத்திய நிதி குழு மானியத்தில் அமைக்கப்படுகிறது
கன்னியாகுமரி:
ராஜாக்கமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அம்மச்சியார் கோவில் வில்லிவிளை சாலை மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. அதனை ரூ.10 லட்சம் செலவில் தார் சாலையாக அமைக்கும் பணியினை முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதா கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
மத்திய நிதி குழு மானியத்தில் அமைக் கப்படும் சாலை செப்பனிடும் நிகழ்ச்சிக்கு ராஜாக்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி சுகுமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செல்லத்துரை அம்மச்சியார் கோவில் ஊர் தலைவர் சிவதாணுலிங்கம், வில்லிவிளை ஊர் தலைவர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுகுமார், ஒன்றிய செயற்பொறியாளர் சுசிலா ஜெயக்குமார், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சிவமணிகண்டன், ராமச் சந்திரன், காமராஜ் சுபின் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- ரூ.1 கோடியே 5 லட்சத்திற்கு 3½ கிலோமீட்டர் தூரம் சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
- கடந்த 3 நாட்களாக நடை பெற்று வரும் இந்த பணிகள் நாளை (திங்கட்கிழமை) நிறைவடையும்
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே தம்பத்து கோணம் கம்பி பாலத்தில் இருந்து ராஜாக்க மங்கலம் வரை உள்ள 3½ கிலோமீட்டர் தூரம் சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதி காரிகள் நடவடிக்கை மேற் கொண்டனர்.
இதையடுத்து அதற்கான டெண்டர் பிறப்பிக்கப்பட் டது. நாகர்கோவில் பொன்னப்ப நாடார் காலனியைச் சேர்ந்த ஆர். பி.ஆர். நிறுவனத்தினர் ரூ.1 கோடியே 5 லட்சத்திற்கு சாலை சீரமைப்பதற்கான டெண்டரை எடுத்தனர்.இதை தொடர்ந்து சாலை பணிகள் மேற்கொள்ளப் பட்டது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன்னி லையில் சாலை சீரமைப்பு பணிகள் நடந்தது.
சாலை சீரமைப்பு பணியை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாஸ்கரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். டெண்டரில் குறிப்பிட்டவாறு சாலை சீரைமக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து நெடுஞ் சாலை துறை கோட்ட பொறியாளர் பாஸ்கரன் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவர் கூறு கையில், சாலை சீரமைப்ப தற்கான டெண்டர் போடப்பட்டது. தற்போது சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலை சீரமைக்கும்பணி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த பணியை நானும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தேன். டெண்ட ரில் குறிப்பிட்டவாறு தரமாக அந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலை சீரமைப்பில் எந்த குறைபாடும் கிடையாது. கடந்த 3 நாட்களாக நடை பெற்று வரும் இந்த பணிகள் நாளை (திங்கட்கிழமை) நிறைவடையும் என்றார்.
- உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பு
- ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் ஈத்தாமொழியை அடுத்த தர்மபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அழகேசன் என்ற கண்ணன் (வயது 41).
இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை உணர்ந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, அங்கு அழுகிய நிலையில் அழகேசன் உடல் தூக்கில் தொங்குவது தெரியவந்தது.
இதுபற்றி உடனடியாக ராஜாக்கமங்கலம் போலீ சாருக்கு தகவல் கொடுக்க ப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் அழகேசன் உடல், பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அழகேசன் தற்கொலை க்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசா ரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதன் விவரம் வருமாறு:-
வெல்டிங் தொழிலாளி யான அழகேசனுக்கு திரும ணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மது பழக்கத்திற்கு அடிமையான அவர், அடிக்கடி மது அருந்தி வந்துள்ளார். இதனை மனைவி கண்டித்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.
இதனால் அழகேசனின் மனைவி, தனது குழந்தை களுடன், தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் வசித்து வருகிறார். இது அழகேசனுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.
இந்த வேதனையில் தான் அழகேசன் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையில் விசாரணை நடை பெற்று வருகிறது.
- குப்பைகளுக்கு தீ வைத்தபோது எதிர்பாராத விதமாக செல்லம்மாள் அணிந்திருந்த சேலையில் தீப்பற்றியது.
- சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள மேல மாவிளையைச் சேர்ந்தவர் பொன்னையன். இவரது மனைவி செல்ல ம்மாள் (வயது 80).
இவரது வீட்டின் பின் புறம் ஓலைகள் மற்றும் குப்பைகள் கிடந்து உள்ளன. அதனை அகற்ற செல்லம்மாள் திட்டமிட்டார்.
இதற்காக நேற்று அனை த்தையும் ஓரே இடத்தில் சேர்த்தார். பின்னர் அந்த குப்பைகளுக்கு அவர் தீ வைத்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக செல்லம்மாள் அணிந்திருந்த சேலையில் தீப்பற்றியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அலறினார்.
இதனைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்த னர். அவர்கள் தீயை அணைத்து செல்லம்மாளை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கைவரிசை
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கி ளில் வந்து கம்மலை அறுத்த குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள மறுகால் தலைவிளையைச் சேர்ந்தவர் தங்க கிருஷ்ணன். இவ ரது மனைவி விஜய நிர்மலா(வயது40). இவர் வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார்.
நேற்று கார்த்திகை வடலி அருகில் விஜயநிர்மலா ஆடுகளுக்கு புல்லறுத்துக் கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் 2 வாலிபர்கள் வந்தனர்.
அவர்கள், விஜயநிர்மலா அருகில் சென்று மோட்டார் சைக்கிள் ரிப்பேர் ஆகி விட்டது. இங்கு ஒர்க்ஷாப் எங்கு உள்ளது என்று கேட்டு உள்ளனர். அவர்களுக்கு விஜய் நிர்மலா பதில் அளித்துக் கொண்டிருந்தார்.அப்போது அவர் சற்றும் எதிர்பாராத நிலை யில் மோட்டார் சைக்கி ளில் வந்த 2 பேரும் விஜய நிர்மலா காதில் அணிந்தி ருந்த கம்மலை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்ற னர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்ச லிட்டார்.
இதனைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் 2 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக ராஜாக்க மங்கலம் போலீஸ் நிலை யத்தில் விஜய நிர்மலா புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கி ளில் வந்து கம்மலை அறுத்த குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கண் இமைக்கும் நேரத்தில் கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் தங்க சங்கிலியை அறுத்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை
கன்னியாகுமரி:
ஆண்டார்குளத்தை சேர்ந்த சுந்தர் சிங் என்பவரது மனைவி ஜோதி ரோஸ்லின் (வயது 53). இவர் ஆண்டார்குளத்தில் இருந்து சாந்தபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் இரவு 8 மணி அளவில் ஆண்டார்குளம் செல்வ தற்காக சாந்தபுரம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அந்தப் பகுதியில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கண் இமைக்கும் நேரத்தில் ஜோதி ரோஸ்லின் கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் தங்க சங்கிலியை அறுத்தனர்.
உடனடியாக ஜோதி ரோஸ்லின் கூச்சலிடவே பக்கத்தில் இருந்த நபர்கள் வருவதற்குள் மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி மறைந்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து ஜோதி ரோஸ்லின் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் அளித்தார். புகாரினை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்