என் மலர்
நீங்கள் தேடியது "திருவட்டார்"
- அவரிடம் 50 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது
- இது எந்த பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது என்று போலீசார் விசாரனை
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரியில் படிக்கும் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் சில கும்பல்கள் ஈடுப்பட்டு வருகிறது.
கஞ்சா விற்பனையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று தமிழக அரசு கடுமையான நடவ டிக்கைகள் எடுத்து வரு கிறது. குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தினமும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க அனைத்து போலீஸ் நிலை யங்களுக்கும் கடுமையான உத்தரவு பிறப்பித்து உள் ளார்.
திருவட்டார் அருகே குமரன்குடி பகுதியில் மறை வான பகுதிகளில் கஞ்சா பொட்டலங்களாக பிரித்து விற்பனை செய்யப்படு வதாக திருவட்டார் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
நேற்று மாலை திருவட் டார் போலீசார் குமரன்குடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகம்படும்படி ஒரு வாலிபர் நிற்பதை பார்த்து விசாரனை செய்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார்.
உடனே அவரை திருவட்டார் போலீஸ் நிலையத்தில் கொண்டு விசாரனை செய்ததில் அவர் குலசேகரம் அருகே பழவிளை ஈஞ்சகோடு பகுதியை சேர்ந்த வினோத் (வயது 23) என்று தெரிய வந்தது. அவரிடம் 50 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் கஞ்சா பொட் டலம் எங்கிருந்து வருகிறது. இதன் பின்னணியில் யார்? யார்? இருக்கிறார்கள்.
இது எந்த பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது என்று போலீசார் விசாரனை செய்து வருகிறார்கள்.
- இரண்டு தரப்பினரும் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார்
- போலீசார் 2 தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே உள்ள கையால விளை முதலார், செங்கோடி பகுதியை சேர்ந்தவர் ஜாண்கிறிஸ்டோபர்.
இவரது மனைவி ஷீபா (வயது 30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாபு மனைவி ஜெயலலிதாவுக்கும் கடந்த 16 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்தது.
நேற்று காலையில் பஞ்சா யத்து குழாயில் தண்ணீர் எடுத்துவரும் போது 2 தரப்பினரும் வாய் தகராறு வந்து மோதிகொண்டார்கள். 2 தரப்பினரும் அரிவா ளால் மாறிமாறி தாக்கி கொண்டார்கள். இதில்இரண்டு தரப்பினரும் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார்காயம் அடைந்த ஜாண் கிறி ஸ்டோபர், அவரது மனைவி ஆகிய 2 பேரும் குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியிலும் பாபு, அவரது மனைவி ஜெயலலிதா ஆகிய 2 பேரும் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதன் அடிப்படையில் இரண்டு தரப்பினரும் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் 2 தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- திற்பரப்பு அருவிக்கு சென்று விட்டு திரும்பி வரும்போது அதிவேகமாக வந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளனர்
- திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே குலசேகரத்தில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி அதிவேகமாக வந்த கார் தள்ளுவண்டியில் மோதியதில் தள்ளுவண்டி வியாபாரி மற்றும் காரில் இருந்தவர்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
குலசேகரத்தை அடுத்த வலியாற்று முகத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 36) இவரது மனைவி சித்ரா (32) இவர் உடல்நிலை சரியில்லாமல் நடப்பதற்கு சிரமப்பட்டு வந்தார். இவர்களுக்கு ஒரே மகன் உள்ளார். புலியிறங்கி பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கீழ்த்தளத்தில் வாடகைக்கு குடியிருக்கின்றனர். வாடகைக்கு குடியிருக்கும் வீட்டின் முன்புறம் நிறுத்தி வைத்திருக்கும் தள்ளு வண்டியில் கணவனும் மனைவியும் கூழ், மோர் மற்றும் பலகார வியாபாரம் நடத்தி வந்தனர்.
இவர்களின் வருமானத்துக்கான ஒரே ஆதாரம் இந்த தள்ளுவண்டி கூழ், மோர், பலகார வியாபாரம்தான். இதை வைத்து குடும்பம் நடத்தினர்.
நேற்று மதியம் உணவருந்த சித்ரா வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது தள்ளு வண்டியில் பிரகாஷ் மட்டும் வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தார். தள்ளு வண்டியின் முன் புறம் காஞ்சிரகோடு பகுதியை சேர்ந்த ரெனால்டு ஜெபா என்பவர் கூழ் குடித்துக் கொண்டிருந்தார். அப்போது குலசேகரம் - மார்த்தாண்டம் ரோட்டில் அதிவேகமாக வந்து கொண்டிருந்த சிவப்பு நிற சொகுசு கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தள்ளுவண்டி யையும், கூழ் குடித்துக்கொண்டிருந்த ரெனால்டு ஜெபாவையும் இடித்துக் கொண்டு அருகில் உள்ள காம்பவுண்டை ஒட்டி நின்றிருந்த ரப்பர் மரத்தில் மோதி நின்றது. தள்ளு வண்டியும், காரின் முன்பக்க இடதுபுறமும் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் விபத்துக்குள்ளான சொகுசுகார் தற்போதுதான் புதியதாக எடுக்கப்பட்டது. காரின் முன்பகுதியில் இருந்த இரண்டு ஏர்பேக் ஓப்பன் ஆனதால் வண்டியில் இருந்தவர்கள் அதிர்ஷ்ட வசமாக உயிர்பிழைத்தார் கள். ரோட்டோரம் இதைப்பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கார் மோதியதில் தள்ளுவண்டியின் உள்புறம் நின்றிருந்த பிரகாஷ்க்கு இடுப்பின் கீழ்பகுதி மற்றும் கால்களில் படுகாயம் ஏற்பட்டது. அவரை அருகிலிருந்த வர்கள் குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரகாஷ் அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில் காரில் முன்புறம் இருந்தவர்க ளுக்கும். பின்புறம் இருந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் குலசேகரம் மற்றும் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட னர். ரெனால்டு ஜெபா குலசேகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கக் பட்டார்.
போலீஸ் விசாரணையில் வெள்ளிச்சந்தையைச் ேசர்ந்த அஜித்குமாருக்கு சமீபத்தில் திருமணமாகி உள்ளது. இராணுவத்தில் பணியாற்றும் இவர் உறவினர் வீட்டு விருந்துக்கு நேற்று வந்தார். மனைவியை உறவினர் வீட்டில் விட்டு விட்டு இவர்கள் நண்பர்கள் குளச்சல் அரவிந்த் (17), கொல்வேல் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (27), விஜூ (23), வினீத் (25) ஆகியோருடன் காரில் திற்பரப்பு அருவிக்கு சென்று விட்டு திரும்பி வரும்போது அதிவேகமாக வந்து புலியிறங்கியில் தள்ளுவண்டியில் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது. சம்பவம் குறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருவட்டார் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் சம்பவ இடத்தை பார்வையிட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்தியில் பிரகாஷ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- சாதாரனமாக காய்கள் ஒரு கிலோ கொண்டதாக இருக்கும்
- அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இதனை வியப்புடன் பார்த்து செல்கிறார்கள்.
கன்னியாக்உமரி:
திருவட்டார் அருகே மாத்தூர் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ராதாகிருஷ்ணன் (வயது 48). இவர் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு விவசாய தொழில் செய்து வருகிறார். அருமனை பகுதியில் அன்னாசி பயிர் இடப்பட்டு விவசாயம் செய்துவந்தார்.
இவரது தோட்டத்தில் 5½ கிலோ எடையில் அன்னாசி காய்த்தது. சாதாரனமாக காய்கள் ஒரு கிலோ கொண்டதாக இருக்கும். இந்த மாதிரி அன்னாசி காய்ப்பது மிக அபூர்வம். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இதனை வியப்புடன் பார்த்து செல்கிறார்கள்.
- மணமகனுக்கு நோய் இருப்பதாக புகார் கூறியதால் பரபரப்பு
- போலீசார் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் பெண்ணிடம் விசாரணை
கன்னியாகுமரி:
திருவட்டாரை அடுத்த செவரக்கோடு மருதாக்க விளையைச் சேர்ந்த 32 வயது வாலிபருக்கும் வெள்ளாங்கோடு பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது.
பெற்றோரை இழந்த இளம்பெண் கான்வெ ண்டில் படித்து வளர்ந்தவர். இவர்களது திருமணம் நேற்று நடை பெறுவதாக இருந்தது.தேமானூரில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் மாலை 3 மணிக்கு திருமணம் நடத்த திட்டமிடப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.
உறவினர்கள் உள்பட பலரும் விழாவுக்கு வந்த நிலையில், மணப்பெண் வீட்டில் இருந்து யாரும் வராதது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக விசாரித்தபோது, மணமகனுக்கு மஞ்சள் காமாலை நோய் இருக்கிறது. எனவே திருமணத்தில் எங்களுக்கு விருப்பமில்லை என மணமகள் வீட்டார் கூறி உள்ளனர். இதனைக் கேட்டு மணமகன் வீட்டாரும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக திருவட்டார் போலீசில் மணமகன் புகார் செய்தார்.எனக்கு நோய் இருக்கிறது என நான் ஏற்கனவே கூறியுள்ளேன். என்னை திட்டமிட்டு அவமானப்ப டுத்தி, மனதளவில் வேதனைப்படுத்தி யுள்ளார்கள் என புகாரில் அவர் கூறியிருந்தார்.
மேலும் மணப்பெண்ணை அழைத்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், மணமகனுக்கு மஞ்சள் காமாலை நோய் இருப்பது எனக்கு இன்று காலையில் தான் தெரியும். ஏற்கனவே இவருக்கு நோய் இருப்பது தெரிந்திருந்தால் திருமணத்திற்கே சம்மதித்து இருக்க மாட்டேன்.
ஏற்கனவே தாய், தந்தையை இழந்து, உறவினர் பாதுகாப்பில்தான் வளர்ந்து வருகிறேன். எனவே இவரை திருமணம் செய்ய முடியாது என கூறியதாக போலீசார் தெரிவித்தனர். திருமண நாளில் மணமகள் திருமணத்தை நிறுத்தியது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வழக்கம் போல் வேலைக்குச் சென்றவர் மாலையில் வீடு திரும்பாததால் தாய் தேடியபோது ஓடைக் கரையில் விழுந்து கிடந்துள்ளார்.
- திருவட்டார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே உள்ள பாலத்தோப்புவிளை மூவாற்றுமுகம் பகுதியைச் சேர்ந்தவர் சுவாமிதாஸ். இவரது மகன் சாம்ராஜ் (வயது 38), தொழிலாளி.
இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்தது. கடந்த 24-ந் தேதி காலை சாம்ராஜ் வழக்கம் போல் வேலைக்குச் சென்றார். ஆனால் மாலையில் அவர் வீடு திரும்பவில்லை.
இரவு வெகுநேரமாகியும் சாம்ராஜ் வீட்டுக்கு வராததால், அவரது தாயார் ரோசம்மாள் பல இடங்களிலும் தேடினார். அப்போது அரசுபிள்ளை அருகே உள்ள ஓடைக் கரையில் சாம்ராஜ் விழுந்து கிடப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து ரோசம்மாள், அங்கு சென்று சாம்ராஜை மீட்டார். அவரது உடலில் காயங்கள் இருந்ததால் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.
ஆனாலும் உடல்நலம் சீராகாததால், 25-ந் தேதி ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சாம்ராஜ் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது தாயார் ரோசம்மாள், திருவட்டார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முன்விரோதம் காரணமாக அனிஷ்குமாரை சுந்தர் சிங் மற்றும் அவரது நண்பர் முத்துபிள்ளை இருவரும் சேர்ந்து அவதூறாக பேசி கட்டையால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
- திருவட்டார் போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே இடக்குடிவிளை, முதலார் செங்கோடி பகுதியை சேர்ந்தவர் அனிஷ் குமார் (வயது 30), எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்தவர் சுந்தர்சிங் (38). இவரது நண்பர் முத்து பிள்ளை. இந்நிலையில் சுமார் 1 வருடத்திற்கு முன்பிலிருந்து அனிஷ் குமாருக்கும், சுந்தர் சிங்குக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.
சம்பவத்தன்று அனிஷ்குமார் எலக்ட்ரிக்கல் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் அவரை சுந்தர் சிங் மற்றும் அவரது நண்பர் முத்துபிள்ளை இருவரும் சேர்ந்து அவதூறாக பேசி கட்டையால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதில் காயமடைந்த அனிஷ்குமார் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அனிஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில் திருவட்டார் போலீசார் சுந்தர்சிங், முத்து பிள்ளை 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.திருவட்டார் போலீசார் சுந்தர்சிங், முத்து பிள்ளை 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டவரை தேடும் பணி தீவிரம்
- தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டியும், டியூப்களில் மிதந்து சென்றும் தேடுதல் வேட்டை
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. எனவே அணைகளில் இருந்து ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் குமரி மாவட்ட நீர்நிலைகளில் அதிக அளவு தண்ணீர் ஓடுகிறது.
திருவட்டார் அருகே உள்ள பரளியாற்றிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடு கிறது. இருப்பினும் ஆபத்தை உணராமல் பலரும் ஆற்றில் குளித்து வருகின்றனர். திருவட்டார் கொற்றுபுத்தன் வீடு பகுதியைச் சேர்ந்த மதுசூதனன் நாயர் (வயது 52) என்பவரும் இன்று காலை ஆற்றில் குளிக்க வந்தார்.
அவர் தண்ணீரில் இறங்கி குளித்த போது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். அப்போது தண்ணீரின் வேகம் அதிக மாக இருந்ததால் அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிகி றது.
ஆனால் இதனை யாரும் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து அந்த பகுதி யில் குளித்துக் கொண்டிருந்த வர்கள் மதுசூதனன் நாயரை தேடினர். அப்போது தான் அவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது.
எனவே அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என கருதி தேடினர். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து குலசேகரம் போலீசார் மற்றும் தீய ணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விைரந்து வந்து, மதுசூதனன் நாயரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆற்றில் தண்ணீர் அதிக அளவு வேகமாக சென்றதால், தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டியும், டியூப்களில் மிதந்து சென்றும் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உடலை கைப்பற்றி நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத் திரிக்கு பிரேத பரிசோ தனைக்கு அனுப்பி வைப்பு
- திருவட்டார் போலீசார் விசாரணை
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே பனங்கால விளை, மல விளை, பகுதியை சேர்ந்த வர் ஜெஸ்டின் ஜெயக் குமார் (வயது 42), பால் வெட்டும் தொழில் செய்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இவருக்கு கவிதா (40) என்ற மனைவியும், 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் 7 வகுப்பும், 5 வகுப்பும் படித்து வருகிறார் கள்.
ஜெஸ்டின் ஜெயகுமா ரின் தந்தை கடந்த சில மாதங்களாக பக்கவாத நோயினால் நடக்க முடி யாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் ஜெஸ்டின் ஜெயகுமார் மனவேதனையில் இருந்து வந்தார். சம்பவத்தன்று இவரது மனைவி கவிதா குலசேகரம் பகுதியில் உள்ள வங்கிக்கு சென்று இருந்தார். திரும்பி வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.
உடனே அக்கம்பக்கத்தி னர் உதவியுடன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் படுக்கை அறையில் கயிற்றி னால் தூக்கில் தொங்கியதை பார்த்து கவிதா அதிர்ச்சி அடைந்தார்.
உடனே வீட்டின் அருகில் உள்ளவர்கள் உதவி யுடன் கீழே இறக்கி பார்க்கும் போது இறந்தது தெரிய வந்தது. இதுபற்றி திருவட்டார் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இவரது மனைவி கவிதா கொடுத்த புகாரின்பேரில் திருவட்டார் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் வழக்கு பதிவு செய்து ஜெஸ்டின் ஜெயகுமார் உடலை கைப்பற்றி நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத் திரிக்கு பிரேத பரிசோ தனைக்கு அனுப்பி வைத் தார்.
- பிணத்தை கைப் பற்றி ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு
- திருவட்டார் போலீசார் விசாரணை
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் சுல்பிகர் (வயது 34). இவருடன் பிறந்தவர்கள் 3 பேர். இவரின் மூத்த அண்ணன் அம்ஜித்கான். இவர் கேரளா மாநிலம் மலப்புறம் பகுதியை சேர்ந்த ஷாகிதா என்பவரை திருமணம் செய்து கொண்டு சுமார் 7ஆண்டுகளாக மலப்புறத்தில் வேலை செய்து குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.
தற்போது 2 ஆண்டுகளாக மேக்காமண்டபம் பகுதியில் இறச்சிவெட்டும் தொழில் செய்து வந்தார். அந்த பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார். இவரது மனைவி மலப்பு றத்தில் சொந்தமாக இடம் வாங்கினார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது சம்பவத்தன்று கணவன் மனைவிக்கும் தொலைபேசி மூலம் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன்பிறகு மனைவி தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர், போன் எடுக்கவில்லை. உடனே சந்தேகம் அடைந்த மனைவி கணவரின் தம்பியை தொடர்பு கொண்டு கூறி யிருக்கிறார். அவர் வீட்டில் சென்று பார்க்கும்போது அவர் தூக்குப்போட்டு இறந்து கிடந்தார்.
உடனே இவரது தம்பி சுல்பிகர் திருவட்டார் போலீசுக்கு தகவல் கொடுத்தார் திருவட்டார் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் வழக்குபதிவு செய்து பிணத்தை கைப் பற்றி ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
- மோட்டார் சைக்கிளில் கடத்தியவர் கைது
- தமிழகத்தில் போதை பொருட்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று அரசு நடவடிக்கை
கன்னியாகுமரி:
தமிழகத்தில் போதை பொருட்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று பல்வேறு துறைகள் மூலம் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் அதிரடி நட வடிக்கை எடுத்து போதைப் பொருள் விற்பவர்களை கைது செய்து வருகிறார். அவரது நடவடிக்கையின் மூலம் பல பகுதிகளில் இருந்தும் கடத்தி வரப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
மேலும் அவரது உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். தினமும் வாகன சோதனை, கடைகளில் அதிரடி சோதனை என தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்து போதைப் பொருட்களை கைப்பற்றி வருகின்றனர். இந்த நிலையில் குட்டக் குழி பகுதியில் புகையிலை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக திரு வட்டார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ரமேஷ் தலைமை யிலான போலீசார் அங்கு சென்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர். இதில் அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்துவது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வாலிபர் கொடுத்த தகவ லின் பேரில், குட்டக்குழி பகுதியில் மறைத்து வைத்து இருந்த புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 3 லட்சம் ஆகும். இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் வட்டவிளை பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 43) என தெரியவந்தது.
- டாஸ்மாக் ஊழியர் மீது வழக்கு
- திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே உள்ள சரல்விளை அருவி க்கரை பகுதியை சேர்ந்தவர் சுனில் (வயது 37), தொழிலாளி.
இவரது உறவினர் பாபு (50) . இவர் தக்கலை பகுதியில் அரசு டாஸ்மாக்கடையில் விற்பனையாளராக பணி யாற்றி வருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் 2 பேருக்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.
சம்பவத்துன்று சுனிலின் வீட்டிற்குச் சென்ற பாபு தகாத வார்த்தைகள் பேசிய தோடு கையில் மறைத்து வைத்து இருந்த அரி வாளை எடுத்து சுனிலை வெட்டினார். இதில் வலது கையில் பலத்த காயம் அடைந்த அவர் சத்தம் போட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.
இதனைப் பார்த்ததும் பாபு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். சுனில் தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து பாபுவை தேடி வருகிறார்கள்.