search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆணை"

    • தமிழ்நாடு தூய்மைபணியாளர் நலவாரிய உறுப்பினர் மோகன், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    • திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ், பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர்உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை , சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 714 மனுக்களை பெற்றுக்கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து தாட்கோ சார்பில் தூய்மை பணியாளர் நல வாரியத்தின் கீழ் 1 நபருக்கு தூய்மை பணியின் போது ஒரு கை பாதிப்படைந்த நிலையில் நலவாரியத்தின்கீழ் நிவாரண நிதி உதவியாக ரூ.1 லட்சத்திற்கான காசோலை மற்றும் 8 தூய்மைபணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பிற்கான ஆணைகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் , மாவட்டஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் புஷ்பாதேவி, மாவட்ட மேளாலர் (தாட்கோ) ரஞ்சித்குமார், தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் சங்க உபதலைவர் கனிமொழி பத்மநாபன், தமிழ்நாடு தூய்மைபணியாளர் நலவாரிய உறுப்பினர் மோகன், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கல்லூரி மாணவர்கள் 39 பேருக்கு ரூ.2.57 கோடி கல்விக்கடன் ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.
    • தகுதியான மாணவர்களுக்கு கடன் அனுமதி உத்தரவுகளை இரண்டு வாரங்களில் கிடைக்க செய்வதற்கும் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் கல்லூரி பயிலும் மாண வர்களுக்கு பயனுள்ள வகையில் மாவட்ட அளவில் இரண்டு சிறப்பு கல்வி கடன் முகாம் கள் நடத்திட திட்டமிடப்பட் டது. அதன் தொடக்கமாக சிவகங்கையில் சிறப்பு கல்வி கடன் முகாம் தொடங் கியது. இம்முகாமில் விண் ணப்பித்த மாண வர்களுக்கு, அந்தந்த வங்கிகளினால் அனுமதிக் கப்பட்டு அதன்படி நேற்றைய தினம் மொத்தம் 39 பேருக்கு ரூ.2.57 கோடி மதிப்பீட்டி லான கல்வி கடன் ஆணை–கள் வழங்கப் பட்டுள்ளது.

    மேலும், இம்முகாமில் கலந்து கொண்ட 37 மா–ணவர்கள் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் புதிய கல்வி கடனுதவிகள் பெறுவதற் கும், விண்ணப்பங்களை வங்கி அலுவலர்களிடம் சமர்ப்பித்துள்ளனர். தகுதி யான மாணவர்களுக்கு கடன் அனுமதி உத்தரவு களை இரண்டு வாரங்களில் கிடைக்க செய்வதற்கும் வழி வகை செய்யப்பட்டுள் ளது. இதேபோன்று வருகின்ற 8-ந்தேதி அன்று காரைக்குடி கண்ணதாசன் மணி மண்ட பத்திலும் மா வட்ட அளவி லான சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெறவுள்ளது. எனவே தற்போது பயன் பெற்றுள்ள மாணவர்களும், தங்களை சார்ந்தோர்களிடம் எடுத்து ரைத்து, பயன்பெற செய்வ தற்கான நடவடிக்கை–களில் ஈடுபடவேண்டும்.

    மேலும் கல்விக் கடன் பெற்றுள்ள மாணவர்கள், இதனை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொண்டு, வங்கிக்கடன்களை சரிவர செலுத்தி, சிறப்பாக பயின்று தங்களது வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன் மற்றும் சிவ கங்கை சுற்று வட்டா ரத்தில் இயங்கும் 18 வங்கி களின் மேலாளர்கள் கலந்து கொண்டு மாண வர்கள் சமர்ப்பித்த விண்ணப் பங்களை பெற்றுக் கொண்டனர்.

    • முகாமில் மொத்தம் 2,973-க்கும் மேற்பட்ட வர்கள் கலந்து கொண்டனர்.
    • அதில் 22 பேர்கள் திறன் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மன்னர் சரபோஜி அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது. முகாமிற்கு கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார்.

    முகாமில் சென்னை, திருப்பூர், கோவை, காஞ்சீபுரம் மற்றும் தஞ்சை உள்ளிட்ட ஊர்களிலிருந்து வந்த தனியார் முன்னணி தனியார் நிறுவனங்கள் உட்பட 140-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டன. இம்முகாமில் 18 வயது முதல் 40 வரை உள்ள 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள். நர்சிங் மற்றும் பி.இ படித்த இளைஞர்கள், இளம் பெண்கள் என மொத்தம் 2,973-க்கும் மேற்பட்ட வர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் 307 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 296 நபர்கள் இரண்டாம் கட்ட தேர்விற்கும், 22 நபர்கள் திறன் பயிற்சிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மேயர் சண்.ராமநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, மகளிர் திட்ட அலுவலர் கோவிந்தராஜ், கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் சக்திவேல் மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், மேயர் தினேஷ்குமார் முன்னிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
    • அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தினையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

     திருப்பூர்:

    இந்து சமய அறநிலையத்து றை கட்டுப்பாட்டில்உள்ள திருக்கோவில்களில் அறங்கா வலர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட 62நபர்களுக்கு உறுப்பினர்களுக்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், மேயர் தினேஷ்குமார் முன்னிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:-

    கலைஞரின் கனவை நனவாக்கும் வகையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தினையும், ஒருகாலப்பூ ஜை திட்டத்தின் கீழ் திருக்கோவி ல்களில்பணிபுரியும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தினையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    மேலும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பூசாரிகள் திருக்கோவில் பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் திட்டத்தினையும், திருக்கோவில் பணியாளர்க ளின் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கும் திட்டத்தினையும், திருக்கோவில் புனரமைக்கும் திட்டத்தினையும் என எண்ணற்ற திட்டங்களை தொடங்கி வைத்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கிராமப்புறத்திருக்கோயில் திருப்பணி நிதியுதவித்தி ட்டத்தின் கீழ் திருக்கோயி ல்களின் திருப்பணிக்கு வருட ந்தோறும் அரசு நிதியுதவியாக ஒரு கோயிலுக்கு ரூ.2 லட்சம் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 20 திருக்கோயில்களின் திருப்பணிக்காக ஒரு கோயிலுக்கு ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் 20 திருக்கோ யில்களுக்கு ரூ.40 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பகுதி திருக்கோயில்களின் திருப்பணி நிதியுதவி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் 60 திருக்கோயில்களின் திருப்பணிக்காக ஒரு கோயிலுக்கு ரூ.2லட்சம் வீதம் மொத்தம் 60 திருக்கோயி ல்களுக்கு ரூ.120 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் அறங்கா வலர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கான ஆணைகள் வழங்கப்ப டவுள்ளது. இன்றைய தினம், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்உள்ள திருக்கோவில்களில் அறங்காவலர் குழு உறுப்பினர்க ளாக முதல்கட்டமாக நியமிக்க ப்பட்ட 62 நபர்களுக்கு உறுப்பி னர்களுக்கான ஆணைகள் வழங்கப்பட்டு ள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர்கள் (இந்து சமய அறநி லையத்துறை)செந்தில்குமார், முத்துராமன், கலைச்செல்வி, ஜெகநாதன்சாமி, திருப்பூ ர்மாநகராட்சி 4-ம் மண்டல த்தலைவர் இல.பத்மநாபன், திருப்பூர் மாவட்ட அறங்காவலல் குழுத்தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம், செயல் அலுவலர் சீனிவாசன் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • உதவித்தொகை வேண்டி மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பம் செய்திருந்தார்.
    • ரூ.1500-க்கான மாதாந்திர உதவித்தொகை வழங்கும் ஆணையை மாற்றுத்திறனாளியிடம் வழங்கினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, நல்லாடை கிராமத்தில் வசித்து வரும் கதிரேசன் என்பவரின் மகன் சுமன். இவர் 2 கால்களும் செயல் இழந்தவர் (மாற்றுத்தி றனாளி).

    இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உதவித்தொகை வேண்டி மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பம் செய்திருந்தார். இந்நிலையில், விண்ணப்பத்தை பரிசீலனை செய்த கலெக்டர் மகாபாரதி உட னடியாக மாற்றுத்திறனாளி வீட்டிற்கே சென்று, நலம் விசாரித்து சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.1500-ற்கான மாதாந்திர உதவித்தொகை வழங்கும் ஆணையை வழங்கினார்.

    அப்போது தரங்கம்பாடி தாசில்தார் காந்திமதி, சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் சுந்தரி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ஒரு பயனாளிக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை கலெக்டர் வழங்கினார்.
    • பயனாளிகளுக்கு பணி தொடங்குவதற்கான நிர்வாக அனுமதி ஆணையை வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-

    குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த மனுக்களைவிசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்த ப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத் தொடர்ந்து அவர், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் தஞ்சாவூர் வட்டத்தை சேர்ந்த 1 பயனாளிக்கு மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணையினையும், முதலமைச்சர் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு பணி துவங்குவதற்கான நிர்வாக அனுமதி ஆணையினையும் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 11 ஆண்டு காலமாக வழங்கப்படாமல் இருந்து வந்த, உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கான பணி பாதுகாப்பு ஆணை வழங்கப்பட்டது.
    • முன்னாள் நிர்வாகிகளுக்கு அரசு பணி நிறைவு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க மாநிலப் பொதுக்குழு மற்றும் நன்றி அறிவிப்பு பாராட்டு விழா மாநிலத் தலைவர் மு.சி.முருகேசன் தலைமையில் கோயம்புத்தூரில் நடைபெற்றது. காலை நடைபெற்ற பொதுக்குழுவில் கோயம்புத்தூர் உணவு பாதுகாப்பு அலுவலர் காமராஜ் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் அ.தி.அன்பழகன் வேலை அறிக்கையையும், மாநிலப் பொருளாளர் ஜான்சிம்சன் வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். பொதுக்குழு உறுப்பினர்கள் விவாதங்களுக்கு ப் பின்னர் இரண்டு அறிக்கைகளும் ஏற்கப்பட்டது. மாநில நிர்வாகிகள் பி.நல்லத்தம்பி, வேலவன், ஸ்டாலின் பிரபு மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். கோயம்புத்தூர் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தமிழ்ச்செல்வன் வாழ்த்துரை வழங்கினார்.

    முன்னாள் நிர்வாகிகள் போஸ் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோருக்கு அரசுப் பணி நிறைவு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. நிர்வாகிகள் தேர்தலில் மு.சி.முருகேசன் (கோவை) மாநிலத் தலைவராகவும், பி.நல்லத்தம்பி (கடலூர்) மற்றும் ஏ.முத்துராஜா (தென்காசி) மாநில துணைத் தலைவர்களாகவும், அ.தி.அன்பழகன் (நாகப்பட்டினம்) பொதுச் செயலாளராகவும், வி.காமராஜ் (கோவை) மற்றும் ரவிச்சந்திரன் (செங்கல்பட்டு) மாநில இணைச் செயலாளர்களாகவும், ஜான்சிம்சன் (செங்கல்பட்டு) மாநிலப் பொருளாளராகவும், வேலவன் (திருவள்ளூர்) தலைமை நிலையச் செயலாளராகவும் ஸ்டாலின் ராஜரெத்தினம் (விழுப்புரம்), மாநில அமைப்புச் செயலாளராகவும் ஜெயராஜ் (சென்னை) மற்றும் மோகன்தாஸ் (கோவை) மாநிலத் தணிக்கையாளர்களாகவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    11 ஆண்டு காலமாக வழங்கப்படாமல் இருந்து வந்த, உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கான பணிப் பாதுகாப்பு ஆணையை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் மற்றும் ஆணை பெற்றிட துணை நின்றவர்களுக்கும் நன்றி அறிவிப்பு பாராட்டு விழா நடைபெற்றது. நாகை மாலி எம்.எல்.ஏ மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் அன்பரசு ஆகிய இருவருக்கும் நன்றி தெரிவித்து, நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. மாநில பொதுச்செயலாளர் அ.தி.அன்பழகன் நன்றி கூறினார்.

    • 817 மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா நடந்தது,
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் அலாவுதீன், துணைமுதல்வர் சேக்தாவூது ஆகியோர் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 817 மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி முதல்வர் அலாவுதீன் தலைமையில் நடந்தது.

    இதில் துணைமுதல்வர் மற்றும் வேலை வாய்ப்பு முதன்மை ஓருங்கிணைப்பாளருமான சேக்தாவுது பேசியதாவது:-

    கடந்த 15 ஆண்டுகளில் 15 ஆயிரம் மாணவர்கள் வளாக நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளனர். இந்த ஆண்டு ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாமில் இதுவரை தேர்வு செய்யப்பட்ட 817 மாணவர்கள் பல்வேறு பன்னாட்டு நிறுவனமான ஓசூர் அசோக் லேலாண்ட், லுகாஸ் டி.வி.எஸ்., கேட்டர்பில்லர் இந்தியா ஓசூர் டி.வி.எஸ்.சுந்தரம் ஆட்டோ காம்போனன்ஸ், ஹெச்.சி.எல் டெக்னாலஜி, விப்ரோ சிஸ்டம்ஸ் மற்றும் டி.வி.எஸ்.ட்ரைனிங் மற்றும் சர்வீசஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் மூலமாக பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எந்திரவியல்துறை, மின்னியியல், மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்துறை, கனிணித்துறை மற்றும் கப்பல்துறைகளில் 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்றார்.

    எந்திரவியல் துறைத்தலைவர் கணேஷ்குமார் வரவேற்றார். நிர்வாக இயக்குநர் ஹமீது இப்ராகிம் சிறப்புரையாற்றி வேலைவாய்ப்பு முகாமில் வளாக நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 817 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    விழாவில் பாலிடெக்னிக் கல்லூரியின் துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள்,பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மின்னணுவியல் முதுநிலை விரிவுரையாளார் மரியதாஸ் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் அலாவுதீன், துணைமுதல்வர் சேக்தாவூது ஆகியோர் செய்திருந்தனர்.

    ×