search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகராஷ்டிரா"

    • காலை முதலே தானே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    • விளம்பரப் பலகை பெயர்ந்து விழும் பரபரப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

    மகாராஷ்டிராவின் உள்ள பல்வேறு பகுதிகளில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையமானது அங்குள்ள பகுதிகளுக்குச் சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில் காலை முதலே தானே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கல்யாண் நகரில் உள்ள சஹாஜானந்த் சவுக் [Sahajanand Chowk] பகுதியில் உள்ள கடை ஒன்றில் இருந்த விளம்பரப் பலகையானது பலத்த காற்று மற்றும் மழை காரணமாக பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் அங்கு நின்றிருந்த வாகனங்கள் சேதமடைந்தன.

    மேலும் பலகைக்குக் கீழ் யாரேனும் சிக்கியுள்ளனரா என்ற தெரியாத நிலையில் விபத்து நடத்த இடத்துக்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். இதற்கிடையில், விளம்பரப் பலகை பெயர்ந்து விழும் பரபரப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. சமீபத்தில் மும்பையில் ராட்சத விளம்பரப் பலகை விழுந்து பலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

    • வட மாவட்டங்களில் கன மழையும், மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும்.
    • மழை மற்றும் புயல் காரணமாக மீனவர்கள் மற்றும் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    வட கேரளா முதல் மகராஷ்டிரா வரையிலான கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, ஆந்திரா கடற்கரை மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் உருவாகி உள்ள சூறாவளி போன்றவற்றால், கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் 5 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மற்றும் வட மாவட்டங்களில் கன மழையும், மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும்.

    இந்த நாட்களில் கேரளா மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் அதிக அலைகள் மற்றும் புயல்கள் எழ வாய்ப்பு உள்ளதாக கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் தெரிவித்துள்ளது. மழை காரணமாக மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    மழை மற்றும் புயல் காரணமாக மீனவர்கள் மற்றும் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    ×