search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் 5 நாட்கள் மழை நீடிக்கும்
    X

    கேரளாவில் 5 நாட்கள் மழை நீடிக்கும்

    • வட மாவட்டங்களில் கன மழையும், மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும்.
    • மழை மற்றும் புயல் காரணமாக மீனவர்கள் மற்றும் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    வட கேரளா முதல் மகராஷ்டிரா வரையிலான கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, ஆந்திரா கடற்கரை மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் உருவாகி உள்ள சூறாவளி போன்றவற்றால், கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் 5 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மற்றும் வட மாவட்டங்களில் கன மழையும், மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும்.

    இந்த நாட்களில் கேரளா மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் அதிக அலைகள் மற்றும் புயல்கள் எழ வாய்ப்பு உள்ளதாக கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் தெரிவித்துள்ளது. மழை காரணமாக மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    மழை மற்றும் புயல் காரணமாக மீனவர்கள் மற்றும் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×