என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 223905"
- பட்டியில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு ரங்கசாமி அங்கு சென்று பார்த்தார். அப்போது 3 பேர் ஆடுகளை திருட முயன்றனர்.
- மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.
நாமக்கல்:
மோகனூர் தாலுகா, அரூர் பஞ்சாயத்து, ஈச்சங்கோவில் பட்டியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 44), விவசாயி. இவரது வீட்டில் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் ஆடு, மாடுகளை பட்டியில் அடைத்து விட்டு தூங்க சென்றார்.
பின்னர் மறுநாள் அதிகாலை 4 மணி அளவில் வீட்டின் அருகே உள்ள பட்டியில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு ரங்கசாமி அங்கு சென்று பார்த்தார். அப்போது 3 பேர் ஆடுகளை திருட முயன்றனர்.
அதைக்கண்டு ரங்கசாமி சத்தம் போடவே 2 பேர் ஓடி விட்டனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஒருவரை பிடித்து விசாரித்ததில், அவர் எஸ்.வாழவந்தி அருகே உள்ள கே.புதுப்பாளையம் பஞ்சாயத்து, அக்கரையாம்பாளையத்தை சேர்ந்த ரவி மகன் சக்திவேல் (20) என்பது தெரியவந்தது.
இவர், ஆடு மற்றும் கோழிகளைத் திருடி வள்ளிபுரத்தில் உள்ள இறைச்சி கடையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இது குறித்து ரங்கசாமி அளித்த புகாரின் பேரில், மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- குமரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.
- அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் தலைமை தாங்கினார்.
கன்னியாகுமரி:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி.க்கு, அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தர விட்டது. இந்த நிலை யில் ராகுல்காந்திக்கு வழங்கிய தண்டனையை கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குமரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.இரணியலில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடை பெற்றது. அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் தலைமை தாங்கினார்.
சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் ஜேக்கப் (குளச்சல்), சட்ட மன்ற சக்தி வேல்(பத்மநாபபுரம்) ஆகி யோர் முன்னிலை வகித்தனர். திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வந்த மெம்மோ ரயிலை மறித்த அவர்கள் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
திங்கள்நகர் பேரூராட்சி தலைவர் சுமன், ரீத்தாபுரம் பேரூராட்சி துணைத் தலைவர் விஜூமோன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஜோண், ராபர்ட், ராஜன், நிஷாந்த், மணிகண்டன், ராஜேஷ், ஸ்டான்லி உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் இரணியல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர், தனிப் பிரிவு ஏட்டு சுஜின் ஆகியோர் விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். மேலும் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மலைமீது தேடிய கிராமத்து இளைஞர்கள் பாறை இடுக்கில் காயத்துடன் விஷ்ணுராம் இருந்ததை பார்த்தனர்.
- கிராம இளைஞர்களுக்கு விஷ்ணுராமின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.
சிங்கம்புணரி:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பொன்னடபட்டியை சேர்ந்த பழனிவேல் மகன் விஷ்ணு ராம் (வயது21). நேற்று மாலை இவர் தாயாரிடம் பிரான்மலைக்கு செல்வதாக கூறிவிட்டு அங்கு மலை மேல் உள்ள கொடுங்குன்ற நாதரை தரிசனம் செய்ய தனியாக சென்றார். பொழுது சாய்ந்த நேரத்தில் பாதை தெரியாமல் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்ற விஷ்ணுராம், அங்குள்ள பாறையில் வழுக்கி புதருக்குள் விழுந்தார்.
அங்கிருந்து தாயாருக்கு பாதை மாறி சென்றுவிட்டதாக செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பினார். மேலும் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகியது. குறுந்தகவலை பார்த்த தாயார் உடனடியாக பிரான்மலை ஊருக்குள் வந்து கிராம மக்களிடம் மகன் காணாமல் போன விவரத்தை கூறி அழுதார். இதையடுத்து பிரான்மலை, மற்றும் பாப்பாபட்டியை சேர்ந்த இளைஞர்கள் மலையில் ஏறி இரவு முழுவதும் வாலிபர் விஷ்ணுராமை தேடினர்.
அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாததால் இரவில் திரும்பி விட்டனர்.இன்று காலை மீண்டும் கிராமத்து இளைஞர்கள் மலைமீது தேடியபோது பாறை இடுக்கின் இடையே தலையில் காயத்துடன் விஷ்ணுராம் இருந்ததை பார்த்தனர். பின்னர் அவரை பத்திரமாக மீட்டு மலையை விட்டு இறங்கினர். காயமடைந்த விஷ்ணுராமை உடனடியாக பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சுமார் 2,500 அடி உயரம் உள்ள பிரான்மலையில் நேரம், காலம் பார்க்காமல் மாலையில் இருந்து இன்று காலை வரை தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாப்பாபட்டி கிராம இளைஞர்களுக்கு விஷ்ணுராமின் பெற்றோர் ஆனந்த கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் பிரான்மலை மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் பரபரப்பு காணப்பட்டது.
- திறன் பயிற்சியில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
- மகளிர் திட்ட இயக்குநர் வடிவேல் தலைமையில் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இளைஞர் திறன் திருவிழா மாரிமுத்து எம்.எல்.ஏ. , மகளிர் திட்ட இயக்குநர்வடிவேல் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.உதவி திட்ட இயக்குநர் தில்லைமணி கண்ணன் வரவேற்புரை வழங்கினார்.
இந்த திறன் பயிற்சியில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முத்துப்பேட்டை ஒன்றிய பெருந்தலைவர் கனிஅமுதா ரவி, பேருராட்சி தலைவர் மும்தாஜ் நவாஷ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அமுதாமனோகரன் மற்றும்தமயந்தி, பேருராட்சி செயலாளர் கார்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி மற்றும் கமல்ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் உமேஷ்பாபு, நகர செயலாளர் காரல் மார்க்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை மற்றும் சான்றிதழ் வழங்கினர்.
முடிவில் வட்டார இயக்க மேலாண்மை மேலாளர் ராதிகா நன்றி தெரிவித்தார்.
- தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்
- நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் பங்கேற்று ஆலோசனை வழங்கினார்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் குருந்தன்கோடு கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட குருந்தன்கோடு ஊராட்சி, வெள்ளிச்சந்தை ஊராட்சி போன்ற பகுதி களில் தி.மு.க. செயல்வீரர் கூட்டம் ஒன்றிய செய லாளர் சுரேந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது. அவைத் தலைவர் நிஜாம், துணை செயலாளர் தாமஸ் கென்னடி, பொருளாளர் பெர்வின் விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் பங்கேற்று ஆலோசனை வழங்கினார். வருகிற 26, 27-ந் தேதிகளில் நடைபெறும் வாக்காளர் பட்டியரில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் இளையோர் களை ஊக்குவித்து முகாமில் கலந்து கொண்டு பயனடைய செய்ய பாடுபட வேண்டும். வரும் பாராளுமன்ற தேர்தலில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டும் வேட்பாளர் வெற்றிபெற உழைக்க வேண்டும்.
வாக்குச்சாவடி முக வர்களை உடனே நியமிக்க வேண்டும், அரசின் சாதனைகளை விளக்கி தொடர் தெருமுனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்திட வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
- இந்தி திணிப்பையும், ஓரே நுழைவு தேர்வையும் திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி கோஷம்
- கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது.
நாகர்கோவில்:
இந்தி திணிப்பையும் ஒரே நுழைவு தேர்வையும் மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவரணி மற்றும் இளைஞர் அணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட மாண வரணி, இளைஞர் அணி சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலா ளரும் மேயருமான மகேஷ் தலைமை தாங்கினார்.
கிழக்கு மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளர் சிவராஜ் வரவேற்று பேசினார். முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், கிழக்கு மாவட்ட அவை தலைவர் எப்.எம். ராஜ ரத்தினம், பொருளா ளர் கேட்சன் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், ராஜன், புஷ்பலீலா ஆல்பன் முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ். பார்த்தசாரதி, தாமரை பாரதி, துணை செயலாளர் பூதலிங்கம்,மாநகர செயலாளர் ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், பிராங்கி ளின், பாபு, லிவிங்ஸ்டன், மீனவரணி முன்னாள் அமைப்பாளர் நசரேத் பசலியான், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் இ.என் சங்கர், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், மாநகராட்சி மண்டல தலைவர் ஜவகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ததேயுபிரேம்குமார் நன்றி கூறினார். இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட் டத்தில் கோஷங்கள் எழுப் பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மேயர் மகேஷ் பேசுகையில் மத்திய அரசு இந்தியை எல்லா இடங்களிலும் திணித்து வருகிறது.
தமிழகத்தில் ஒருபோதும் இந்தியை திணிக்க விட மாட்டோம். கடந்த நாடாளு மன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் 39 தொகுதி களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் 40தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். கன்னியாகுமரி தொகுதியில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த வேண்டும் என்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும் என்றார்.
- தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
- 2019 முதல் இதுவரை 1,050 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் முதலிபாளையம் நிப்ட் -டீ கல்லூரியில் தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா (டி.டி.யு.ஜி.கே.ஒய்.,) திட்டத்தில் ஆயத்த ஆடை உற்பத்தி சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 1,250 பேருக்கு பயிற்சி அளிக்க கல்லூரிக்கு அரசு அனுமதி அளித்திருந்தது. கிராமப்புற இளைஞர்களுக்கு தையல், அப்பேரல் பேஷன் டிசைன், மெர்ச்சன்டைசிங் பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகிறது.
கடந்த 2019 முதல் இதுவரை 1,050 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 150 பேருக்கு அப்பேரல் பேஷன் டிசைன் பயிற்சி அளிக்க கல்லூரியின் திறன் பயிற்சி மையம் முடிவு செய்துள்ளது.இதற்கான மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. டி.டி.யு.ஜி.கே.ஒய்., திட்டத்தில் உணவு, தங்குமிடம், சீருடை, கல்வி உபகரணங்களுடன் இலவசமாக பேஷன் டிசைன் பயிற்சி அளிக்கப்படுகிறது. மொத்தம் 6 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்.
தமிழகம் முழுவதும் உள்ள பிளஸ் 2 மற்றும் அதற்குமேல் படித்த கிராமப்புற இளைஞர்கள் இப்பயிற்சியில் இணையலாம். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிப்போருக்கு மத்திய அரசு சான்றிதழ் மற்றும் ஆடை உற்பத்தி நிறுவனங்களின் உடனடி வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திருப்பத்தூர் அருகே இளைஞரை தாக்கிய ஊராட்சி மன்ற தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- தலைமறைவாகி உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கீழக்காவனிப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் ஆனந்தன். இவர் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு அரசு சான்றிதழ் பெற வரும் நபர்களுக்கு சான்றிதழ் வாங்குவதற்கு உதவி செய்து வருகிறார்.
இவர் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி உள்ளவருக்கு மின்சாரம் கொடுக்க கூடாது என மனு செய்து இருந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இரணி யூர் அம்மாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் அழகு ஆறுமுகம், ஆனந்தனிடம் தகராறு செய்து திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுறித்து ஆனந்தன் கொடுத்த புகாரின்பேரில் கீழச்சிவல்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் விசாரணை நடத்தி கீழக்காவனிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அழகு ஆறுமுகத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். தலைமறைவாகி உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- கீழமணக்குடி முதல் சங்குத்துறை வரை கரை ஒதுங்கியது
- வௌ மீன்கள் அதிகளவு சிக்கியது
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.
கடற்கரை கிராமங்களி லும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. கடற்கரை பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர் கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன் வளத்துறை அதிகாரிகள் எச்சரித்திருந்தனர். இதை யடுத்து ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையுள்ள கடற்கரை கிராமங்களில் பெரும்பாலான மீனவர்கள் கடந்த சில நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை.
மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் மீன்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஒரு சில கட்டுமரம் மீனவர்கள் மட்டும் மீன்பிடிக்க சென்ற னர். அவர்கள் வலையில் குறைந்த அளவு மீன்கள் மட்டுமே சிக்கியது. குறை வான அளவு மீன்கள் விற்ப னைக்கு வந்ததால் விலை அதிகமாக இருந்தது.
குளச்சல் பகுதிகளில் மீன்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் குமரி கடல் பகுதியில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக கடலுக்குள் இருந்த மீன்கள் கரை ஒதுங்கியது. கீழ மணக்குடி முதல் சங்குதுறை கடற்கரை வரை மீன்கள் கரை ஒதுங்குவதாக தகவல் பரவியது.
இதையடுத்து அதன் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கடந்த இரண்டு நாட்களாக கடற்கரை பகுதியில் குவிந்த வண்ணம் உள்ளனர். இத னால் அந்த பகுதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று மாலையிலும் ஆயி ரக்கணக்கான இளைஞர்கள் கடற்கரை பகுதிகளில் குவிந்திருந்தனர். ராட்சத அலைகளில் மீன்கள் கரை பகுதிக்கு வருகிறது.
பின்னர் அந்த அலை திரும்ப கடலுக்குள் செல்லும்போது மீன்களை வாலிபர்கள் கையால் பிடித்து வருகிறார்கள். வாலிபர்கள் கையில் ஏராளமான மீன்கள் சிக்கி வருகிறது. குறிப்பாக அதிக அளவு வெளமீன்கள் சிக்கி உள்ளது. இந்த பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக வாலிபர்கள் கையில் டன்கணக்கில் வெளமீன்கள் சிக்கி வருவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாலிபர்கள் கையில் தினமும் டன் கணக்கில் மீன்கள் சிக்கிவரும் தகவல் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. இதையடுத்து இன்று காலை யிலும் ஏராளமான வாலி பர்கள் கடற்கரையில் குவிந் திருந்தனர்.
இது குறித்து வாலிபர்கள் கூறுகையில், கடற்கரையில் மீன்கள் கரை ஒதுங்குவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நாங்கள் இங்கு வந்தோம். அப்போது மீன்கள் கரை ஒதுங்குவதை பார்த்து ரசித்து கொண்டிருந்தோம்.அப்போது எங்களுக்கு மீன்களை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
இதையடுத்து கரைக்கு வந்த மீன்களை கையால் பிடித்தோம். அதிகளவு மீன்கள் எங்களிடம் சிக்கி உள்ளது. சிக்கிய மீன்களை வீட்டிற்கு கொண்டு சென்று சமைத்து சாப்பிடுவதுடன் நண்பர்கள் வீடுகளுக்கும் பகிர்ந்து கொடுக்க உள் ளோம். மீன்கள் கரை ஒதுங்குவதற்கான காரணம் எங்களுக்கு தெரியவில்லை என்றனர்.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், கடல் பகுதி யில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக கடலில் குளிர்ந்த தண்ணீர் ஏற்பட்ட தால் வெள மீன்கள் கரை ஒதுங்கி வருவதாக தெரிவித்தனர்.
- ஒவ்வொரு தனி மனிதனும் தங்களது குடும்பத்தினரை எண்ணிப்பார்க்க வேண்டும்.
- போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அறிவுரை
நாகர்கோவில்:
தமிழகம் முழுவதும் போைத பொருள் ஒழிப்பில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். குமரி மாவட் டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு போதை பொருட்களை ஒழித்து வருகிறார்.
இந்த நிலையில் சர்வதேச போதை ெபாருட்கள் ஒழிப்பு தினத்தையொட்டி அவர், ஒரு வீடியோ வெளி யிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறி இருப்பதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 26-ந் தேதியன்று உலக போதை பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் கடைபிடிக்கப்பட்டு வரு கிறது. இந்த நாளில் போதை பொருட்களை ஓழிப்போம் என முக்கியமாக உறுதி மொழியை அனைவரும் எடுப்போம். ஆரோக்கி யமான சமூதாயத்தை சீரழிப்பதில் முக்கிய காரணமாக இருப்பது போதை பொருட்கள் பழக்கம்.
ஒவ்வொரு தனி மனிதனும் தங்களது குடும்பத்தினரை எண்ணிப்பார்க்க வேண்டும். போதைக்கு அடிமையாகாமல் பிற நல்ல வழிகளில் கவனம் செலுத்தவேண்டும். குறிப்பாக இளைய தலைமுறையினர் போதை பொருட்களுக்கு அடிமையாக கூடாது. உடற்பயிற்சி, யோகா, புத்தகங்கள் வசிப்பது இப்படி பல வழிகளை இளைஞர்கள் கடைபிடித்து மனதை ஒழுக்கத்துடன் வைத்திருக்க வேண்டும்.
போதை பொருட்களின் பக்கவிளைவுகள் மிக கொடூரமாக இருக்கும். நமது உடல் ஆரோக்கியம், மனதையும் உருக்குலைக்கும். போலீஸ் சூப்பிரண்டு என்ற முறையில் சொல்கிறேன், போதை பொருட்கள் இல்லாத சமுதாயத்தை நாம் உருவாக்கி, அதனை அடியோடு வேறறுக்க வேண்டும்.
இப்படி நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் போதை பொருட்கள் இல்லாத சமூதாயத்தை உருவாக்குவோம் என்ற உறுதிமொழி எடுத்து பின்பற்றினால் நமது நாடு அசுர வேகத்தில் தலைசிறந்த நாடாக மாறிவிடும். போதை பொருட்கள் தடுப்பு குறித்து குமரி மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்