என் மலர்
நீங்கள் தேடியது "slug 224011"
- தடுப்பணையை சுத்தப்படுத்தவும், குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.
- மடத்துக்குளம் பகுதியில் உள்ள நீர் வழித்தடங்கள் மற்றும் அதன் அருகில் குப்பைகள் மற்றும் கழிவுகளை பலர் கொட்டுகின்றனர்.
மடத்துக்குளம்:
திருப்பூர் போடிப்பட்டி ,மடத்துக்குளம் பகுதியில் தடுப்பணைகளில் தேங்கும் கழிவுகளால் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சமுக ஆர்வலர்கள் கூறியதாவது:-
ஒரு பகுதியின் விவசாய மேம்பாட்டுக்கு மழை வளம் மட்டுமல்லாமல் நிலத்தடி நீர் ஆதாரமும் முக்கிய பங்கு வகிக்கிறது.பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் வீடுகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான கட்டிடங்களிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் உருவாக்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஆறு, ஓடை உள்ளிட்ட நீர் வழித்தடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டு மழைநீர் சேமித்து வைக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் மேம்படுவதுடன் காற்றின் ஈரப்பதம் அதிகரித்து பயிர்களின் வளர்ச்சிக்கு கைகொடுக்கிறது.
அதுமட்டுமல்லாமல் விலங்குகள், பறவைகளின் குடிநீர் ஆதாரமாக விளங்கி பல்லுயிர் பெருக்கத்துக்கும் துணை புரிகிறது.இவ்வாறு பலவகைகளில் வாழ்வியலுக்கு உறுதுணையாக விளங்கும் தடுப்பணைகள் ஒருசிலரின் அலட்சியத்தால் பாழாகி வருகிறது. மடத்துக்குளம் பகுதியில் உள்ள நீர் வழித்தடங்கள் மற்றும் அதன் அருகில் குப்பைகள் மற்றும் கழிவுகளை பலர் கொட்டுகின்றனர்.இந்த கழிவுகள் மழைநீரில் அடித்து வரப்பட்டு தடுப்பணைகளில் சென்று தேங்குகிறது. இதனால் தண்ணீர் மாசு படுவதுடன் பல்வேறு நோய்த்தொற்றுகள் உருவாவதற்கும் காரணமாகி விடுகிறது. அந்தவகையில் மடத்துக்குளத்தையடுத்த சோழமாதேவி பகுதியில் உள்ள தடுப்பணையில் பிளாஸ்டிக் பாட்டில்கள், துணிகள், குப்பைகள் உள்ளிட்ட கழிவுகள் தேங்கியுள்ளது.மேலும் தண்ணீர் பாசம் பிடித்து துர்நாற்றம் வீசுகிறது.இதனால் அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கு வேலை செய்ய வரும் தொழிலாளர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் இந்த தண்ணீரால் பலவிதமான நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே தடுப்பணையை சுத்தப்படுத்தவும், குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.
- திடீர் மழை வெள்ளத்தால் அணைப்பாளையம் தரைப்பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
- தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை கருணை காட்டினால் நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் குளிர் மற்றும் கோடை பருவத்தில் இயல்பான அளவை காட்டிலும் அதிக மழை பெய்துள்ளது.தென்மேற்கு பருவமழை துவங்கியதும், ஜூன் மாதம் பெய்ய வேண்டிய மழை பெய்துள்ளது. அதற்கு பிறகு பருவமழை ஏமாற்றிவிட்டது. கடந்த சில நாட்களாக திடீரென கருமேகம் திரண்டு, மழைக்கான அறிகுறி தென்படுவதும், பலத்த காற்று காரணமாக மழை பொய்த்து போவதுமாக சென்று கொண்டிருக்கிறது.
மானாவாரி சாகுபடியை துவக்க முடியாமல் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.திருப்பூரின் நிலை இப்படியிருந்தாலும் கோவை மாவட்ட பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையால், நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 3நாட்களுக்கு முன் சித்திரைச்சாவடி பகுதிகளை உற்சாகத்துடன் கடந்து வந்த புது வெள்ளம், திருப்பூரை வந்தடைந்தது.திருப்பூர் நகரப்பகுதிக்குள் நுழைந்த மழைநீர்கழிவுநீருடன் கலந்து, கருப்புநிறமாக ஆர்ப்பரித்து பாய்ந்தோடுகிறது. நொய்யல் வெள்ளத்தால் மங்கலம் நல்லம்மன் தடுப்பணை, திருப்பூர் அணைமேடு, அணைக்காடு தடுப்பணைகளில், வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடியது. திடீர் மழை வெள்ளத்தால் அணைப்பாளையம் தரைப்பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
திருப்பூர் மாநகருக்குள் நுழைந்த மழை வெள்ளத்தை பார்க்க ஆர்வமாக சென்று பொதுமக்கள் பார்வையிட்டனர். ஆனால் கருப்பு நிறத்தில் தண்ணீர் பாய்ந்தோடியதால் மக்கள் மகிழ்ச்சியில்லாமல் பார்த்து திரும்பினர்.மதியத்திற்கு பின் நொய்யலில் பாய்ந்தோடிய வெள்ளம் தெளிந்த நிலையில் இருந்தது. கருப்பு நிறம் மாறி மழை வெள்ளமாக பாய்ந்தோடியது.இருப்பினும், நொய்யல் ஆற்றில் தேங்கிய சாக்கடை கழிவுகள் அடித்துச்செல்லப்படுகிறது. அடுத்து புது வெள்ளம் பாய்ந்து வந்தால் அருகே உள்ள குளங்களுக்கு தண்ணீர் எடுக்கலாம் என தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
நொய்யல் ஆறு மாவட்டத்தில் நுழையும், சாமளாபுரம் பகுதிகளில் ஆகாயத்தாமரை அதிகம் படர்ந்துள்ளது. ஆற்றின் ஒரு அங்குலம் கூட கண்ணில் தெரியாதபடி ஆகாயத்தாமரை அடர்த்தியாக ஆக்கிரமித்துள்ளது. திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆற்றில் படர்ந்திருந்த ஆகாயத்தாமரை, தண்ணீரில் அடித்துவரப்பட்டது. அவ்வாறு, அடித்துவரப்பட்ட ஆகாயத்தாமரை அக்ரஹாரப்புதூர் பாலத்தை முழுமையாக அடைத்துவிட்டது.
தண்ணீர் செல்லும் குழாய்கள் முழுமையாக அடைத்ததால், தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. சூலூர் மற்றும் அவிநாசி ஒன்றிய பகுதிகளை இணைக்கும் பாலத்தில், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆகாயத்தாமரையை அகற்றாவிட்டால், அந்த ரோட்டை யாருமே பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தண்ணீர் குறைந்ததும், பொக்லைன் மூலமாக ஆகாயத்தாமரையை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள, தடுப்பணைகள் நிரம்பி வழிந்தன. மங்கலம் நல்லம்மன் தடுப்பணையில், புது வெள்ளம் பாய்ந்து ஆர்ப்பரித்து சென்றது.மழை வெள்ளப்பெருக்கால், அணையில் இருந்து வழிந்தோடிய தண்ணீரில் வெண்ணிற நுரை ஏற்பட்டது. தண்ணீரின் வேகத்துக்கு ஏற்ப நுரை பொங்கி பரவியதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.கோவை மாவட்ட கிழக்கு பகுதியில், சூலூர் தாலுகா பகுதிகளில் ரசாயனங்கள் ஆற்றில் கலப்பதால் இத்தகைய சீர்கேடு ஏற்படுகிறது.ஆற்றில் ஆபத்தான கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருப்பூர் பசுமை ஆர்வலர்களின் முயற்சியால், மாசுபட்டிருந்த நொய்யல் ஆறு மீட்டெடுக்கப்பட்டது. மாநகராட்சி மற்றும் தன்னார்வலர் முயற்சியால், ஆண்டு தோறும் ஆற்றை தூர்வாரி பருவமழைக்கு முன்னதாக, 'பளிச்'சென மாற்றிவிடுவார்கள்.இந்தாண்டு பருவமழையும் வந்துவிட்டது.கோடை மழையே போதும் போதும் என்ற அளவுக்கு வாரி வழங்கி சென்றுள்ளது. தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை கருணை காட்டினால் நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
திருப்பூரை சுற்றிலும் உள்ள குளம், குட்டைகளை நிரப்பிவிடலாம்.இருப்பினும் இந்தாண்டு திருப்பூர் நகரப்பகுதியில் நொய்யல் ஆறு தூர்வாரி சுத்தப்படுத்தாமல், புதர்மண்டி காணப்படுகிறது. சில இடங்கள்நொய்யல் ஆறா, சோலையா என்று கேட்கும் அளவுக்கு புதர்மண்டி காணப்படுகிறது.மழை வெள்ளம் தடையின்றி செல்ல ஏதுவாக, நகரப்பகுதியில் நொய்யல் ஆற்றை தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூர் சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 300-க்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் கறிக்கோழிகள் கோவை, திருப்பூர் மற்றும் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது.சில பண்ணைகளில் இடநெருக்கடி மற்றும் நோயின் காரணமாக அடிக்கடி கறிக்கோழிகள் இறப்பது வாடிக்கையாக உள்ளன. இவ்வாறு இறக்கும் கோழிகளை பண்ணை உரிமையாளர்கள் சிலர் அருகில் உள்ள சிறு தடுப்பணைகள், பி.ஏ.பி., பிரதான வாய்க்கால் மற்றும் ரோட்டோரங்களில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக கொட்டி செல்கின்றனர்.
இது குறித்து வட்டார சுகாதாரத்துறையினர் கூறியதாவது:-
பண்ணைகளில் இறக்கும் கோழிகள் மற்றும் கோழி கழிவுகளை ஆழமாக குழி தோண்டி புதைத்து அதன் மீது பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும். இதனை விடுத்து இறந்த கோழிகளை ரோட்டோரம் கொட்டுவது, குடியிருப்பு பகுதிகளில் வீசி எறிவது, ஓட்டல், தள்ளுவண்டி கடைக்காரர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வது போன்றவை சட்ட விரோதமான செயல். இதனை செய்பவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- பிளாஸ்டிக் கழிவுகள் குறித்த கருத்தரங்கு நடந்தது.
- கூடுதல் ஆட்சியர் சரவணன் தொடங்கி வைத்தார்.
மதுரை
மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் என்ஜினீயரிங் டெக்னாலஜி, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து "பிளாஸ்டிக் கழிவு மேலாண்மைக்கான மாற்று வழிகள்" என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்நகை நடத்தியது.
கூடுதல் ஆட்சியர் சரவணன் தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமலிங்கம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விஞ்ஞானி ராஜ்குமார், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ராமராஜ், பாண்டியராஜன், உஷாராணி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன உதவி இயக்குநர் ஜெயசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.