search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஞ்சுகிராமம்"

    • இருச்சக்கர வாகன விபத்தில் சிக்கி இறந்தாரா? போலீசார் விசாரணை
    • சாலையின் ஓரம் வாலிபர் ஒருவர் தலை துண்டித்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    கன்னியாகுமரி:

    அஞ்சுகிராமத்தை அடுத்த காணிமடம் பகுதியில் ஏராளமான தொழிலாளிகள் வசித்து வருகிறார்கள்.

    இன்று காலை தொழிலாளிகள் சிலர் காணிமடம் பகுதியில் நடந்து சென்றனர். அப்போது சாலையின் ஓரம் வாலிபர் ஒருவர் தலை துண்டித்த நிலையில் பிணமாக கிடந்தார். அவரை சுற்றி ரத்தம் உறைந்து கிடந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளிகள் இதுபற்றி அஞ்சுகிராமம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இறந்து கிடந்த வாலிபர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த வாலிபர் காணிமடம் பகுதியை சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவரின் மகன் பிரகாஷ் (வயது 21) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது வீட்டிற்கு சென்று விசாரித்தனர்.

    இதில் பிரகாஷ் நேற்றிரவு நண்பரின் இருச்சக்கர வாகனத்தை வாங்கி கொண்டு வெளியே சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள காண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பிரகாஷ், நண்பரின் இரு சக்கர வாகனத்தில் காணி மடம் சாலையில் வேகமாக செல்லும் போது விபத்தில் சிக்கி பலியாகி இருக்கலாம் என தெரிகிறது.

    இருச்சக்கர வாகனம், சாலையின் சென்டர் மீடியனில் மோதி அவரது தலை துண்டாகி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் காணிமடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • புகாரின் பேரில் ஜார்ஜ் மீது பெண் வன்கொடுமை சட்டம் உள்பட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • போலீசார் ஜார்ஜை கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரம் நிலப்பாறை திருமூலநகரை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 45). இவரது மனைவி மேரி சைலஜா (40) இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

    ஜார்ஜ் கொத்தனார் வேலை செய்து வந்தார். அவருடன் வேலை செய்து வரும் பெண் ஒருவருக்கும் ஜார்ஜுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த விவகாரம் மேரி சைலஜா விற்கு தெரியவந்தது. இதை யடுத்து அவர் கணவரை கண்டித்தார். இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட் டது. சம்பவத்தன்று மேரி சைலஜா வீட்டில் இருந்தார்.

    அப்போது வீட்டிற்கு வந்த ஜார்ஜிடம் இனி அந்த பெண்ணுடன் தொடர்பு வைக்கக்கூடாது என்று கூறி கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஜார்ஜ் மனைவி மேரி சைலஜாவை சரமாரியாக தாக்கினார். இதில் மேரி சைலஜா படுகா யம் அடைந்தார்.

    இதையடுத்து அவர் சிகிச்சைக்காக நாகர்கோ விலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட் டது. இதுகுறித்து மேரி சைலஜாவின் தாயார் ராஜம் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் ஜார்ஜ் மீது பெண் வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை யில் இருந்த மேரி சைலஜா நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக் காக மாற்றப்பட்டு உள்ளது. போலீசார் ஜார்ஜை கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள். மேரி சைலஜா வின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்காதலை தட்டிக் கேட்ட மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.

    • அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழகசெயலாளர் ஜெஸீம் தலைமையில் நடந்தது
    • பொதுமக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வை கண்டித்து நடந்தது

    கன்னியாகுமரி:

    அஞ்சுகிராமத்தில் பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு உள்பட பொதுமக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்தும் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அஞ்சு கிராமம் பேரூர் செயலாளர் ராஜபாண்டியன் தலைமை தாங்கினார். ஜெயலலிதாபேரவை செயலாளர் மணிகண்டன், ஒன்றிய கழக பொருளாளர் டாக்டர் பாலமுருகன், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் சோபி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் வைகுண்ட மணி, அகஸ்தீ ஸ்வரம் ஒன்றிய மகளிர் அணி துணைச் செயலாளர் அருள் செல்வி, கவுன்சிலர் மீனாஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினர்களாக அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அதி முக செயலாளர் ஜெஸீம் முன்னாள் நாகர்கோவில் நகர கழகசெயலாளர் சந்துரு என்றஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் சுந்தரம் பிள்ளை, கவுன்சிலர் ராமச்சந்திரன், விஜயன், ஆட்டோ பரமசிவன், விஷ்ணு, அஞ்சை சுரேஷ், சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர். அழகப்பபுரத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பேரூர் செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.பேரூர் அவை தலைவர் பத்மநாபன் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினர்களாக அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெஸீம் முன்னாள் நகரக் கழகச் செயலாளர் சந்துரு ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஜெரோம், செல்வி, பெமியா, குமார், சுரேஷ், ஆன்றனி, தவராஜா, சுனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். மயிலாடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை பேரூர் செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். பேரூர் அவைத் தலைவர் சிந்தாமணி, மயிலாடி பால் கூட்டுறவு சங்கத் தலைவர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    • குண்டர் சட்டத்தில் கைது
    • பாளை. ஜெயிலில் அடைப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். கஞ்சா, குட்கா வழக்கில் கைது செய்யப்படுபவர்களை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகிறார்கள். தொடர்ந்து குற்ற செயல்களை ஈடுபடுப வர்கள் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்து வருகிறது.

    இந்த நிலையில் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர். கன்னியாகுமரி லீபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராபர்ட் சிங் (வயது 21), வட்டகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பெலிக்ஸ் (27) இவரையும் அஞ்சுகிராமம் போலீசார் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் ஜெயிலில் அடைத்திருந்தனர்.

    இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது. இதையடுத்து ராபர்ட் சிங், பெலிக்ஸ் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து ராபர்ட் சிங், பெலிக்ஸ் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டார். நாகர்கோவில் ஜெயிலில் இருந்த இருவரும் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்ட னர். குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.

    • கண்காணிப்பு காமிரா காட்சிகள் மூலம் சிக்கினர்
    • போலீசார் தொடர்ந்து விசாரணை

    நாகர்கோவில்:

    அஞ்சுகிராமம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து இரண்டு கடைகளில் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக அஞ்சு கிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது.

    தனிப்படை போலீசார் கொள்ளை நடந்த பகுதி யில் உள்ள சிசிடிவி காமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.அப்போது கொள்ளை யர்கள் குறித்த அடையாளங்கள் தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற் கொண்டனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு கொள்ளை வழக்கு தொடர்பாக வினு,பேச்சிமுத்து, சந்தோஷ் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.42 ஆயிரம் பணம், 7 செல்போன்கள் மற்றும் விலை உயர்ந்த சாக்லேட்டுகள் உட்பட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கைது செய்யப்பட்ட வினு மீது 7 வழக்குகள் உள்ளது. இவர் நாகர்கோவில் மாநகராட்சியில் குப்பை வண்டி ஓட்டி வருகிறார். பேச்சிமுத்து மீதும் களக்காடு பகுதியில் வழக்குகள் உள்ளது. இவர் சுசீந்திரம் அழகப்பபுரம் பேரூராட்சி பகுதிகளில் குப்பை வண்டி ஓட்டி வருகிறார்.சந்தோஷ் அப்டா மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறார்.கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    வேறு ஏதாவது கொள்ளை வழக்கில் இவர்களுக்கு தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு பூதப் பாண்டி, குழித்துறை பகுதி யில் 2 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 பேர் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    • 2 பேர் மீது கொலை முயற்சி வழக்கு
    • ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

    நாகர்கோவில்:

    அஞ்சுகிராமம் அருகே ரஸ்தாகாடு பகுதியை சேர்ந்தவர் பால்ராஜா (வயது 63). ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்.

    இவர், நேற்றிரவு தனது மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திற்கு மீன் வாங்குவதற்காக சென்றார். பின்னர் மீன்களை வாங்கி விட்டு இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

    பால்குளம் அருகே வந்து கொண்டிருந்தபோது லீபுரம் பகுதியைச் சேர்ந்த ராபர்ட் சிங் (22), வட்டக்கோட்டை பகுதி யைச் சேர்ந்த பெலிக்ஸ் (27) ஆகிய இருவரும் பால்ராஜாவின் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர்.இருவரும் பால்ராஜாவிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    இதில் ஆத்திரமடைந்த ராபர்ட் சிங் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பால்ராஜாவை வெட்டினார். பெலிக்ஸ் கத்தியால் குத்தினார். உடனே பால்ராஜா கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் வந்த னர். இதையடுத்து இருவ ரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த பால்ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அவ ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பால்ராஜா அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ராபர்ட் சிங், பெலிக்ஸ் ஆகிய இருவர் மீதும் கொலை முயற்சி உள்பட 4 பிரிவு களில் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

    தலைமறைவான ராபர்ட் சிங் மீது கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், தென்தா மரைகுளம் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது. பெலிக்ஸ் மீது அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    ×