என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கடையம்"
- தோரணமலை முருகன் கோவில் சித்தர்கள், முனிவர்கள் வழிபட்ட புராண சிறப்புடையதாகும்.
- கிரிவலப்பாதை முழுவதும் மூலிகைகள் நிறைந்திருப்பதால் உற்சாகம் ஏற்படுவதாக பக்தர்கள் கூறினர்.
கடையம்:
தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். இக்கோவில் சித்தர்கள், முனிவர்கள் வழிபட்ட புராண சிறப்புடையதாகும். தோரணமலையில் கார்த்திகை மாத பவுர்ண மியை முன்னிட்டு ஆயிரக் கணக்கான பக்தர்கள் கிரிவலம் செய்த னர். கிரிவலப்பாதை முழுவதும் மூலிகைகள் நிறைந்தி ருப்பதால் கிரிவலம் சென்ற பக்தர்கள் உற்சாகம் ஏற்படுவதாக கூறினர்.
மேலும் கிரிவலம் முடிந்த பின்பு உத்தர்காண்டு மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் நலமுடன் மீண்டு வர சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. கிரிவலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் காலை அன்னதானம் மற்றும் சிறப்பு பிரசாதங்கள் வழங்கப் பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தோரணமலை பரம்பரை அறங்காவலர் செண்பக ராமன் செய்திருந்தார்.
- தோரணமலையில் குடும்ப மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
- போட்டியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கடையம்:
மாரத்தான் போட்டி உலகம் முழுவதும் நடத்தப் படும் ஒரு விளையாட்டு. இந்த போட்டிகள் ஒலிம்பிக் போட்டிகளில் இணைக்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது.
பெரும்பாலும் சர்வ தேச போட்டிகளில் மினி மாரத்தான் போட்டிகளுக் கான தூரம் 10 கிலோ மீட்டர் என நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. வெற்றியை சொல்ல ஓடிய இந்த போட்டியில் பங்கேற்றால் உடல் நலம் சிறப்படையும் என்பதோடு வாழ்வில் வெற்றியை காணலாம் என்ற நம்பிக்கை பலருக்கு உண்டு.
மேலும் தற்போது உலகம் முழுவதும் ஏதாவது ஒரு குறிக்கோளுடன் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. அந்த வகையில் இன்று தென்காசி அருகே கடையம் தோரணமலையில் குடும்ப மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. உன்னதமான உணவு முறையுடன் ஆரோக்கியத்தை பேணு வதை வலியுறுத்தும் வகையில் இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
மாரத்தான்
இதனை எம்.கே.வி.கே. தொண்டு நிறுவனம், தோரணமலை முருகன் கோவில் நிர்வாகம் இணைந்து நடத்தியது. காலை 6 மணி அளவில் தென்காசி அருகே மத்தளம் பாறையில் உள்ள ஷோகோ நிறுவனம் முன்பு போட்டி தொடங்கியது. இதில் மாணவர்கள் இளைஞர்கள் என 100-க்கும் மேற்பட்ட வர்கள் கலந்து கொண்டு ஓடினர். இதில் இளம் பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
10 கிலோ மீட்டர்
போட்டியை தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தொடங்கி வைத்தார்.
ஓட்டப்பந்தய வீரர்கள் திரவியநகர், மாதாபுரம் செக்போஸ்ட், கானாவூர், வழியாக தோரணமலையை அடைந்தனர். அவர்கள் மொத்தம் 10 கிலோ மீட்டர் தூரம் ஓடி வெற்றி எல்லையை அடைந்தனர். கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் டி.சர்ட், சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது.
பரிசளிப்பு
விழாவில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச் சந்திரன் கலந்து கொண்டு போட்டியில் பங்கேற்ற வர்களுக்கு பரிசு களை வழங்கினார். முன்னதாக போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் தோரணமலையில் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
போட்டியில் முதலிடம் வந்த மாரிசரத் ரூ.10 ஆயிரம் பரிசை பெற்றார். 2-வதாக வந்த அஜித்குமார் ரூ.5 ஆயிரமும், 3-வது வந்த பத்ரி நாராயணன் ரூ.3 ஆயிரமும் பரிசாக பெற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை எம்.கே.வி.கே. தொண்டு நிறுவனம் பாலமுருகன், தோரணமலை பரம்பரை அறங்காவலர் செண்பக ராமன் ஆகியோர் செய்து இருந்தனர்.
- வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் அணி தலைவர் விசுவராஜ் விவசாயிகளுக்கு வெங்காயம், சிறுகிழங்கு சாகுபடி செய்வது குறித்து பயிற்சியளித்தார்.
- ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன் விவசாயிகளுக்கு சட்டி, மம்பட்டி, களவெட்டி வழங்கினார்.
கடையம்:
கடையம் யூனியனுக்கு உட்பட்ட கோவிந்தபேரி ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில், திட்டத்தின் அணி தலைவர் விசுவராஜ் கலந்து கொண்டு 90 விவசாயிகளுக்கு வெங்காயம், சிறுகிழங்கு சாகுபடி செய்வது குறித்து பயிற்சியளித்தார். பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன் விவசாயிகளுக்கு உபகரணங்களான சட்டி, மம்பட்டி, களவெட்டி போன்றவற்றை வழங்கினார். இதில் துணைத்தலைவர் இசேந்தரன், 5-வது வார்டு உறுப்பினர் ராஜா, 4-வது வார்டு உறுப்பினர் சுகிதா மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
- சித்ரா 10-ம் வகுப்புடன் பள்ளி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
- விஷப்பூச்சி கடித்ததால் சித்ரா வலி தாங்க முடியாமல் அலறினார்.
கடையம்:
கடையம் அருகே உள்ள தெற்கு மடத்தூரை சேர்ந்தவர் சுரேஷ். விவசாயி. இவரது மகள் சித்ரா(வயது 17). இவர் 10-ம் வகுப்புடன் பள்ளி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
நேற்றிரவு வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு சித்ரா தனது பெற்றோருடன் தூங்கி கொண்டிருந்தார்.
இன்று அதிகாலை 1 மணிக்கு அவரை விஷப்பூச்சி ஒன்று கடித்தது. உடனே எழுந்த சித்ரா வலி தாங்க முடியாமல் அலறினார். மேலும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.
உடனே அவரை அவரது பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக தென்காசிக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து மேல்சிகிச்கை க்காக அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு தாது உப்புக்கள் வழங்கப்பட்டது.
- விவசாயிகள் பலர் தங்களது கால்நடைகளைக் கொண்டு வந்து அவைகளுக்கு தடுப்பூசி, மருந்துகள் பெற்று சென்றனர்.
கடையம்:
கடையம் யூனியனுக்குட்பட்ட ரவணசமுத்திரம் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலைவர் முகம்மது உசேன் தலைமையில் நடைபெற்றது. முகாமில் கால்நடை உதவி மருத்துவர் கிருஷ்ணராஜ், உதவியாளர் அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு தாது உப்புக்கள் வழங்கினர். இதில் துணைத்தலைவர் ராமலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் விவசாயிகள் பலர் தங்களது கால்நடைகளைக் கொண்டு வந்து அவைகளுக்கு தடுப்பூசி போட்டு, மருந்துகள் பெற்று சென்றனர்.
- வள்ளியம்மாள் புரத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கினார்.
- விழாவில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்து பேசினார்.
கடையம்:
கடையம் யூனியன் மடத்தூர் ஊராட்சி க்கு உட்பட்ட வள்ளியம்மாள் புரத்தில் ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கினார். அதன் திறப்பு விழா நடைபெற்றது. மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்து பேசினார்.
இதில் மடத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ் செல்வி ரஞ்சித், ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர் கணபதி, மாநில அமைப்பு செயலாளர் ராதா, மாநில போக்குவரத்து பிரிவு அண்ணா தொழிற்சங்க செயலாளர் சேர்மதுரை, ஐந்தாம் கட்டளை பஞ்சா யத்து தலைவர் முப்புடாதி பெரியசாமி, பொ ட்டல்புதூர் பஞ்சாயத்து தலைவர் கணேசன், மடத்தூர் பஞ்சா யத்து துணை தலைவர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நிகழ்ச்சியில் பேராசிரியர் வில்லியம் தர்மராஜா கலந்து கொண்டு பேசினார்.
- விழாவில் மாணவ-மாணவிகள் 194 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
தென்காசி:
கடையம் அருகே உள்ள வெய்க்காலிப்பட்டி புனித ஜோசப் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறை தலைவரும், கல்லூரி வளர்ச்சி கழக இயக்குநருமான பேராசிரியர் வில்லியம் தர்மராஜா தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
தொடர்ந்து கல்லூரியில் (2018-2020, 2019 -2021, 2020-2022) -ம் கல்வியாண்டில் பயின்ற மாணவ-மாணவிகள் 194 பேருக்கு பட்டங்களை வழங்கினார். கல்லூரித் தலைவரும், பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயருமான எஸ். அந்தோணிசாமி விழாவிற்கு முன்னிலை வகித்து ஆசியுரை வழங்கினார். கல்லூரி செயலர் சகாயஜான் பட்டமளிப்பு விழாவினை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் மேரி ரபேலின் கிளாரட் வரவேற்புரை ஆற்றி ஆண்டறிக்கை யை வாசித்தார். விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
- நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் 5 -வது நாளில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- பேரணியை வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தொடங்கி வைத்தார்.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மாதா பட்டணம் ச.ச.வி. மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் 5 -வது நாளில் பிளாஸ்டிக் ஒழிப்பு (நெகிழி) விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உதவி தலைமை ஆசிரியர் தங்கராஜன் வரவேற்று பேசினார். ஆசிரியை தமிழரசி தலைமை தாங்கினார். இளஞ் செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஆசிரியை ஜெயராணி, தேசிய பசுமைப்படை சாந்தி மோசஸ் சாரண சாரணியர் இயக்கம் மோசஸ் முன்னிலை வகித்தனர்.
இதில் தலைமை ஆசிரியர் அமிர்த சிபியா மற்றும் உதவி தலைமை ஆசிரியைகள் வெங்கடலட்சுமி, ரெஜினா தெரசாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரணியை வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தொடங்கி வைத்தார். பேரணி கோவிலூற்று, மாதாபட்டணம் பகுதியில் நடைபெற்றது. துணிப்பையை பாளை மறைமாவட்ட பொருளாளர் அந்தோணி சாமி வழங்க வார்டு உறுப்பினர் குருசாமி பெற்றுகொண்டார். உதவி திட்ட அலுவலர் அருள் பீட்டர் ராஜ் நன்றி கூறினார் . நிகழ்ச்சியை திட்ட அலுவலர் அந்தோணி துரைராஜ் , நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் செய்திருந்தனர்.
- நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் கடந்த 3-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
- முகாமை பள்ளி நிர்வாகி அருள் அந்தோணி மிக்கேல் தொடங்கி வைத்தார்.
கடையம்:
கடையம் அருகே உள்ள மாதாபட்டணம் ச.ச.வி. மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் வெங்காடம்பட்டி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட இடங்களில் கடந்த 3-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடக்க விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தலைமை தாங்கினார். பள்ளி உதவி தலைமை தங்கராஜன் வரவேற்று பேசினார். பள்ளி தலைமை ஆசிரியை அமிர்த சிபியா, கடையம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால சுப்பிரமணியன், ஊராட்சி மன்ற துணை தலைவர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை பள்ளி நிர்வாகி அருள் அந்தோணி மிக்கேல் தொடங்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் சங்கர் மற்றும் ஊராட்சி செயலர் பாரத், லட்சுமியூர் ரவி, வார்டு உறுப்பினர் தமிழ்செல்வி ஆகியோர் வாழ்த்தி பேசினர். உதவி திட்ட அலுவலர் அருள் பீட்டர் ராஜ் நன்றி கூறினார். விழாவினை திட்ட அலுவலர் அந்தோணி துரைராஜ், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் இணைந்து நடத்தினர்.
- ரேசன் கடைக்கு ஆலங்குளம் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
- விழாவில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஆழ்வார்குறிச்சி:
கடையம் ஊராட்சி ஒன்றியம் வெங்காடம்பட்டி ஊராட்சி அழகம்மாள் புரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ்
ரூ.8 லட்சம் மதிப்பீட்டில், ரேசன் கடைக்கு ஆலங்குளம் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
இதில் வெங்காடம்பட்டி ஊராட்சி தலைவர் சாருகலா ரவி, மடத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்செல்வி ரஞ்சித், ஏ.பி..நாடானூர் ஊராட்சி மன்ற தலைவர் அழகுதுரை, ஐந்தாங்கட்டளை ஊராட்சி மன்ற தலைவர் முப்புடாதி பெரியசாமி, வெங்காடம்பட்டி மன்ற செயலாளர் பாரத், அழகம்மாள்புரம், முத்தம்மாள்புரம், சங்கரலிங்கபுரம் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- சின்னத்தேர் திடலில் பத்திரப்பதிவு துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
கடையம்:
கடையம் சின்னத்தேர் திடலில் வக்கீல் ராஜசேகர் தலைமையில் பத்திரப்பதிவு துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு பத்திரபதிவு துறையில் சொத்தின் வழிகாட்டி மதிப்பை உயர்த்தியுள்ளது. மேலும் பல மடங்கு உயர்த்த உத்தேசித்து வருவதாக கூறி, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் முத்தையா, மகாமைதின், வக்கீல் ஜெயக்குமார், முல்லைநில தமிழர் விடுதலை கட்சி கரும்புலி கண்ணன்மற்றும் சுப்பிரமணியன், 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- பிளாஸ்டிக் பயன்படுத்துவதன் தீமை குறித்து கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ரவணசமுத்திரம் ஊராட்சியில் இயற்கையை பாதுகாக்கும் வகையிலும், சுற்றுச்சூழலை பெரிதும் பாதிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பது மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிகை மக்கள் பயன்படுத்தாமல் இருப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குட் ஷப்பர்ட் பள்ளி மாணவ-மாணவிகளால் நடத்தப்பட்டது.
பின்னர் தெரு தெருவாக சென்று பிளாஸ்டிக் பயன்படுத்துவதன் தீமை குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை ஊராட்சி மன்ற தலைவர் முகம்மது உசேன் தொடங்கி வைத்தார். இதில் துணைத்தலைவர் ராமலெட்சுமி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கோமதி பரமசிவன், மொன்னா முகம்மது இர்சாத், முகைதீன் அப்துல் காதர், பள்ளி மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்