search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224741"

    • ரமேஷ் அங்கன்வாடி பணியாளர் நீலாம்பாளை தொடர்பு கொண்டு, தலித் சமூகத்தை சேர்ந்த வைக்கக்கூடாது என்று ஜாதிய வன்மத்தோடு ரமேஷ் பேசி உள்ளார்.
    • நீலாம்பாள், மகேஸ்வரியிடம் கூறி உள்ளார். பின்னர்செல்போனில் பதிவான ஆடியோ வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கோபுராஜபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமையலர் என்று கூறப்படும், ஊட்டச்சத்து பணியாளர் மற்றும் ஊட்டச்சத்து உதவி பணியாளர்கள் ஆகிய பணியிடங்கள் சில மாதங்களாக காலியாக இருந்துள்ளது.

    இந்நிலையில், திட்டச்சேரி பகுதியில் பணியாற்றி வரும் ஊட்டச்சத்து பணியாளர் ஒருவர் கோபுராஜபுரம் அங்கன்வாடி மையத்தில் கூடுதல் பொறுப்பாக பணியாற்றி வந்துள்ளார்.

    இதையடுத்து அங்கன்வாடி பணியாளர் நீலாம்பாள் என்பவர் தற்காலிமாக கோபுராஜபுரம் காலனித் தெருவை சேர்ந்த ஜோதிபாஸ் என்பவரின் மனைவி மகேஷ்வரி (வயது 38) என்பவரை நியமனம் செய்துள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்த கோபுராஜபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் உமாமகேஸ்வரியின் கணவரும், ஒப்பந்தக்காரருமான ரமேஷ் என்பவர் அங்கன்வாடி பணியாளர் நீலாம்பாளை தொடர்பு கொண்டு, தலித் சமூகத்தை சேர்ந்த அவரை பணியில் வைக்கக்கூடாது என்று ஜாதிய வன்மத்தோடு ரமேஷ் பேசி உள்ளார்.

    இது குறித்து நீலாம்பாள், மகேஸ்வரியிடம் கூறி உள்ளார்.

    பின்னர்செல்போனில் பதிவான ஆடியோ வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது.

    இதை சற்றும் எதிர்பாராத ரமேஷ், அந்த பெண்ணை புகார் அளிக்க விடாமல் தடுத்தாக கூறப்படுகிறது.

    இதை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சி ஸ்ட் கம்யூ. கட்சியின் தீண்டாமை ஒழிப்பு அமைப்பு, கோபுராஜபுரம் கிராம மக்கள் ஆகியோர் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹரிடம் புகார் அளித்தனர்.

    இதையடுத்து மகேஸ்வரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகை தொகுதி செயலாளர் அறிவழகன், திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளர் காசிநாதன், வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அரவிந்த்வ ளவன் ஆகியோர் உடன் சென்று திட்டச்சேரி போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின்பேரில் திட்ட ச்சேரி போலீசார் ரமேஷ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ×