என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சுரேஷ்ராஜன்"
- குளங்களிலும், பட்டா நிலங்களிலும் செங்கலுக்கு மண் எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
- அமைச்சர் துரைமுருகனிடம், சுரேஷ்ராஜன் வலியுறுத்தல்
நாகர்கோவில்:
குமரி கிழக்கு மாவட்ட முன்னாள் தி.மு.க. செய லாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் நேற்று சென்னையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் கட்டிடங்கள் கட்டுவதற்கு தேவையான மூலப் பொரு ட்களான பாறைப்பொடி, ஜல்லி, ஹாலோ பிளாக்கல் மற்றும் செங்கல் ஆகியவை கிடைக்காத காரணத்தால் நெல்லை மாவட்டத்தில் இருந்து கொண்டு வந்து கட்டிட வேலை செய்து வந்தனர்.
தற்போது அங்கு கல்குவாரிகள் நிறுத்தப்பட்ட காரணத்தால் குமரி மாவட்டத்தில் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான மூலப்பொருட்கள் கிடைக்காத நிலையில் கட்டிட தொழில்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இந்த தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து மிகவும் வேதனையடைகிறார்கள்.
மேலும் குளங்களிலும், பட்டா நிலங்களிலும் செங்கலுக்கு மண் எடுப்பதற்கு அனுமதி வழங்காமல் இருப்பதால், செங்கல் தொழில் செய்கிறவர்கள்மிகவும் பாதிப்படைந்துள்ளனர். எனவே குமரி மாவட்டத்தில் கட்டிட தொழி லுக்கு தேவையான மூலப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதற்கும், குளங்கள் மற்றும் பட்டா நிலங்களில் மண் எடுப்பதற்கும் உரிய வழிகளை செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பாரதிய ஜனதாவினர் மீது முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் கண்டனம்
- பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு
நாகர்கோவில், ஜூன்.12-
முன்னாள் அமைச்சரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான சுரேஷ்ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வேளிமலை முருகன் கோவிலில் நடந்த தேர் திருவிழாவில் மீன்வ ளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் தமிழக அரசின் பிரதிநிதியாக கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
அப்போது பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழக அரசின் பிரதிநிதியாகவும், பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள அமைச்சர் மனோதங்கராஜ் தேர் திருவிழாவில் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்ததில் என்ன தவறு இருக்கிறது. மதச்சார் பின்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தமிழக அரசின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் விழாக் களில் இதுநாள் வரையில் எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் நடந்து வந்தது.
இப்போது ஒற்றுமையாக இருக்கும் குமரி மாவட்ட மக்களிடையே குழப்பம் விளைவிக்கும் வகையில் பாரதிய ஜனதா நடந்து வருவது கண்டனத்துக்குரி யது.
இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்