என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காணவில்லை"
- கடந்த 3 நாட்களாக காணவில்லை என்று பெற்றோர்கள் வளத்தி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர்.
- ராஜேஸ்வரி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
மேல்மலையனூர் அருகே கொடுக்கன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் விவசாயி. இவருடைய மகள் ராஜேஸ்வரி(வயது16) மேல்மலையனூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் கடந்த 3 நாட்களாக காணவில்லை என்று பெற்றோர்கள் வளத்தி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர். இந்நிலையில் இன்று கொடுக்கன்குப்பம் துளசி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் பிணமாக மிதந்துள்ளார். இதுகுறித்து மேல்மலையனூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்பேரில் நிலைய அலுவலர் சாமள வண்ணன் தலைமையில் வீரர்கள் சென்று 30 அடி ஆழமுள்ள கிணற்றிலிருந்து ராஜேஸ்வரியின் உடலை மீட்டு இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபுவிடம் ஒப்படைத்தனர். பின்பு பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து ராஜேஸ்வரி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சங்கராபுரம் அருகே பிளஸ்-1 மாணவி மாயமானார்.
- செல்வம் தனது மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை .
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் வட்டம் கடுவனுாரைச சேர்ந்தவர் செல்வம். அவரது 16 வயது மகள் பிளஸ்1 படித்து வருகிறார். இவரை கடந்த 8ம் தேதி முதல் காணவில்லை அதிர்ச்சி அடைந்த செல்வம் தனது மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை . இதுகுறித்து செல்வம் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
- பெரியகோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு இர்வீன் பாலம் அருகே கல்லணைக் கால்வாயில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்தனர்.
- இரவு வெகு நேரம் ஆகி விட்டதால் தேடும் பணியை நிறுத்தினர். இந்த நிலையில் இன்று 2-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் மாணவன் லிதர்சனை தேடினர்.
தஞ்சாவூர்:
சென்னை போரூரைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் லிதர்ஷன் (வயது 21). இவரது நண்பர் முகப்பேரைச் சேர்ந்த நிதின் (21). இவர்கள் இருவரும் சென்னையிலுள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தனர். இந்த நிலையில் இவர்கள் தஞ்சாவூரைச் சுற்றிப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
பின்னர் பெரியகோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு இர்வீன் பாலம் அருகே கல்லணைக் கால்வாயில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் லிதர்ஷன் தண்ணீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டார். அதிர்ச்சி அடைந்த நண்பர் நிதின் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் லிதர்சனை காப்பாற்ற முயன்றார். ஆனால், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட நிதர்ஷனை காணவில்லை.
இதுகுறித்து தஞ்சை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மாவட்ட அலுவலர் மனோபிரசன்னா உத்தரவின் பேரில் நிலைய அலுவலர் திலகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ஆற்றில் குதித்து லிதர்சனை தேடி வந்தனர். இரவு வெகு நேரம் ஆகி விட்டதால் தேடும் பணியை நிறுத்தினர்.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் மாணவன் லிதர்சனை தேடினர். அப்போது தஞ்சையை அடுத்த பொட்டுவாச்சாவடி பகுதியில் உள்ள நெய் வாய்க்காலில் லிதர்சன் உடல் பிணமாக மிதந்து சென்று கொண்டிருந்தது. இதனை பார்த்த தீயணைப்பு வீரர்கள் லிதர்சன் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதையடுத்து போலீசார் அவரது பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் சோகத்தை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்