என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெகன்மோகன் ரெட்டி"

    • மக்களை தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பால் மாநிலங்களின் பிரதிநித்துவம் குறைய வாய்ப்பு உள்ளது.
    • தற்போது இருக்கும் விகிதம் தொகுதி மறுசீரமைப்பிலும் தொடர வேண்டும்.

    தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக குரல் கொடுத்து வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா பஞ்சாப், மேற்கு வங்காளம் ஆகிய 6 மாநில முதல்-மந்திரிகள், ஒடிசா மாநில முன்னாள் முதல்-மந்திரி மற்றும் 7 மாநிலங்களை சேர்ந்த 29 அரசியல் கட்சி தலைவர்களுடன் சென்னையில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்றது.

    இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆந்திரா முன்னாள் முதல்-மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு நடத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக விளக்கம் அளித்துள்ளார். மேலும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    * மக்களை தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பால் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைய வாய்ப்பு உள்ளது.

    * தற்போது இருக்கும் விகிதம் தொகுதி மறுசீரமைப்பிலும் தொடர வேண்டும்.

    * தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களின் தொகுதி குறையக்கூடாது என்று வலியுறுத்தி உள்ளார். 

    • அழகிய ருஷிகொண்டா மலையின் கிட்டத்தட்ட பாதி பகுதி இந்த அரண்மனையை கட்டுவதற்காக அழிக்கப்பட்டுள்ளன.
    • கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளை கடுமையாக மீறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    ஆந்திர மாநிலம் ரிஷி கொண்டா மலையில் முன்னாள் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி ரூ.500 கோடி அரசு செலவில் பிரம்மாண்டமான அரண்மனை ஒன்றை கட்டினார். இது முதல் மந்திரியின் முகாம் அலுவலகம் என கூறப்பட்டது.

    இந்த கட்டிடத்தில் விலை உயர்ந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது இது ஆந்திர மாநிலத்தின் ஷீஷ் மஹால் அரண்மனை என அழைக்கப்படுகிறது. இந்த பிரம்மாண்ட கட்டிடத்தின் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

    பிரமாண்டமான வளாகத்தின் உள்ளே தங்க முலாம் பூசப்பட்ட அலங்காரங்கள், இத்தாலிய பளிங்கு தரை மற்றும் பட்டுப் போன்ற அலங்காரங்கள் உட்பட ஆடம்பரமான உட்புறங்களை கொண்டுள்ளது.

    இந்த அரண்மனை ஒரு முக்கிய கடலோர சுற்றுலா மையமான அழகிய ருஷிகொண்டா பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் நன்கு பரந்த தொகுதிகளைக் கொண்டுள்ளது.

    விரிவான உள்கட்டமைப்பு நடைபாதை சாலைகள், வடிகால் அமைப்புகள், 100 கே.வி. மின் துணை மின்நிலையம் ஆகியவை என வியக்கும் வைக்கும் வகையில் அபரிதமான செலவில் அமைக்கப்பட்டுள்ளன.

    ஜெகன்மோகன் ரெட்டி கட்டிய ஷீஷ்மஹால் அரண்மனையின் பிரம்மாண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த ஆடம்பரமான கட்டுமானம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

    கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளை கடுமையாக மீறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    அழகிய ருஷிகொண்டா மலையின் கிட்டத்தட்ட பாதி பகுதி இந்த அரண்மனையை கட்டுவதற்காக அழிக்கப்பட்டுள்ளன. இது கடுமையான சுற்றுச்சூழல் கவலைகளை எழுப்புவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

    இது குறித்து முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு பேசுகையில்:-

    முன்னாள் முதல் மந்திரி நீதிமன்றங்களை ஏமாற்றி சுற்றுச்சூழல்களை மீறி பிரம்மாண்ட மாக ஆடம்பர வாழ்க்கை நடத்துவதற்காக பொதுப் பணத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார்.

    அரசியலில் இது போன்ற தலைவர்கள் இருப்பது உண்மையிலேயே நமக்கு தேவையா. இது போன்ற விவாகரத்தில் நீண்ட விவாதம் தேவை.

    தற்போது இந்த கட்டிடங்களை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் அவற்றிலிருந்து அரசாங்கத்திற்கு வருவாய் ஈட்டுவது என்பதற்கு நாங்கள் எந்த விதமான ஆலோசனையும் செய்யவில்லை.

    இந்த கட்டமைப்புகள் சுற்றுலாத் துறைக்கு சாத்தியமானது அல்ல. இந்த விவகாரத்தில் விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    டெல்லியில் முன்னாள் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அவருடைய பங்களாவை ஆடம்பரமாக ரூ.36 கோடி செலவில் புதுப்பித்தார்.

    அதேபோல் ஆடம்பரமான வாழ்க்கை வாழ ஜெகன்மோகன் ரெட்டியும் ஷீஷ் மஹால் அரண்மனையை கட்டி உள்ளார் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    ஷீஷ் மஹால் அரண்மனை விவகாரம் ஆந்திர அரசியலில் தற்போது புதிய புயலை கிளப்பி உள்ளது. * * * ஷீஷ் மஹால் அரண்மனையின் பிரமாண்ட தோற்றம்.

    • ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டிக்கு 50-வது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
    • அமைதியுடனும், உடல்நலத்துடனும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் கூறி இருப்பதாவது:-

    ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டிக்கு எனது நெஞ்சம் நிறைந்த 50-வது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். தாங்கள் எப்போதும் அமைதியுடனும், உடல் நலத்துடனும் மகிழ்ச்சியாக இருக்க இந்நன்னாளில் விழைகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • சிலை அமைக்க 352 மெட்ரிக் டன் இரும்பு, 112 மெட்ரிக் டன் பித்தளை பயன்படுத்தப்பட உள்ளது.
    • பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயவாடா மையப் பகுதியில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் அம்பேத்கர் நினைவு இல்லம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதில் ரூ.268 கோடி செலவில், 206 அடி உயர அம்பேத்கர் சிலை நிறுவப்படுகிறது.

    சிலை அமைக்க 352 மெட்ரிக் டன் இரும்பு, 112 மெட்ரிக் டன் பித்தளை பயன்படுத்தப்பட உள்ளது.

    பீடம் உட்பட சிலையின் மொத்த உயரம் 206 அடி இருக்கும். வளாகத்தில் 2000 பேர் அமரும் வகையில் மாநாட்டு மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

    இதற்கான ஆய்வு கூட்டம் முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் தாடே பள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் நடந்தது.

    அம்பேத்கர் சிலையுடன் நினைவு இல்லம் அமைக்கும் திட்டத்திற்கு ரூ.268 கோடி செலவிடப்படுகிறது. ஸ்மிருதி வனம் என்ற பெயரில் அமைக்கப்பட உள்ள இந்த மையத்தில் பணிகள் குறித்து அதிகாரிகள் முதல்-அமைச்சரிடம் விளக்கி கூறினர்.

    மேலும் குடிமராமத்து பணிகள், நினைவு இல்லத்தை அழகுபடுத்துதல், மைதானத்தை பிரதான சாலையுடன் இணைப்பது குறித்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

    வருகிற 31-ந் தேதிக்குள் சிலையின் பாகங்கள் விஜயவாடாவுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க கண்காணிப்பு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டார்.

    • விசாகப்பட்டினம் கடற்கரை சாலை ஓரம் இருந்த மரங்களும் வெட்டப்பட்டன.
    • விஜயவாடா மற்றும் கண்ணாபுரம் பகுதியிலும் மரக்கிளைகள் வெட்டப்பட்டு வண்ணம் தீட்டி உள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் விழா நடைபெறுவதாக இருந்தது.

    இதற்காக விசாகப்பட்டினத்தில் சீனமுசிடி வாடா, கவுடாவில் இருந்து சாரதா பீடம் செல்லும் சாலையில் நடுவில் இருந்த மரக்கிளைகள் வெட்டப்பட்டு வண்ணம் தீட்டும் பணி நடந்தது.

    இதேபோல் விசாகப்பட்டினம் கடற்கரை சாலை ஓரம் இருந்த மரங்களும் வெட்டப்பட்டன.

    பச்சை பசேலென காட்சியளித்த சாலைகள் எல்லாம் தற்போது மரக்கிளைகள் வெட்டப்பட்டு மொட்டையாக காட்சியளிக்கின்றன.

    இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மரக்கிளைகள் வெட்டப்பட்டு வண்ணம் தீட்டும் பணிக்கு அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து கடைகளை அடைத்தனர்.

    இந்த நிலையில் விசாகப்பட்டினத்திற்கு முதலமைச்சர் வருகை ரத்து செய்யப்பட்டது.

    ஏற்கனவே விஜயவாடா மற்றும் கண்ணாபுரம் பகுதியிலும் மரக்கிளைகள் வெட்டப்பட்டு வண்ணம் தீட்டி உள்ளனர். அதே பாணியில் விசாகப்பட்டினத்திலும் பணிகள் நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

    • ஆந்திர முதல் மந்திரி சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
    • இதனால் அந்த விமானம் கன்னாவரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    அமராவதி:

    ஆந்திர மாநில முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் ஜெகன்மோகன் ரெட்டி. இவர் தலைநகர் டெல்லி செல்வதற்காக நேற்று தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    கிருஷ்ணா மாவட்டம் விஜயவாடாவில் உள்ள கன்னாவரம் விமான நிலையத்திலிருந்து அந்த விமானம் புறப்பட தயாரானது. அப்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக விமானி தெரிவித்தார். இதையடுத்து. அந்த மீண்டும் அதே விமான நிலையத்தில் அவசர அவரசமாக தரையிறக்கப்பட்டது.

    முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்காக அத்தனை எம்.எல்.ஏ.க்களும் கடுமையாக உழைத்து ஆட்சி அமைத்து உள்ளனர்.
    • ஜெகன்மோகன் ரெட்டி மீது அவரது கட்சி எம்.எல்.ஏ.வே குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன்களை ஒட்டு கேட்பதாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

    இதேபோல் ஐகோர்ட்டு நீதிபதிகளின் செல்போன்களையும் ஒட்டு கேட்பதாக கூறி கடந்த 2020 ஆம் ஆண்டு பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி ஆளும் கட்சி இதுபோல் செல்போன்களை ஒட்டு கேட்க கூடாது என கூறி இருந்தார்.

    இந்நிலையில் நெல்லூர் மாவட்டம், உதயகிரி எம்.எல்.ஏ. மேகவதி சந்திரசேகர் ரெட்டி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆந்திராவில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களாக உள்ள 35 பேர், 4 எம்.பி.களின் செல்போன் எண்கள் ஒட்டு கேட்கப்படுகிறது.

    மேலும் அவர்களது செல்போன் உரையாடல்களை டிராக் செய்து ரெக்கார்டிங் செய்யப்படுகிறது. நான் எனது நண்பருடன் பேசிய பேச்சை பதிவு செய்ததற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ளேன்

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்காக அத்தனை எம்.எல்.ஏ.க்களும் கடுமையாக உழைத்து ஆட்சி அமைத்து உள்ளனர். அப்படி இருக்கையில் தங்களுடைய கட்சி எம்எல்ஏக்கள் செல்போன் உரையாடலை ஒட்டு கேட்பது வருத்தம் அளிக்கிறது.

    எங்கள் மீது சந்தேகம் இருக்கும் போது நாங்கள் எப்படி கட்சிக்கு உண்மையாக பாடுபட முடியும் என்றார்.

    ஜெகன்மோகன் ரெட்டி மீது அவரது கட்சி எம்.எல்.ஏ.வே குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து வீடியோ பதிவிட்டவர் யார் என விசாரணை நடத்தினர்.
    • விசாரணையில் முதலமைச்சரை அவதூறாக பேசி வீடியோ பதிவிட்டது வெங்கடேஸ்வரராவ் என கண்டுபிடிக்கப்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம், சில்லக்கல்லு போலீஸ் நிலையத்தில் நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் வெங்கடேஸ்வரராவ் என்பவர் பணியாற்றி வந்தார்.

    இவர் செல்போன் வீடியோவில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி குறித்து அவதூறு கருத்தை வெளியிட்டுள்ளார்.

    போலீசாருக்கு 3 மாத சம்பளம் வழங்காவிட்டால் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பதவியில் இருந்து இறக்கப்பட்டு கவர்னர் ஆட்சி கொண்டுவரப்படும் எனவும் மேலும் சில அவதூறான வார்த்தைகளை பேசி தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் வீடியோ பதிவு செய்தார்.

    அவர்கள் மேலும் சிலருக்கு வீடியோவை அனுப்பி வைத்ததால் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து வீடியோ பதிவிட்டவர் யார் என விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் முதலமைச்சரை அவதூறாக பேசி வீடியோ பதிவிட்டது வெங்கடேஸ்வரராவ் என கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து சில்லக்கல்லு போலீசார் முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசி அவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்து வெங்கடேஸ்வரராவை கைது செய்தனர்.

    அவரை ஜக்கையப்பேட்டை கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • ஏறத்தாழ 300 கோடி ரூபாய் செலவில் ஸ்ரீ பத்மாவதி மல்டி சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்படுகிறது.
    • மருத்துவமனையில் அவசர காலத்தில் நோயாளிகளை ஹெலிகாப்டர் மூலம் கொண்டுவரவும், கொண்டு செல்லவும் பயன்படும் வகையில் ஹெலிபேட் அமைக்கப்படும்.

    திருப்பதி:

    திருப்பதியில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் இதய அறுவைசிகிச்சை மருத்துவமனையில், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி ஆய்வுசெய்தார்.

    2021-ம் ஆண்டு அக்டோபர் 11-ந் தேதி இந்த மருத்துவமனையை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி திறந்து வைத்தார். கடந்த 15 மாத காலத்தில், இங்கு 1,110 குழந்தைகளுக்கு முற்றிலும் இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மாநில அரசின் ஆரோக்ய ஸ்ரீ திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு இங்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட அன்னமய்யா மாவட்டம் சிட்டி வேல் மண்டலம் கே.எஸ்.ஆர். அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இப்போது உடல்நிலை தேறி இன்னும் ஒருவார காலத்தில் வீடு திரும்ப உள்ளார்.

    ஏறத்தாழ 300 கோடி ரூபாய் செலவில் ஸ்ரீ பத்மாவதி மல்டி சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இங்கு கட்டப்படுகிறது.

    இந்த மருத்துவமனையில் அவசர காலத்தில் நோயாளிகளை ஹெலிகாப்டர் மூலம் கொண்டுவரவும், இங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லவும் பயன்படும் வகையில் ஹெலிபேட் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக திருப்பதி மலைஅடிவாரத்தில் சிற்ப கலாசாலையை பார்வையிட்ட அவர் இங்கு செதுக்கப்படும் சிலைகளை விற்பனை செய்ய கவுன்டர் அமைக்கப்படும் என்றார்.

    • தெலுங்கானா முதல்வர் சந்திரசேகராவ் எனக்கு நல்ல நண்பர்தான்.
    • என்னுடைய பொறுப்பான முயற்சிகள் அவர்களுடைய இதயத்தை மென்மையாக்கும் என்று நான் நம்புகிறேன்.

    திருப்பதி:

    ஆந்திர முதல்-அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பாஜக அல்லாத ஆட்சி நடக்கும் மாநிலங்களில் கவர்னர், முதல்-அமைச்சர் இடையே மோதல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், என்னுடைய மாநிலத்தில் அத்தகைய மோதல் இல்லை.

    இதற்கு என்னுடைய உறவை பேணும் அணுகுமுறை தான் காரணம். அரசியல், தனி நபர் வாழ்க்கை அல்லது வர்த்தகம் போன்றவற்றில் நம்பிக்கையின் அடிப்படையில் உறவை மேம்படுத்தினால் வெற்றி நிச்சயம்.

    பிரதமர் மோடியுடனும் என்னுடைய நல்லுறவு நீடிக்கிறது.

    அதற்காக ஆந்திராவுக்கான சிறப்பு அந்தஸ்து உட்பட இதர வாக்குறுதிகளில் இருந்து நான் பின்வாங்கவில்லை. இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக பாராளுமன்றத்தில் எங்களுக்கு வாக்குறுதி தரப்பட்டுள்ளது. அவை உயிர்ப்புடன் உள்ளன.

    என்னுடைய பொறுப்பான முயற்சிகள் அவர்களுடைய இதயத்தை மென்மையாக்கும் என்று நான் நம்புகிறேன். அரசியல் நிலைமையில் மாற்றம் ஏற்படும் வரை நாம் பொறுமையாக இருக்க வேண்டும்.

    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகராவ் எனக்கு நல்ல நண்பர்தான். ஆனால் அவர் பிஆர்எஸ் என்ற புதிய கட்சி ஆரம்பித்துள்ளது பற்றியோ, கூட்டணியில் இணைந்து கொள்வது பற்றியோ அவர் என்னிடம் எதுவும் சொல்லவில்லை, கேட்டுக் கொள்ளவும் இல்லை. எந்த கூட்டணியிலும் ஒரு அங்கமாக நான் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொரோனா தொற்று பரவல் காரணமாக அவர் பொது மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை.
    • மக்களின் மனநிலைக்கு ஏற்றவாறு திட்டங்களை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திராவில் முதலமைச்சராக இருந்த ராஜசேகர ரெட்டி மக்களின் மனநிலையை அறிந்து கொள்வதற்காக வாரத்தில் 2 நாட்கள் கிராமப்புறங்களில் தங்கி இருந்து ஆய்வு நடத்தி வந்தார்.

    அப்போது அவர் கிராமப்புற மக்களிடம் நெருங்கி பழகி ஆட்சியில் உள்ள குறை நிறைகளை கேட்டறிந்து அதற்கு ஏற்றார் போல் நல திட்டங்களை அறிவித்து நிறைவேற்றிவந்தார். ஹெலிகாப்டரில் செல்லும்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி ராஜசேகர் ரெட்டி இறந்தார்.

    அவரது இறப்பிற்கு பிறகு அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார். பின்னர் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். தெலுங்கு தேசம் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

    இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டி, அவரது தங்கை ஷர்மிளா, மனைவி பாரதி, அவரது தாயார் உள்ளிட்டோர் ஆந்திரா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டனர்.

    அப்போது ஓ.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் தனது தந்தையைப் போல் வாரத்தில் 2 நாட்கள் கிராமப்புறங்களில் தங்கி அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தார்.

    பின்னர் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களை பிடித்து ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியைப் பிடித்தார். கொரோனா தொற்று பரவல் காரணமாக அவர் பொது மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை.

    தற்போது ஆந்திராவில் உள்ள எதிர்க்கட்சிகள் ஜெகன்மோகன் ஆட்சியின் மீது குற்றம் சாட்டி அவருக்கு எதிராக பிரசாரத்தை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திர சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே உள்ளதால் மீண்டும் ஆட்சியில் தக்க வைத்துக் கொள்ள தனது தந்தையை போல் கிராமப்புறங்களில் தங்கி ஆய்வு செய்ய ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார்.

    அதன்படி மார்ச் 22-ந் தேதி முதல் புதன், வியாழக்கிழமை என 2 நாள் இரவு கிராமப்புறங்களில் தங்கி மக்களை சந்தித்து தனது ஆட்சியில் உள்ள குறை நிறைகளை கேட்க உள்ளார். மக்களின் மனநிலைக்கு ஏற்றவாறு திட்டங்களை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளார்.

    மற்ற நாட்களில் விசாகப்பட்டினத்தில் உள்ள கோர்ட் டிரஸ்ட் விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்து அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    • போஸ்டர்களில் ஜெகன் அண்ணா எங்கள் நம்பிக்கை என்ற போஸ்டர்களை வீட்டு சுவர்கள் தனியார் கட்டிட சுவர்களில் ஒட்டி வருகின்றனர்.
    • 4 ஆண்டுகளில் வளர்ச்சியின்மையை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

    திருப்பதி:

    ஆந்திராவில் ஆளும் கட்சியாக உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மற்றும் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள ஜெகன்மோகன் ரெட்டி கட்சியினர் இடையே போஸ்டர் யுத்தம் ஏற்படுள்ளது.

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தங்களது ஆட்சியின் சாதனைகள் குறித்து போஸ்டர்களில் ஜெகன் அண்ணா எங்கள் நம்பிக்கை என்ற போஸ்டர்களை வீட்டு சுவர்கள் தனியார் கட்டிட சுவர்களில் ஒட்டி வருகின்றனர்.

    ஆளுங்கட்சிக்கு எதிராக ஜனசேனா கட்சியை சேர்ந்தவர்கள் உன் மீது நம்பிக்கை இல்லை ஜெகன்.எங்கள் நம்பிக்கை பவன் என்று போஸ்டர் அடித்து ஆளும் கட்சியினர் எங்கெங்கு போஸ்டர் ஒட்டி இருக்கிறார்களோ அந்த பகுதிகளில் அவர்களுக்கு எதிராக போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

    ஜனசேனா கட்சியின் திருப்பதி தொகுதி பொறுப்பாளர் கிரண் ராயல் மற்றும் நகரத் தலைவர் ராஜா ரெட்டி மற்றும் ஜனசேனா கட்சியினர் போஸ்டர் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் ஆளும் கட்சியினருக்கும் ஜனசேனா கட்சியினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. ஜனசேனா கட்சியினர் ஒட்டியுள்ள போஸ்டரில் 4 ஆண்டுகளில் தலைநகரை உருவாக்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கவும், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

    மாநிலத்தை திவால் நிலைக்கு கொண்டு செல்லும் அரசின் மீது நம்பிக்கை இல்லை. பவன் கல்யாணயால் மட்டுமே மாநிலத்தில் மாற்றத்தை கொண்டுவர முடியும் என அச்சடிக்கப்பட்டு இருந்தது.

    இரண்டு கட்சிகளை சேர்ந்தவர்களும் புதிய கட்டிடங்கள் மற்றும் புதிதாக வர்ணம் தீட்டப்பட்ட இடங்களில் போஸ்டர் ஒட்டி வருவதால் சுவர்கள் அசிங்கப்படுத்தப்படுகின்றன.

    எங்களால் அவர்களை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசமுடியாமல் இருக்கிறோம். இங்கு நடப்பவைகளை அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்கிறோம். 4 ஆண்டுகளில் வளர்ச்சியின்மையை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

    போஸ்டர் ஓட்டுவதன் மூலம் இனியும் மக்களை ஏமாற்ற முடியாது. இதனால் ஆளும் கட்சிக்கு எந்த பயனும் கிடையாது என தெரிவித்தனர்.

    ஆளுங்கட்சியினருக்கும் ஜனசேனா கட்சியினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள போஸ்டர் யுத்தம் ஆந்திராவில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×