என் மலர்
நீங்கள் தேடியது "slug 226356"
- தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? போலீசார் விசாரணை
- உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
கன்னியாகுமரி:
மார்த்தாண்டம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட கான்வென்ட் ஆக்கி விளையை சேர்ந்தவர் மார்க்கோஸ் (வயது 55). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விடுமுறைக்காக ஊருக்கு வந்து உள்ளார்.
நேற்று மார்க்கோஸ், குழித்துறை தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்று உள்ளார். வெகு நேரமா கியும் அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடிச் சென்றனர்.
அப்போது ஆற்றின் கரை யோரம் அவரது துணிகள் கிடந்துள்ளன. தொடர்ந்து தேடியபோது ஆற்றின் கரையோரம் மார்க்கோஸ் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
உடனடியாக மார்த்தா ண்டம் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மார்க்கோஸ் தண்ணீரில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- மத்திய மந்திரி பியூஷ் கோயலிடம் முன்னாள் அமைச்சர்கள் தளவாய்சுந்தரம், கடம்பூர் ராஜூ கோரிக்கை
- உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார்.
நாகர்கோவில்:
சென்னையில் மத்திய மந்திரி பியூஷ் கோயலை முன்னாள் அமைச்சர்கள் தளவாய்சுந்தரம், கடம்பூர் ராஜூ ஆகியோர் கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்களுடன் சென்று நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதில், சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை தடை செய்யவேண்டும்.
தீப்பெட்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கின்ற வகையிலும் தீப்பெட்டி தொழிலை பேணி காக்கின்ற வகையிலும் இந்த நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டுமென வலியுறுத்தி இருந்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார்.
- பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
- வெளிநாடுகளில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தமிழகத்தில் இருந்தால் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.
திருப்பூர் :
செப்டம்பர் 30-ந்தேதி வரை மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அத்துடன் தடுப்பூசி செலுத்தாதவர் செலுத்திக் கொள்ள வசதியாக இன்று மற்றும் 11, 18, 25 ஆகிய தேதிகளில் மெகா முகாம்கள் நடத்தப்படுகின்றன.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துபவருக்கு முகாமில் முன்னுரிமை வழங்கப்படும். வெளிநாடுகளில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தற்போது தமிழகத்தில் இருந்தால், அவர்களுக்கு மீதித்தவணை தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.வெளிநாடு சென்று வந்தவர்களில் தடுப்பூசி முழுமையாக செலுத்திக் கொள்ளாதவர் யாராவது உள்ளார்களா என கண்டறியப்பட்டு வருகிறது. அவர்களே முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் வழியாகவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்றனர்.
- கணவரின் வழக்குச் செலவுக்காக வேலைக்குச் சென்ற பெண்ணால் தவிப்புக்குள்ளான 3 குழந்தைகள்
- முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பினர்
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டம் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 44). இவரது மனைவி பிரேமி. இவர்களுக்கு ஜோலின், சிசினோ என்ற 2 மகள்களும், ஆரவி என்ற மகனும் உள்ளனர்.
கடந்த 20 ஆண்டுக ளுக்கும் மேலாக ஓமன் நாட்டில், அந்த நாட்டின் சுற்றுலா துறையின் கீழ் இயங்கும் தனியார் உணவகத்தில் உதவி மேலாளராக சுரேஷ் பணி புரிந்து வந்தார். அவரது மனைவி பிரேமி தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்தார். 3 குழந்தைகளும் ஓமன் நாட்டிலேயே படித்து வந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காரண மாக சுரேசும் அவரது மனைவியும் வேலையை இழந்து உள்ளனர். இதனால் குடும்பத்துடன் இந்தியா திரும்ப சுரேஷ் திட்டமிட்டார். அப்போது தான் 19 ஆண்டுகளாக பணிசெய்த நிறுவனத்தில் தனக்கான பண பிடிப்பு (பி, எப்) தொகையினை கேட்டு உள்ளார். அதை கொடுக்க நிர்வாகம் மறுத்துஉள்ளது.
இதனால் அந்தநாட்டின் நீதிமன்றத்தில் சுரேஷ் வழக்கு தொடர்ந்துஉள்ளார்.இதில் அவருக்கு ரூ.10 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது.
இந்த சூழ்நிலையில் கொரோனா உச்ச கட்டத்தில் அங்கிருந்து சொந்த நாடு செல்ல குடும்பத்துடன் விமான நிலையம் வந்த சுரேசை நிறுவனத்தில் நடைபெற்ற வேறு ஒரு வழக்கில் தொடர்பு படுத்தி இந்தியா செல்ல, ஓமன் நாட்டு காவல்துறை அனுமதி மறுத்துஉள்ளது.
இதனால் 3 குழந்தைகளை மட்டும் அழைத்து கொண்டு பிரேமி இந்தியா திரும்பினார்.கன்னியா குமரி வந்த அவர், இது குறித்து கலெக்டர்மற்றும்முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு க்கு மனு அனுப்பி கணவரை இந்தியா அழைத்து வர முயற்சி செய்துஉள்ளார்.
மேலும் வருமானம் இல்லாததால் குடும்ப செலவு மற்றும் வேலை இல்லாமல் வெளிநாட்டில் தவிக்கும் கணவரின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, 3 குழந்தைகளையும் வயதான தனது மாமியார் பாத்திமா மேரி வசம் ஒப்படைத்து விட்டு அவர் சவுதி நாட்டுக்கு நர்ஸ் வேலைக்கு சென்றுவிட்டார்.
75 வயதான பார்வை குறைபாடு உள்ள பாத்தி மா மேரி சின்ன முட்ட த்தில் உள்ள தனது இல்ல த்தில் பெட்டி கடை நடத்தி தனது பேரக் குழந்தைகளை பராமரித்து வருகிறார். இந்த நிலையில் நிரபராதியான தன்னைஇந்தியா கொண்டு வர தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டு ம் என்று கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை சுரேஷ் வெளியிட்டுஉள்ளார்.
மேலும் வெளிநாட்டில் தவிக்கும் தங்களது தந்தை யை மீட்க வேண்டும் என்று சுரேஷின் குழந்தைகள் மற்றும் அவரது தாய் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். தாய், தந்தை வெவ்வேறு நாட்டிலும் குழந்தைகள் குமரியில் வயதான பாட்டியுடன் சிரமபடுவதாலும் அரசு இதில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.