search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 226738"

    • காப்பக நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட 350-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    வடவள்ளி:

    கோவை மாநகரில் காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் என 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தங்கியிருந்த ஆதரவற்றவர்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் கோவை அருகே தொண்டாமுத்தூர் கெம்பனூர் பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் அடைக்கப்பட்டனர். இவர்களில் 100-க்கும் மேற்பட்டவர்களை மொட்டை அடித்து தாக்கி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் காப்பகத்தை முற்றுகையிட்டனர். அங்கிருந்த நிர்வாகிகளிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேரூர் தாசில்தார் இந்துமதி, கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆகியோர் நேரில் சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் அந்த காப்பகம் அனுமதியின்றி செயல்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விழுப்புரத்தைச் சேர்ந்த காப்பக நிர்வாகி ஜிபின் பேபி (வயது 44), பி.என். புதூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் (43), சென்னையைச் சேர்ந்த செல்வின் (49), அருண் (36), தர்மபுரியைச் சேர்ந்த பாலச்சந்திரன் (46), சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஜார்க் (45) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    அவர்கள் மீது மிரட்டல், தாக்குதல், அத்துமீறி அடைத்து வைத்தல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 6 பேரும் ஜாமீனில் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் மைதானத்தில் காப்பக நிர்வாகிகளை கண்டித்தும், எளிதில் வெளியில் வர கூடிய வகையில் வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும், பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கட்சியினர் தொண்டாமுத்தூர் போலீசை கண்டித்து போலீஸ் நிலையத்முதை ற்றுகையிட்டனர். போலீசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    ஆசிரம நிர்வாகிகளால் தாக்கப்பட்டு மொட்டை அடிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் 5 பேரை பா.ஜ.க.வினர் அழைத்து வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.போராட்டத்தால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினால் மட்டுமே கலைந்து செல்வோம் என கூறி போலீஸ்நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு வந்து போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கட்சியினரி டையே பேச்சுவார்த்தை நடத்தினார். வேலைக்கு சென்று வந்த நபர்களை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து தாக்கி மொட்டை அடித்ததால் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரில் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய இருப்பதாக உறுதி கூறப்பட்டது.

    தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 350-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அனுமதியின்றி பொது மக்களுக்கு இடையூறாக சாலைமறியலில் ஈடுபட்டது தொடர்பாக பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உள்ளிட்ட 350 பேர் மீது தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

    • நாங்கள் 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு சுபிக்‌ஷா (2) மற்றும் 8 மாதத்தில் சுஜி என்ற 2 மகள்கள் உள்ளனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தீபிகா மற்றும் 8 மாத குழந்தை சுஜியை தேடி வருகின்றனர்.

    கோவை:

    கோவை தொண்டாமுத்தூர் வஞ்சியம்மன் நகரை சேர்ந்தவர் விஜய் (வயது 25). கூலி ெதாழிலாளி.

    இவர் தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனது மனைவி தீபிகா ஏற்கனவே திருமணமாகி சில மாதங்களில் கணவரை பிரிந்தார். பின்னர் அவர் தனியாக வசித்து வந்தார். அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.

    அது நாளடைவில் காதலாக மாறியது. நாங்கள் 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு சுபிக்‌ஷா (2) மற்றும் 8 மாதத்தில் சுஜி என்ற 2 மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று நாங்கள் வழக்கம் போல அறையில் தூங்க சென்றோம். காலை எழுந்து பார்த்த போது எனது மனைவி தீபிகா மற்றும் 8 மாத குழந்தை சுஜியை காணவில்லை.

    அதிர்ச்சி அடைந்த நான் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை. எனது மனைவி வீரகேரளம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் அடிக்கடி போனில் பேசி வந்தார்.

    அதை நான் கண்டித்தேன். இதனால் எனது மனைவி அந்த வாலிபருடன் சென்றிருக்கலாம் என சந்தேகம் உள்ளது. எனவே எனது மனைவி மற்றும் மகளை கண்டு பிடித்து தரவேண்டும். இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தீபிகா மற்றும் 8 மாத குழந்தை சுஜியை தேடி வருகின்றனர்.  

    • 4 மளிகை கடைகளில் அடுத்தடுத்து திருட்டு நடந்ததால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    • நள்ளிரவு நேரத்தில் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த 4 ஆயிரம் மதிப்புடைய சிகரெட் பாக்கெட்டுகளை திருடி சென்றனர்.

    வடவள்ளி:

    கோைவ தொண்டாமுத்தூரில் கோவை வடவள்ளி -சிறுவாணி சாலையில் ஏராளமான மளிகை கடைகள், குடியிருப்புகள் உள்ளன.

    இந்த நிலையில் கடந்த சில 2 நாட்களாக இந்த பகுதியில் உள்ள மளிகை கடைகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சிறுவாணி சாலையில் உள்ள மளிகை கடை ஒன்றில் நள்ளிரவு நேரத்தில் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த 4 ஆயிரம் மதிப்புடைய சிகரெட் பாக்கெட்டுகளை திருடி சென்றனர்.

    மேலும் அதே பகுதியில் உள்ள சுரேஷ், செந்தில்குமார் ஆகியோரின் மளிகை கடைகளில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் மளிகை பொருட்களையும் அள்ளி சென்றுள்ளனர். நேற்று காலை கடைக்கு வந்த உரிமையாளர்கள் திருட்டு போன சம்பவம் அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

    இதற்கிடையே இடையர்பாளையம் ரோட்டில் உதயகுமார் என்பவரின் கடையை உடைத்து ரூ.7 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கடையில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை பார்வையிட்டார்.

    அப்போது, நள்ளிரவு நேரத்தில் 3 நபர்கள் கையில் கத்தி, கடப்பாரையுடன் சுற்றி திரிகின்றனர். பின்னர் ஆட்கள் யாராவது வருகிறார்களா என நோட்டமிடும் அவர்கள், ஆட்கள் வராததை உறுதி செய்து கொண்டு, கடையின் அருகே சென்று கடை பூட்டை உடைத்து, உள்ளே நுழைந்து பணத்தை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இந்த காட்சிகளை தனது செல்போனில் ஏற்றிய அவர், வியாபாரிகள் குழுவில் பகிர்ந்தார். தற்போது இந்த காட்சிகள் வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இந்த காட்சிகளை பார்த்த வியாபாரிகள், தொடர்ந்து நடந்து வரும் திருட்டு சம்பவத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளிக்கவும் வியாபாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    ெதாண்டாமுத்தூர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மளிகை கடையில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×