search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போத்தனூர்"

    • ரூ. 1 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருடு போனது.
    • செல்ேபான் திருடும் சி.சி.டி.வி காட்சி வைரலாகி வருகிறது.

    கோவை,

    கோவை போத்தனூரை சேர்ந்தவர் புண்ணியகோடி.

    இவர் சாரதா மில் ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

    இன்று காலை கடையை திறக்க வந்த போது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த சுமார் ரூ. 1 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவர் இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்தனர். அதில் நள்ளிரவு கடைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் செல்போன்களை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் அவர் யார் என தேடி வருகின்றனர். இந்த சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

    மேலும் போத்தனூர் சாரதா மில் ரோட்டில் நேற்று இரவு ஒரே நாளில் அடுத்தடுத்து மேலும் 2 செல்போன் கடைகளில் திருடு போனதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் 3 செல்போன் கடைகளில் திருடு போன சம்பவம் அந்த பகுதியில் கடை நடத்தி வரும் உரிமையாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கோவை, பொள்ளாச்சி வழித்தடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • தென்மாவட்டங்களில் சுற்றுலாதலங்களுக்கு வருவோர் இந்த ரெயிலை பயன்படுத்தி வருகின்றனர்.

    கோவை:

    மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி (எண் 06029), திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் ரெயில் (எண் 06030) கோவை, பொள்ளாச்சி வழித்தடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இயக்கப்பட்டு வருகிறது.

    கோவையில் இருந்து மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்வோர், தென்மாவட்டங்களில் இருந்து கோவை, ஊட்டி சுற்றுலாதலங்களுக்கு வருவோர் என ஏராளமானோர் இந்த ரெயிலை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த ரெயிலானது கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

    இந்தநிலையில் இன்று முதல் கோவை மாவட்டம் போத்தனூர் ரெயில் நிலையத்திலும் ரெயில் நின்று செலலும் என சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

    • கோவிலின் பூட்டை உடைத்து ரூ.3 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்

    கோவை:

    கோவை மதுக்கரை ரோட்டில் ஸ்ரீ பூங்குழலி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த முருகானந்தம் (வயது 70) என்பவர் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல கோவிலை மூடிவிட்டு சென்றார்.

    நள்ளிரவு கோவிலின் கதவில் உள்ள பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் உண்டியலை திறந்து அதில் இருந்த ரூ.3 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து முருகானந்தம் போத்தனூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

    • பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
    • 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது.

    குனியமுத்தூர்,

    போத்தனூர் சாரதா மில் ரோட்டில் ஆட்டுத் தொட்டி பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

    இப்பகுதியில் எதிர் எதிரே இரண்டு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. அதனால் எந்த நேரமும் குடிமகன்கள் இப்பகுதியில் கும்மாளமிட்டு வருவது வழக்கம். சாலையோரமாக நிறுத்தப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனத்தில் உள்ள பொருட்களை அபேஸ் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

    இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டுச் செல்லும் ஹெல்மெட்டுகள் மேலும் வீட்டிற்கு வாங்கி செல்லும் பொருட்கள் ஆகியவை காணாமல் போய் விடும் அவலநிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் அவ்வப்போது அடிதடி ரகளை சம்பவங்களும், கூச்சல் குழப்பங்களும் இப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதியை கடந்து செல்லும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் பயந்து கடக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

    ஈச்சனாரியை சேர்ந்த முத்து என்பவர் நேற்று சாரதா மில் ரோட்டில் அமைந்துள்ள அரசன் தியேட்டர் முன்பாக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு டிக்கெட் விவரம் தெரிந்து கொள்ள உள்ளே சென்றார். இரண்டு நிமிடங்களில் வெளிவருவதற்குள் வாகனத்தில் மாட்டி வைக்கப்பட்டிருந்த பேக் திருட்டு போய்விட்டது.

    ரூபாய் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் அடங்கியிருந்த பேக் திருடு போய்விட்டதால், அதிர்ச்சி அடைந்த அவர் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். தியேட்டர் வளாகத்தில் அமைந்துள்ள சி.சி.டி.வி. காமிரா மூலம் போலீசார் ஆய்வு செய்து திருடர்களை தேடி வருகின்றனர். இதுமட்டுமன்றி சராசரியாக ஒரு நாளைக்கு 10 -க்கும் மேற்பட்ட ஹெல்மெட்டுகள் காணாமல் போய் வருகிறது.

    சாரதாமில் ரோடு கார்னரில் போலீஸ் புறக்காவல் நிலையம் அமைந்துள்ளது. நடந்து செல்லும் தூரத்தில் போத்தனூர் காவல் நிலையமும் உள்ளது. ஆனாலும் இப்பகுதியில் திருட்டு நபர்கள் தங்களது கைவரிசையை காட்டி வருவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட இப்பகுதியில் 24 மணி நேரமும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்த வேண்டும். ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

    இதுகுறித்து போத்தனூர் போலீசார் கூறுகையில், 24 மணி நேரமும் சீருடை இல்லாத போலீசார் இப்பகுதியை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை மீறுபவர்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை பின் தொடர்ந்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினர். 

    ×