என் மலர்
நீங்கள் தேடியது "சபாநாயகர் அப்பாவு"
- மத்திய அரசின் சில பல்கலைக்கழகங்களில் நீட் விலக்கு உள்ளது.
- தமிழக பா.ஜ.க. தலைவராக நெல்லை மண்ணைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் தேர்வாகி உள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள்.
நெல்லை:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரான மறைந்த எழுத்தாளர் நாறும்பூநாதன் நினைவஞ்சலி கூடுகை பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி எதிரே உள்ள ஒரு தனியார் மகாலில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ம.தி.தா. இந்து கல்லூரி முன்னாள் முதல்வர் பொன்னுராஜ் தலைமை தாங்கினார். முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் வண்ணமுத்து வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டு எழுத்தாளர் நாறும்பூநாதன் படத்தை திறந்து வைத்து பேசினார். நிகழ்ச்சியில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-
கவர்னரால் நிறைவேற்றப்படாத மசோதாக்கள் சுப்ரீம் கோர்ட்டு அறிவுரைப்படி எப்படி நிறைவேற்றப்பட்டதோ-அதே போல நீட் தேர்வை ஒழிப்பது குறித்து மறுசீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டு கொண்டு செல்லப்பட்டு நீட்டை ஒழிக்க நல்ல முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுத் தருவார்.
மத்திய அரசின் சில பல்கலைக்கழகங்களில் நீட் விலக்கு உள்ளது. அதுபோல் தமிழகத்திலும் நீட் விலக்கை முதலமைச்சர் போராடிக் கொண்டு வருவார். தமிழக பா.ஜ.க. தலைவராக நெல்லை மண்ணைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் தேர்வாகி உள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நேற்று சட்டசபையில் பேச தனக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என சபாநாயகர் மீது வேல்முருகன் குற்றச்சாட்டி வெளிநடப்பு செய்து இருந்தார்.
- தான் பேசும்போதெல்லாம் சபாநாயகர் இடையூறு செய்வதாக குற்றம்சாட்டி புறக்கணித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, நேற்று சட்டசபையில் பேச தனக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என சபாநாயகர் மீது வேல்முருகன் குற்றச்சாட்டி வெளிநடப்பு செய்து இருந்தார்.
இந்த நிலையில், நேற்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த வேல்முருகன் இன்று சட்டசபை கூட்டத்தை புறக்கணித்துள்ளார். தான் பேசும்போதெல்லாம் சபாநாயகர் இடையூறு செய்வதாக குற்றம்சாட்டி புறக்கணித்துள்ளார்.
சபாநாயகர் செயல்பாடு குறித்து நாளை முதலமைச்சரை சந்தித்து பேசவும் வேல்முருகன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, இந்த கூட்டத்தொடரில், என்னை மட்டும் குறிவைத்து, பேசவிடாமல் சபாநாயகர் தடுப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறியிருந்தார். இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேல்முருகன் மீது கடிந்து கொண்டார். இதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வேல்முருகன் விளக்கம் அளித்து இருந்தார்.
- இதுபோன்ற விஷயம் இனி நடைபெறாது என்று துரைமுருகன் கூறினார்.
- சபாநாயகர், அவை முன்னவரின் விளக்கத்தில் திருப்தியில்லை என்று கூறி அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் சபாநாயகருடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், சட்டசபையில் அ.தி.மு.க.வினர் பேசுவதை திட்டமிட்டு நேரலை செய்ய மறுக்கிறார். சபாநாயகரே மரபை கடைபிடிக்கவில்லை என்றால் நாங்கள் யாரிடம் சென்று முறையிடுவது? சபாநாயகர் சொல்வது எதுவும் உண்மையில்லை. மரபை மீறுகிறார் சபாநாயகர் என்று கூறினார்.
துரைமுருகன் - இதுபோன்ற விஷயம் இனி நடைபெறாது, எதிர்க்கட்சி தலைவர் இதனை இதோடு விட்டுவிடவும்.
சபாநாயகர் அப்பாவு - எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ். பேசுவது உண்மைக்கு புறம்பானது. எந்த பாகுபாகும் இல்லாமல் அனைவரும் பேசுவதை நேரலையில் காட்டி வருகிறோம் என்று கூறினார்.
சபாநாயகர், அவை முன்னவரின் விளக்கத்தில் திருப்தியில்லை என்று கூறி அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.
- எடப்பாடி பழனிசாமி பேசியவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
- சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர் நலன் குறித்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதனிடையே, டாஸ்மாக் விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி கேட்டார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் துரைமுருகன், டாஸ்மாக் விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் இருக்கிறது, அதனால் அது பற்றி சபையில் பேச முடியாது. நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதை பற்றி சபையில் பேச விதிப்படி அனுமதியில்லை என்றார்.
நீதிமன்றத்தில் உள்ள விவகாரம் குறித்து இங்கு விவாதிக்க அனுமதி கிடையாது என்று கூறி சபாநாயகர் அப்பாவு மறுப்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோருடன் அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே டாஸ்மாக் விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமி, நான் எது குறித்து பேசினாலும் அவை குறிப்பில் இருந்து நீக்கினால் நான் என்ன பேசுவது? என்று கூறினார். இதனை தொடர்ந்து சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது, சட்டசபையில் அதிக சப்தம் எழுப்பிய தருமபுரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கோவிந்தசாமியின் பெயரை சொல்லி சபாநாயகர் அப்பாவு கண்டித்தார். அதனை தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர் சபையில் இருந்து வெளியேறினர்.
இதனை தொடர்ந்து, அ.தி.மு.க. உறுப்பினர்களை ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
இதனிடையே, சட்டசபையில் பேச தனக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என சபாநாயகர் மீது வேல்முருகன் குற்றச்சாட்டியுள்ளார்.
முன்னதாக, சட்டசபைக்கு வந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் சட்டையில் 'யார் அந்த தியாகி' என்ற பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர்.
- சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சவுக்கு சங்கர் வீடு, சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
தமிழக சட்டசபையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
சவுக்கு சங்கர் வீடு தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளோம், அது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதிமுக உறுப்பினர்களின் கோரிக்கைக்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, "இவ்விவகாரம் சிபிசிஐடி விசாரணையில் இருக்கிறது; நாளாகி விட்டது என்பதால், இப்போது அதை எடுக்க வேண்டிய அவசியமில்லை"
எனக்கூறி நிராகரித்தார்.
- அ.தி.மு.க. ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவர் பேச அதிக நேரம் வாய்ப்பு தரப்பட்டது.
- தங்கள் ஆட்சியின் மீதுள்ள குறைகளை மறைக்க அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் என பேசுகிறார் முதலமைச்சர்.
சட்டசபையில் அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மக்கள் பிரச்சனைகளை பேச வேண்டி இருந்ததால் சட்டசபையில் அதிக நேரம் எடுத்துக்கொண்டோம்.
* தமிழகத்தில் அதிக பிரச்சனைகள் உள்ளதால் அதிக நேரம் பேச வேண்டி இருந்தது.
* அ.தி.மு.க. ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவர் பேச அதிக நேரம் வாய்ப்பு தரப்பட்டது.
* நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் நான் பேசியது ஒளிபரப்பப்படவில்லை.
* சட்டப்பேரவை தலைவர் இரண்டு தரப்பிற்கும் சமமாக நடப்பதுதான் அவருக்கு அழகு.
* மீண்டும் சட்டசபை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சபாநாயகரே பதில் அளிக்கிறார்.
* 2.52 மணி நேரம் எதிர்க்கட்சியினர் பேசியதாக கூறுகிறார்கள். வீடியோவை பார்த்தபோது பாதி கூட பேசவில்லை என்பது தெரிகிறது.
* கே.பி.முனுசாமி பேசியபோது அமைச்சருக்கு பதில் சபாநாயகர் குறுக்கிட்டு பதில் கூறுகிறார். இதைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம்.
* ஆளுங்கட்சி இருக்கையில் அமர்ந்து அப்பாவு கருத்து கூறலாம். சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தால் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசு ஒரே நாளில் 2 அல்லது 3 மானியக்கோரிக்கை நடத்துவதாக குற்றச்சாட்டுகள் வைத்தீர்கள்.
- எதிர்க்கட்சியினரை ஏன் இவ்வளவு நேரம் பேச அனுமதித்தீர்கள் என முதல்வர் இதுவரை என்னிடம் கேட்டதில்லை.
சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு மீது அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
பேரவையில் நடந்த குரல் வாக்கெடுப்பிலும் டிவிஷன் முறையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பிலும் அ.தி.மு.க. கொண்டுவந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு 63 பேர் ஆதரவாக வாக்களித்தனர். அ.தி.மு.க. கொண்டுவந்த தீர்மானத்திற்கு எதிராக 154 பேர் வாக்களித்த நிலையில் தீர்மானம் தோல்வி அடைந்தது.
நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அப்பாவு அமர்ந்தார்.
சபாநாயகர் இருக்கையில் மீண்டும் அப்பாவு அமர்ந்தபோது சட்டசபை உறுப்பினர்கள் கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து சபாநாயகர் அப்பாவு உரையாற்றினார். உரையில் அவர் கூறியதாவது:
* எதிர்க்கட்சி தலைவர் உட்பட தோழமை கட்சி தலைவர்கள் பேசிய அனைத்தையும் நான் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன்.
* ஒரு சில தவறு நடந்திருந்தால் நானே திருத்தி இருப்பேன். அல்லது முதல்வரால் திருத்தப்பட்டிருப்பேன்.
* அரசு ஒரே நாளில் 2 அல்லது 3 மானியக்கோரிக்கை நடத்துவதாக குற்றச்சாட்டுகள் வைத்தீர்கள்.
* அ.தி.மு.க. ஆட்சியில் 30-க்கும் மேற்பட்ட துறைகளின் மானிய கோரிக்கைகளை ஒரே நாளில் நடத்தியதும் நினைவு கூர்கிறேன்.
* எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதிக்கவில்லை என கூறினார். அவர் 259 நிமிடம் பேசி உள்ளார்.
* எதிர்க்கட்சியினரை ஏன் இவ்வளவு நேரம் பேச அனுமதித்தீர்கள் என முதல்வர் இதுவரை என்னிடம் கேட்டதில்லை.
* ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசுவதற்கு ஆளுங்கட்சியினருக்கு 25, எதிர்க்கட்சியினருக்கு 49 சதவீதம் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதலில் நடந்த குரல் வாக்கெடுப்பில் அ.தி.மு.க. கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.
- அ.தி.மு.க. கொண்டுவந்த தீர்மானத்திற்கு எதிராக 154 பேர் வாக்களித்த நிலையில் தீர்மானம் தோல்வி அடைந்தது.
சட்டசபையில் சபாநாயகர் அப்பாவுவுக்கு எதிராக அ.தி.மு.க.வினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது அவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அவையை துணை சபாநாயகர் நடத்தினார்.
சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தீர்மானத்தை முன்மொழிந்தார். எஸ்.பி.வேலுமணி வழிமொழிந்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.
சட்டசபை தலைவர் அனைவருக்கும் பொதுவானவர். மக்கள் பிரச்சனைகளை அவையில் பேச அனுமதி அளிக்காமல் சபாநாயகர் அப்பாவு பாரபட்சம் காட்டுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறினார்.
சபாநாயகர் அப்பாவு மீது அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இந்த நிலையில், சபாநாயகர் அப்பாவு மீது அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
முதலில் நடந்த குரல் வாக்கெடுப்பில் அ.தி.மு.க. கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.
குரல் வாக்கெடுப்பை தொடர்ந்து டிவிசன் முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
டிவிஷன் முறையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நடைபெற்றபோது பேரவையின் நுழைவுவாயில் கதவுகள் மூடப்பட்டன.
பேரவையில் நடந்த குரல் வாக்கெடுப்பிலும் டிவிஷன் முறையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பிலும் அ.தி.மு.க. கொண்டுவந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு 63 பேர் ஆதரவாக வாக்களித்தனர். அ.தி.மு.க. கொண்டுவந்த தீர்மானத்திற்கு எதிராக 154 பேர் வாக்களித்த நிலையில் தீர்மானம் தோல்வி அடைந்தது.
நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அப்பாவு அமர்ந்தார்.
சபாநாயகர் இருக்கையில் மீண்டும் அப்பாவு அமர்ந்தபோது சட்டசபை உறுப்பினர்கள் கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- சபாநாயகர் அப்பாவு யார் மனமும் புண்படாமல் பேசக்கூடியவர்.
- அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஆவேசமாக பேசும்போது அவர்களை அமைதிப்படுத்த சபாநாயகர் முயல்வார்.
சட்டசபையில் சபாநாயகர் அப்பாவுவுக்கு எதிராக அ.தி.மு.க.வினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது அவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அவையை துணை சபாநாயகர் நடத்தினார்.
சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தீர்மானத்தை முன்மொழிந்தார். எஸ்.பி.வேலுமணி வழிமொழிந்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.
சட்டசபை தலைவர் அனைவருக்கும் பொதுவானவர். மக்கள் பிரச்சனைகளை அவையில் பேச அனுமதி அளிக்காமல் சபாநாயகர் அப்பாவு பாரபட்சம் காட்டுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறினார்.
சபாநாயகர் அப்பாவு மீது அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
* மக்கள் நம்பிக்கையை இழந்தவர்கள் தான் இப்படி ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து உள்ளனர்.
* யார் மீதும் யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம்.
* சபாநாயகர் நடுநிலையுடன் செயல்படுகிறார் என்பதை மக்கள் அறிவதற்கான விவாதமாக பார்க்கிறேன்.
* நாம் விமர்சனம் செய்பவரை என்றோ ஒருநாள் நேரில் சந்திக்க வேண்டும் என்பதை உணர்ந்து விமர்சனம் செய்யுமாறு கலைஞர் கூறுவார்.
* சபாநாயகர் அப்பாவு யார் மனமும் புண்படாமல் பேசக்கூடியவர்.
* சபாநாயகர் அப்பாவு கனிவானவர், அதே நேரத்தில கண்டிப்பானவர்.
* சில எதிர்க்கட்சியினர் சபாநாயகருடன் கண்ஜாடையில் பேசுவதை பார்த்திருக்கிறேன்.
* என் தலையீடோ, அமைச்சர் தலையீடோ இல்லாத வகையில் செயல்படுகிறார்.
* பேரவை தலைவராக தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார் அப்பாவு.
* அ.தி.மு.க. கொண்டு வந்த தீர்மானத்தில் பல உண்மைக்கு புறம்பான சில செய்திகள் உள்ளன.
* பேரவைக்கு ஒவ்வாத வார்த்தைகளை தி.மு.க.வினர் பேசினால் அவற்றை அவை குறிப்பிலிருந்து நீக்கி உள்ளார்.
* தங்களிடம் சபாநாயகர் கண்டிப்பாக நடப்பதாக ஆளுங்கட்சியினர் கூறுகின்றனர்.
* விவாதங்களின் போதும் சபாநாயகர் அப்பாவு நடுநிலையுடன் நடந்து கொண்டுள்ளார்.
* அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஆவேசமாக பேசும்போது அவர்களை அமைதிப்படுத்த சபாநாயகர் முயல்வார்.
* முந்தைய ஆட்சியில் ஆளுங்கட்சியினர் எதிர்க்கட்சியினரை வசைபாடுவதும் கூட அவை குறிப்பில் ஏறும்.
* பேரவையில் கடைபிடிக்க வேண்டிய பண்பாட்டின் தலைவனாக அப்பாவு செயல்பட்டுள்ளார்.
* பேரவை தலைவராக தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார் அப்பாவு.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.
- மார்ச் 21-ந்தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்படும்.
- நாளை சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் சட்டசபை கூட்டத்தொடர் ஏப்.30 வரை நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
மார்ச் 17-ந்தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடக்க உள்ளது. மார்ச் 21-ந்தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்படும்.
நாளை சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
- நாட்டில் சிறப்பாக செயல்படும் சட்டமன்றங்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து விருது வழங்கப்படுகிறது.
- மதம் குறித்து கவர்னர் கூறும் கருத்துக்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றார் அப்பாவு.
பெங்களூரு:
நாட்டில் சிறப்பாக செயல்படும் சட்டமன்றங்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து விருது வழங்கப்படுகிறது. அதற்காக கர்நாடக சட்டசபை சபாநாயகர் காகேரி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவில் டெல்லி, பீகார், அசாம், குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மாநில சட்டசபைகளின் சபாநாயகர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்நிலையில், சபாநாயகர் காகேரி தலைமையிலான அந்த குழுவின் 2-வது கூட்டம் பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு, டெல்லி சபாநாயகர் ராம்நிவாஸ் கோயல், அசாம் மாநில சபாநாயகர் பிஸ்வஜித் டைமரி, பீகார், குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களின் சட்டசபை சபாநாயகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு இடையே தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்திய இறையாண்மை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறி வரும் கருத்துகள் குறித்து என்னிடம் பலர் தங்களின் கருத்துகளை என்னிடம் கூறிக்கொண்டு தான் வருகிறார்கள். சபாநாயகர் என்ற முறையில் நான் இந்த விஷயத்தில் கருத்துகளை கூற முடியாது. ஆனால் ஆர்.என்.ரவி கவர்னராக கடந்த செப்டம்பர் மாதம் பதவி ஏற்றார். அப்போது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 159-ன்படி கவர்னராக எனது கடமையை சிறப்பாக செய்வேன் என்றும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி இந்திய இறையாண்மைக்கு எந்த பாதகமும் இல்லாமல், சாதி-மதத்திற்கு அப்பாற்பட்டு, இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்பதோடு, அதற்கு எந்த பாதகமும் வராதபடி செயல்படுவேன் என்றும் உறுதிமொழி எடுத்து கொண்டார்.
ஆனால் அதன்பிறகு அவர், இது மதம் சார்ந்த நாடு என்று பேசுகிறார். மதம் குறித்து கவர்னர் கூறும் கருத்துக்கள் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. பல சட்ட மேதைகள், அரசியல்வாதிகள் என்னிடம் கவர்னர் இவ்வாறு பேசுகிறாரே என்று கேட்டனர். கவர்னராக பதவி ஏற்ற பிறகு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான வார்த்தைகளை அவர் பயன்படுத்துவது அந்த அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமான செயல் என தெரிவித்தார்.
- இளைஞர் நலத்துறைக்கு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்று இருப்பதால், இளைஞர்கள், மாணவர்களை சர்வதேச தரத்தில் கொண்டு வரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
- வாரிசு அரசியல் பற்றி கேட்டால், கருணாநிதி முதலமைச்சராக பதவிக்கு வரும்போது அண்ணா ஆட்சி போல இருக்காது என்றனர்.
சென்னை:
தமிழக அமைச்சராக ராஜ்பவனில் உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த சபாநாயகர் அப்பாவு, பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
இளைஞர் நலத்துறைக்கு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்று இருப்பதால், இளைஞர்கள், மாணவர்களை சர்வதேச தரத்தில் கொண்டு வரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
வாரிசு அரசியல் பற்றி கேட்டால், கருணாநிதி முதலமைச்சராக பதவிக்கு வரும்போது அண்ணா ஆட்சி போல இருக்காது என்றனர். அவர் மறைவுக்கு பிறகு மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகும்போதும் வாரிசு அரசியல் என்றுதான் கூறினர். இந்த இளம் வயதில் தனது குடும்ப வாழ்க்கையில் பல சந்தோஷங்கள், கனவுகளை விட்டுவிட்டு நாட்டுக்காக ஒருவர் உழைப்பதற்கு முன்வந்திருப்பது பெருமைக்குரியது. எனவே குறுகிய வட்டத்தில் பார்க்க வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.