search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தளவாய்சுந்தரம்"

    • அமைப்பு செயலாளர் மற்றும் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளை வகித்து வந்தார்.
    • தளவாய் சுந்தரத்தை நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தை அமைப்பு செயலாளர் மற்றும் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆகிய

    கட்சி பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    கட்சியின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டி உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்தியாவில் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது.
    • மங்களூர் மற்றும் கொங்கன் பகுதியிலிருந்து கன்னியாகுமரிக்கு ஒரு நேரடி ரயில் சேவை கூட இல்லாதது வேதனை அளிக்கிறது.

    கன்னியாகுமரி:

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய ரெயில்வே மந்திரி மற்றும் அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், இந்தியாவில் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது.ஆனால் மங்களூர் மற்றும் கொங்கன் பகுதியிலிருந்து கன்னியாகுமரிக்கு ஒரு நேரடி ரயில் சேவை கூட இல்லாதது வேதனை அளிக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பக்தர்கள், பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கர்நாடகா மாநிலத்தில் உள்ள 3 முக்கிய கோவில்களான கொல்லூர் முகாம்பிகை கோவில், சிருங்கேரி சாரதா கோவில் மற்றும் தர்மஸ்தலாவுக்கு சென்று தரிசனம் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் கன்னியாகுமரியிலிருந்து ரயில் மூலம் செல்ல முடியாத நிலை உள்ளது.

    அதே நேரத்தில் திருவனந்தபுரம்-மங்களூர் இடையே தினசரி 3 இரவு நேர ரயில்கள் (16629/16630, 16603/16604 மற்றும் 16347/16348) இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கன்னியாகுரி மாவட்ட மக்கள் திருவனந்தபுரம் வரை பஸ்சில் பயணம் செய்து அங்கிருந்து ெரயிலில் பயணம் செய்கின்றனர்.

    இந்த 3 ெரயில்களில் திருவனந்தபுரம் - மங்களூர் விரைவு ரயிலை (16347/ 16348) மட்டும் கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும். இந்த ரயில் இயக்கப்படும் போது, கன்னியாகுமரியிலிருந்து சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இரவு 7 மணிக்கு புறப்பட்டு செல்லும் வகையிலும் மங்களூரிலிருந்து புறப்பட்டு வருகின்ற ரெயில், சூரிய உதயத்தை காண்பதற்கு ஏதுவாக காலை 6 மணிக்கு முன்பாக கன்னியாகுமரி வந்து சேரும் வகையிலும் இயக்கப்ப டவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அனைவர் வாழ்விலும் அனைத்து செல்வங்களும் பெற்று, வளமான வாழ்வு கிடைக்கட்டும்.
    • புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மகத்தான நன்நாள் தீபாவளி திருநாள்.

    நாகர்கோவில்:

    தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மகத்தான நன்நாள் தீபாவளி திருநாள்.தர்மத்தை காக்க, அதர்மத்தை அழிக்க இறைவன் மகா விஷ்ணு தோன்றி நரகாசுரன் என்னும் அரக்கனை அழித்த திருநாளே தீபாவளி திருநாளாகும். இத்திருநாள் ஒளி மயமான எதிர்காலத்தை நமக்கு வழங்கட்டும். அனைவர் வாழ்விலும் அனைத்து செல்வங்களும் பெற்று, வளமான வாழ்வு கிடைக்கட்டும். அ.தி.மு.க. 51-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மகிழ்ச்சிகரமான இவ்வாண்டில் காணுகின்ற தீபாவளி திருநாளை இரட்டிப்பு மகிழ்ச்சியோடு நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.

    அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • கிராமப்புற பஸ் களை முறையாக இயக்க வேண்டும். பஸ்களை முறை யாக பராமரிக்க வேண்டும்.
    • குமரி மாவட்டத்துக்கு புதிய பஸ்கள் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • போதிய கண்டக்டர்கள், டிரைவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

    நாகர்கோவில், அக்.13-

    கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் தளவாய்சுந்தரம் விடுத் துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இறச்சகுளம், தெரிசனங் கோப்பு, ஞாலம், சிறமடம், அருமநல்லூர் மற்றும் கடுக்கரை, காட்டுப்புதூர், திடல், கேசவன்பு தூர், தடிக் காரன்கோணம், கீரிப்பாறை போன்ற பகுதி களிலிருந்து பெரும்பா லான மாணவ- மாணவிகள் மற்றும் பொது மக்கள் அரசு பேருந்து மூலமே நகர்ப்புறங்களுக்கு வருகிறார்கள். கொரோனா தொற்று காலத்தில் நிறுத் தப்பட்ட பஸ்கள், தற்போ தும் முறையாக இயக்கப் படாமல் உள்ளன. இரவு நேர பஸ்களை நிறுத்தி யதுடன் அடிக்கடி காலை மற்றும் மாலை நேரங் களிலும் பஸ்கள் ரத்து செய்யப் படுகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இறச்சகுளம்-சாமி தோப்பு தடம் எண் 32 பஸ் பல மாத காலமாக நிறுத் தப்பட்டுள்ளது. இப்பகுதி பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்கின்ற பொதுமக்கள் வசதிக்காக தினமும் காலை 8.15 மணிக்கு இயக்கப்பட்டு வந்த இறச்சகுளம் - நாகர்கோவில் சிறப்பு பேருந்தும் தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது.

    ராஜாக்க மங்கலம் ஒன்றி யத்திற்குட்பட்ட மணக்குடி, பொழிக் கரை, பள்ளம், புத்தன்துறை போன்ற மீனவ கிராம பகுதிகளுக்கு இயக்குப்பட்டு வந்த அரசு பேருந்துகள் முறையாக இயக்கப் படவில்லை. பொழிக்கரை நாகர்கோவில் தடம் எண் 38சி பஸ்சை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நிறுத்தி உள்ளனர்.

    இதனால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கிராமப்புற பஸ் களை முறையாக இயக்க வேண்டும். பஸ்களை முறை யாக பராமரிக்க வேண்டும். குமரி மாவட்டத்துக்கு புதிய பஸ்கள் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போதிய கண்டக்டர்கள், டிரைவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு கூறி உள்ளார்.

    ×