என் மலர்
நீங்கள் தேடியது "மணல் சிற்பம்"
- கத்தாரில் பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் நேற்று தொடங்கியது.
- ஐந்து டன் மணலைப் பயன்படுத்தி மணல் சிற்பம் உருவாக்கம்.
பூரி:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், உலகின் முக்கிய நிகழ்வுகள் குறித்து அவ்வவ்போது சிற்பங்களை உருவாக்கி வருகிறார். இந்நிலையில் கத்தாரில் நேற்று தொடங்கிய பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் குறித்து பூரி கடற்கரையில் 8 அடி உயர மணல் சிற்பத்தை அவர் உருவாக்கி உள்ளார்.
இந்த போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், ஐந்து டன் மணலைப் பயன்படுத்தி, இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் பங்கேற்றுள்ள 32 நாடுகளை சேர்ந்த 1,350 நாணயங்களையும், இந்திய நாணயங்களையும் அவர் பயன்படுத்தி உள்ளார். உலகம் முழுவதும் பல்வேறு மணல் சிற்ப போட்டிகளில் பங்கேற்ற போது இந்த நாணயங்களை சேகரித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மணல் சிற்பம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.
- இறந்த மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியின் சிற்பம் உருவாக்கப்பட்டு இருந்தது.
- இன்று அதிகாலை பெய்த மழையினால் தேர்தல் விழிப்புணர்வு மணல் சிற்பங்கள் கலைந்து விட்டது.
புதுச்சேரி:
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் புதுவையில் 2 நாட்கள் நடக்கிறது.
வாக்காளர் திருத்த முகாம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பாரதியார் பல்கலைக்கூட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மணல் சிற்பம் வடிவமைத்தனர். வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாண்டி மெரினா கடற்கரை பகுதியில் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டது.
இதில் இறந்த மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியின் சிற்பம் உருவாக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேர்தல்துறை அதிகாரிகள் யானை பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் என்பதால் யானை மணல் சிற்பம் இடம் பெறக்கூடாது என்று உத்தரவிட்டனர்.
இதையடுத்து 9 மணி நேரமாக உருவாக்கப்பட்ட லட்சுமி யானையின் மணல் சிற்பம் நள்ளிரவே கலைக்கப்பட்டு தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு சிற்பங்கள் மட்டுமே இடம்பெற்றது.
இந்த நிலையில் இன்று அதிகாலை பெய்த மழையினால் தேர்தல் விழிப்புணர்வு மணல் சிற்பங்கள் கலைந்து விட்டது.
யானை மணல் சிற்பம் கலைக்கப்பட்ட இடத்தில் தேர்தல் துறை என்ற வாசகம் எழுதப்பட்டது.
- குடும்ப பிரச்சனை உள்ளிட்ட வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல்துறை, மருத்துவத்துறை, சட்டஉதவி, மனநல ஆலோசனை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கப்படுகின்றன.
- 181 இலவச தொலைபேசி எண், மின்னஞ்சல், ஆன்லைன் உரையாடல் போன்றவை மூலமாக உதவி மையத்தை நாடும் வசதி உள்ளது.
சென்னை:
தமிழ்நாடு அரசின் "181 மகளிர் உதவி மையம்" பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் ரகசிய சேவை மையம் ஆகும். இதன்மூலம் குடும்ப பிரச்சனை உள்ளிட்ட வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல்துறை, மருத்துவத்துறை, சட்டஉதவி, மனநல ஆலோசனை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கப்படுகின்றன. 181 இலவச தொலைபேசி எண், மின்னஞ்சல், ஆன்லைன் உரையாடல் போன்றவை மூலமாக உதவி மையத்தை நாடும் வசதி உள்ளது. மேலும், பெண்களுக்காக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த விவரங்களையும், குடும்ப வன்முறை மற்றும் இதர வகை கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அரசு வழங்கும் உதவிகள் குறித்தும் கேட்டறியலாம்.
பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை, மெரினா கடற்கரையில் தமிழ்நாடு அரசின் 181 மகளிர் உதவி மையத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்ட மணல் சிற்பத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, கீழ்க்காணும் "பெண்கள் பாதுகாப்பு உறுதிமொழி" விழிப்புணர்வு பதாகையில் கையெழுத்திட்டார்.
"பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்திடுவோம்!
பெண்களுக்கான இடர் இல்லா சமுதாயத்தை உருவாக்கிடுவோம்!
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, பொன்முடி, பி.கீதா ஜீவன், மேயர் பிரியா, வேலு எம்.எல்.ஏ, துணை மேயர் மகேஷ் குமார், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் ஏ.எஸ். குமரி, பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் சிற்றரசு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், சமூக பாதுகாப்புத் துறை இயக்குநர் ச. வளர்மதி, 181 மகளிர் உதவி மையத்தின் திட்டத் தலைவர் ஷரின் பாஸ்கோ, டிஜிட்டல் மீடியா நிபுணர் கிஷோர் தேவா, டிஜிட்டல் மீடியா இயக்குநர் மெரின், மணற் சிற்பி கஜேந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- பூரி கடற்கரையில் பார்வையாளர்களை கவரும் வகையில் மணல் சிற்பம் வடிவமைப்பு.
- பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், இதை உருவாக்கி உள்ளார்.
பூரி:
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப்பண்ட், நேற்று காலை டெல்லி புறநகர் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ரிஷப் பண்ட் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பண்ட் விரைவாக குணமடைய வாழ்த்து தெரிவித்து ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், இதை உருவாக்கி உள்ளார்.
கிரிக்கெட் பேட்டில் ரிஷப் பண்ட் உருவம் மணலால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் குணமடையுங்கள் ரிஷப் பண்ட் என அதில் எழுதப்பட்டுள்ளது. இந்த மணல் சிற்பத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பட்நாயக் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
- கட்டாக் மகாநதியின் கரையில் 105 அடி நீளத்தில் இந்த மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
- 'உலகின் மிகப்பெரிய மணல் ஹாக்கி மட்டையாக வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் இந்தியா அங்கீகரித்துள்ளது.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தில் உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியின் துவக்க விழாவின்போது மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பிரமாண்டமான ஹாக்கி மட்டை மணல் சிற்பத்தை உருவாக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். கட்டாக் மகாநதியின் கரையில் 105 அடி நீளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிற்பத்தை 5000 ஹாக்கி பந்துகளை கொண்டு அலங்கரித்துள்ளார்.
இந்த நீண்ட மணல் சிற்பத்தை உலகின் மிகப்பெரிய மணல் ஹாக்கி மட்டையாக வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் இந்தியா அங்கீகரித்துள்ளது.
தனது மணல் ஹாக்கி மட்டை புதிய உலக சாதனை படைத்திருப்பது குறித்து சுதர்சன் பட்நாயக் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் இந்தியாவிடம் இருந்து இந்தச் சான்றிதழைப் பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், இது தனக்கு கிடைத்த கவுரவம் என்றும் கூறி உள்ளார்.
- ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது.
- ஆர்.ஆர்.ஆர். மற்றும் தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படத்திற்கு விருது வழங்கப்பட்டது.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். இவர் சிறந்த மணல் சிற்ப கலைஞராவார். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இதற்கிடையே, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஆர்.ஆர்.ஆர். படத்திற்கும் 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவண குறும்படத்திற்கும் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஆஸ்கர் விருது வென்ற ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கும், தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவினருக்கு மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்து ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் "விஜயீ பவ" என்ற செய்தியுடன் வாழ்த்து.
- பிரம்மிப்பூட்டும் வகையில் அமைந்துள்ள இந்த மணல் சிற்பத்தை கண்டு பலர் பாராட்டி வருகின்றனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் விண்கலமான சந்திரயான்- 3 இன்று மதியம் 2.35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புறப்படுகிறது.

சந்திரயான்- 3 வெற்றிகரமாக நிலவில் தடம் பதிக்க வேண்டும் என்பதற்காக ஒடிசாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக், இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்து ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் "விஜயீ பவ" (வெற்றி பெறுங்கள்) என்ற செய்தியுடன் 500 ஸ்டீல் கிண்ணங்கள் மற்றும் பாத்திரங்களை நிறுவி சந்திரயான்- 3ன் 22 அடி நீள மணல் சிற்பத்தை உருவாக்கினார்.
பிரம்மிப்பூட்டும் வகையில் அமைந்துள்ள இந்த மணல் சிற்பத்தை கண்டு பலர் பாராட்டி வருகின்றனர்.
- இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
- அவருக்கு ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களில் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.
இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் பேட் மற்றும் பந்துடன் கூடிய விராட் கோலி மணல் சிற்பத்தை வரைந்து, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டனான விராட் கோலி, இதுவரை 111 டெஸ்ட் போட்டிகளில் 29 சதம், 29 அரைசதங்களுடன் 8,676 ரன்கள் குவித்துள்ளார். 288 ஒருநாள் போட்டியில் 48 சதங்கள், 70 அரைசதங்களுடன் 14,444 ரன்கள் குவித்துள்ளார். 115 டி20 போட்டியில் ஒரு சதம், 37 அரைசதங்களுடன் 2,905 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாராளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
- அனைத்து கட்சிகளும் வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டன.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களில் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.
இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க தகுதி பெற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி உள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
- அவருக்கு ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களில் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.
இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் 5 அடி உயரமுள்ள விராட் கோலி மணல் சிற்பத்தை வரைந்து, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதற்காக 4 டன் மணலை பயன்படுத்தி உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டனான விராட் கோலி, இதுவரை 118 டெஸ்ட் போட்டிகளில் 29 சதம், 31 அரைசதங்களுடன் 9,040 ரன்கள் குவித்துள்ளார். 295 ஒருநாள் போட்டியில் 50 சதங்கள், 72 அரைசதங்களுடன் 14,000க்கும் அதிகமான ரன்கள் குவித்துள்ளார். 125 டி20 போட்டியில் ஒரு சதம், 38 அரைசதங்களுடன் 4,188 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒடிசாவை சேர்ந்த சுதா்சன் பட்நாயக் பிரபல மணல் சிற்ப கலைஞா்.
- இறுதியில் இந்தியா வெற்றிபெற மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்தார்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். சிறந்த மணல் சிற்ப கலைஞரான இவர், உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இதற்கிடையே, ஐ.சி.சி. நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. பல்வேறு பிரபலங்கள் இந்திய அணிக்கு தங்களது வாழ்த்துகளைத் தொிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற வேண்டி மணல் சிற்ப கலைஞா் சுதா்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தொிவித்துள்ளாா். அதில் குட் லக் டீம் இந்தியா என குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.
புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி, இந்தியாவின் பிரபலமான மணல் சிறப்க் கலைஞர் பத்மஸ்ரீ விருதுபெற்ற சுதர்ஷன் பட்நாயக் ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் மணல் சிற்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
ஒடிசா கடற்கரையில் பல பெரிய சிகரெட் துண்டுகளின் மேல் பெரிய எலும்புக்கூடு படுத்திருப்பது போன்ற சிற்பம் உருவாக்கியுள்ளார். புகையிலை உட்கொள்வதால் ஏற்படும் விளைவு குறித்து பிரதிபலிக்கும் விதமாக இந்த சிற்பம் அமைந்திருந்தது. இதனை, பொது மக்கள் பலர் பார்த்து செல்கின்றனர்.
மேலும், இந்த மணல் சிற்ப புகைப்படத்தை சுதர்சன் பட்நாயக் தனது டுவிட்டர் பக்கத்தில், #உலக புகையிலை தினத்தை முன்னிட்டு. இந்தியாவில் ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் எனது மணல் கலை, புகையிலை வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு 35000க்கும் மேற்பட்ட லைக்ஸ் மற்றும் 4000க்கும் மேற்பட்ட முறை ரீட்விட் செய்யப்பட்டுள்ளது. முழு மணல் சிற்பத்தின் வீடியோவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவு சமூக ஊடகங்களில் அதிக கவனத்தை பெற்றுவருகிறது.
இதையும் படியுங்கள்.. 2024 தேர்தலில் பாஜகவுக்கு இடமில்லை என மக்கள் கூற விரும்புகின்றனர் - மம்தா பானர்ஜி