என் மலர்
நீங்கள் தேடியது "அரசு பள்ளி ஆசிரியர்கள்"
- தொடக்கக்கல்வி துறையின் கீழ் 3,312 ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெற்றுள்ளனர்.
- அரசுப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை பணி நியமனம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு மே 8 -ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கோரிய வழக்கில் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை ஏற்று பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது.
தொடர்ந்து மாறுதல் கலந்தாய்வுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு கடந்த மே 15-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரை நடத்தப்பட்டது. இதன்மூலம் தொடக்கக்கல்வி துறையின் கீழ் 424 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 1,111 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 1,777 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 3,312 பேர் பணியிட மாறுதல் பெற்றுள்ளனர்.
இந்த மாறுதலால் அரசுப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை பணி நியமனம் செய்து கொள்ள அறிவுறுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இப்பயிற்சியை திருப்பூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நா.கீதா தொடங்கிவைத்தாா்
- புதிய படைப்புகளுக்கு காப்புரிமை , பரிசு பெறச் செய்வது உள்ளிட்ட பயிற்சிகள் ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்டன.
திருப்பூர்:
மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சாா்பில் அரசு பள்ளி ஆசிரியா்களுக்கான பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டப் பயிற்சி அவிநாசியில் நடைபெற்றது.
இப்பயிற்சியை திருப்பூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நா.கீதா தொடங்கிவைத்தாா். இதில் மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) வி.ரத்தினமூா்த்தி கலந்து கொண்டு பேசினாா். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் எஸ்.கணேசன், பாரதியார் பல்கலைக்கழக கள ஒருங்கிணைப்பாளா் பி.சத்யா ஆகியோா் ஒருங்கிணைத்தனா். இதில் தனித்திறன் மாணவா்கள், புதிய படைப்புகள் உருவாக்கும் மாணவா்கள் ஆகியோரை தோ்ந்தெடுத்து மாநில அளவில் தமிழக அரசு சாா்பில் நடத்தப்படும் போட்டியில் பங்கேற்க செய்வது, மேலும் புதிய படைப்புகளுக்கு காப்புரிமை , பரிசு பெறச் செய்வது உள்ளிட்ட பயிற்சிகள் ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்டன. இப்பயிற்சியில் திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 94 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 94 வழிகாட்டி ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
- உன் அப்பா மயானத்துலதானே வேலை பாக்குறாரு... அங்கேயே வேலைக்குப்போ என்கிறார்கள்.
- சீனிவாசன் சாரும், மீனாட்சி மிஸ்சும் என்னை எதற்கு பள்ளிக்கு வர ? உனக்கு படிப்புலாம் ஏறாது..
கோடம்பாக்கத்தில் உள்ள பி.சி.கே.ஜி என்கிற அரசு பள்ளியில் பறை இசைத்த மாணவரை குறி வைத்து ஆசிரியர்கள் இருவர் படிக்க விடாமல் டார்ச்சர் செய்வதாக சமூக ஆர்வலர் குபேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
இதுபோல் பல மாணவர்களை இந்த கோடம்பாக்கம் அரசு பள்ளியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட மாணவன் பேசும் வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் பாதிக்கப்பட்ட மாணவன் கூறியிருப்பதாவது:-
என் பெயர் தமிழ். பி.சி.கே.ஜி அரசு பள்ளியில் படிக்கிறேன். கலைத்திருவிழா சமீபத்தில் நடந்தது. அதில் பங்கேற்று பறையிசை வாசித்தேன்.
அதன்பிறகிலிருந்து, சீனிவாசன் சாரும், மீனாட்சி மிஸ்சும் என்னை எதற்கு பள்ளிக்கு வர ? உனக்கு படிப்புலாம் ஏறாது..
நீ பறை அடிக்கத்தான் லாயக்கு.. உன் அப்பா மயானத்துலதானே வேலை பாக்குறாரு... அங்கேயே வேலைக்குப்போ என்கிறார்கள்.
பள்ளிக்கு வந்தால் வகுப்பில் அனுமதிப்பதில்லை. என் சட்டையை கழட்டி சோதனை செய்கிறார்கள். பேண்ட் பேக்கெட்டுகளில் சோதனை செய்கிறார்கள். அசிங்கமாக பேசுகிறார்கள்.
வகுப்புக்கு போனால் வர வேண்டாம்.. உனக்கு பாடம் சொல்லித்தர மாட்டேன். கீழே சென்று ஹெட் மாஸ்டரை பாருன்னு சொல்றாங்க.. கீழே போனால் வகுப்புக்கு போ.. தேர்வு வருதுன்னு சொல்றாங்க.. திரும்ப வகுப்புக்கு போனா ஏன் வந்தேன்னு கேக்குறாங்க..
படிக்க விடாமல் தொடர்ந்து டார்ச்சர் செய்றாங்க..
இவ்வாறு அந்த மாணவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் ஏராளமானோர் கல்வி பயின்று வருகின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படவில்லை. நடப்பு ஆண்டு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் கடந்த மே மாதம் நடத்தப்பட்டன. இந்த தேர்வுகள் 13-ந் தேதி முடிந்தன.
இதனால் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு மே மாதம் 14-ந்தேதி முதல் ஜூன் 12-ந்தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதுபோல் மாணவ- மாணவிகளுக்கும் ஜூன் மாதம் 12-ந்தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை 5-ந் தேதியுடன் முடிவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை பள்ளிக்கல்வி துறை நடத்தும் எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பில் பங்கேற்கும்படி ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குநர் சுதன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
2021-22-ம் கல்வி ஆண்டில் அளிக்கப்பட்டுள்ள குறைவான கோடை விடுமுறை நாட்களிலும் 1.6.2022 மற்றும் 2.6.2022 ஆகிய இரு நாட்கள் “எண்ணும் எழுத்தும்” பயிற்சிக்கான கருத்தாளர் பயிற்சியும், 1 முதல் 3-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 6.6.2022 முதல் 10.6.2022 முடிய “எண்ணும் எழுத்தும்” பயிற்சியும் தமிழ்நாடு முழுவதும் வழங்கிட பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு கோடை விடுமுறையில் அளிக்கப்படும் பயிற்சி மாநிலம் முழுவதும் உள்ள தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கோடை விடுமுறையில் இதுபோன்ற பயிற்சிகள் இதற்கு முன்பு வழங்கப்பட்டதில்லை. மேலும், பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் கோடை விடுமுறையைத் துய்க்கும் பிரிவினராவர். இதனாலேயே அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு அனுமதிக்கப்படுவதில்லை. 15 நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
எனவே, இக்கல்வியாண்டில் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள குறைவான கோடை விடுமுறை நாட்களையும் இல்லாமல் செய்யும் நடவடிக்கையாக “எண்ணும் எழுத்தும்” பயிற்சி அமைந்துள்ளது. கோடை விடுமுறையில் இப்பயிற்சி நடத்துவதை எதிர்த்து 28.5.2022 அன்று திருச்சியில் நடைபெற்ற எங்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
எனவே, பள்ளிக்கல்வித்துறை கோடை விடுமுறையில் நடத்தும் “எண்ணும் எழுத்தும்” பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பள்ளிக்கல்வித்துறையை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- செஞ்சி அருகே அரசு பள்ளியில் ஆசிரியர்களை நியமிக்க கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியின் முகப்பு வாயிலை மூடி மாணவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிட்டாம்பூண்டி கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது, ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 140 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி பயிற்று விப்பதற்காக 5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர், இப்பள்ளியில் கணித ஆசிரியர் பணியிடங்கள் கடந்த இரண்டு வருடங்களாக காலியாக உள்ள நிலையில் மற்ற ஆசிரியர்கள் கணிதப் படத்தை பயிற்றுவிக்கின்றனர் மேலும் தலைமை ஆசிரியர் 6மாத காலமாக இல்லை எனவும் இதன் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிப்படைகிறது எனவும், இது சம்பந்தமாக பலமுறை துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை இல்லை எனவும், உடனடியாக காலியாக உள்ள இடங்களில் ஆசிரியர்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை வைத்து மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியின் முகப்பு வாயிலை மூடி மாணவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் போது அல்லது ஒழுங்கு நடவடிக்கையின் போது உயிரிழந்தால், பணி விதிகளின்படியே ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. #SchoolEducation #TeachersLeave
பண்ருட்டி அடுத்த காவனூர் ஊராட்சியில் உளுந்தாம்பட்டில் ஊராட்சி ஒன்றி தொடக்க பள்ளி ஒன்று உள்ளது.
இந்த பள்ளியில் உளுந்தாம்பட்டு, கீழ்காவனூர், மேல் காவனூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இதற்கிடையில் மேல்காவனூரில் இருந்து உளுந்தாம்பட்டு கிராமத்திற்கு பள்ளி செல்லும் குழந்தைகள் நடந்தே செல்ல வேண்டி இருப்பதால் மேல்காவனூரில் புதியதாக பள்ளி தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரி வந்தனர். பொது பொதுமக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று புதிதாக மேல் காவனூரில் பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் இந்த கல்வி ஆண்டு முதல் மேல் காவனூரில் பள்ளிக்கூடம் திறக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தி மேல் காவனூர் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து மேல் காவனூரில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் மேல் காவனூரில் உள்ள ஒரு கோவில் வளாகத்தில் தங்க வைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி தாசில்தார் ஆறுமுகம் மற்றும் அண்ணாகிராமம் ஒன்றியம் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் அந்தோணி ராஜ் ஆகியோர் இந்த கிராமத்திற்கு நேரில் சென்று சம்பந்தப்பட்ட பெற்றோர்களை அழைத்து பேசி விரைவில் உரிய ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து காவனூரில் இணைப்பு பள்ளி கடந்த 4-ந் தேதி திறக்கப்பட்டது.காவனூரில் உள்ள இந்த இணைப்பு பள்ளிக்கு மாணவ-மாணவிகள் அனுப்பப்பட்டனர்.
ஆனால் உளுந்தாம்பட்டு பள்ளியிலிருந்து ஆசிரியர்களை இந்த இணைப்பு பள்ளிக்கு ஆசிரியர்களை அனுப்ப மறுத்து உளுந்தாம்பட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தஇரு கிராம மக்களின் போராட்டம் இன்று நான்காவது நாளாக நடைபெற்று வருகிறது. காவனூர் இணைப்பு பள்ளியில் காவனூர் மாணவர்களுக்கு காவனூர்கிராமத்தை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் முன்னால் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாடம் நடத்துகின்றனர். மதிய உணவு கிராம மக்களே தயார் செய்து பிள்ளைகளுக்கு வழங்கி வருகின்றனர். பொதுமக்கள் போராட்டம் 3-வது நாளாக இன்று தொடர்வதால் இங்கே திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.