search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜயபிரபாகரன்"

    • எனது வாழ்க்கை முழுவதையும் கட்சிக்காகவும், தொண்டர்களுக்காகவும் அர்ப்பணித்து விட்டேன்.
    • கேப்டன் மறைவுக்கு பிறகு அந்த கட்சி இல்லாமல் போய் விடும் என்று எண்ணினர்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூரில் தே.மு.தி.க. முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடந்தது. விழாவில் விஜயகாந்தின் மகனும், கட்சியின் இளைஞர் அணி செயலாளருமான விஜய பிரபாகரன் கலந்து கொண்டு பேசினார்.

    அவர் பேசுகையில் மறைந்த தனது தந்தையை நினைத்து மேடையிலேயே கண்ணீர் வடித்தார். அதை பார்த்து அங்கு திரண்டு இருந்த தொண்டர்களும், பெண்களும் கண் கலங்கினர்.

    மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு தலைவர் விஜயகாந்த் தொடங்கினார். கட்சிக்கு பெயர் வைக்கும் பொழுது எங்களிடம் பெயர் குறித்து விவாதித்தார். முடிவில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று பெயர் தேர்வு செய்யப்பட்டு இன்று 20 வருடத்தை கடந்து நிற்கிறது.

    இந்த மக்கள் தொண்டு என்றும் தொடரும். தே.மு.தி.க.வை நீங்கள் தூக்கி எறிந்தாலும் சுற்றில் அடித்த பந்துபோல திரும்பி வந்து மக்களுக்கு உதவி செய்து கொண்டே இருப்போம். தே.மு.தி.க. மத, இன, மொழி, பாகுபாடு பார்க்காத கட்சி.

    அனைத்து மொழிகளையும் கற்றுக் கொள்வதில் தவறு இல்லை. நான் அரசியலுக்கு வந்திருப்பதால் வாரிசு அரசியல் என்று கூறுவதை ஏற்க முடியாது.

    என்னை மற்ற பெற்றோர்களை போல எனது பெற்றோர்களும் நன்றாக படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும். திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கட்சி தொண்டர்கள் என்னை கட்சி பணிக்கு அழைத்தார்கள்.

    நான் எனது வாழ்க்கை முழுவதையும் கட்சிக்காகவும், தொண்டர்களுக்காகவும் அர்ப்பணித்து விட்டேன். எனது தாயார், விஜயகாந்த் உயிர் பிரியும் வரை அவரது கையை தனது கைக்குள் வைத்துக் கொண்டார்.

    கேப்டன் மறைவுக்கு பிறகு அந்த கட்சி இல்லாமல் போய் விடும் என்று எண்ணினர். மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்த முயன்றனர். ஆனால் தொண்டர்கள் வியர்வை சிந்தி கட்சியை வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    எனது தாயார் பிரேமலதா விஜயகாந்த், ஒரு தோளில் கட்சியையும், மறு தோளில் கேப்டனையும், எங்களையும் சுமந்துட்டு தொண்டர்களுக்காக இந்த கட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

    நல்லவர்கள் லட்சியம், வெல்வது நிச்சயம். அது என்றுமே தோற்க கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் தே.மு.தி.க. மாநகர், மாவட்ட செயலாளர் சிங்கை சந்துரு உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • ஒரு சின்ன பையன் முதல்முறையா தேர்தல்ல நிக்கிறாரு. அப்படி ஜெயிச்சாதான் என்ன போச்சு உங்களுக்கு?
    • இப்படி பொறுப்பில்லாமல் பேசுவது பிரேமலத்தவன் வழக்கம்.

    விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜயப்ரபாகரன் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் தோல்வியடைந்தார்..

    இது தொடர்பாக சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "50 - 60 வருசமா கட்சி நடத்துறீங்க, ஆட்சியில இருக்கீங்க. ஒரு சின்ன பையன் முதல்முறையா தேர்தல்ல நிக்கிறாரு. அப்படி ஜெயிச்சாதான் என்ன போச்சு உங்களுக்கு?

    39 தொகுதி நீங்க ஜெயிச்சதா அறிவிச்சிங்கள்ல, ஒரு தொகுதில கடைசி வரைக்கும் போராடி வராரே ஒரு இளைஞர், அவரை பெரிய மனசோட நீங்க ஜெயிக்க வச்சிருந்தீங்கனா, இந்த ஆட்சியை நா தலைவணங்கி போற்றியிருப்பேன் வரவேற்றிருப்பேன்.

    ஆனால் அதிலும் சூழ்ச்சி செய்து அவர் ஜெயிக்க கூடாது என்பதற்காக அவர்கள் அமைச்சர்களை வைத்து அதிகாரிகளை மிரட்டி தவறு செய்துள்ளீர்கள்.

    விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும்" என்று அவர் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இது தொடர்பாக பேசிய விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், "பிரேமலதா முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். வாக்கு என்னும் மையத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டு கிளம்பினார்கள். ஆனால் அடுத்த நாள் சென்னையில் சின்ன பையனா இருந்தா என்ன என்று பிரேமலதா பேசுகிறார். இது என்ன வடிவேல் படமா" இது பாராளுமன்ற தேர்தல். இப்படி பொறுப்பில்லாமல் பேசுவது பிரேமலதாவின் வழக்கம். வேண்டுமானால் அவர் சட்ட போராட்டம் நடத்தட்டும்" என்று தெரிவித்துள்ளார் .

    மேலும் பேசிய அவர், "மோடியின் பதவியேற்பு விழாவில் அதானியும் அம்பானியும் கலந்து கொண்டுள்ளனர். இந்த அரசு அதானி அம்பானிகளுக்கானது தான் என்பதை மீண்டும் ஒருமுறை மோடி நிரூபித்துள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தலோடு பாஜக கூட்டணியின் ஆட்சி முடிவுக்கு வரும். ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவின் நிர்வாக தோல்வி" என்று பேசியுள்ளார்.

    • 39 தொகுதி நீங்க ஜெயிச்சதா அறிவிச்சிங்கள்ல...
    • அமைச்சர்களை வைத்து அதிகாரிகளை மிரட்டி தவறு செய்துள்ளீர்கள்.

    விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜயப்ரபாகரன் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் தோல்வியடைந்தார்..

    இது தொடர்பாக சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "50 - 60 வருசமா கட்சி நடத்துறீங்க, ஆட்சியில இருக்கீங்க. ஒரு சின்ன பையன் முதல்முறையா தேர்தல்ல நிக்கிறாரு. அப்படி ஜெயிச்சாதான் என்ன போச்சு உங்களுக்கு?

    39 தொகுதி நீங்க ஜெயிச்சதா அறிவிச்சிங்கள்ல, ஒரு தொகுதில கடைசி வரைக்கும் போராடி வராரே ஒரு இளைஞர், அவரை பெரிய மனசோட நீங்க ஜெயிக்க வச்சிருந்தீங்கனா, இந்த ஆட்சியை நா தலைவணங்கி போற்றியிருப்பேன் வரவேற்றிருப்பேன்.

    ஆனால் அதிலும் சூழ்ச்சி செய்து அவர் ஜெயிக்க கூடாது என்பதற்காக அவர்கள் அமைச்சர்களை வைத்து அதிகாரிகளை மிரட்டி தவறு செய்துள்ளீர்கள்.

    விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாக முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
    • 13-வது சுற்றுக்கு பின்னர் பல முறைகேடுகள் நடந்தது உண்மை.

    சென்னை:

    சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * விஜயபிரபாகரன் தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டுள்ளார்.

    * திட்டமிடப்பட்ட சூழ்ச்சியால் விஜயபிரபாகரன் வீழ்த்தப்பட்டுள்ளார்.

    * 0.4 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தான் விஜயபிரபாகரன் தோற்றதாக அறிவிக்கப்பட்டது.

    * 3 மணி முதல் 5 மணிவரை வாக்கு எண்ணிக்கையை ஆட்சியர் நிறுத்தியது ஏன்?

    * தனக்கு நெருக்கடி இருந்ததாக வெளிப்படையாக அறிவித்தார் விருதுநகர் மாவட்ட ஆட்சியர்.

    * வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாக முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    * 13-வது சுற்றுக்கு பின்னர் பல முறைகேடுகள் நடந்தது உண்மை.

    * விருதுநகர் தொகுதி முடிவு அறிவிக்கும் முன் 40 தொகுதிகளில் வெற்றி என முதல்வர் கூறியது ஏன்?

    * விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3,80,877 வாக்குகளை விஜயபிரபாகரன் பெற்றார்.
    • 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியை தழுவினார்.

    சென்னை:

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் போட்டியிட்டார். விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பாக விஜயபிரபாகரனும், என்.டி.ஏ கூட்டணி சார்பாக ராதிகா சரத்குமாரும், இந்தியா கூட்டணி சார்பாக தி.மு.க. வேட்பாளர் மாணிக்கம் தாகூரும் போட்டியிட்டனர்.

    தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களில் விஜயபிரபாகரன் முன்னிலை வகித்து வந்தார். இதனால் விஜயபிரபாகரன் வெற்றி பெறுவார் என ஊகிக்கப்பட்டது. எனினும் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியை தழுவினார். மொத்தம் 3,80,877 வாக்குகளை விஜயபிரபாகரன் பெற்றுள்ளார்.


    இந்நிலையில், இது முடிவல்ல... தொடக்கம் தான்... என தேர்தல் முடிவு குறித்து விஜயபிரபாகரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர், மன்னிக்கவும் நண்பர்களே... மிகவும் சிறிய வித்தியாசத்தில் தோற்று உள்ளேன். எனினும் வாக்களித்த அனைத்து அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

    • என்னை நடிக்க வைக்க ஆசைப்பட்டவர் என் தந்தை என விஜயபிரபாகரன் உருக்கம்.
    • காலமும் நேரமும் எப்படி கை கொடுக்கிறது என பார்ப்போம்.

    ஜெட்லியின் சீனப்படமான 'மை பாதர் இஸ் ஏ ஹீரோ' என்கிற படத்தை விஜயகாந்தின் மகன் மூத்த மகன் விஜயபிரபாகன் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், " ஜெட்லியின் சீனப்படமான 'மை பாதர் இஸ் ஏ ஹீரோ' என்ற படம் அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும்.

    நானும் அவரும் நடிக்க வேண்டும் என்று அப்பா மிகவும் விரும்பினார்.

    ஆனால் அது நடக்காமலேயே போய்விட்டது. அப்பாவின் ஆசையை நிறைவேற்ற அந்த படத்தை எடுக்க முடிவு செய்துள்ளேன். காலமும் நேரமும் எப்படி கை கொடுக்கிறது என பார்ப்போம்" என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • நாளை காலை சிவகாசி பகுதியில் உள்ள தீப்பெட்டி, பட்டாசு, அச்சகம் உள்ளிட்ட தொழில்களை சார்ந்த அதிபர்களையும், அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து பேசுகிறார்.
    • விருதுநகர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளரான விஜயகாந்த் மகனை ஆதரித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறார்.

    சிவகாசி:

    பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் தே.மு.தி.க., புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தனது பிரசாரத்தை தொடங்கினார்.

    அங்கு ஒரே மேடையில் 40 வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தி பேசினார். இதில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா, புதிய தமிழகம் கட்சி நிறுவனர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து நேற்று தூத்துக்குடியில் பிரசாரம் செய்த அவர் இன்று மாலை தென்காசி தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவில் வருகிறார்.

    அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தென்காசி பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்து விட்டு அங்கிருந்து கார் மூலம் சிவகாசிக்கு வருகிறார். சிவகாசியில் உள்ள பிரபல ஓட்டலில் இரவு அவர் தங்குகிறார். நாளை காலை சிவகாசி பகுதியில் உள்ள தீப்பெட்டி, பட்டாசு, அச்சகம் உள்ளிட்ட தொழில்களை சார்ந்த அதிபர்களையும், அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து பேசுகிறார்.

    மாலை 5 மணிக்கு சிவகாசி பாவடி தோப்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு விருதுநகர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளரான விஜயகாந்த் மகனை ஆதரித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறார். அதனைத் தொடர்ந்து கார் மூலம் மதுரை செல்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி சிவகாசிக்கு பிரசாரம் செய்ய வருவதையொட்டி பொதுக்கூட்ட ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் அ.தி.மு.க.வினரும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் செய்து வருகிறார்கள்.

    ×